தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் இந்த கல்வியாண்டு 2018 – 2019 மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (28.05.2018) முதல் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதே போல் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் நடத்தப்படும் 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 10 […]
Category: சட்டப்போராளிகள்
வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு ‘சட்டப் போராளிகள்’ஆஜர் – கீழக்கரை தாலுகா அதிகாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி நேரத்தில் அதிகாரிகள் தங்கள் இருக்கைகளில் இல்லாததால் தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு அரசு நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக வரும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருவதை சுட்டிக் காட்டி கடந்த மாதம் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு கீழக்கரை ‘சட்ட விழிப்புணர்வு இயக்கம்’ சார்பாக 65 க்கும் மேற்பட்ட சட்டப் போராளிகள் மனு செய்திருந்தனர். அதே போல் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட சமூக நல அமைப்பினர் […]
கீழக்கரையில் அஞ்சாமல் நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் சீரழியும் இளைஞர்கள் – காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க சமூக நல அமைப்பினர் மனு
கீழக்கரை நகரில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் இளைய சமுதாயம் போதையில் மயங்கி சின்னாபின்னமாகி சீரழிந்து வருகின்றனர். அந்தி மயங்கும் வேளைகளில் தெருவுக்கு தெரு இருள் சூழ்ந்த பகுதிகளில் உலவும் கஞ்சா வியாபாரிகளிடம் தங்கள் பொன்னான எதிர்காலத்தை தொலைத்து வருகின்றனர். இதனால் இன்று வீட்டுக்கு வீடு கஞ்சா அடிமைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கீழக்கரை நகரில் படு ஜோராக எவ்வித அச்சமும் இல்லாமல் தொழில் […]
‘கீழை மக்கள் மருந்தகம்’ புதுப் பொலிவுடன் மீண்டும் இனிதே துவங்கியது
தமிழகம் முழுவதும் திரு.உ.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி ஏழை எளிய மக்களின் நலன் கருதி மலிவு விலையில் தரமான மருந்துகளை கிடைக்க செய்யும் உயரிய நோக்கில் மக்கள் பாதை இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு ‘மக்கள் மருந்தகம்’ என்கிற பெயரில் ஆங்கில மருந்துகள் விற்பனை நிலையங்கள் ஜெனரிக் மெடிக்கல் திறக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கீழக்கரையில் ‘கீழை மக்கள் மருந்தகம்’ என்கிற பெயரில் கிழக்கு தெரு சிட்டி யூனியன் வங்கி அருகில் இருக்கும் இமாம் ஜகுபர் சாதிக் […]
கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் ‘ஓ.பி’ அடிக்கும் அதிகாரிகளை கண்காணிக்க பயோ மெட்ரிக் வருகை பதிவு, CCTV கேமரா அமைக்க சட்டப் போராளிகள் முதல்வருக்கு மனு
கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்காகவும், திருமண உதவி சான்றிதழ், முதியோர் உதவி தொகை, வாரிசு சான்றிதழ் பெறுவதற்காகவும் வந்து செல்கின்றனர். கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு கீழக்கரை பகுதி பொதுமக்கள் மட்டுமல்லாது ஆலங்குளம், எக்கக்குடி, ஏர்வாடி, இதம்பாடல், களிமண்குண்டு, காஞ்சிரங்குடி, மல்லல், மாணிக்கனேரி, நல்லிருக்கை, பள்ள மோர்குளம், பனைக்குளம், பெரியப்பட்டினம், ரெகுநாதபுரம், திருப்புல்லாணி, வேளானூர் உள்ளிட்ட 25 கிராமவாசிகளும், பாமர […]
கீழக்கரையில் வாரந்தோறும் நீர் மோர் பந்தல் அமைத்து தாகம் தீர்க்கும் ‘தமினா ஸ்டீல்’ நிறுவனம்
