தாசிம்பீவி அப்துல்காதர் கல்லூரியில் தலைமைத்துவம் பற்றி பயிற்சி பட்டறை…

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இன்று (12.07.17) காலை 10 மணியளவில் ஆங்கிலத்துறையும் கணிதத்துறையும் இணைந்து நடத்திய தலைமைத்துவம்’ பற்றிய பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. A. முகம்மது அஃப்ரின் பானு, இளங்கலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி இறை வணக்கத்துடன் தொடங்கியது.  முனைவர்.R.புனிதா கணிதத்துறைத் தலைவர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் S.சுமையா தலைமையுரையாற்றினார்கள். S.மகுதூன் நிஷா, ஆங்கிலத்துறை துணைப்பேராசிரியர் நன்றியுரையாற்றினார். இதில் சிறப்புவிருந்தினர்களாக G.M ராதிகா மற்றும் N.பரிமளம் ஹரிராமன், ஆங்கிலத்துறை […]

பள்ளி மாணவர்களை போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தும் திறனறி புத்தகம் வெளியிட்டு கீழக்கரை ஆசிரிய தம்பதி சாதனை

பள்ளி மாணவர்களாக மேல் நிலை கல்வி பயிலும் காலங்களில் பலருக்கும் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் ஐ.பி.எஸ் ஆக வேண்டும், அரசு வேலைக்கு செல்ல வேண்டும், உயர் பதவிகள் வகிக்க வேண்டும் என்றெல்லாம் மிகப் பெரிய கனவு இருக்கும். ஆனால் எவ்வாறு தங்களை தயார்படுத்தி கொள்வது..? தங்களுடைய இலக்கை எப்படி அடைவது என்பது குறித்து பள்ளிகளோ, கல்லூரியிலோ பயிற்றுவிப்பது இல்லை. இறைவன் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பிரத்யோக தனித் திறமைகளோடு தான் அனைவரையும் படைத்திருக்கிறான். அதனை பள்ளி மாணவர்களாக இருக்கும் […]

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கல்லூரி பேராசிரியாக்ளுக்கு பயிலரங்கம்..

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் ‘தலைமைத்துவம்’ என்ற தலைப்பில் மூன்று நாட்கள் (08.06.2017 முதல் 10.06.2017 வரை) பயிலரங்கம் நடைபெற்றது. இப்பயிலரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து விஸ்டம் கொலாப்ரேசன், ஹைதராபாத் ( Wisdom Colloboration) பயிலரங்க பயிற்சியாளர் அப்துல் முஜிபு கான், முதன்மை பயிற்சியாளராக இருந்து தலைமைத்துவம் பற்றி பல்வேறு கருத்துக்களை பகிர்நத்தார். மேலும் நிகழ்ச்சியில் ஷில்பா மேனன், தன்வீர் ராஷி போன்றோர் பயிற்சியார்களாக கலந்து கொண்டு […]

பொதுத்தேர்வு முடிவுகளும்… பெற்றோர்களின் ஆதங்கமும்..என்று தீரும் பிள்ளைகளை வதைக்கும் இந்த மதிப்பெண் மோகம்..

சமீபத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. எந்த ஒரு தேர்வுக்கும் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்பது போல் பல மாணவச் செல்வங்கள் வெற்றி பெற்று அடுத்த நிலைக்கு சென்றுள்ளார்கள். இன்னும் சில மாணவச் செல்வங்களோ அடுத்த நிலைக்கு செல்வதற்கு குறுகிய கால அவகாசம் எடுத்துள்ளர்கள். ஆனால் இவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தவர்கள் என்பதை விட அடுத்த நிலையை அடைய சீரிய திட்டம் தீட்டக் கூடியவர்கள் என்று கூட நாம் எடுத்துக் […]

இஸ்லாமியா பள்ளியின் ரமலான் மாத சிறப்பு வேலை நேர அறிவிப்பு..

