கீழக்கரை நகராட்சியில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டதில் குளறுபடி உள்ளதாக வழங்கப்பட்ட மனுக்களின் அடிப்படையில், நிர்வாக மண்டல இயக்குனர் ஜானகி ரவீந்திரன் மாவட்ட வாரியாக நேற்று (10.02.18) முதல் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று இராமநாதபுரம் வருகை தந்த நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர், நிர்வாக குளறுபடிகளை மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கும் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தையும் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து கீழக்கரை சட்டப் போராளிகளுக்கு இராமநாதபுரம் வந்திருக்கும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரை சந்திக்க வருமாறு கீழக்கரை […]
Category: சட்டப்போராளிகள்
முன்னாள் MLA வீட்டின் எதிரே சாயும் நிலையில் அபாய மின் கம்பம் – கயிறு கட்டி பொதுமக்களை காக்கும் அவலம்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெருவில் கடலாடி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் MLA ஹாமீது இபுறாகீம் வீட்டின் எதிர் புறம் 19/14 என்கிற நகராட்சி குறியிட்ட மின் கம்பம் ஒன்று பொதுமக்களின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் விதமாக நிற்கிறது. கடந்த 1975 ஆம் ஆண்டு காலத்தில் நிலை நிறுத்தப்பட்ட இந்த பழமையான இரும்பினாலான மின் கம்பம் மிகவும் துருப்பிடித்த நிலையில் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த 43 ஆண்டு கால மின் கம்பம் என்று சாய்ந்து விழுந்து பேராபத்தை ஏற்படுத்தி விடுமோ..? […]
கீழக்கரை பொதுமக்கள் சார்பாக மதுரை சென்று மறுவரையறை ஆணையரிடம் முறையிட்ட மனுதாரர்கள் – மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
கீழக்கரையில் வார்டு மறுவரையறை குளறுபடிகள், கீழக்கரை நகராட்சியின் மக்கள் தொகையில் குளறுபடிகள் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னிறுத்தி நூற்றுக்கணக்கான கீழக்கரை பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர்கள், சட்டப் போராளிகள், அரசியல் கட்சி அமைப்பினர்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கும், கீழக்கரை நகராட்சி ஆணையருக்கும் ஆட்சேபனை மனுக்களை மின்னஞ்சல் வாயிலாகவும், நேரடியாகவும், பதிவுத் தபால் மூலமும் அளித்து இருந்தனர். இந்நிலையில் மனுக்களை அளித்திருந்த அனைவரும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை கருத்து கேட்பு […]
கீழக்கரை நகராட்சியின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில், சட்டத்திற்கு புறம்பாக அதிரடியாக திருத்தப்பட்ட நகராட்சி ‘மக்கள் தொகை’ – நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க ‘சட்டப் போராளிகள்’ முடிவு
கீழக்கரை நகராட்சியில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாக கொண்டு, வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து இருந்தனர். ஆனால் அவசர கோலத்தில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருந்த நகராட்சி மறுவரையறை பட்டியலில் குறிப்பிடப்பட்டு இருந்த 2011 ஆம் ஆண்டின் கீழக்கரை மொத்த மக்கள் தொகைக்கும், தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கடந்த 2013 ஆம் ஆண்டு பெறப்பட்டிருந்த கீழக்கரை நகராட்சியின் மொத்த மக்கள் தொகைக்கும் ஏறத்தாழ 10000 வித்தியாசம் இருந்தது. ஆனால் தகவல் அறியும் […]
கையொப்பம் இல்லாமல் அனுப்பப்பட்டு வரும் அழைப்பு கடிதம் – கீழக்கரை நகராட்சிக்கு மக்கள் நல பாதுகாப்புக் கழகம் கண்டனம்
கீழக்கரை நகராட்சியில் வார்டு மறுவரையரை குளறுபடிகள் சம்பந்தமாக ஆன்லைன் மூலமும், நேரடியாகவும், பதிவுத் தபால் வழியாகவும் ஆட்சேபனை மனு செய்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மனுதாரர் அனைவருக்கும் கீழக்கரை நகராட்சி ஆணையராக பணியாற்றிய திருமதி வசந்தியிடம் இருந்து மதுரையில் நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்திற்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அந்த அழைப்பு கடிதத்தில் எந்த ஒரு நகராட்சி அதிகாரியின் கையொப்பமும் இல்லாமல் கை விடப்பட்டுள்ளது. இதனால் கையொப்பம் இல்லாத கடிதத்தை வாங்கி வாசித்த மனுதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து […]
மக்கள் நீதி மன்றம் மூலம் ஏழை மக்களுக்கு உடனடி தீர்வு – இலவச சட்ட உதவிகள் வழங்கி தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சிறப்பான சேவை – வீடியோ விளக்கத்துடன்..
நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகள், சமரசம் ஏற்படக் கூடிய வழக்குகள் உள்பட பல்வேறு வகையான வழக்குகளுக்கு மக்கள் நீதி மன்றம் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் மாதந்தோறும், சட்ட உதவி முகாம்கள் நடத்தப்பட்டு, ஏழை-எளிய மக்களுக்கு கட்டணமின்றி வழக்குகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மக்கள் நீதி மன்றம் அழைக்கப்படும் லோக் அதாலத், தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலகம், எழும்பூர், […]
நகராட்சி வார்டுகளை மறுவரையறை செய்தது பற்றிய மக்கள் கருத்தும்..சட்டப் போராளிகள் குழுமம் ஒருங்கிணைப்பாளர் விளக்கமும்…ஒரு வீடியோ பதிவு..
கீழக்கரையில் கடந்த வாரம் வார்டுகள் மறுவரையறை செய்வதில் உண்டாகிய குழப்பத்தை நீக்க கோரி சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து குழப்படிகளை சீர் செய்ய மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து மறுவரையறை சம்பந்தமாக கருத்து தெரிவிக்க கூடுதல் நாட்களும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களிடம் இது சம்பந்தமாக கருத்து கேட்ட பொழுது, ஆச்சரியமளிக்கும் வகையில் அதன் பற்றிய விபரம் அறியாதவர்களாகவே இருந்தனர். பொதுமக்களும் விழிப்புணர்வு பெறும் வகையில் கீழக்கரை சட்டப்போராளிகள் குழும ஒருங்கிணைப்பாளர் […]
கீழக்கரையில் தனியார் குடிநீர் லாரிகள் ஸ்ட்ரைக் வாபஸ்
கீழக்கரை நகரில் கடந்த இரண்டு நாள்களாக குடிநீர் விநியோகம் செய்து வந்த சுகன்யா, ஸ்டார், உள்ளிட்ட தனியார் லாரிகள் நகருக்குள் வராமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமும் பொதுமக்கள் குடிக்கும் தண்ணீரில் அளவுக்கு அதிகமாக குளோரின் பவுடரை கலந்து வரும் கீழக்கரை நகராட்சி ஊழியர்களை கண்டித்து இந்த ஸ்ட்ரைக் நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக கீழக்கரை முக்குரோடு வரை குடங்களுடன் சென்று தண்ணீர் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளர்களுடன் கீழக்கரை சட்டப் போராளிகள், […]
கீழக்கரையில் ‘ஈ’ ஆடும் இ-சேவை மையம் – தொடர் சேவை பாதிப்பால் பொதுமக்கள் அவதி
கீழக்கரை நகராட்சி பகுதியில் அரசு மருத்துவமனை வளாகத்தில் இ-சேவை மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்திற்கு கீழக்கரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தினமும் வருகின்றார்கள். அவர்களுள் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் பெறுவதற்காகவும் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆதார் அடையாள அட்டைகள் வாங்குவதற்காகவுமே பெரும்பாலான பொதுமக்கள் இங்கு வருகின்றனர். ஆனால் கடந்த நான்கு மாதங்களாக ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற முடியாமல் பொதுமக்கள் தொடர்ந்து அவதி அடைந்து வருகின்றனர். இது […]
கீழக்கரை நகருக்குள் மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்க வாடகைக்கு இடம் கொடுக்க கூடாது – கீழக்கரை மக்கள் களம் வேண்டுகோள்
உச்ச நீதிமன்றத்தின் மகத்தான உத்தரவை அடுத்து கீழக்கரை-இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் மதுமானக் கடை இழுத்து மூடப்பட்டது. அதே போல் தமிழகம் முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அருகே 500 மீட்டருக்குள் திறக்கப்பட்டிருந்த 3400 மதுக்கடைகளுக்கும் மூடுவிழா நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 90000 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கிறது. இந்த செய்திகள் எல்லாம் மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆனால், இந்த […]
கீழக்கரையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் முறைகேடு – பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுகோள்
