கீழக்கரை நகராட்சி கமிஷனருடன் சட்டப் போராளிகள் இயக்கத்தினர் சந்திப்பு

கீழக்கரை நகராட்சிக்கு பரமக்குடி நகராட்சி ஆணையாளர் நாராயணன் கூடுதல் பொறுப்பாக மதுரை மண்டல நகராட்சிகள் இயக்குநரால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் பள்ளி ஆசிரியராக பணியை துவங்கிய இவர் தமிழ்நாடு மாநில பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட குரூப் தேர்வில் மாநில அளவில் எட்டாவது இடத்தை அடைந்து நகராட்சி ஆணையராக பணியமர்த்தப்பட்டார். இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் இரண்டாம் நிலை நகராட்சியில் மூன்றாண்டு காலம் சிறப்பாக பணி புரிந்துள்ளார். […]

கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் விடுமுறை முடிந்தும் ஆதார் ‘மய்யம்’ திறக்கப்படாததால் பொதுமக்கள் அவதி

கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் பதிவு மய்யம் நேற்று (08.03.2018) வியாழக் கிழமை விடுமுறை என்பதாக திடீரென அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதனால் புதிய ஆதார் எண் பதிவு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம்ம் அலை[பேசி எண் இணைப்பு உள்ளிட்ட சேவைகளுக்காக நகராட்சி அலுவலகம் வந்திருந்த பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். இந்நிலையில் இன்று (09.03.2018) வெள்ளிக்கு கிழமையும் ஆதார் மய்யம் திறக்கப்படாததால் பொதுமக்கள் வீண் அலைச்சலுக்கு உள்ளானதோடு, பெரும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர். இது […]

சென்னையில் ‘அர் ரஹ்மான் ஜூவல்லர்ஸ்’- புதிய தங்க நகை கடை நிறுவனம் துவக்கம்

கீழக்கரை கிழக்குத் தெருவை சேர்ந்த சகோதரர் ரிபாய்தீன் தங்கள் நண்பர்களுடன் இணைந்து சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் ‘அர் ரஹ்மான் ஜூவல்லர்ஸ்’ என்கிற பெயரில் தங்க நகை கடையினை கடந்த மாதம் திறந்துள்ளார். பொன் நகை வியாபாரத்தில் 25 ஆண்டு கால அனுபவம் நிறைந்த சகோ. ரிபாய்தீன் தமிழகத்தின் தலை சிறந்த தங்க ஆபரண நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். கடந்த 2012 ஆண்டு முதல் தங்க நகை மொத்த வியாபாரத்திலும் கோலோய்ச்சி சிறப்பாக தொழில் செய்து வருகிறார். ‘அர் […]

கீழை நியூஸ் ‘BLOOD APP’ அறிமுக விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது..

கீழக்கரை நகரில் அவசர கால இரத்த தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக இரத்த தானம் செய்ய விரும்பும் கொடையாளர்களும், இரத்தம் தேவைப்படுவர்களும் இலகுவாக சந்தித்து பயனடையும் வகையில் கீழை நியூஸ் சார்பாக ‘KEELAI NEWS BLOOD APP’ நேற்று (16.02.18) கீழக்கரையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அறிமுக விழா நிகழ்ச்சி நேற்று இரவு 7 மணியளவில் ஆலீம் புலவர் பவாஸ் வணிக வளாக கட்டிடத்தில் இயங்கும் சினர்ஜி இன்டர்நெஷனல் கல்வியகத்தில் (முஸ்லீம் பஜார் பீஸா பேக்கரி […]

கீழக்கரையில் ‘KEELAI NEWS BLOOD APP’ அறிமுக விழா நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது – அனைவரும் பங்கேற்க அழைப்பிதழ்

கீழக்கரை நகரில் அவசர கால இரத்த தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அவசர அறுவை சிகிச்சைகள், எதிர்பாராத விபத்து, டெங்கு, வைரஸ் காய்ச்சல், இரத்த அணு குறைபாடு போன்றவற்றினால் பாதிக்கப்படும் மக்கள், தங்களுக்கான இரத்த வகைகள் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் கீழக்கரை, இராமநாதபுரம் சுற்றுவட்டாரங்களில் இரத்த தானம் செய்ய விரும்புபவர்களும், இரத்தம் தேவைப்படுவர்களும் இலகுவாக சந்தித்து பயனடைவதற்கு ஏதுவாக கீழை நியூஸ் சார்பாக ‘KEELAI NEWS BLOOD APP’ அறிமுகப்படுத்தப்பட […]

