கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 26வது பட்டமளிப்பு விழா இன்று (05-04-2017) காலை 09.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இறைவணக்கத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து முதல்வர் முனைவர்.சுமையா வரவேற்புரையுடன் நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. முதல் நிர்வாகிகள் கல்லூரியின் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பட்டமளிப்பு விழா உறுதி மொழியுடன் பட்டமளிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. பட்டமளிப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். கிருஷ்ண பாஸ்கர் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கான பட்டங்களை […]
Category: இன்றைய நிகழ்ச்சி
கீழக்கரையில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் – இஸ்லாமியா பள்ளியில் நகராட்சி ஆணையர் துவங்கி வைத்தார்
தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று 02.04.17 முதல் தவணையாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. கீழக்கரை நகரில் பல்வேறு பள்ளிகளிலும், சமூக கூடங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளியில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகர் தலைமையேற்று போலியோ சொட்டு மருந்து முகாமை துவங்கி வைத்தார். கிழக்குத் தெரு ஹைராத்துல் ஜலாலியா அரபி மதரஸாவில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் […]
கீழக்கரையில் DSP மகேஸ்வரிக்கு பிரிவுபசார விழா – கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக ‘சிறந்த நேர்மையாளர்’ விருது வழங்கி கவுரவிப்பு
கீழக்கரை நகரில் சிறப்பாக பணியாற்றி தற்போது விருதுநகருக்கு பணியிட மாறுதலில் செல்லும் கீழக்கரை துணை கண்காணிப்பாளர் மகேஸ்வரிக்கு இன்று மாலை 5 மணியளவில் ஹுசைனியா மஹாலில் பிரிவுபசார விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது நேர்மையோடும், கொள்கை பிடிப்போடும் கீழக்கரை நகரில் மிக சிறப்பாக பணியாற்றியமைக்காக கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக ‘சிறந்த நேர்மையாளர் விருது’ வழங்கப்பட்டது. இந்த விருதினை கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர் ஸ்டேஷன் மாஸ்டர் M.M.S.செய்யது இபுறாகீம் வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் […]
கீழக்கரையில் தனியார் நிறுவனம் சார்பாக தாகத்தை தீர்க்க நீர் மோர் பந்தல் திறப்பு
கீழக்கரை முஸ்லீம் பஜாரில் இயங்கி வரும் தனியார் நிறுவனமாக தமினா ஸ்டைன்லஸ் ஸ்டீல் சார்பாக ஒவ்வொரு வருடமும், கோடை காலங்களில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க, வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் நீர் மோர் பந்தல் திறக்கப்படுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் கோடை வெயில் கொளுத்த துவங்கி விட்டதால் தற்போது இந்த தனியார் நிறுவனம் சார்பாக இன்று 31.03.17 நீர் மோர் பந்தல் துவங்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு கிழக்குத் தெரு ஜமாஅத் துணை பொருளாளர் முஹம்மது அஜிஹர் தலைமை […]
கீழக்கரை தாலுகா அலுவலகம் அருகே குழந்தைகளுக்கான ஆதார் அட்டை எடுக்கும் பணி நடைபெறுகிறது
கீழக்கரை தாலுகா அலுவலகம், மலேரியா கிளினிக் அருகாமையில் அமைந்திருக்கும் குழந்தைகள் நல மையத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் அட்டை எடுக்கும் பணி இன்று 30.03.17 காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பெற்றோரோக்கள் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பதிவு செய்து வருகின்றனர். அதே போல் நாளைய தினமும் 31.03.17 காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இங்கு குழந்தைகளுக்கு ஆதார் எடுக்கும் பணி நடைபெறுவதாக […]
கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் சர்வதேச நுகர்வோர் தினம்..
இன்று (15-03-2017) உலகம் முழுவதும் சர்வதேச நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இது தொடர்மாக அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் நுகர்வோரின் உரிமை மற்றும் அதன் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்து வருகிறார்கள். அதன் தொடர்பாக இன்று கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி சார்பில் சர்வதே நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்ந கருத்தரங்கு வணிகவியல் துறை ( Department of Business Administration) சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் […]
இராமநாதபுரத்தில் செய்யதம்மாள் அறக்கட்டளை மற்றும் ‘மாற்றம் முன்னேற்றம்’ இளைஞர் பொது நல சங்கம் சமூக சேவை..