கீழக்கரையில் தனியார் கேஸ் ஏஜென்சி மூலம் விநியோகம் செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தரம் மற்றும் எடையில் குறைபாடு உடையதாக இருக்கிறது என்கிற பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்து சமூக ஆர்வலர்களால் விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து முத்துமாரி பிரின்டர்ஸ் நிறுவனர் சமூக ஆர்வலர் மலை ராஜா நம்மிடையே பேசுகையில் ”கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தனியார் கேஸ் ஏஜென்சி நிறுவனத்தால் விநியோகம் செய்யப்படும் சிலிண்டர்களில் பெருமளவு முறைகேடு நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு இது […]
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கீழக்கரை நெடுஞ்சாலை டாஸ்மாக் மூடல் – ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி – மக்கள் நல பாதுகாப்பு கழகம் கருத்து
தமிழகம் முழுவதும் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நெடுஞ்சாலையில் உள்ள 3400 டாஸ்மாக் கடைகளை நடவடிக்கையில் அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 124 மதுக்கடைகள், நெல்லை மாவட்டத்தில் 166 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 33 கடைகள், திருவள்ளூர் மாவட்டத்தில் 75 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் தூத்துக்குடியில் நெடுஞ்சாலை ஓரம் இருந்த 84 மதுக்கடைகள் மூடப்பட்டன. இராமநாதபுரம் மாவட்டத்திலும் நெடுஞ்சாலை கடைகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கீழக்கரை – இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் மின்சார வாரிய அலுவலகம் அருகே […]
சேவை செய்ய நகராட்சி தயார்.. ஒத்துழைக்க பொதுமக்கள் தயாரா?? – ஆணையர் வேண்டுகோள்…
கீழக்கரை நகராட்சி கடந்த 6 மாத காலமாக அரசியல் வாதிகளின் கைகளில் பொறுப்புகள் இருந்த காலத்தை விட தற்போது துரிதமாக நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என்றால் நிச்சயமாக மிகையாகாது. ஆனால் பொது மக்களின் பார்வையில் பார்க்கும் பொழுது நகராட்சி நிர்வாகம் மெத்தனப்போக்கை கையாள்கிறதோ என்ற எண்ணம் எழக்கூடும், ஆனால் பிரச்சினையின் ஆணி வேரை ஆராய்ந்து பார்க்கும பொழுது பிரச்சினையின் கோணமே வேறு விதமாக இருக்கிறது. இரு கைகள் சேர்ந்தால்தான் ஓசை எழுப்ப முடியும், அது போல் நகராட்சி […]
கீழக்கரையில் 100 ஆண்டுகள் பழமையான வணிக கட்டிடம் இடிப்பு – பேராபத்து ஏற்படும் முன் இடிக்கப்படுவதால் பொதுமக்கள் நிம்மதி
கீழக்கரையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பிரதான சாலைகளிலும், தெருக்களிலும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பழைய கட்டிடங்கள் பல இடங்களில் காணப்படுகிறது. பெரிய அளவில் வெடிப்புகளுடன் அதன் மதில் சுவர்களும், சாரமும் சிதலமடைந்து காணப்படுவதால் எந்நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இது குறித்து கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக அரசு துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தொடர்ச்சியாக மனுக்களை அனுப்பி வருகின்றனர் . இந்நிலையில் கீழக்கரை செக்கடி பகுதியில் வடக்கு தெருவை […]
சாதாரணமாக ‘சிட்டிசன்கள்’ செய்ய முடியாத வேலைகளை பல நேரம் ‘பெட்டிஷன்கள்’ தான் செய்து முடிக்கிறது – கீழக்கரை சட்டப் போராளிகள் கருத்து
கீழக்கரை நகராட்சியில் டெங்கு, மர்ம காய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள் தீவிரம் அடைந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக தமிழக முதல்வர், சுகாதார துறை அமைச்சகம், நகராட்சிகள் இயக்குனரகம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறையினருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதே போல் கீழக்கரை சட்டப் போராளிகள் தளம் வாயிலாகவும் ஏராளமான மனுக்களை முதலமைச்சரின் தனிப் பிரிவு வலை தளத்திற்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரின் அறிவுறுத்தலின் பேரில் […]