கீழக்கரை நகராட்சி வார்டு மறுவரையறையில் குளறுபடி – நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனருடன் சட்டப் போராளிகள் சந்திப்பு

கீழக்கரை நகராட்சியில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டதில் குளறுபடி உள்ளதாக வழங்கப்பட்ட மனுக்களின் அடிப்படையில், நிர்வாக மண்டல இயக்குனர் ஜானகி ரவீந்திரன் மாவட்ட வாரியாக நேற்று (10.02.18) முதல் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று இராமநாதபுரம் வருகை தந்த நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர், நிர்வாக குளறுபடிகளை மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கும் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தையும் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து கீழக்கரை சட்டப் போராளிகளுக்கு இராமநாதபுரம் வந்திருக்கும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரை சந்திக்க வருமாறு கீழக்கரை […]

முன்னாள் MLA வீட்டின் எதிரே சாயும் நிலையில் அபாய மின் கம்பம் – கயிறு கட்டி பொதுமக்களை காக்கும் அவலம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெருவில் கடலாடி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்  MLA ஹாமீது இபுறாகீம் வீட்டின் எதிர் புறம் 19/14 என்கிற நகராட்சி குறியிட்ட மின் கம்பம் ஒன்று பொதுமக்களின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் விதமாக நிற்கிறது. கடந்த 1975 ஆம் ஆண்டு காலத்தில் நிலை நிறுத்தப்பட்ட இந்த பழமையான இரும்பினாலான மின் கம்பம் மிகவும் துருப்பிடித்த நிலையில் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த 43 ஆண்டு கால மின் கம்பம் என்று சாய்ந்து விழுந்து பேராபத்தை ஏற்படுத்தி விடுமோ..?  […]

சென்னையில் ‘சான்ட்விச் ஸ்கொயர்’ என்கிற பெயரில் உயர்தர அசத்தல் உணவகம் திறப்பு – கீழக்கரை சட்டப் போராளியின் சுவைமிகு துவக்கம்

சென்னையில் இனி ‘சான்ட்விச்’ சாப்பிடணுமா…? 143 வகையான சான்ட்விச் அயிட்டங்களை வழங்கி வாடிக்கையாளர்களை திக்குமுக்காட வைத்து கொண்டிருக்கிறது ‘சான்ட்விச் ஸ்கொயர்’ உணவகம். நல்ல ருசிமிகுந்த வகையறாக்களை தேடித் தேடி ருசி பார்த்து சாப்பிடும் ‘சான்ட்விச் பிரியர்களுக்கு இனி கொண்டாட்டம் தான். டார்க் சாக்லேட் சான்ட்விச், நட்டெல்லா சான்ட்விச் என்று புதுவிதமாக வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து கொண்டிருக்கிறது. இந்த ‘சான்ட்விச் ஸ்கொயர்’ உணவகத்தை சென்னை ஊரப்பாக்கம் G.S.T சாலையில், கீழக்கரை சின்னக்கடை ஈஸா தண்டையல் தெருவை சேர்ந்த சட்டப் போராளி. […]

கீழக்கரை பொதுமக்கள் சார்பாக மதுரை சென்று மறுவரையறை ஆணையரிடம் முறையிட்ட மனுதாரர்கள் – மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்

கீழக்கரையில் வார்டு மறுவரையறை குளறுபடிகள், கீழக்கரை நகராட்சியின் மக்கள் தொகையில் குளறுபடிகள் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னிறுத்தி நூற்றுக்கணக்கான கீழக்கரை பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர்கள், சட்டப் போராளிகள், அரசியல் கட்சி அமைப்பினர்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கும், கீழக்கரை நகராட்சி ஆணையருக்கும் ஆட்சேபனை மனுக்களை மின்னஞ்சல் வாயிலாகவும், நேரடியாகவும், பதிவுத் தபால் மூலமும் அளித்து இருந்தனர். இந்நிலையில் மனுக்களை அளித்திருந்த அனைவரும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை கருத்து கேட்பு […]

