ஏர்வாடி ஊராட்சி ஒன்றியம் நடுநிலை பள்ளியில் ஆண்டு விழா..

கீழக்கரை ஏர்வாடியில் உள்ள ஊராட்சி ஒன்றியம் நடுநிலை பள்ளியில் 19-04-2017 அன்று ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஏர்வாடி காவல்துறை ஆய்வாளர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் பள்ளி மாணவ, மாணவிகளின் நிகழ்ச்சிகளும், அவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக கல்வி சோலையின் மழலை மலர்கள் மனம் மகிழ, இம் மாணவ, மாணவியர்கள் வருங்காலத்தில் இந்தியாவை வல்லரசாக உருவாக்கவும், ஊரின் அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றினைந்து ஒற்றுமையை உணர்த்தவும் சமாதான புறாக்களை […]

தாசிம் பீவி கல்லூரியில் ஆசிரியப் பெருமக்களுக்கு பயிற்சியரங்கம்..

கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் வியாழன் (20-04-2017) அன்று ஆசிரியப் பெருமக்களுக்கு வேலை சார்ந்த ஆய்வறிக்கை பற்றிய எழுத்து பயிற்சியரங்கம் (Thesis & Assignment Skills) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் சுமையா அறிமுக உரையுடன் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டாக்டர்.கனகராஜ், மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறை தொலை தூர கல்வி முன்னாள் மூத்த பேராசிரியர் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டார்கள். […]

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் சலுகையை நழுவ விடாதீர்கள்..

மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தின்படி சுயநிதி தனியார் பள்ளிகளில் (சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் தவிர்த்து) 25 சதவீத சேர்க்கை ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை பெற்றோர்கள் இருந்த இடத்திலேயே www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம். பதிவு செய்தவுடன் அதை உறுதிபடுத்தக்கூடிய குறுஞ்செய்தி நாம் பதிவு செய்யும் மொபைல் எண்ணுக்கு வரும். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் அலுவலகம் போன்ற அனைத்து […]

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் கோடைகால சிறப்பு வகுப்பு..

கோடைகால விடுமுறை ஆரம்பம் ஆனதும் ஓவ்வொரு மாணவர்களும் பல வழிகளில் பொழுதுபோக்க தொடங்கி விடுவார்கள். ஆனால் அவர்களை சரியான முறையில் வழிகாட்டி விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் கடமை பெற்றோர்களுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும் உண்டு. அவ்வகையில் இந்த வருடம் கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி, சென்னை திறந்த வெளி பல்கலைக்கழகத்துடன் இணைந்து பேச்சு வழக்கு ஆங்கிலம் மற்றும் அரபி பயிற்சி முகாம் ஏற்பாடு செய்துள்ளார்கள். இப்பயிற்சி முகாம் ஏப்ரல் மாதம் 25ம் தேதி ஆரம்பித்து மே மாதமே 25ம் […]

கீழக்கரை தாசிம் பீவி மகளிர் கல்லூரியில் உலகத் தரக்கட்டுப்பாடு (ISO 9001:2015) பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம்…

கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் உலகத் தரக்கட்டுப்பாட்டின் புதிய பதிப்பான 9001: 2015 (ISO 9001 :2015) பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் இன்று (19/04/2017) இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் சுமையா துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியை தலைமை ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர் (Chief Consultant / Trainer) S.S பிள்ளை,  ஆலோசகர் (Consultant ) சாஹீல் ஹமீது மற்றும் ஆலோசகர் (Consultant) P கலைச் […]

கீழக்கரை தாசிம் பீவி கல்லூரியில் ஆசிரியப் பெருமக்களுக்கு ஒரு நாள் நோக்குநிலை நிகழ்ச்சி..

கீழக்கரை தாசிம் பீவி கல்லூரியில் ஆசிரியப் பெருமக்களுக்கு தன்னாட்சி  நீட்டிப்பு (Autonomy Extension) பற்றிய ஒரு நாள் நோக்கு நிலை (Orientation Program) நிகழ்வு இன்று (18-04-2017) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுமையா தலைமை தாங்கி வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் கூட்டமைப்பு உறுப்பினர் (Syndicate Member) Dr. P.சுபாஸ் சந்திர போஸ் கலந்து கொண்டு கல்லூரிகளின் தன்னாட்சி திட்டம் பற்றிய விபரங்களை ஆசிரியப் பெருமக்கள் மத்தியில் விளக்கி […]

கீழக்கரையில் இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையருக்கான பட்டமளிப்பு விழா..