கீழக்கரை முஸ்லீம் பஜாரில் இயங்கி வரும் தனியார் நிறுவனமாக தமினா ஸ்டைன்லஸ் ஸ்டீல் நிறுவனம் சார்பாக ஒவ்வொரு வருடமும், கோடை காலங்களில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க, வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் நீர் மோர் பந்தல் திறக்கப்படுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் கோடை வெயில் கொளுத்த துவங்கி விட்டதால் தற்போது இந்த தனியார் நிறுவனம் சார்பாக இன்று நீர் மோர் பந்தல் துவங்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு கிழக்குத் தெரு ஜமாஅத் துணை பொருளாளர் சட்டப் போராளி முஹம்மது […]
கீழக்கரையில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க கோரி பொதுநல அமைப்புகள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு
கீழக்கரை நகரின் பல வார்டு பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளிகூடங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில் பள்ளி மாணவர்கள் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கீழக்கரை நகரில் நிலவும் சுகாதரக்கேட்டினை சீர் செய்து டெங்கு காய்ச்சலை ஒழிப்பது சம்பந்தமாக உள்ளூரில் இருக்கும் பொதுநல அமைப்புகள், சமூக நல சங்கங்கள் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை […]
கீழக்கரையில் குரங்குகளை பிடிக்க நான்கு இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டது
கீழக்கரை நகராட்சி பகுதிகளில் குரங்குகள் அட்டூழியம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் மக்கள் நல பாதுகாப்புக் கழகம், சட்டப் போராளிகள் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் குரங்குகள் பிரச்சனைக்கு தீர்வு வேண்டி மனு செய்திருந்தனர். அதன் அடிப்படையில் கீழக்கரை வனச் சரக ஆய்வாளர் சிக்கந்தர் பாட்சா குரங்குகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து வரும் குரங்குகளை பிடித்து அதன் வாழ்வாதார பகுதிகளில் விட பரமக்குடியில் இருந்து பிரத்யேக […]
கீழக்கரையில் ‘டெங்கு கொசு’ உற்பத்தியாகும் பகுதி கண்டுபிடிப்பு – நடவடிக்கை எடுக்குமா நகராட்சி..?
கீழக்கரையில் மீண்டும் டெங்கு காய்ச்சல் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. 3 வது வார்டு புதுக் கிழக்குத் தெரு மற்றும் 8 வது வார்டு பழைய குத்பா பள்ளி தெரு உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த டெங்கு கொசு எங்கு உற்பத்தியாகிறது என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது. தற்போது இந்த டெங்கு கொசுவின் உற்பத்தி தொழிற்சாலை கீழக்கரை நகரின் மைய பகுதியான லெப்பை டீக்கடை அருகாமையில் […]
தொடர் வங்கி விடுமுறை நாளையொட்டி அனல் பறக்கும் ஆன்லைன் மோசடி – கீழக்கரை பகுதி பொதுமக்கள் உஷார்
மஹாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, சனி ஞாயிறு அரசு விடுமுறை தினங்களையொட்டி ‘வங்கி தொடர் விடுமுறைகள்’ இன்று முதல் துவங்கி இருக்கிறது. இந்நிலையில் இன்று (29.03.2018) கீழக்கரை பகுதியில் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் பலருக்கு தொலைபேசி வாயிலாக பேசும் மர்ம ஆசாமிகள் தாங்கள் வங்கியில் இருந்து பேசுவதாகவும், தங்கள் வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களை ரெனீவல் செய்ய வேண்டி இருப்பதாகவும் கூறி வங்கி ATM இரகசிய தகவல்களை கேட்டறிந்து வருகின்றனர். அவ்வாறு பெறப்படும் தகவல்களை கொண்டு மர்ம ஆசாமிகள், […]
கீழக்கரை நகராட்சியில் நாய்களை பிடிக்கும் பணி துவங்கியது..