கீழக்கரை நகராட்சியின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில், சட்டத்திற்கு புறம்பாக அதிரடியாக திருத்தப்பட்ட நகராட்சி ‘மக்கள் தொகை’ – நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க ‘சட்டப் போராளிகள்’ முடிவு

கீழக்கரை நகராட்சியில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாக கொண்டு, வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து இருந்தனர். ஆனால் அவசர கோலத்தில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருந்த நகராட்சி மறுவரையறை பட்டியலில் குறிப்பிடப்பட்டு இருந்த 2011 ஆம் ஆண்டின் கீழக்கரை மொத்த மக்கள் தொகைக்கும், தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கடந்த 2013 ஆம் ஆண்டு பெறப்பட்டிருந்த கீழக்கரை நகராட்சியின் மொத்த மக்கள் தொகைக்கும் ஏறத்தாழ 10000 வித்தியாசம் இருந்தது. ஆனால் தகவல் அறியும் […]

கையொப்பம் இல்லாமல் அனுப்பப்பட்டு வரும் அழைப்பு கடிதம் – கீழக்கரை நகராட்சிக்கு மக்கள் நல பாதுகாப்புக் கழகம் கண்டனம்

கீழக்கரை நகராட்சியில் வார்டு மறுவரையரை குளறுபடிகள் சம்பந்தமாக ஆன்லைன் மூலமும், நேரடியாகவும், பதிவுத் தபால் வழியாகவும் ஆட்சேபனை மனு செய்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மனுதாரர் அனைவருக்கும் கீழக்கரை நகராட்சி ஆணையராக பணியாற்றிய திருமதி வசந்தியிடம் இருந்து மதுரையில் நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்திற்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அந்த அழைப்பு கடிதத்தில் எந்த ஒரு நகராட்சி அதிகாரியின் கையொப்பமும் இல்லாமல் கை விடப்பட்டுள்ளது. இதனால் கையொப்பம் இல்லாத கடிதத்தை வாங்கி வாசித்த மனுதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து […]

மக்கள் நீதி மன்றம் மூலம் ஏழை மக்களுக்கு உடனடி தீர்வு – இலவச சட்ட உதவிகள் வழங்கி தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சிறப்பான சேவை – வீடியோ விளக்கத்துடன்..

நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகள், சமரசம் ஏற்படக் கூடிய வழக்குகள் உள்பட பல்வேறு வகையான வழக்குகளுக்கு மக்கள் நீதி மன்றம் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் மாதந்தோறும், சட்ட உதவி முகாம்கள் நடத்தப்பட்டு, ஏழை-எளிய மக்களுக்கு கட்டணமின்றி வழக்குகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மக்கள் நீதி மன்றம் அழைக்கப்படும் லோக் அதாலத், தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலகம், எழும்பூர், […]

நகராட்சி வார்டுகளை மறுவரையறை செய்தது பற்றிய மக்கள் கருத்தும்..சட்டப் போராளிகள் குழுமம் ஒருங்கிணைப்பாளர் விளக்கமும்…ஒரு வீடியோ பதிவு..

கீழக்கரையில் கடந்த வாரம் வார்டுகள் மறுவரையறை செய்வதில் உண்டாகிய குழப்பத்தை நீக்க கோரி சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து குழப்படிகளை சீர் செய்ய மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து மறுவரையறை சம்பந்தமாக கருத்து தெரிவிக்க கூடுதல் நாட்களும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களிடம் இது சம்பந்தமாக கருத்து கேட்ட பொழுது, ஆச்சரியமளிக்கும் வகையில் அதன் பற்றிய விபரம் அறியாதவர்களாகவே இருந்தனர். பொதுமக்களும் விழிப்புணர்வு பெறும் வகையில் கீழக்கரை சட்டப்போராளிகள் குழும ஒருங்கிணைப்பாளர் […]

கீழக்கரையில் மாவீரன் பிரபாகரன் 63வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..

கீழக்கரையில் மாவீரன் பிரபாகரன் 63வது பிறந்த நாள் விழா கீழக்கரை நாம் தமிழர் கட்சி சார்பாக உறுதி மொழியுடன் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் கீழை பிரபாகரன், கீழக்கரை நகர் செயலாளர் மற்றும் முத்துராமலிங்கம், துணை தலைவர், பழனி துணை தலைவர், அயன்ராஜ் பொருளாளர் ஹவ்வில் ரஹ்மான், நகர் இணை செயலாளர் , மகேந்திரன் இளைஞர் அணி துணை செயலாளர், வாசிம் இளைஞர் அணி துணை செயலாளர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் […]

கீழக்கரை தெற்கு தெரு இளைஞர்கள் சார்பாக இஃப்தார் விருந்து ..

