மத்திய மனிதவள அமைச்சகத்தின் சார்பில் “தேசிய மின்னணு நூலகம்” துவங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தொழிநுட்ப வசதிகளை பயன்படுத்தி அனைவருக்கும் கல்வி என்ற உயரிய நோக்கோடு லட்சக்கணக்கான புத்தகங்களை கொண்டு செயல் பட்டு வருகிறது. ஆரம்ப கல்வி நிலையிலிருந்து முதுநிலைக் கல்வி வரை கற்பவர்கள் பயனடையும் வகையில் புத்தகங்களை தொகுத்துள்ளனர். மேலும் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்பவர்களும், புத்தக பிரியர்களும் தங்களுக்கு தேவையான புத்தகங்களை விரைவாக, கால தாமதமின்றி வாசிக்க முடிகிறது. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதிய 7 லட்சத்திற்கும் […]
Category: கல்வி
கல்வி
ஆசியாவின் முதல் டீசல் இன்ஜின் ரயில் ஓட்டுநர் மும்தாஸுக்கு ‘மகளிர் சக்தி விருது’ – மகளிர் தினத்தில் ஜனாதிபதி வழங்கி கவுரவித்தார்.
ஆண்கள் மட்டுமே கோலோய்ச்சும் பல்வேறு துறைகளில் பெண்களும் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர். ஆசியாவிலேயே முதல் பெண்மணியாக டீசல் இன்ஜின் ரயிலை இயக்கி சாதனை படைத்து வரும் முஸ்லீம் பெண்மணி மும்தாஸுக்கு மகளிர் சக்தி விருதினை மகளிர் தினமான மார்ச் 8 அன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவித்தார். தற்போது 43 வயதை தொட்டு விட்ட மும்பை நகரத்தை சேர்ந்த மும்தாஸ் சிறுவயது முதலே […]
கீழக்கரை நகரின் மத்திய பகுதியில் மிக விரைவில் கிளை நூலகம் – சட்டப் போராளிகள் தொடர் முயற்சி
கீழக்கரை நகரில் கடந்த 1972 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட கீழக்கரை கிளை நூலகம் முதலில் கிழக்குத் தெரு பகுதியில் அமைந்திருந்தது. பின்னர் முஸ்லீம் பஜாரில், கடந்த 2010 ஆம் ஆண்டு வரை அரசு பொது நூலகம் இயங்கி வந்தது. இது அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில், ஊரின் மத்தியில் பிரதானமான இடத்தில் இருந்தது. பழைய படம் – அன்பு நகரில் செயல்பட்ட போது கிளை நூலகத்தின் அவல நிலை அதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு […]
கட்டுரை போட்டியில் வென்ற முஹைதீனியா பள்ளி மாணாக்கர்களுக்கு பாராட்டு
கீழக்கரை வடக்கு தெரு முஹைதீனியா பள்ளி மாணவ மாணவிகள் கடந்த 20.02.17 அன்று தாஸீம் பீவி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ”THE SINGLE PAGE WILL CHANGE” என்ற தலைப்பிலான கட்டுரை போட்டியில் பங்கேற்று சான்றிதழ்களை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பள்ளியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் பள்ளியின் கல்விக் குழு பொருளாளர் சேகு பஷீர் அஹமது, பள்ளியின் முதல்வர் NM சேகு சஹபான் பாதுஷா ஆகியோர் மாணாக்கர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கவுரவப்படுத்தினர். வெற்றி பெற்ற பள்ளி […]
இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி
இந்தியாவில் பிப்ரவரி 1928ம் ஆண்டு 28ம் தேதி சி.வி.ராமன் கண்டுபிடிப்பை போற்றும் வண்ணம் அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு வருடமும் முன்னனி பள்ளிகள் மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பல அறிவியல் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்குவார்கள். அத்தினத்தை கொண்டாடும் விதமாக கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு 3 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் வடிவமைத்த மாதிரி அறிவியல் படைப்புகள் பொது மக்கள் பார்வைக்காக இன்று வைக்கப்பட்டது. அறிவியல் […]
இளைஞர்கள் விளையாட்டு துறையில் சாதனை படைக்க வேண்டும் – இந்திய கப்பற்படை முன்னாள் கமாண்டோ செய்யது ஹமீதா கலை கல்லூரியில் சிறப்புரை
