கீழக்கரை 500 பிளாட் பகுதியை சேர்ந்த அன்வர் ஹுசைன், கடந்த 2011 ஆம் ஆண்டு முஸ்லீம் பஜாரில் (லெப்பை மாமா டீக்கடை எதிரில்) ‘அபியா ஆப்டிகல்ஸ் & ஜெனரல் டிரேடிங்’ என்ற பெயரில் கண்ணாடி மற்றும் வெளி நாட்டு சாமான்கள் விற்பனையகம் சிறப்பாக நடத்தி வருகிறார். மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ‘அபியா ஆப்டிகல்ஸ்’ கண்ணாடி கடை தற்போது உசைனியா திருமண மஹால் அருகாமையில் கடந்த 07.05.2018 அன்று புதுப் பொலிவுடன் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் […]
Category: அறிமுகம்
மக்கள் களம் பற்றிய அறிமுகம்..
கீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)
கீழக்கரை புதுத்தெருவை சேர்ந்த சகோதரர்கள் முகம்மது சஹீது, சித்திக் இபுறாகீம், ஃபவுசுல் அலியுர் ரஹ்மான் ஒன்றிணைந்து ‘ஸ்பைஸி ஹலால்’ என்கிற பெயரில் துணை உணவு தயாரிப்பு நிறுவனத்தினை துவங்கி சிறப்பாக செய்து வருகின்றனர். உள்ளூரில் தரமான மூலப் பொருள்களுடன், கை தேர்ந்த சமையல் கலைஞர்களின் கண்காணிப்பில், பக்குவமாக தயாரிக்கப்படும் மாசிப் பொரியல், இறால் பொரியல், நெத்திலி பொரியல், சென்னா கூனி பொரியல் உள்ளிட்ட அசத்தும் பொரியல் வகையறாக்களை வாங்கி ருசிக்கும் ‘ஸ்பைசி ஹலால்’ பிரியர்கள், இந்த பொரியல் வகைகள் தங்கள் […]
கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் புதிய ‘பல் மருத்துவப் பிரிவு’ துவக்கம் – ( பெண் பல் மருத்துவர்களின் பிரத்யேக பேட்டி) – கீழை டைரி 11
கீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கி வரும் கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் புதிய பல் மருத்துவப் பிரிவு கடந்த சில மாதங்களுக்கு முன் நவீன வசதிகளுடன் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 60,000 க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கீழக்கரை நகரில் பல் மருத்துவம் என்பது என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. கீழக்கரை நகரில் இருந்து பல் மருத்துவம் பயின்ற கிழக்குத் தெருவை சேர்ந்த டாக்டர்.ஹஃப்ஸா பாத்திமா, டாக்டர்.சில்வியா ஜெயத்துடன் இணைந்து கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையின் […]
கீழக்கரை பெண் மருத்துவர் அல் அம்ராவின் ‘அல் ஃபலா கிளினிக்’ இன்று இனிதே ஆரம்பமாகியது
கீழக்கரை வடக்குத் தெரு இடி மின்னல் மளிகை கடையில் இருந்து வடக்குத் தெரு தைக்கா செல்லும் சாலையில் கீழக்கரை பெண் மருத்துவர் அல் அம்ராவின் ‘அல் ஃபலா கிளினிக்’ இன்று (30.03.2018) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் இனிதே ஆரம்பமாகியது. இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கீழக்கரையில் இருந்து சென்னைக்கு புதிய ஹைடெக் பேருந்து சேவை – ‘ஜெம்ஸ் டிராவல்ஸ்’ இன்று இனிதே துவங்கியது
கீழக்கரையில் இருந்து சென்னைக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. பல நேரங்களில் சென்னைக்கு செல்ல ரெயில் மற்றும் பேருந்துகளில் சீட் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் ‘ஜெம்ஸ் டிராவல்ஸ்’ என்கிற பெயரில் கீழக்கரையில் இருந்து சென்னைக்கு புதிய ஹைடெக் பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
கீழை மாநகருக்கு வருகை தந்த வரலாற்று ஆய்வாளர் ‘ராஜா முஹம்மது’ – வரவேற்ற ‘பாதன் ஹெரிடேஜ் லீக்’ அறக்கட்டளை