கீழக்கரை நகராட்சியில் கடந்த சில வருடங்களாக நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. மேலத் தெரு, சாலை தெரு, புதுக் கிழக்குத் தெரு, ரஹ்மானியா நகர் உள்ளிட்ட தெருக்களில் வசிப்போர் இரவு நேரங்களில் நாய்களின் அட்டகாசத்தால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதே போல் அதிகாலை தொழுகைக்காக பள்ளிவாசல் செல்லும் இஸ்லாமிய மக்களும் நாய்களின் தொந்தரவால் அச்சமடைந்து உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் கீழக்கரை நகரில் ஐந்திற்கும் மேற்பட்ட பள்ளி சிறுவர்களையும் மூத்த […]
கேஸ் சிலிண்டர் வினியோக குறை தீர்க்கும் கூட்டத்தில் சட்டப் போராளிகள் இயக்கம் சார்பாக புகார் மனு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (26.03.2018) எரிவாயு உருளை விநியோக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி (D R O) முத்துமாரி தலைமையில் நடைபெற்ற இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் சட்டப் போராளிகள் இயக்கம் சார்பாக புகார் மனு கொடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் செயலாளர் சட்டப் போராளி முகைதீன் இப்ராகீம், கீழக்கரை சட்ட போராளிகள் தளத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் முகம்மது சாலிஹ் ஹூசைன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு […]
கீழை நியூஸ் கீழக்கரை ‘சட்டப் போராளிகள்’ சார்பாக நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு
அரசுத் துறை அலுவலகங்களில் ஊழல் மற்றும் இலஞ்சத்தை ஒழிக்கவும், அரசு ஊழியர்கள் பொறுப்புணர்வோடும், ஆவங்களில் வெளிப்படை தன்மையோடும் செய்யப்படுவதற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் பேருதவி புரிந்து நீதியை நிறுத்த சாமானியர்களுக்கு உதவுகிறது. இந்த சட்டத்தின்படி பிரகாரம் அரசுத் துறையினரிடம் சாமானியர்கள் எவ்வாறு கேள்விகளை கேட்டு தகவல்களை பெறுவது ? அதற்கு உரிய வழிமுறைகள் என்ன.? சட்ட ரீதியாக அதிகாரிகளை எப்படி சிக்க வைப்பது ? உள்ளிட்ட விஷயங்களை சாமானியர்களுக்கு சட்ட பயிற்சி வகுப்பு நிகழ்ச்சி மூலம் […]
கீழக்கரையில் கவிழ்ந்து கிடக்கும் ‘தூய்மை இந்தியா’ – சீர்படுத்தி ‘சிறுவர் பூங்கா’ அமைக்க சட்டப் போராளிகள் கோரிக்கை
கீழக்கரை வடக்குத் தெரு மைய பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு வரை தனியாரால் பராமரிக்ப்பட்டு வந்த ட்ரக் கொட்டகை நிலமானது ‘அரசுக்கு சொந்தமான நிலம்’ என்று வந்த நீதிமன்ற தீர்ப்பையொட்டி கீழக்கரை நகராட்சியின் பராமரிப்புக்கு கீழ் சென்றது. தனியார் வசம் இருந்தவரை வேலி போட்டு அடைக்கப்பட்டு இருந்த இடம், நகராட்சியின் வசம் வந்த உடன் குப்பை கொட்டும் கூடாரமாகவே மாறிப்போனது. இதனால் இந்த பகுதி மக்கள் டெங்கு. சிக்கன் குன்யா, மலேரியா போன்ற வியாதிகளினால் தொடர்ச்சியாக பாதிப்புக்கு […]
கீழக்கரையில் குரங்குகளை பிடிக்க கூண்டுகள் தயார் – வனத் துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர ‘சட்டப் போராளிகள்’ வேண்டுகோள்
கீழக்கரையில் சமீப காலமாக காட்டுக் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கீழக்கரை நகரில் மரங்கள் அடர்ந்த பகுதி இல்லாததால் கூட்டமாக திரியும் இந்த குரங்குகள் கூட்டம் நெருக்கமாக கட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்குள் புகுந்து அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருள்களை சூறையாடி வருகிறது. மேலும் கைக் குழந்தைகளும், பள்ளி செல்லும் சிறுவர்களும் தாவித் திரியும் இந்த குரங்குகளை கண்டு அஞ்சி நடுங்கி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூராக இருக்கும் காட்டு குரங்குக்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் […]
‘மார்ச் 26’ – கேஸ் சிலிண்டர் வினியோகம் குறித்த ‘குறை தீர்க்கும் கூட்டம்’ – பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்க ‘சட்டப் போராளிகள்’ வேண்டுகோள்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்வரும் ‘மார்ச் 26’ திங்கள் கிழமையன்று மாலை 5.15 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற இருக்கும் கேஸ் சிலிண்டர் வினியோகம் தொடர்பான குறை தீர்க்கும் கூட்டத்தில் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து தீர்வு பெற்று கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தாலுகாக்களான இராமேஸ்வரம், திருவாடானை, கீழக்கரை, பரமக்குடி, கமுதி, […]
‘மார்ச் 25’ – கீழை நியூஸ் கீழக்கரை சட்டப் போராளிகள் நடத்தும் ‘தகவல் அறியும் உரிமை சட்டம்’ பயிற்சி வகுப்பு – நீங்கள் முன் பதிவு செய்து விட்டீர்களா..?
தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 மூலமாக எந்த ஒரு அரசாங்க அதிகாரியிடமிருந்தும், நமக்கு தேவைப்படும் தகவலை அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பது நம்மில் இன்னும் எத்தனை பேருக்குத் தெரியும்..? ஊழலை தடுத்து நிறுத்துவதற்கும், ஆளப்படுகிறவர்களுக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி அனைத்து குடிமகன்களும் தகவல் பெறும் உரிமை உடையவராவர். எந்த குடிமகன்களும் தகவல் கேட்கலாம். காரணங்கள் கூறத் […]
‘நாங்க… நூறு பேரு’ – கீழக்கரை சட்டப் போராளிகளின் சந்திப்பு நிகழ்ச்சி
கீழக்கரை நகரின் முக்கிய பிரச்சனைகளுக்கு சட்ட ரீதியில் ஜனநாயக வழியில் தீர்வு காண்பதற்காக ‘கீழக்கரை சட்டப் போராளிகள்’ என்கிற பெயரில் வாட்சப் குழுமம் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி கீழை நியூஸ் நிர்வாகத்தினரால் துவங்கப்பட்டது. இந்த தளம் வாயிலாக அரசு சார்ந்த உள்ளூர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்தும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டம் விண்ணப்ப பயிற்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆன்லைன் பெட்டிஷன், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆன்லைன் […]
கீழக்கரை நகராட்சி கமிஷனருடன் சட்டப் போராளிகள் இயக்கத்தினர் சந்திப்பு
கீழக்கரை நகராட்சிக்கு பரமக்குடி நகராட்சி ஆணையாளர் நாராயணன் கூடுதல் பொறுப்பாக மதுரை மண்டல நகராட்சிகள் இயக்குநரால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் பள்ளி ஆசிரியராக பணியை துவங்கிய இவர் தமிழ்நாடு மாநில பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட குரூப் தேர்வில் மாநில அளவில் எட்டாவது இடத்தை அடைந்து நகராட்சி ஆணையராக பணியமர்த்தப்பட்டார். இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் இரண்டாம் நிலை நகராட்சியில் மூன்றாண்டு காலம் சிறப்பாக பணி புரிந்துள்ளார். […]
கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் விடுமுறை முடிந்தும் ஆதார் ‘மய்யம்’ திறக்கப்படாததால் பொதுமக்கள் அவதி
கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் பதிவு மய்யம் நேற்று (08.03.2018) வியாழக் கிழமை விடுமுறை என்பதாக திடீரென அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதனால் புதிய ஆதார் எண் பதிவு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம்ம் அலை[பேசி எண் இணைப்பு உள்ளிட்ட சேவைகளுக்காக நகராட்சி அலுவலகம் வந்திருந்த பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். இந்நிலையில் இன்று (09.03.2018) வெள்ளிக்கு கிழமையும் ஆதார் மய்யம் திறக்கப்படாததால் பொதுமக்கள் வீண் அலைச்சலுக்கு உள்ளானதோடு, பெரும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர். இது […]
You must be logged in to post a comment.