கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன் அவர்கள் தலைமை தாங்கினார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் சேதுபதி அரசினர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் அர்ச்சுனன் அவர்கள் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “ஆசிரியர் பணியானது புனித சேவைக்கு ஒப்பாகும். ஆசிரியர் பணி ஒன்றே போட்டி பொறாமையே இல்லாத உன்னத பணியாகும். மிகச்சிறந்த சமுதாயத்தை உறுவாக்கும் வல்லமை ஆசிரியருக்கே உண்டு. மேலும் […]
Category: கல்வி
கல்வி
கணினி நுண்ணறிவு மற்றும் நேர்முகப் பயிற்சி – ISICIS -17’’ ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம்…
தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பாக ‘கணினி நுண்ணறிவு மற்றும் நேர்முகப் பயிற்சி -ISICIS-17’’ ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் நேற்று (05.09.2017) காலை 10.00 மணியளவில் இறைவணக்கத்துடன் தொடங்கியது. முனைவர் ஏ.ஆர்.நாதிரா பானு கமால்இ கணினி அறிவியல் துறையின் தலைவர் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா தலைமையுரையாற்றினார். பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரஸ்சன்ட் பல்கலைகழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் முனைவர் று.ஆயிஷா பானு […]
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணித்தமிழ் பயிலரங்கம்…
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவை சார்பாக கணித்தமிழ்ப் பயிலரங்கம் 30.08.2017 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன் தலைமையேற்றுத் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில் “உலகளவில் தமிழ்மொழி மிகப் பழமையானதாக இருக்கிறது. தமிழ் மொழியானது இந்திய மொழிகளிலேயே அதிக எழுத்துக்களைக் கொண்ட மொழியாகும். தமிழ் இலக்கியங்களில் ஐம்பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, சீவகசிந்தாமணி மற்றும் குண்டலகேசி ஆகியவையும் ஐஞ்சிருங்காப்பியங்களான நாககுமாரகாவியம், யசோதரைக்காவியம், நீலகேசி, உதயகுமாரகாவியம் மற்றும் சூளாமணி […]
தாசிம்பீவி கல்லூரியில் புதிய தொழில்நுட்ப முறையில் பனை சர்க்கரை தயாரித்தல் பயிற்சிப்பட்டறை….
தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மனையியல் ஆராய்ச்சித்துறை சார்பாக மூன்று நாள் புதிய தொழில்நுட்ப முறையில் பனை சர்க்கரை தயாரித்தல் பயிற்சிப்பட்டறை நடைபெறுகிறது. தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக்குழு இப்பயிற்சிக்கு உதவித்தொகை வழங்கியது. இந்நிகழ்வு இரண்டு நாள் நிகழ்ச்சியாக 29.08.2017 அன்று காலை 11 மணியளவில் தொடக்கவிழா இறைவணக்கத்துடன் துவங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா அவர்கள் தலைமையுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பி. மாரியம்மாள், பொது மேலாளர் மாவட்ட தொழில் முனைவோர் […]
தாசிம் பீவி கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி …
இன்று (29-08-2017) தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி கீழக்கரை நகராட்சி ஒத்துழைப்புடன் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் சுமார் 2500 பேர் கலந்நு கொண்டனர்.
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வகுப்புகள் துவக்க விழா..
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் “முதலாம் ஆண்டு மாணவர்கள் வகுப்புகள் துவக்க விழா” கல்லூரி இயக்குநர். ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா தலைமையிலும், கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் மற்றும் கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர் முன்னிலையிலும் நடைபெற்றது. கல்லூரி ஆங்கிலத்துறை துணைப் பேராசிரியர் ரேகா அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் தனது வாழ்த்துரையில் நடந்து முடிந்த 2016-2017 கல்வி ஆண்டில் எங்கள் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி இராமநாதபுரம் மாவட்டத்தில் முதலிடமும், […]
கீழக்கரை தாசிம் பீவி கல்லூரியில் நடைபெற்ற விவாத அரங்கம்..
கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் மலபார் தங்க மற்றும் வைர மாளிகையின் சார்பாக இன்றைய நவீன உலகில் பெண்களின் நிலை உயர்ந்துள்ளதா? தாழ்ந்துள்ளதா? என்ற தலைப்பில் விவாத அரங்கம் நடைபெற்றது. இவ்விவாத அரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் சுமையா நடுவராகவும், சிறப்பு விருந்தினராக கல்லூரியின் செயலாளர் ஹாலித் ஏ கே புஹாரி கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் சீதக்காதி அறக்கட்டளையின் ஷேக் தாவூத்கான், மலபார் தங்க மாளிகையின் விற்பனை பிரிவு மேலாளர் அஹமது […]
கீழக்கரை தீனியா பள்ளியில் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி…
கீழக்கரை தீனியா பள்ளயில் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தினுள் இன்று (14-08-2017) நடைபெற்றது. இக்கண்காட்சியை தாசிம் பீவி அப்துல்காதர் கல்லூரி முதல்வர் சுமையா தாவுது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் தங்களின் திறமைகளை நிரூபிக்கும் வண்ணம் பல அறிவியல் படைப்புகளை பார்வையாளர்களுக்கு விளக்கினர். இந்நிகழ்வை தொடர்ந்து நாளை (15-08-2017) பள்ளி வளாகத்தில் கொடியேற்றத்துடன் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவிற்கு சிறப்பு […]
கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இளைஞர் எழுச்சி தினம்….
கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 11.08.2017 அன்று காலை 11.00 மணியளவில் தமிழ்த்துறை தாசிம் பீவி தமிழ் மன்றத்தின் சார்பாக இளைஞர் எழுச்சி தினம் கொண்டாடப்பட்டது. இறை வணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் அகிலா தமிழ்த்தறைத் தலைவர் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் சுமையா தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக எஸ் செல்லம், ஒருங்கிணைப்பாளர், விவேகானந்தா ஆராய்ச்சி நிறுவனம், காரைக்குடி கலந்து கொண்டு இளைஞர்களின் சட்டப்பூர்வ அதிகாரம் என்ற தலைப்பில் விவேகானந்தர் வரிகளின்படி […]
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வளாகத் தேர்வு நடைபெற்றது..
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10.08.2017 அன்று காலை 11 மணியளவில் வளாகத்தேர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் ரஜபுதீன் துவக்கி வைத்தார். இதில் IDBI வங்கியின் பொதுக் காப்பீட்டுத்துறையில் பல்வேறு பணிக்கான நேர்முகத்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் IDBI மதுரை மண்டல வங்கியின் மூத்த காப்பீட்டு முகமை தலைவர் R. புனிதா இராஜகோபால் உதவித் தலைவர்கள் B. பிரகதி மற்றும் N. சம்யுக்தா ஆகியோர் கலந்து கொண்டு தகுதிவாய்ந்த […]
தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தமிழ் மன்றத்தின் சார்பாக கருத்தரங்கம்…
தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இன்று (09.08.2017) காலை 11.00 மணியளவில் தமிழ்த்துறை தாசிம் பீவி தமிழ் மன்றத்தின் சார்பாக கருத்தரங்கம் இறை வணகக்த்துடன்தொடங்கியது. இந்நிகழ்வில் ஜா.ஆரோக்கிய குரோசியா முதலாமாண்டு கணிதத்துறை மாணவி வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் சுமையா தலைமையுரையாற்றினார். முனைவர் ஏ. இ. ஜி. சி. ரஜனி, கலைப்புல முதன்மையர் மற்றும் வணிகவியல் துறைத் தலைவர் விருந்தினதைக் கௌரவித்தார். சிறப்பு விருந்தினராக முனைவர் சு. காந்திதுரை, இணைப்பேராசிரியர் தியாகராசர் […]
செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையின் வளர்ச்சி குறித்த ஒரு நாள் கருத்தரங்கம்
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறையின் சார்பாக 04.08.2017 அன்று காலை 10.30 மணியளவில் கல்லூரி கலையரங்கத்தில் நுண்ணுயிரியல் துறையின் வளர்ச்சி குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன் தலைமையேற்று துவக்கி வைத்தார் அவர் பேசுகையில் “அறிவியல் வளர்ச்சிக்கு நுண்ணுயிரியல் துறை மிக முக்கியமான பங்கு வக்கிறது. இந்திய அளவில் பல்வேறு உணவு உற்பத்தித் தொழிற்சாலைகள், மருந்துகள்இ, நோய்த் தடுப்பு மருந்துகள் (vaccine) உற்பத்தி […]
கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் கல்லூரியில் கல்வி தந்தை நினைவு தின விழா…
கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 29-07-2017அன்று காலை கல்வித் தந்தை பி எஸ் அப்துல் ரஹ்மான் நினைவு தினவிழா கொண்டாடப்பட்டது. இறைவணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் மாணவப்பேரவை உறுப்பினர் நூர் செரின், முதுகலை கணினித்துறை மாணவி வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் சுமையா அவர்கள் தலைமையுரையாற்றினார். முனைவர் ஏ இ ஜி சி ரஜினி கலைப்புல முதன்மையர் அவர்களும் முனைவர் என் கௌரி தேர்வாணையர் அவர்களும் பாராட்டுரை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக […]
கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளியில் கலாம் நினைவு தின சிறப்பு நிகழ்ச்சிகள்..