தொன்மை வரலாறுகளை தன்னகத்தே கொண்ட பழம்பெரும் கீழக்கரை நகருக்கு சென்னை மீயூசியத்தின் முன்னாள் துணை தலைவர் தொல்லியல் ஆய்வாளர் ராஜா முஹம்மது நேற்று முன் தினம் வருகை தந்தார். அவரை கீழக்கரை வரலாற்று ஆராய்ச்சியாளர். சட்டப் போராளி. அபு சாலிஹ் வரவேற்று கீழை மாநகரின் பல்வேறு சரித்திர பின்னணியுள்ள பகுதிகளுக்கு அழைத்து சென்றார். கீழக்கரை பகுதியில் எண்ணற்ற பழங்காலத்து கல்வெட்டுகளும், ஓலை சுவடிகளும், நினைவு தூண்களும், சிற்பங்களும் காணப்படுகிறது. இவற்றையெல்லாம் முறையாக தொகுத்து, பாதன் ஹெரிடேஜ் லீக் எனும் […]
தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் மாநில தலைவருடன் ‘கீழை நியூஸ்’ நிர்வாகிகள் சந்திப்பு
ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகிய பத்திரிகை மற்றும் ஊடக துறை என்பது சமூக பொறுப்புணர்வுடன் உண்மை செய்திகளை உடனுக்குடன் சாமானியனுக்கு கொண்டு செல்லும் மாபெரும் பணியினை செம்மையாக செய்து வரும் உன்னதமான துறையாகும். இதனை மென்மேலும் சிறப்புடன் செய்வதற்கு பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள், நிருபர்கள், எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள் போன்றோரின் அர்ப்பணிப்பு எழுத்துக்களால் சொல்லி விட முடியாது. இந்த பத்திரிகை துறை நண்பர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் (தமிழ்நாடு பத்திரிகை ஊடகவியலாளர் யூனியன்) என்கிற […]
சென்னையில் ‘அர் ரஹ்மான் ஜூவல்லர்ஸ்’- புதிய தங்க நகை கடை நிறுவனம் துவக்கம்
கீழக்கரை கிழக்குத் தெருவை சேர்ந்த சகோதரர் ரிபாய்தீன் தங்கள் நண்பர்களுடன் இணைந்து சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் ‘அர் ரஹ்மான் ஜூவல்லர்ஸ்’ என்கிற பெயரில் தங்க நகை கடையினை கடந்த மாதம் திறந்துள்ளார். பொன் நகை வியாபாரத்தில் 25 ஆண்டு கால அனுபவம் நிறைந்த சகோ. ரிபாய்தீன் தமிழகத்தின் தலை சிறந்த தங்க ஆபரண நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். கடந்த 2012 ஆண்டு முதல் தங்க நகை மொத்த வியாபாரத்திலும் கோலோய்ச்சி சிறப்பாக தொழில் செய்து வருகிறார். ‘அர் […]
கீழை நியூஸ் ‘BLOOD APP’ அறிமுக விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது..
கீழக்கரை நகரில் அவசர கால இரத்த தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக இரத்த தானம் செய்ய விரும்பும் கொடையாளர்களும், இரத்தம் தேவைப்படுவர்களும் இலகுவாக சந்தித்து பயனடையும் வகையில் கீழை நியூஸ் சார்பாக ‘KEELAI NEWS BLOOD APP’ நேற்று (16.02.18) கீழக்கரையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அறிமுக விழா நிகழ்ச்சி நேற்று இரவு 7 மணியளவில் ஆலீம் புலவர் பவாஸ் வணிக வளாக கட்டிடத்தில் இயங்கும் சினர்ஜி இன்டர்நெஷனல் கல்வியகத்தில் (முஸ்லீம் பஜார் பீஸா பேக்கரி […]
கீழக்கரையில் ‘KEELAI NEWS BLOOD APP’ அறிமுக விழா நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது – அனைவரும் பங்கேற்க அழைப்பிதழ்
கீழக்கரை நகரில் அவசர கால இரத்த தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அவசர அறுவை சிகிச்சைகள், எதிர்பாராத விபத்து, டெங்கு, வைரஸ் காய்ச்சல், இரத்த அணு குறைபாடு போன்றவற்றினால் பாதிக்கப்படும் மக்கள், தங்களுக்கான இரத்த வகைகள் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் கீழக்கரை, இராமநாதபுரம் சுற்றுவட்டாரங்களில் இரத்த தானம் செய்ய விரும்புபவர்களும், இரத்தம் தேவைப்படுவர்களும் இலகுவாக சந்தித்து பயனடைவதற்கு ஏதுவாக கீழை நியூஸ் சார்பாக ‘KEELAI NEWS BLOOD APP’ அறிமுகப்படுத்தப்பட […]