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று 10.03.17 விளையாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக இந்திய கப்பற்படையின் ஓய்வு பெற்ற கமாண்டர் ஏ. வைத்தியநாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் “இந்திய அளவில் இளைஞர்களுக்கும் கல்லூரி காலத்தில் பயிலும் விளையாட்டில் ஆர்வம் மற்றும் அதிக ஈடுபாடு கொண்ட மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசு பாதுகாப்புத் துறைகளில் அதிக வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. மாணவ மாணவியர் அனைவரும் […]
செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழா நிகழ்ச்சி
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10.03.2017 அன்று மாலை 2 மணியளவில் முகம்மது சதக் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர்.ரஜபுதீன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இந்திய கப்பற்படையின் ஓய்வு பெற்ற கமாண்டர் ஏ. வைத்தியநாதன் அவர்கள் கலந்து கொண்டார். இவ்விழாவிற்கு முகம்மது சதக் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர்.அலாவுதீன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர்.ரஜபுதீன் அவர்கள் வரவேற்புரை […]
மக்கள் நல பாதுகாப்புக் கழகம் – கீழக்கரை மக்கள் களம் இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான மாபெரும் கட்டுரை போட்டி அறிவிப்பு
கல்வி நகரமாக திகழும் கீழக்கரை நகரில் ஆங்கில வழியிலும், தமிழ் வழியிலும் கல்வி பயிற்றுவிக்கப்படும் 15 க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் உள்ளன. இவற்றுள் இருந்து ஆண்டு தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று மேற்படிப்புக்காக கல்லூரிகளுக்கு செல்கின்றனர். ஆனால் அரசு வேலைவாய்ப்புகளை பயன்படுத்தும் முயற்சிகளை எவரும் செய்வதில்லை. பலருக்கு அரசு துறை தேர்வுகள் குறித்தோ, அரசு வேலை வாய்ப்புகள் சம்பந்தமாகவோ கொஞ்சமும் புரிதல் இல்லை. இந்நிலையில் அரசு துறை தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை […]
சங்க கால இலக்கிய புரட்சிப் பெண்களை நினைவூட்டும் விதமாக மாறுவேடத்தில் மாணவிகள் – தாசிம் பீவி மகளிர் கல்லூரி தமிழ் துறை சார்பாக புதிய முயற்சி
பன்னெடுங்கால சரித்திர பெருமை வாய்ந்த நம் தமிழ் மண்ணின் சங்க கால இலக்கிய புரட்சிப் பெண்களையும், நம் தாய் திருநாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வீர திருமகள்களையும் நினைவூட்டும் விதமாக தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மாணவிகள் இன்று (10-03-2017) நடந்த மாறுவேடத்தில் அச்சு அசலாக காட்சியளித்தது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றனர். இவர்களுள் அவ்வையார், காரைக்கால் அம்மையார், கண்ணகி, மணிமேகலை, தில்லையாடி வள்ளியம்மை, வீர மங்கை வேலுநாச்சியார் போன்று மாணவிகள் மாறுவேடம் அணிந்திருந்தனர். இவர்களை […]
கீழக்கரை அல்பய்யினா அகாடமியில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் இஸ்லாமிய கல்வியில் பி.ஏ இளங்கலை பட்டப்படிப்பு – ஆர்வமுடைய பெண்களுக்கு அழைப்பு
கீழக்கரை கிழக்குத் தெருவில் கடந்த ஆண்டு முதல் அல்பய்யினா அகாடமி துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த அகாடமியில் சென்னை பல்கலை கழகத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் பாடத் திட்டங்களின் அடிப்படையில் அரபி இஸ்லாமிய கல்வியில் பி.ஏ இளங்கலை பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. இது குறித்து அல்பய்யினா அகாடமியின் தாளாளர் ஜாபிர் சுலைமான் கூறுகையில் ”நம் சமுதாயத்தில் உள்ள பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்கும் பெண் மக்களுக்காக, இந்த மேற்படிப்பு துவங்கப்பட்டு […]
கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் ரூபெல்லா, தட்டம்மை தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு கூட்டம்..
