மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் முதலிடம் வென்ற கீழக்கரை பள்ளி மாணவி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசு வழங்கி பாராட்டு

மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த பள்ளி மாணவி, கிழக்குத்தெரு முஹம்மது ரிபாய்தீன் மகளார் ஹதிஜத் ரிஃப்தா ரிபாய் முதலிடம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் மேலத் தெரு ஹமீதியா மெட்ரிகுலேசன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆவார். இன்று சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் மாணவி ஹதிஜத் ரிஃப்தாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரிசு வழங்கி பாராட்டினார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பேச்சாற்றலை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற மாநில […]

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பாக இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை…

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பாக “வலைதளம் மென்பொருட்களை கட்டுப்படுத்துதல்”; பற்றிய இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர் தலைமையிலும்இ கல்லூரி முதல்வர் முனைவர். அப்பாஸ் மைதீன் முன்னிலையிலும் நடைபெற்றது. கல்லூரி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை துணைப் பேராசிரியர். சேக் அராபத் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை, பான்டெக் பிரைவேட் லிமிடேட் பயிற்சியாளர்கள் பிச்சைமுத்து மற்றும் கைலாஸ் ஆகியோர் கலந்துகொண்டு இன்றைய காலகட்டத்தில் […]

கீழக்கரையில் இஸ்லாமிய கல்வி சங்கத்துடன் மதரஸாக்கள் இணைந்து நடத்தும் கோடை கால இஸ்லாமிய எழுச்சி முகாம்

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம், அல் மதர்ஸத்துர் ராழியா மற்றும் அல் மதர்ஸத்துல் அஸ்ஹரிய்யா இணைந்து நடத்தும் இஸ்லாமிய சிறுவர்களுக்கான கோடைகால இஸ்லாமிய எழுச்சி முகாம் எதிர்வரும் ஏப்ரல் 25 முதல் மே மாதம் 20 ஆம் தேதி வரை நடை பெற இருக்கிறது. இந்த முகாமில் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் ஏப்ரல் 10 முதல் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாளைய உலகம் நமதாகட்டும்”- தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி..

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்  சார்பாக முஸ்லிம் முஹல்லாக்களில்  உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் நோக்கம் வளரும் தலைமுறைக்கு முறையான வழிமுறைகளை வழங்கி, வழிகாட்டுமலும் கொடுத்து சிறந்த முஸ்லிம் சமுதாயமாக உருவாக்குவதாகும். இந்நிகழ்ச்சி மிக குறிப்பாக 12ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கும் மாணவச் செல்வங்களுக்கு பலன் உள்ளதாக இருக்கும். ஆகையால் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி “நாளைய உலகம் நமதாகட்டும்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. இத்துடன் நடைபெற […]

படிக்க ‘தகுதியில்லை’ என கைவிடப்பட்ட மாணவரா நீங்கள்… அட்மிஷன் தர ‘நாங்க இருக்கோம்’… – அசத்தும் கீழக்கரை பள்ளிக்கூடம்

கீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கி வரும் தீனியா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி, மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், ஏழை எளிய பெற்றோர்களின் மன குமுறல்களை களையும் முகமாகவும் பல்வேறு அசத்தலான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த அறிவிப்பின் படி கீழக்கரையில் பிற பள்ளிகளில் படிக்க ‘தகுதியில்லை’ என கைவிடப்பட்ட மாணவ மாணவிகளுக்கும், அரசு தேர்வுகளை எழுத லாயக்கில்லை என ஒதுக்கப்பட்ட மாணவ செல்வங்களுக்கும், இப்பள்ளியில் அட்மிஷன் தரப்படுவதோடு அவர்களுக்கு சிறப்பாக கல்வியளித்து வெற்றி கனியை பறிக்க வைக்கும் […]

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கருவேலம் ஒழித்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் சமூகநல அமைப்பு சார்பாக கருவேலம் ஒழித்தல் மற்றும் நீராதாரத்தைப் பாதுகாத்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று 27.03.2017 காலை 10.30 மணிக்கு நடந்தது. இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வணிகவியல் இரண்டாம் ஆண்டு மாணவி M.காதர் நஃபிலா கிராத் ஓதினார். பின்னர் தொழில்நுட்பத் தகவல் துறை மூன்றாமாண்டு மாணவி M.Y ஃபாத்திமா பசிஹா வரவேற்புரை வழங்கினார். அதைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். சுமையா தலைமை உரை ஆற்றினார். பின்னர் […]

கீழக்கரை ‘அல் மதரஸத்துர் ராழியா’ சிறுவர் மதரஸாவின் ஆறாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் வள்ளல் சீதக்காதி சாலையில் இயங்கி வரும் அல் மதரஸத்துர் ராழியா சிறுவர் மதரஸாவில் நேற்று 26.03.17 இரவு 8.30 மணியளவில் மதரஸாவின் 6 ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை ஆலீம் ஆலீம் தவ்ஹீத் ஜமாலி தலைமை ஏற்று நடத்தினார். ஆலீம் தவ்ஹீத் ஜமாலி, ஆலீம் அப்துல் நாசர் ஜமாலி, ஆலீம் சேகு கஸ்ஸாலி சதக்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக […]