சென்னையில் ‘சான்ட்விச் ஸ்கொயர்’ என்கிற பெயரில் உயர்தர அசத்தல் உணவகம் திறப்பு – கீழக்கரை சட்டப் போராளியின் சுவைமிகு துவக்கம்
சென்னையில் இனி ‘சான்ட்விச்’ சாப்பிடணுமா…? 143 வகையான சான்ட்விச் அயிட்டங்களை வழங்கி வாடிக்கையாளர்களை திக்குமுக்காட வைத்து கொண்டிருக்கிறது ‘சான்ட்விச் ஸ்கொயர்’ உணவகம். நல்ல ருசிமிகுந்த வகையறாக்களை தேடித் தேடி ருசி பார்த்து சாப்பிடும் ‘சான்ட்விச் பிரியர்களுக்கு இனி கொண்டாட்டம் தான். டார்க் சாக்லேட் சான்ட்விச், நட்டெல்லா சான்ட்விச் என்று புதுவிதமாக வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து கொண்டிருக்கிறது. இந்த ‘சான்ட்விச் ஸ்கொயர்’ உணவகத்தை சென்னை ஊரப்பாக்கம் G.S.T சாலையில், கீழக்கரை சின்னக்கடை ஈஸா தண்டையல் தெருவை சேர்ந்த சட்டப் போராளி. […]
ராமநாதபுரத்தில் வட்டியில்லா வங்கி – ‘ஜன் சேவா’ கூட்டுறவு சங்கம் துவக்க விழா நிகழ்ச்சி – சமுதாய அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு
வட்டியில்லாத வங்கி நடைமுறைகளை விரும்ப கூடியவர்களுக்கான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கூட்டுறவு அமைப்பாக ஜன் சேவா கூட்டுறவு சங்கம் இருக்கிறது. முற்றிலும் வட்டி இல்லாத நிலை, லாபத்தில் பங்கீடு மற்றும் சாமானிய மக்களின் பொருளாதார தேவைகளை சரி செய்து முன்னேற்றம் அடைய வழிவகைகளை செய்வது இந்த சங்கத்தின் முதன்மை நோக்கமாக கூறப்பட்டு இருக்கிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது 7 மாநிலங்களில் 31 கிளைகள் செயல்படுகிறது. 21000 வாடிக்கையாளர்களை கொண்டு சுமார் 450 கோடி […]
கீழக்கரையில் தொன்று தொட்டு தொடரும் சுத்தமான பசும்பால் வியாபாரம் – ‘மில்க் மேன்’ கொம்பூதி குப்புசாமியின் மலரும் நினைவுகள்
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பிறகு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதில் எல்லா பெற்றோருக்கும் குழப்பம் வரும். குழந்தையின் முதல் உணவு பால் தான். இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், மனிதன் விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டபோது பிற விலங்குகளின் பாலைப் பயன்படுத்தத் தொடங்கினான். ஆடு, பசு, எருமை, கழுதை, குதிரை… ஏன் ஒட்டகப்பால் வரை மனிதன் பருகாத பாலே இல்லை. ஆனால், ‘தாய்ப்பாலுக்குப் பிறகு பசும்பாலே குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் […]
கீழை நகருக்கு புதிய அத்தியாயம் கீழை நியூஸ்..
கீழக்கரையில் 29-12-2016 அன்று மாலை 8.00 மணி அளவில் கீழை நியூஸ் இணைய தளம் ஆரம்பம், கீழக்கரை மக்கள் களம் அறிமுக நிகழ்ச்சி மற்றும் சட்டப்போராளிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வடக்கு தெரு இஸ்லாமிய அமைதி மையத்தில் குர்ஆன் கிராத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியை சாலிஹ் ஹுசைன் தொகுத்து வழங்கினார். மக்கள் களத்தின் பொருளாளர் மற்றும் அல் பையினா மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர் ஜாஃபிர் சுலைமான் வரவேற்புரையாற்றினார். பின்னர் மக்கள் களத்தின் செயலாளர் மற்றும் கீழை […]
You must be logged in to post a comment.