கீழக்கரையில் ரமலான் மாதம் 29ம் நாள் தெற்குத் தெரு இளைஞர்கள் சார்பில் தெற்கு தெரு பள்ளி வளாகத்தில் இஃப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் ஜமாத்தார்களும் கலந்து கொண்டார்கள்.

அமீரகத்தில் காயிதே மில்லத் பேரவையின் 25ம் ஆண்டு வெள்ளி விழா..

ஐக்கிய அரபு அமீரகத்தில் அமீரக காயிரே மில்லத் பேரவையின் 25ம் ஆண்டு வெள்ளி விழா இதயங்கள் காப்போம் – சமய நல்லிணக்கம் காப்போம் என்ற முழுக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. இவ்விழா  19-05-2017 வெள்ளிக் கிழமை அன்று மாலை 07.00 மணியளவில் அபுதாபியில் மினா துறைமுகம் அருகில் உள்ள இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தில் ( Indian Social and Cultural Centre, Abudhabi, Near. Mina port) நடைபெறுகிறது. இவ்விழாவில் காயிதே மில்லத்தாய் வாடும் முனீருல் மில்லத் […]

தீராத தாகம்.. தொடரும் SDPI தண்ணீர் மற்றும் சர்பத் பந்தல்..

இன்று 07-05-2017 கீழக்கரை நகர் SDPI கட்சியின் சார்பாக நகர் தலைவர் குதுபு ஜமான் மற்றும் நகர் செயலாளர் கீழை அஸ்ரப் தலைமையில் புது கிழக்கு தெரு குட்லக் ஸ்டோர் முன்பு சர்பத் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியை கீழக்கரை காவல்நிலையம் உதவி ஆய்வாளர் வசந்த் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பை SDPI கிழக்கு கிளை மற்றும் தெற்கு கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இருந்தனர். மேலும் இந்நிகழ்வில் அனைத்து கிளை […]

வடக்குத்தெரு முகைதீனியா பள்ளியில் நாளைய உலகம் நமதாகட்டும் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.

கீழக்கரை வடக்குத்தெரு முகைதீனியா பள்ளியில் நாளைய உலகம் நமதாகட்டும் என்ற தலைப்பில் உம்மத்திற்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று (05-05-2018) மாலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை வடக்குத்தெரு சமூக நல அமைப்பு ( NASA) மற்றும் தமிழ்நாடு இஸ்லாமிய கல்வி இயக்கம் ஆகியோர் இணைந்நு நடத்தினர். இந்நிகழ்ச்சியின் வரவற்புரையை ஃபர்கான் பின் அஷ்ரஃப் வழங்கினார். நிகழ்ச்சியின் தலைமையுரையை முகைதீனியா பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் ரஃபீக் பசீர் அகமது ஆகியோர் வழங்கினார். பின்னர் எது கல்வி […]

கீழக்கரையில் தனியார் குடிநீர் லாரிகள் ஸ்ட்ரைக் வாபஸ்

கீழக்கரை நகரில் கடந்த இரண்டு நாள்களாக குடிநீர் விநியோகம் செய்து வந்த சுகன்யா, ஸ்டார், உள்ளிட்ட தனியார் லாரிகள் நகருக்குள் வராமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமும் பொதுமக்கள் குடிக்கும் தண்ணீரில் அளவுக்கு அதிகமாக குளோரின் பவுடரை கலந்து வரும் கீழக்கரை நகராட்சி ஊழியர்களை கண்டித்து இந்த ஸ்ட்ரைக் நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக கீழக்கரை முக்குரோடு வரை குடங்களுடன் சென்று தண்ணீர் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளர்களுடன் கீழக்கரை சட்டப் போராளிகள், […]

இராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  07.04.2017 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன் நேரடியாக வருகை தந்து ஆய்வு ஆய்வு மேற்கொண்டார். ​வட்டாட்சியர் அலுவலகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை சான்றுகளான சாதிச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள், உள்பட சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் பல்வேறு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் என பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்றைய தினம் வட்டாட்சியர் அலுவலகத்தில் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!