கீழக்கரையில் இஸ்லாமிய பள்ளியில் நேற்று (14-04-2017) பள்ளி வளாகத்தில் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையருக்கான பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சஹீம் மஹ்னாஜ் மற்றும் சித்தி ஹனூனா ஆகியோரின் கிராத்துடன் தொடங்கியது. பின்னர் பள்ளி மாணவர் அஹ்மத் அல்ஹீனா வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் தலைமையுரையை தெற்கு தெரு ஜமாத் தலைவர் உமர் களஞ்சியம் வழங்கினார். அதைத் தொர்ந்து மாணவி மஹ்மூதா ராணி மலழையர் பட்டமளிப்பு விழா உரையை வழங்கினார். பின்னர் […]

கீழக்கரை இஸ்லாமியா துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி 38ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

கீழக்கரையில் உள்ள முன்னனி கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய கல்வி நிறுவனமும் ஒன்றாகும்.  இப்பள்ளியில் ஒவ்வொரு வருடமும் மாணவ, மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பள்ளி ஆண்டு விழா நடத்துவது வழமை.  அதுபோல் இந்த வருடமும் நேற்று (13-04-2017) பள்ளி வளாகத்தில் துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலப் பள்ளிகளுக்கான 38ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி  மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நபிசத்துல் ஹம்னா மற்றும் மரியம் ஃபாத்திமா ஆகியோரின் கிராத்துடன் தொடங்கியது.  பின்னர் துவக்கப்பள்ளி மாணவி ஆசியா வரவேற்புரை வழங்கினார். […]

கருவேல மர ஒழிப்பில் பங்கெடுத்த ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவச் செல்வங்கள்…

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம், ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கருவேலமர ஒழிப்பிற்கான விழிப்புணர்வு கூட்டம் ஏப்ரல்10ம் தேதி திங்கள் கிழமையன்று காலை வழிபாட்டுக் கூட்டத்தில் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் ஜோ.செந்தில்நாதன் தலைமையில் நடந்தது.  இக்கூட்டத்தில் குறைந்தது  10 கருவேல மரக் கன்றுகளை வேருடன் அகற்றி    வரும் மாணவர்களுக்கு பரிசு தருவதாகவும் ஊக்கப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக 57 மாணவர்கள் தங்களின் பஅங்கஉக்கு 600 கருவேல மரக்கன்றுகளை அகற்றி வந்தனர். அம்மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு வழங்கும் விழா […]

கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரி வேதிபொறியியல் துறை மாணவர்களுக்கு மத்திய அரசின் ஊக்கத் தொகை..

கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரி வேதிபொறியியல் துறை மாணவர்கள் இந்த மாதம் 1 மற்றும் 1ம் தேதி மனிதவள மேம்பாட்டு துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட SMART INDIA – HACKOTHAN 2017 என்ற  தேசிய அளிவளான திறனாய்வு போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  இந்த நிகழ்வின் போது பாரத நாட்டின் பிரதமர் மோடி காணொளி காட்சியமைப்பின் மூலம் பங்கேற்ற மாணவர்களுக்கு அறிமுக உரையாற்றி ஊக்கப்படுத்தும் அறிவுரைகளை வழங்கினார். அத்திறனாய்வு போட்டியில் பங்கேற்ற சதக் பொறியியல் கல்லூரி வேதிபொறியியல் துறை […]

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மேலாண்மைத் துறை சார்பாக கருத்துப்பட்டறை..

கீழக்கரை இன்று (12-04-2017) முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மேலாண்மைத் துறை சார்பாக சமூக அறிவியல் ஆராய்ச்சியில் புள்ளியியல் பயன்பாடு பற்றிய கருத்துப்பட்டறை கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் தலைமையிலும் கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர் முன்னிலையிலும் நடைபெற்றது. கல்லூரி மேலாண்மைத்துறை தலைவர் அப்பாஸ் மாலிக் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கரூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரி மேலாண்மை துறை தலைவர் முனைவர் செந்தில் கலந்து கொண்டு புள்ளியியல் மற்றும் கணினிமயமாக்கப்பட்ட புள்ளியியல் சமூக அறிவியல் […]

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் பணிநியமன ஆணை மற்றும் மாணவர் கூட்டமைப்பு துவக்க விழா..

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் பணிநியமன ஆணை வழங்கும் விழா மற்றும் இந்திய தொழில்நுட்பக்கழக மாணவர் கூட்டமைப்பு துவக்க விழா சதக் அறக்கட்டளை இயக்குநர்கள் ஹபீப் முஹம்மது மற்றும் அஸ்லம் தலைமையிலும்,கல்லூரி டீன் முஹம்மது ஜஹுபர் மற்றும் கல்லூரி முதல்வர் அப்பாஸ் மைதீன் முன்னிலையிலும் நடைபெற்றது. ​கல்லூரி துணை முதல்வரும், கட்டிடக்கலை துறைத் தலைவியுமான முனைவர். ஆழகிய மீனாள் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக புதுதில்லி, “இந்திய தொழில்நுட்பக்கழக கூட்டமைப்பின் துணை தலைவர் மணிவண்ணன்” கலந்து […]

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மாணவிகள் பேரவை நிறைவு விழா

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மாணவிகள் பேரவை நிறைவு விழா (Valedictory Function) கல்லூரி வளாகத்தில் சிறப்பாக இன்று (08-04-2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் சுமையா அறிமுக உரையுடன் தொடங்கியது. பின்னர் நிகழ்ச்சியின் வரவேற்புரை கல்லூரி பேரவையின் தலைவி மற்றும் மூன்றாம் ஆண்டு உளவியல் துறை மாணவி முபின் ஜுல்பியா வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக P.ரவி – Regional Director, National Institute of Open Schooling (NIOS, Chennai) […]

கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி 29ம் ஆண்டு விழா…

கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி 25ம் ஆண்டு விழா 06-04-2017 அன்று சிறப்பாக கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இரண்டாம் ஆண்டு மாணவி ரஷீதத் நலீஃபா கிராத்துடன் தொடங்கியது. கல்லூரியின் முதல்வர்.சுமையா வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் துணை முதல்வர்.நாதிரா பானு கமால் கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மலேசிய அரசின் தென்னிந்திய தூதரக அதிகாரி அஹ்மத் பஸாரஜாம் பின் அப்துல் ஜலீல் மற்றும் அவரது துணைவியார் சித்தி நூர் மவர் பின்டி […]

கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரிக்கு என்.எஸ்.எஸ் பணிக்காக மாநில அளவிளான விருது..

கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரிக்கு என்.எஸ்.எஸ் பணிக்காக 2015-2016 ஆண்டிற்கான மாநில அளவிளான விருது வழங்கப்பட்டுள்ளது. சதக் பாலிடெக்னிக் பல் வகையான சமுதாய நலப்பணிகளை கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செய்து வருவது குறிப்பிடதக்கது. இந்த விருதினை இக்கல்வி நிறுவனம் வாங்குவது இரண்டாவது முறையாகும். இதே விருதை 1999-2000ம் ஆண்டும் பெற்றது குறிப்பிடதக்க விசயமாகும். இந்த விருதிற்கான கேடயத்தை தொழில்நுட்ப கல்வி இயக்க ஆணையர்.ராஜேந்திர ரத்னோ அவர்களும், சான்றிதழை என்.எஸ்.எஸ் மண்டல […]

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் தேசிய கடற்படை தினம்..

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கப்பல் துறைச் சார்பாக “54வது இந்திய தேசிய கடற்படை தினம்” கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர். அப்பாஸ் மைதீன் முன்னிலை வகித்தார். ​இந்நிகழ்ச்சியின் வரவேற்புரையை கல்லூரி கப்பல் துறைப் பேராசிரியர் தங்கவேல் வழங்கினார். மேலும் 54வது இந்திய தேசிய கடற்படை தினத்தை முன்னிட்டு உச்சிப்புளி, இந்திய கப்பற்படையின் ஐ.என்.எஸ். பருந்துவின் கமாண்டிங் ஆபிசர். கேப்டன். விஷால்ராய், கல்லூரியில் […]

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 26வது பட்டமளிப்பு விழா..

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 26வது பட்டமளிப்பு விழா இன்று (05-04-2017) காலை 09.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இறைவணக்கத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து முதல்வர் முனைவர்.சுமையா வரவேற்புரையுடன் நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. முதல் நிர்வாகிகள் கல்லூரியின் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பட்டமளிப்பு விழா உறுதி மொழியுடன் பட்டமளிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. பட்டமளிப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். கிருஷ்ண பாஸ்கர் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கான பட்டங்களை […]

தாசீம் பீவி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சி…

கீழக்கரை தாசீம் பீவி மகளிர் கல்லூரியில் இன்று சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் சுமையா தாவூது தலைமை தாங்கினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அரசின் தொழில் முனைவோர் முன்னேற்ற கழகம் சார்பாக சென்னை கிண்டியில் இருந்து வட்டார இயக்குனர் R செந்தில் குமார், மதுரை உயர் கல்வி ஆராய்ச்சி மையத்தின் முதன்மை கல்வி அலுவலர் S . செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை […]

கிழக்குத் தெரு மதரஸாவில் நடைபெற்ற கல்வி குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு நிகழ்ச்சி

கீழக்கரை கிழக்குத் தெருவில் செயல்படும் அல் மத்ரஸத்துல் அரபிய்யதுஜ் ஜெய்னபிய்யா அரபி மதரஸாவில் 1/4/2017 அன்று மாலை 5 மணியளவில் கல்வி குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மதரஸா நிர்வாக அறங்காவலர் ஹைருன்னிஸா தலைமை வகித்தார். மீரா பானு, செய்யது ஜகுபர் பாயிஸா முபல்லிகா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மௌலவி அப்துஷ் ஷக்கூர் ஆலிம் மன்பஈ கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக தீனியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி நிர்வாக மேலாளர் […]

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 14வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது…

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 14வது பட்டமளிப்பு விழா 01.04.2017 அன்று காலை 11.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியினை கல்லூரியின் நெறியாளர் டாக்டர்.J. முஹம்மது ஜஹபர் அவர்கள் முன்னிலை வகித்து துவக்கி வைத்தார்.  பின்னர் கல்லூரியின் முதல்வர்.E.ரஜபுதீன் வரவேற்புரை நிகழ்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும் மதுரை காமசராசர் பல்கலைக்கழக பல்லுயிர் மற்றும் வனவியல் துறையின் தலைவர் மற்றும் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!