தமிழகத்தில் இந்த வருடம் கடுமையான வெப்பத்தை முன்னிட்டு தமிழக அரசின் அறிவிப்பின் படி ஒரு வாரம் காலம் தாமதமாக ஜூன் மாதம் 07ம் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. இஸ்லாமிய மக்களின் புனித மாதமான ரமலான் மாதமும் இன்று (27-05-2017) இரவு முதல் தமிழகத்தில் தொடங்குகிறது. இன்று தொடங்கி ஒரு மாதம் காலம் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்று பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். இஸ்லாமிய மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தில் உள்ளவர்களின் அவசியத்தை கருத்தில் கொண்டு இந்த வருடம் ரமலான் மாதத்தில் பள்ளி […]

இந்தியாவிலேயே புதிய வகை நண்டு இனத்தை கண்டுபிடித்த இளம் விலங்கியல் முஸ்லிம் பர்வீன் பர்ஸான அப்ஸர்…

வட கிழக்கு மாநிலமான மேகாலாயாவின் குகையில் வாழும் புதிய வகை நண்டு இனத்தை இளம் விஞ்ஞானி ஒருவர் இந்தியாவிலேயே முதல் முறையாக கண்டறிந்துள்ளார். இமய மலையை தழுவியிருக்கும் மேகாலயா பற்றி சொல்லும் போது அதன் வசீகரத்தன்மை கொண்ட அழகு நிறந்த அடர்த்தியான காடுகள் மற்றும் நீர் நிலைகளை குறிப்பிடாமல் இருக்க முடியாது. உலகில் மொத்தம் 34 பகுதிகள் பல்லுயிர்களின் வாழ்விடமாக கருதப்படுகிறது. அதில் இந்தியாவில் உள்ள நான்கு இடங்களில் மேகாலயாவும் பல்லுயிர்கள் வாழும் பகுதிகளில் ஒன்றாக அறியப்படுகிறது. […]

NASA மற்றும் KECT இணைந்து நடத்திய கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா…

கீழக்கரையில் வடக்குத் தெரு சமூக நல அமைப்பு ( NASA) மற்றும் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை (KECT) இவ்விரு அமைப்புகளும் கீழக்கரையில் பல வருடங்களாக மார்க்க சேவை மற்றும் சமுதாய பணிகளை  கீழக்கரை மக்களுக்கு செய்து வருவது அனைவரும் அறிந்த விசயம்.  அதுபோல் இவ்விரு அமைப்புகளும் வருடந்தோரும் கோடை விடுமுறை காலத்தில் மாணவர்கள் பயன் பெறும் விதமாக சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்துவது வழக்கம்.  இந்த வருடம் பயிற்சி முகாமை பயனுள்ளதாகவும், சிறப்பாக செயல்படும் விதமாக […]

கலெக்டர் ஆகும் கனவா?? உங்களுக்கு உதவ மக்கள் பாதை காத்திருக்கிறது..

நம்மில் எத்தனையோ பேருக்கு கலெக்டர் ஆக வேண்டும், நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கும், ஆனால் சரியான வழிகாட்டுதலும், ஊக்கப்படுத்துதலும் இல்லாமல் கனவு, கனவாகவே புதைந்து விடுகிறது. அனைவருடைய கனவையும் நினைவாக்கும் விதமாக சகாயம்,IAS வழிகாட்டுதலில் இயங்கி வரும் மக்கள் பாதை மற்றும் SMART LEADERS IAS நிறுவனமும் இணைந்து நடத்தும் SCHOLARSHIP TEST வரும் மே 21ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி மற்றும் பதிவுகள் திருநெல்வேலி PPL திருமண […]

10ம் வகுப்பு தேர்வு முடிவு.. மாநில அளவில் இராமநாதபுர மாவட்டம் மூன்றாம் இடம்…

இன்று (19-05-2017) 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. இந்த வரும் விருதுநகர் மாவட்டம் , கன்னியாகுமரி மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம் என முதல் மூன்று இடங்களில் வந்துள்ளது. இந்த வருடம் இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 17979 மாணவர்கள் பரிட்சை எழுதினர். இதில் மாணவர்கள் 8814 பேரும், மாணவிகள் 9165 பேரும் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 96.46 சதவீதமும், மாணவிகள் 98.83 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடம் கடந்த ஆண்டை விட 1.06 சதவீதம் […]

தொகுதி-II A நிலை அலுவலர் பணியிடங்களுக்குரிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா…

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 16.05.2017 அன்று மாவட்ட நிர்வாகம் சார்பாக, மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும். தொகுதி-II A (GROUP IIA) நிலை அலுவலர் பணியிடங்களுக்குரிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான குறிப்புகளை வழங்கினார். ​பயிற்சி வகுப்பினைத் துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் பேசியதாவது: ​தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் […]

பண்பகம் அறக்கட்டளையின் கல்வி உதவிக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு…