இன்று 26.02.2017 இராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் சுகாதாரமற்ற நிலையில் இருந்த பகுதியினை செய்யது அம்மாள் அறக்கட்டளை மற்றும் மாற்றம் முன்னேற்றம் இளைஞர் பொதுநலச்சங்கத்தினர் சுத்தம் செய்தனர். பின்னர் மாற்றம் முன்னேற்றம் இளைஞர் பொது நலச்சங்கத்தின் தலைவர் பிரபு தலைமையில் வண்டிக்காரத்தெரு மற்றும் வண்டிக்காரப்பிள்ளையார் கோவில் தெரு சார்பில் மரங்கள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாகபாஸ்கர், பாலா, கார்த்திக், சுரேஷ்மேத்தா, ராஜசேகரன், ஜெய்பாரத், சகுபர்சாதிக் ராஜேந்திரன், மாணிக்கம், கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர். கீழை நியூஸ் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோதரர்களே […]
கீழக்கரை வடக்கு தெரு முஹைதீனியா பள்ளியில் நாளை சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி நடைபெறுகிறது ..
கீழக்கரையில் நாளை (07-02-2017) வடக்குத் தெரு முஹைதீனியா பள்ளி வளாகத்தில் 4 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற உள்ளது. ஆதார் எடுக்கும் பணி இன்றும் (06-02-17) நடைபெற்றது. முகாமுக்கு வரும்பொழுது சிறார்களின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை நகல் கொண்டு வருமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.
நிலவேம்பு கசாயம், புது கிழக்கு தெரு பகுதியில் வினியோகம்..
கீழக்கரையில் இன்றும் நிலவேம்பு கசாயம் வினியோகம் தொடர்கிறது.. நேற்று தொடங்கிய நில வேம்பு கசாயம் வினியோகம் இன்று புதிய கிழக்கு தெரு பகுதியில் தொடர்கிறது. அனைத்து மக்களும் பயனடையுமாறு சமூக ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள். இந்நிகழ்ச்சி மக்கள் நல பாதுகாப்புக் கழகம்,கீழக்கரை மக்கள் பொதுதளம்,கீழக்கரை சட்ட போராளிகள் தளம் மற்றும் கீழக்கரை மக்கள் களம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கீழக்கரையில் நில வேம்பு கசாயம் வினியோகம்…
இன்று (28-01-2017) கீழக்கரையில் மக்கள் நல பாதுகாப்புக் கழகம், கீழக்கரை மக்கள் பொதுதளம், கீழக்கரை சட்ட போராளிகள் தளம் மற்றும் கீழக்கரை மக்கள் களம் சார்பாக கீழக்கரை நகர் முழுவதும் நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கும் சிறப்பு முகாம் இன்று காலை தொடங்கப்பட்டது. முகாமை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் இணைச்செயலாளர். செய்யது சாகுல் ஹமீது அவர்கள் தொடங்கி வைக்க முதல் நிலவேம்பு கசாயத்தை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் கட்சித் தொகுதி இணைச்செயலாளர் ஜனாப் சித்தீக் […]
தவ்ஹீத் ஜமாத்தின் சுவரொட்டி எதிர்ப்பு- ” பீட்டாவை தடை செய், புளு கிராசை தடை செய்”
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மார்க்க பணிகளை வீரியமாக செயல்படுத்துவது அனைவரும் அறிந்ததே. அதேபோல் சமூக பணிகளிலும் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். சமீபத்தில் ஏற்பட்ட ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு முக்கிய காரணிகளான PETA மற்றும் BLUE CROSS அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் இன்று கீழை நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட ” பீட்டாவை தடை செய்” மற்றும் ” புளு கிராசை தடை செய்” என்று அச்சிட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
கீழக்கரை சட்டப் போராளிகளின் இன்றைய இராமநாதபுரம் நிகழ்வுகள்
கீழக்கரை சட்டப் போராளிகளின் சார்பாக மக்கள் நல பாதுகாப்பு கழகம் மற்றும் இஸ்லாமிய கல்விச் சங்கம் இணைந்து இன்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் நம் நகரின் ஐந்து பிரச்சனைகளை தீர்க்கும் பொருட்டு மனு கொடுக்கப்பட்டது. மனுக்கள் விபரங்கள் கீழே வருமாறு :- மனு : 1 கீழக்கரை நகருக்கு மாவட்ட ஆட்சியரை சாலை சம்பந்தமாக ஆய்வு செய்ய அழைத்து, ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோருதல் சம்பந்தமாக மனு : 2 கீழக்கரை இராமநாதபுரம் […]
கீழை நகருக்கு புதிய அத்தியாயம் கீழை நியூஸ்..