இன்று (09-03-2017) கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் ரூபெல்லா, தட்டம்மை தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு கூட்டம் பள்ளி வளாகத்தினுள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக அரசாங்க சிறப்பு மருத்துவர்கள் மகேஷ், வினோத், ராசிக்தீன், அருள்ராஜ் மற்றும் மவ்பியா ஆகியோர் கலந்து கொண்டு ரூபெல்லா, தட்டம்மை பற்றிய விழிப்புணர்வு உரையை வழங்கி, பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கான விளக்கத்தையும் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து பள்ளியில் அடுத்த வாரம் தடுப்பூசி முகாம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியின் வரவேற்புரையை முகைதீனியா […]
கீழக்கரை தாஸீம் பீவி மகளிர் கல்லூரி மாணவிகள் சுகாதார துறையினருடன் இணைந்து ரூபெல்லா தடுப்பூசி விழிப்புணர்வு ஊர்வலம்
கீழக்கரையில் நகராட்சி நிர்வாகத்தினர், சுகாதார துறையினருடன் இணைந்து தாஸீம் பீவி மகளிர் கல்லூரியின் நாட்டு நல திட்ட மாணவிகள் இன்று 09.03.17 விழிப்புணர்வு ஊர்வலத்தினை துவங்கியுள்ளனர். கீழக்கரை சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி, அரசு மருத்துவர் ராசிக்தீன், சுகாதார துறை மலேரியா கிளினிக் அதிகாரி செல்லக்கண்ணு தலைமையில் இந்த ஊர்வலம் சிறப்பாக நடை பெற்று வருகிறது. கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஏராளமான தாஸீம் பீவி மகளிர் கல்லூரியின் மாணவிகள் பங்கேற்று […]
கீழக்கரை முஹைதீனியா பள்ளி கல்விக்குழு நிர்வாகிகள் தேர்வெழுதும் மாணவர்களுக்கு வழங்கிய ‘தன்னம்பிக்கை டானிக்’
தமிழகம் முழுவதும் தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான அரசு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 6000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வெழுதுகின்றனர். இந்நிலையில் கீழக்கரை வடக்குத் தெரு முஹைதீனியா மேட்ரிகுலேஷன் பள்ளியில் அந்த பள்ளியில் இருந்து தேர்வெழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் விதமாக முஹைதீனியா கல்விக் குழு நிர்வாகிகள் சிறப்பான சொற்பொழிவினை நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றிய பள்ளியின் கல்விக்குழு உபதலைவர் MMS. முகைதீன் இபுராஹீம், கல்விக்குழு […]
கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் உலக மகளிர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது.
கீழக்கரை வடக்கத் தெரு முகைதீனியா பள்ளியில் உலகமகளிர் தின விழா இன்று (08-03-2017) கொண்டாடப்பட்டது. இவ்விழாவில்முகைதீனியா பள்ளியின் கல்விக்குழு உபதலைவர் MMS. முகைதீன் இபுராஹீம் தலைமை உரையாற்றினார். அதைத்தொடர்ந்து பொருளாளர். சேகு பசீர் அகமது மற்றும் இணைச்செயலாளர். அஹமது மிர்சா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இவ்விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் வேதியல்துறைத் தலைவர். சோபி வரவேற்றார். பின்னர் பள்ளியின்முதல்வர் N.M. சேகு சஃபான் பாதுஷா மகளிர் மேன்மை பற்றியும, அலுவலக மேலாளர் மன்சூர்தீன் மகளிர்முன்னேற்றம் பற்றியும் சிறப்புரையாற்றினார்கள். […]
இன்று தமிழகத்தில் SSLC தேர்வு தொடங்கியது – இஸ்லாமியா பள்ளி தாளாளரின் உத்வேக அறிவுரை..