கீழக்கரை மதரஸாக்களில் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பாக ஆய்வு

கல்வி நகரமான கீழக்கரையில் ஏராளமான கல்வி நிலையங்களும், அரபி மதரஸாக்களும் உள்ளன. இதில் அரபி மதரஸா கல்வி கூடங்களில் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த ஆய்வுகளின் போது பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஒழுக்கம், நன்னடத்தை, வருகை பதிவு, பள்ளியின் சுகாதாரம், மாணவர்களின் ஆரோக்கியம், தொழுகை, சுத்தம் உள்ளிட்ட பல விஷயங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்நிலையில் இன்று 25.03.17 கீழக்கரை MP தெருவில் செயல்படும் அல் மத்ரஸத்துல் அரபிய்யதுஜ் ஜெய்னபிய்யா பள்ளிக்கு இராமநாதபுரம் […]

இந்திய-மலேசிய முஸ்லிம்களின் தொடர்புகள் பற்றிய ஆவண படம் – மலேசிய அரசு சார்பாக விரைவில் வெளியீடு

பன்னெடுங்காலமாக தொடர்ந்து வரும் இந்திய-மலேசிய முஸ்லிம்களின் இணைபிரியா தொடர்புகள் இன்றளவும் தொட்டுத் தொடருகிறது. இது குறித்த ஆவண படம் ஒன்றினை மலேசிய அரசு சார்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. இதன் முன்னோடியாக மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவை (பெர்மிம்) தாய்-சபை யினர் கீழக்கரை நகருக்கு வருகை தந்து அதன் தொன்மையை பற்றி ஆய்வு செய்தனர். மலேசிய அரசின் அங்கீகாரம் பெற்ற மலேசிய இந்திய முஸ்லீம்களின் அரசு சாரா அமைப்புகளின் தாய் சபையான பெர்மிம் பேரவை, மலேசிய […]

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய தெருமுனை பயான் நிகழ்ச்சி

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக நேற்று 24.03.17 இரவு மணியளவில் அத்தியிலை தெருவில் இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனை பயான் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் தவ்ஹீத் ஜமாலி ஆலிம் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் மதரஸத்துல் ராழியாவின் மாணவர் முஹம்மது ஸஃப்வான் மார்க்க சொற்பொழிவாற்றினார். நிகழ்ச்சியில் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளித்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை சங்கத்தின் பொருளாளர் சட்டப் போராளி ஹமீது சல்மான் கான் மற்றும் சட்டப் போராளி […]

கீழக்கரையில் கை நிறைய சம்பளம் – தீனியா மெட்ரிக் பள்ளிக்கு ‘ஆசிரியைகள் தேவை’ – அறிவிப்பு

கீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கும் தீனியா மெட்ரிக்குலேசன் மேனிலைப்பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியைகள் தேவைப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், கனக்குப் பதிவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களில் புலமை பெற்ற ஆசிரிய பெருமக்களுக்கு கைநிறைய சம்பளமும் வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை (KECT) மற்றும் அல்மதரஸத்துல் முஹம்மதியா (NASA Trust) நடத்தும் கோடைகால பயிற்சி வகுப்புகள்…

கீழக்கரையில் ஒவ்வொரு வருடமும் பல கல்வி நிலையங்கள் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்துவதுண்டு. இந்த வருடம் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை (KECT) மற்றும் வடக்குத் தெரு சமூக தர்ம அறக்கட்டளை (NASA Trust) கீழ் இயங்கி வரும் அல்மதரஸத்துல் முஹம்மதியா இஸ்லாமிய கல்வி நிலையமும் இணைந்து கோடைகால பயிற்சி வகுப்புகள் நடத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரு கல்வி அமைப்புகளும் கடந்த வருடங்களில் நடத்திய கோடைகால இஸ்லாமிய சிறப்பு வகுப்புகளில் பல மாணவர்கள் கலந்து […]

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு கட்டிட வடிவமைப்பின் தொழில்நுட்பங்களின் சிறப்பு பற்றிய ஒருநாள் கருத்தரங்கம்..

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கட்டிடக்கலை துறை சார்பாக இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு கட்டிட வடிவமைப்பின் தொழில்நுட்பங்களின் சிறப்பு பற்றிய ஒருநாள் கருத்தரங்கம் கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹுபர் தலைமையிலும், கல்லூரி முதல்வர் முனைவர்.அப்பாஸ் மைதீன் முன்னிலையிலும் நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வரும் கட்டிடக்கலை துறைத் தலைவியுமான முனைவர். அழகிய மீனாள் அனைவரையும் வரவேற்றார். ​சிறப்பு விருந்தினராக சென்னை VIT பல்கலைக்கழக கட்டிட கலைத் துறை பேராசிரியர் பாக்யராஜ் கலந்துகொண்டு, ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்கு […]

கீழக்கரையில் 133 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிழக்கு தெரு ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சி

கல்வி நகரமாக திகழும் கீழக்கரையில் மிகப் பழமையான பள்ளிகளில் ஒன்றான கிழக்குத் தெரு ஹைராத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியில் இன்று 133 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. கிழக்குத் தெரு முஸ்லீம் ஜமாஅத் நிர்வாகத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வரும் இப்பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு AMS ஹமீதுல் ஆஷிக்கின், கிழக்குத் தெரு ஜமாஅத் தலைவர் ப.அ.சேகு அபூபக்கர் ஆகியோர் தலைமை ஏற்றிருந்தனர். உதவி தலைமையாசிரியை சசிகலா வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளியின் தாளாளர் ஜவஹர் சாதிக், பள்ளியின் […]

பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி..