கீழக்கரையில் 29-12-2016 அன்று மாலை 8.00 மணி அளவில் கீழை நியூஸ் இணைய தளம் ஆரம்பம், கீழக்கரை மக்கள் களம் அறிமுக நிகழ்ச்சி மற்றும் சட்டப்போராளிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வடக்கு தெரு இஸ்லாமிய அமைதி மையத்தில் குர்ஆன் கிராத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியை சாலிஹ் ஹுசைன் தொகுத்து வழங்கினார். மக்கள் களத்தின் பொருளாளர் மற்றும் அல் பையினா மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர் ஜாஃபிர் சுலைமான் வரவேற்புரையாற்றினார். பின்னர் மக்கள் களத்தின் செயலாளர் மற்றும் கீழை […]
சட்டப்போராளிகளுக்கான பரிசளிப்பு விழா..
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பார்ந்த சகோதரர்களே . இன்ஷாஅல்லாஹ் நாளை (29-12-2016) அன்று இஷா தொழுகைக்கு பிறகு 8.00 மணி முதல் 09.00 மணி வரை வடக்குத் தெரு கீழக்கரை இஸ்லாமிக் அமைதி மையத்தில் ( Kilakkarai Islamic peace Centre) சட்டப்போராளிகளுக்கு பரிசு வழங்கும் விழா மற்றும் நம் கீழை நியூஸ் (www.keelainews.com) இணையதளத்தின் அறிமுக நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தவறாமல் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறாம். மேலும் கீழை நியூஸின் நடுநிலைத்தன்மை, செயல்பாடுகள் […]
கீழக்கரையில் இலவச இருதய சிகிச்சை முகாம்..
கீழக்கரையில் 28-12-2016 மற்றும் 29-12-2016ஆகிய இரண்டு நாட்கள் காவேரி மருத்துவமனை மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் இருதய சிகிச்சை முகாம் இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 வரை தடைபெறும். இம்முகாமில் சகோ. MMK இபுராஹிம், இஸ்லாமிய பள்ளி தாளாளர் தலைமையுரையாற்றுகிறார். ஜனாப்.H. சிராஜுதீன், ஹமீதியா துவக்கப்பள்ளி தாளாளர் அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார். திரு. S.சர்வேஸ் ராஜ், IPS, இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் விழாவை […]
மக்கள் களம் அறிவிப்பு
அஸ்ஸலாமு அலைக்கும்.. அன்பார்ந்த சகோதரர்களே கீழை நியூஸ் செய்தி அப்டேட் பெற விரும்பும் நண்பர்கள் 00966500818177 அல்லது +971 52 640 1403 அல்லது +91 97917 42074 அல்லது +91 95141 71867 என்ற எண்ணை உங்களுடைய contactல் இணைத்துக்கொண்டு, அந்த நம்பருக்கு உங்கள் விருப்பத்தை அனுப்பவும்…இன்ஷாஅல்லாஹ் வரும் 1ம் தேதி முதல் முழுமையான www.keelainews.com இணையதளம் ஆரம்பம் ஆக உள்ளது. அதன் வளர்ச்சிக்கு தங்கள் அனைவருடைய துஆக்களை எதிர்பார்க்கிறோம்.. – கீழை நியூஸ் நிர்வாக […]
You must be logged in to post a comment.