இன்று தமிழகத்தில் மொத்தம் 6,89,800 மாணவச் செல்வங்கள் SSLC பொதுத்தேர்வில் பங்கேற்கிறார்கள். தேர்வை முன்னிட்டு பரிட்சை தொடங்கும் முன்பு இஸ்லாமியா பள்ளியின் தாளாளர் MMK. முகைதீன் இப்ராஹிம் மாணவர்கள் மத்தியில் சிறப்பு உரையாற்றினார். அவருடைய உரையில் மாணவர்களுக்கு நம்பிக்கை விதைக்கும் விதமாகவும், மனதில் உள்ள அச்சத்தை போக்கும் விதமாகவும் உற்சாகத்தை வழங்கினார். இந்நிகழ்ச்சயில் பள்ளி ஆசிரியர் அனைவரும் கலந்து கொண்டார்கள். பின்னர் மாணவர்கள் பிரார்த்தனையுடன், உத்வேகத்துடன் பரிட்சை எழுத சென்றார்கள். பள்ளி நிர்வாகத்துடன் கீழை நியூஸ் நிர்வாகமும் […]
இன்று சர்வதேச ‘மகளிர் தினம்’ – பெண்ணியம் காப்போம் – சிறப்பு கட்டுரை
பெண்ணின் மகத்துவத்தினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்பு, ஆதரவு, அடக்கம், இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழும், இறைவனின் உன்னதமான படைப்பினம் பெண் ஒரு தாயாய், மகளாய், மனைவியாய், இல்லத்தரசியாய், சகோதரியாய், தோழியாய், நட்பாய், நலம் விரும்பியாய், வழிகாட்டியாய் காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் தான் எத்தனை.. எத்தனை? பாசத்தால் வார்த்தெடுத்த உணர்ச்சிகளின் கலவையாய் பெண்ணை தவிர சிறந்த […]
19500 சீமை கருவேல செடிகளை வேரறுத்து சாதனை படைத்த மாணவர் படை – ரெட் கிராஸ் அமைப்பினர் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.
நம் இராமநாதபுரம் மாவட்டத்தின் வறட்சிக்கு அடித்தளமாக இருக்கும் சீமை கருவேல அரக்கனை இன்று மாயாகுளம் சேர்மத்தாய் வாசன் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வேரோடு பிடுங்கி சாதனை படைத்துள்ளனர். 19500 க்கும் மேற்பட்ட கருவேல மரக்கன்றுகளை ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் 51 பேர் பள்ளி வளாகத்திலிருந்தும் சுற்றுப்புறங்களில் இருந்தும் வேருடன் அப்புறப்படுத்திக் கொண்டு வந்தனர். அவர்களுடன் பள்ளியின் நிர்வாகி கீழக்கரை K.R.D. கிருஷ்ணமூர்த்தி, தலைமை ஆசிரியர் திருமதி P. சுகிபாலின் ராமநாதபுரம் மாவட்ட […]
கீழக்கரையில் நடிகர் விவேக் தலைமையில் மரம் நடும் விழா – செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று 06.03.17 திரைப்பட நடிகர் விவேக் தலைமையில் மரம் நடு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ராஜபிதீன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் சின்ன கலைவாணர் பத்மஸ்ரீ விவேக் கலந்து கொண்டு மரம் நடு விழாவினை துவங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் ”இராமநாதபுரம் மாவட்டம் பல்வேறு சிறப்புக்களுக்கு உரியது. இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரியில் […]
கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளி மாணவர்கள் ‘கல்விச் சுற்றுலா’ – கிழக்கு தெரு ஜமாஅத் நிர்வாகிகள், பெற்றோர்கள் வழி அனுப்பி வைத்தனர்.
பள்ளி மாணவர்கள் வருடம் முழுவதும், பள்ளிப் பாடங்களை ஏட்டளவில் படித்துப் படித்து களைத்துப் போன கண்களுக்கு, கல்விச் சுற்றுலா என்பது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. பள்ளிகளில் அழைத்து செல்லும் இது போன்ற சுற்றுலாக்களால் மாணவர்களின் மனதிற்கு நிம்மதியையும், புத்துணர்வையும் அளிப்பதோடு, அவர்களின் மன இறுக்கத்தையும் வெகுவாக குறைக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை இது போன்று கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்கள், இறுதியாண்டு தேர்வுகளில், அதிக மதிப்பெண்கள் பெற்று, மிக சிறப்பாக தேர்ச்சி பெறுவதாக கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள். […]
அபாகஸ் (ABACUS) போட்டியில் அதிக பரிசுகளை வென்று கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி சாதனை
கடந்த 01-03-2017 அன்று தொண்டியில் மாவட்ட அளவில் அபாகஸ் – மணிச்சட்டம் (ABACUS) முறை கணித போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இராமநாதபுர மாவட்டத்தில் இருந்து 12 பள்ளிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள். இந்தப் போட்டியில் கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி சார்பாக கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் அதிபட்சமான பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர். இப்போட்டியில் முதல் பரிசு, சிறந்த போட்டியாளர் பரிசு, பள்ளி அளவிளான முதல் பரிசு, சாதனையாளர் விருது […]
You must be logged in to post a comment.