பண்பகம் அறக்கட்டளையும், SDPI கட்சியும் இணைந்து மூன்றாவது வருடமாக 2017-2018ம் ஆண்டுக்கான தேவையுடைய ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவும் விதமாக மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் கலந்தாய்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலந்தாய்வு வரும் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் இராமநாதபுரம் ரிஹா குளோபல் சர்வீஸ் நிலையத்திலும், திங்கள் மற்றும் செவ்வாய் நாட்களில் பரமக்குடி நகரில் உள்ள நேஷனல் பில்டர்ஸ் அலுவலகத்திலும் நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான விதிமுறைகள் மற்றும் தொடர்பு விபரங்கள் கீழே […]

வடக்குத்தெரு முகைதீனியா பள்ளியில் நாளைய உலகம் நமதாகட்டும் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.

கீழக்கரை வடக்குத்தெரு முகைதீனியா பள்ளியில் நாளைய உலகம் நமதாகட்டும் என்ற தலைப்பில் உம்மத்திற்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று (05-05-2018) மாலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை வடக்குத்தெரு சமூக நல அமைப்பு ( NASA) மற்றும் தமிழ்நாடு இஸ்லாமிய கல்வி இயக்கம் ஆகியோர் இணைந்நு நடத்தினர். இந்நிகழ்ச்சியின் வரவற்புரையை ஃபர்கான் பின் அஷ்ரஃப் வழங்கினார். நிகழ்ச்சியின் தலைமையுரையை முகைதீனியா பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் ரஃபீக் பசீர் அகமது ஆகியோர் வழங்கினார். பின்னர் எது கல்வி […]

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் பொறியியல் சேர்க்கைக்கு இலவச ஆன் லைன் வசதி..

​கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கான ஆன்லைன் விண்ணப்பம் செய்வதற்கு இலவச இணையதள வசதி விண்ணப்பம் பூர்த்தி செய்வதகு உதவி செய்ய ஏற்பாடு துவக்கப்பட்டுள்ளது. ​இந்த இலவச சேவையை கல்லூரி சேர்மன் SM. முஹம்மது யூசுப் துவக்கி வைத்தார். பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்கள் http://www.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். http://www.annauniv.edu ​இது பற்றி அறக்கட்டளை இயக்குநர். ஹாமீது இபுராஹிம் மற்றும் கல்லூரி […]

தொண்டு நிறுவனம் சார்பாக வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் முகாம்..

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இன்று (04-05-2017) PAD தொண்டு நிறுவனம் சார்பாக வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் PAD தொண்டு நிறுவனத்தின் இளைஞர் வளர்ச்சி அலுவலர் தேவ் ஆனந்த் வரவேற்றார். நிகழ்ச்சியின் நோக்கத்தை அந்நிறுவனத்தின் திட்ட இயக்குனர் மன்னார்மன்னனும், ஊக்க உரையை நிறுவனத்தின் செயலாளர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியின் சிறப்புரையை சதக் கல்லூரியின் டீன் முனைவர் முகமது சஹபர் மற்றும் செய்யது ஹமீதா அறிவியல் மற்றும் […]

கீழக்கரை ஏர்வாடியில் மாணவர்கள் புதைமணலில் நடந்து பள்ளிக்கு செல்லும் அவலம்.. நவீன இந்தியாவின் அவல நிலை..

கீழக்கரை ஏர்வாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 05 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மங்களேஸ்வரி நகரில் இருந்து பள்ளிக்கு படிக்க வரும் மாணவச் செல்வங்கள் முறையான போக்குவரத்தும், சாலை வசதியும் இல்லாமல் மணலில் கால்கள் புதைந்த வண்ணம் நடந்து வரும் வேதனையான காட்சியை தினம் தினம் காணமுடியும். நம் நாட்டின் எதிர்காலத் தூண்கள் இந்த மாணவச் செல்வங்கள், ஆனால் அத்தூண்களுக்கு முறையான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பது நம் அரசாங்கத்தின் கடமையாகும். ஒரு புறம் நவீன இந்தியா பற்றி […]

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் 05-05-2017 அன்று உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி..