கீழக்கரை இஸ்லாமிய பள்ளி மாணவ, மாணவிகள் பல மாநில அளவிளான கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் பரிசுகளை வருடா வருடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதன் வரிசையில் பேச்சு போட்டியில் மாணவி ரிஜா உமைரா மாநில அளவில் பல பரிசுகள் பெற்று சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் தேசிய பசுமை இயக்கம் மற்றும் முஹம்மத் தஸ்தகீர் பள்ளி இணைந்து நடத்திய சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கான போட்டியில் ” நீர் என் வாழ்க்கை ” என்ற தலைப்பில் உரையாற்றி மாவட்ட அளவில் […]

இன்று சர்வதேச ‘சிட்டுக் குருவிகள்’ தினம் – கீழக்கரையில் காணாமல் போன ‘சிட்டுக் குருவிகள்’ – அழியும் இனமாகி வரும் அபாயம் !

இறைவனின் அழகிய படைப்பில், இந்த பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது. இவை அனைத்தும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். ஆனால்… மனிதனை தவிர மற்றவை அனைத்தும் தங்கள் பங்கை சிறப்பாக செய்து வரும் போது ‘ஆறறிவு படைத்த மனிதன்’ தனது சுயநலத்திற்க்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் பிறவற்றுக்கு ஆபத்தாக முடிந்து விடுகிறது. எங்கும் படபடவென்று தன் சிறகுகளை […]

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் தேசிய ஒருநாள் தொழில்நுட்ப கருத்தரங்கம்.

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதுநிலை கணிப்பொறி பயன்பாட்டியல் துறை சார்பாக தேசிய ஒருநாள் தொழில்நுட்ப கருத்தரங்கம் கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர் தலைமையிலும் மற்றும் முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் முன்னிலையிலும் நடைபெற்றது கணிப்பொறி பயன்பாட்டியல் துறைத் தலைவர் முஹம்மது ரபி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சென்னை, ஸ்மார்ட் லீடர்ஸ் இந்திய ஆட்சிய பணியாளர் பயிற்சியாளர் சரவணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இன்றைய தொழில் நுட்பங்களை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தி அதன் […]

இளைஞர்களுக்கான இலவச TALLY பயிற்சி – தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக வழங்கப்படுகிறது.

இராமநாதபுரம் நகராட்சியை சார்ந்த இளைஞர்களுக்கு மட்டும், தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக வழங்கப்படும் இளைஞர்களுக்கான இலவச TALLY பயிற்சி வகுப்புகள் நாளை 17.03.17 முதல், இராமநாதபுரம் சாலை தெருவில் செயல்படும் மெல்வின் பயிற்சி மையத்தில் துவங்கப்படுகிறது. இராமநாதபுரம் நகராட்சியை சேர்ந்த ஆர்வமுடைய இளைஞர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கீழை நியூஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

ஆயிரக்கணக்கில் கருவேல மரங்களை வேரோடு வீழ்த்தி சாதனை புரியும் பள்ளி மாணவர்கள் – சாதிக்க தூண்டும் ‘ரெட் கிராஸ்’ அமைப்பினர்

14.03.2017 அன்று சவேரியார் பட்டிணம் தூய சவேரியார் குளுணி உயர் நிலைப் பள்ளியில் உள்ள ஜூனியர் ரெட் கிராஸ் ( Junior Red Cross) மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து 47,912 எண்ணிக்கையில் கருவேல மரக்கன்றுகளை பள்ளி வளாகத்திலிருந்தும் சுற்றுப் புறங்களில் இருந்தும் வேருடன் அப்புறப்படுத்தி சாதனை படைத்தார்கள். இந்த அரிய பணியை செய்த பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் (பரமக்குடி கல்வி மாவட்டம்) தெ. பாலசுப்பிரமணியம் பரமக்குடி கல்வி மாவட்ட ஜே. ஆர்.சி. கன்வீனர் […]

கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் சர்வதேச நுகர்வோர் தினம்..

இன்று (15-03-2017) உலகம் முழுவதும் சர்வதேச நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.  இது தொடர்மாக அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் நுகர்வோரின் உரிமை மற்றும் அதன் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்து வருகிறார்கள். அதன் தொடர்பாக இன்று கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி சார்பில் சர்வதே நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  இந்ந கருத்தரங்கு வணிகவியல் துறை ( Department of Business Administration) சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!