கஸ்டம்ஸ் ரோடு பகுதி மக்களின் கஷ்டத்தை போக்கிய நகராட்சிக்கு நன்றி
கீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு பகுதியில் சாலையின் நடுவே போடப்பட்ட கழிவுநீர் ஜங்க்சன் மூடி உடைந்து 3 மாதங்களுக்கும் மேலாக புதிய மூடி போடப்படாமல் இருந்ததால் வாகன ஓட்டிகளும், பள்ளி சிறுவர்களும், முதியவர்களும் பலமுறை இந்த பள்ளத்தில் விழுந்து அடிபட்டு செல்வது தொடர்கதையாகி வந்தது. இது குறித்து நம் கீழை நியூஸ் வலை தளம் சார்பாக கடந்த வாரம் ”கீழக்கரையில் கஷ்டமப்பா.. கஸ்டம்ஸ் ரோட்டில் ‘உலகத் தரத்துடன்’ போடப்பட்ட ஜங்க்சன் மூடி உடைந்ததால் விபத்தில் சிக்கும் அப்பாவிகள் – நகராட்சியில் […]
சகாயம் IAS தலைமையில் மக்கள் பாதை இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா – ‘ஏப்ரல் 2’ சென்னையில் நடைபெறுகிறது
சகாயம் ஐ.ஏ.எஸ் இன் வழிகாட்டுதலின் படி, சமூக சேவைகள் செய்யவும், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ”மக்கள் பாதை” என்ற பெயரில் கடந்த ஆண்டு ஏப்ரலில் இயக்கம் துவக்கப்பட்டு மிக சிறப்பான முறையில் பல்வேறு சமூகப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இலட்சக்கணக்கான இளைஞர் பட்டாளம் இந்த இயக்கத்தில் தன்னை இணைத்து வருகிறது. விவசாயிகள் பிரச்சனை, ஜல்லிக்கட்டு மீட்டெடுப்பு போராட்டம், தமிழர் கலாச்சார பாதுகாப்பு என்று பல்வேறு அறவழி போராட்டங்களை முன் நின்று நடத்தி வருகிறது. இந்நிலையில் சகாயம் […]
சிங்க கொடியுடன் பல நாடுகளுக்கு கப்பலோட்டிய ‘கீழை மன்னர்கள்’ வாழ்ந்த வீடுகளில் குப்பை மேடுகளா..? – அதிர்ச்சியில் உறைந்த மலேசிய வரலாற்று ஆய்வாளர்கள்
கீழக்கரை நகருக்கு மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவையினர் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நகரின் பழமை வாய்ந்த பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அதன் தொன்மையை அறிந்து வியந்து குறிப்பெடுத்து வருகின்றனர். வள்ளல் சீதக்காதியின் முன்னோர் வீட்டினை பார்வையிட்ட மலேசிய இந்திய முஸ்லீம் பேரவையினர் அங்கு மக்கள் கொட்டும் குப்பைகளை பார்த்து மன வருத்தத்தில் ஆழ்ந்தனர். மேலும் பெரிய தம்பி மரைக்காவின் வீடு இருக்கும் நிலையையும் கண்டு வருந்தினர். உலகத்தின் பல மூலைகளுக்கும் கடல் வழி மார்க்கமாக […]
வள்ளல் சீதக்காதி சாலையில் கேட்பாரற்று பல நாள்களாக ‘படுத்துக் கிடக்கும்’ மின் கம்பம் – நிலை நிறுத்த மின்சார வாரியம் முன் வருமா..?
கீழக்கரை நகரில் பல இடங்களில் சிதிலமடைந்த மின் கம்பங்களை மாற்றிடக் கோரி கீழக்கரை சட்டப் போராளிகள் தளம், மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக முதலமைச்சரின் தனிப் பிரிவு வலை தளத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், மின்சார வாரியத்திற்கும் தொடர்ந்தது மனுக்கள் வாயிலாக கடந்த 3 மாதங்களாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் லெப்பை தெரு மதரஸா அருகாமையில் உள்ள மின் கம்பமும் ஒன்றாகும். மனுவில் சுட்டிக் காட்டப்பட்ட பல்வேறு அபாய மின் கம்பங்களுள் ஒரு சில […]
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் வேகத் தடைகளுக்கு ஒளிரும் பெயிண்ட் – தொடர் முயற்சி எடுத்த ‘இஸ்லாமிய கல்வி சங்கம்’
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நெடுஞ்சாலை துறையினரால் செப்பனிடும் போது தேவையான பல இடங்களில் வேகத் தடை அமைக்காமலும், கரீம் ஸ்டோர் அருகாமை, நாடார் மெட்ரிகுலேசன் பள்ளி சமீபம் மற்றும் முக்கு ரோடு நுழைவு பகுதிகளில் அமைத்த வேகத் தடைகள் மீது ஒளிரும் பெயிண்ட் அடிக்காமலும் விடுபட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் வேகத் தடை இருப்பது தெரியாமல் தொடர்ச்சியாக விபத்துகளில் சிக்கினர். இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் விபத்துக்களை தவிர்க்கும் முகமாக […]
You must be logged in to post a comment.