இன்றைய சமுதாயத்திற்கு தேவை வளமான கல்விச் செல்வம் அதை சரியாக வழிகாட்டும் கடமை பெற்றோர்களுக்கும் கல்வி நிலையங்களுக்கும் உண்டு.  ஒவ்வொரு மாணவச் செல்வங்களின் தனித் தன்மையை அறிந்து,  அவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப சரியான உலகக் கல்வியை பயிற்றுவிப்பதன் மூலம் அவர்கள் வாழ்வில் நல்ல இடத்தை அடைய முடியும்.  அதன் தொடக்கமாக தமிழ்நாடு இஸ்லாமிய கல்வி இயக்கம் தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய கல்வி நிலையங்களுடன் சேர்ந்து உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை தொடர்வாக நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் […]

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கடல்சார் துறை 2013-17 – ம் ஆண்டு மாணவர்களின் பட்டப்படிப்பு நிறைவு விழா

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் 2013-17 ஆண்டு கடல்சார் துறை மாணவர்களின் பட்டப்படிப்பு நிறைவு விழா கீழக்கரை முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் முகம்மது யூசுப் சாகிப் தலைமையிலும்,  கல்லூரி டீன் முகம்மது ஜஹாபர் மற்றும் கல்லூரி முதல்வர் அப்பாஸ் மைதீன் முன்னிலையிலும் கொண்டாடப்பட்டது. கல்லூரி கடல்சார் துறைத் தலைவர் தங்கவேலு அனைவரைவும் வரவேற்றார். முகம்மது சதக் அறக்கட்டளை, தலைவர் முகம்மது யூசுப் சாகிப் அவர்கள் கலந்து கொண்டு கடல்சார் வாணிபத் துறையின் கொடியை ஏற்றி வைத்து, […]

மாயாகுளம் நேருஜி மழலையர் மற்றும் துவக்க பள்ளி ஆண்டு விழா..

கீழக்கரை, மாயாகுளத்தில் உள்ள தேருஜி மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியின் மூன்றாம் ஆண்டு விழா வியாழன் (20-04-2017) அன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாயாகுளம் ஜமாஅத் கௌரவத் தலைவர் சேக் முகம்மது தலைமை தாங்கினார். மற்றும் கௌரவத் தலைவர் அப்துல் கரீம் மற்றும் மாயாகுளம் ஜமாஅத் தலைவர் சேகு நெய்னா முகம்மது, கல்விக் குழுத் தலைவர் அப்துல் ஹாலிக், ஜமாஅத் பொருளாளர் சாகுல் ஜமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் தொடர்ச்சியாக மாணர்வர்களுக்கு செய்யது ஹமீதா கலை மற்றும் […]

நீர் நிலைகளை காக்க முன்னுதாரணமாக விளங்கும் மதுரை SBOA பள்ளி மற்றும் பசுமை நடை இயக்கம்..

தமிழக்கத்தில் இந்த வருடம் சரித்திரம் காணாத தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.  எங்கு நோக்கிலும் ஆள்துளைக் கிணறு மூலமாக தண்ணீர் எடுக்கும் தொழில் மிக வேகமாக நடந்து வருகிறது அதன் பின் விளைவு அறியாமல்.  தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் நீர் மட்ட அளவு சரித்திரம் காணாத அளவு குறைந்து உள்ளது. நம் நாட்டின் அரசியல்வாதிகளோ எந்த வகையில் எப்படி கொள்ளையடிக்கலாம் என்று வகை வகையாகவும், தினுசு தினுசாகவும் தினம் ஒரு திட்டம் தீட்டி வருகிறார்கள்.  இன்னொரு பக்கம் தமிழகத்தில் […]

இன்று ‘ஏப்ரல் 23’ – உலக புத்தக தினம் – சிறப்பு கட்டுரை

கட்டுரை ஆக்கம் : எழுத்தாளர் பேரா.சோ.மோகனா “வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட, அழகான பொருட்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.” –  ஹென்றி வார்ட் பீச்சர். புத்தகமும்.. உலக புத்தக தினமும்…!  நாம் படிக்கத் தெரிந்த காலம் முதல் புத்தகம் படிக்கிறோம்..! புத்தகம் என்பது ஒரு காலத்தின் வரலாறு. வரலாறு எழுத்துக்கள் மூலம் பதிவு செயப்படுகிறது. புத்தகங்களை சேமிக்கும் இடத்தை நூலகம் என்கிறோம். உளவியல் வல்லுனர்கள் குழந்தைகளுக்குப் பேசத் தெரியாவிட்டாலும் கூட புத்தகம் படித்துக் கட்ட வேண்டும் என்று கூறுகின்றனர். […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!