கீழக்கரை கண்ணாடி வாப்பா இண்டர்நேஷனல் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இரண்டாம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு 25/07/2017 அன்று 37 மீட்டர் துணிப் பதாகையில் ஓவியம் (Banner Painting), அப்துல் கலாமின் தொலைநோக்குப்பார்வை (Abdul Kalam’s Vision) எனும் தலைப்பில் மாணவ குழுமுயற்சியில் உருவாக்கப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அப்துல் கலாம் இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் சார்பில் புதுவையைச் சார்ந்த Assist World Record நிறுவனரும் பல்வேறு உலகசாதனைகளை நிகழ்தியவருமான இராஜேந்திரன் தலைமையேற்று பதாகையினை திறந்து வைத்து […]
கீழக்கரை பேர்ல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலாம் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி..
கீழக்கரை பேர்ல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் 2வது நினைவு தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவியர் தாசிம் பீவி மகளிர் கல்லூரி மாணவியருடன் இணைந்து அப்துல் கலாம் அவர்களின் முகமூடி அணிந்து ஊர்வலமாக சென்றனர். மேலும் மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் விதமாக முதல் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை கலை மற்றும் அறிவியல் சார்ந்த போட்டிகள் 21/07/2017 வெள்ளிக்கிழமை அன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். […]
ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு எளிதாக புரிந்து கொள்ள ஒரு வழிகாட்டி..
இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் மாதம் நெருங்க இன்னும் 6 வாரங்களே உள்ளன. இஸ்லாம் சமுதாய மக்கள் வாழ்நாளின் இந்த முக்கிய கடமையை நிறைவேற்ற எதிர்பார்த்த வண்ணம் பல லட்சம் மக்கள் இருக்கிறார்கள். தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதரர்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி, “புனித பயணங்கள்” என்ற பெயரில் எளிய நடையில் ஹஜ் புனித பயணத்தின் செயல்முறைகளை விளக்கும் புத்தகம் வெளியிடப்பட உள்ளது. இப்புத்தகத்தை முனைவர். ஹுசைன் […]
மணல் சிற்பத்தில் சிறந்து விளங்கும் கீழக்கரை வடக்குத் தெரு மாணவன்..
கீழக்கரை வடக்குத் தெரு பசீர் மரைக்காயர் அவர்களின் மகன் ஹக்பில் மரைக்காயர். இவர் பியர்ல் மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தனித் திறமை மண் சிற்பம் வரைவதாகும். இன்று இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் இரண்டாம் நினைவு நாள் நிகழ்ச்சி தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி மற்றும் பியர்ல் பள்ளி வளாகத்தில் கலாம் இன்டர்நேசனல் ஃபவுண்டேஷன் சார்பாக பல சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளாக நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பாக அப்துல் கலாமின் தனித்துவத்தை […]
மேம்பட்ட தனியார் பள்ளிக்கு இணையாக கும்பிடுமதுரை தொடக்கப்பள்ளி..
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தில்லையேந்தல் ஊராட்சியின் கீழ் இயங்கி வருகிறது கும்பிடுமதுரை தொடக்கப்பள்ளி. மற்ற தொடக்கப்பள்ளிகளை போல் இருக்கும் என்று உள்ளே செல்பவர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கும். இங்கு படிக்கும் சிறுவர், சிறுமியர்கள் ஆங்கில புலமையில் தனியார் பள்ளிக்கு நிகராக விளங்குகிறார்கள். கவிதைகள் கூறுவதில் தமிழ் கவிஞர்களையும் மிஞ்சிவிடுகிறார்கள். விஞ்ஞான அறிவுத்திறனையும் நிரூபிக்கும் வண்ணம் சமீபத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது. இப்பள்ளி சுற்றுபுறசூழல் அமைப்பிலும் உறுப்பினராக இருந்து பங்களிப்பு […]
கீழக்கரை தாசிம் பீவி கல்லூரியில் ஆங்கில தகவல் பரிமாற்ற பயிற்சி முகாம்..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை- தாசிம் பீவி அப்துல் காதர் பெண்கள் கல்லூரியில் இந்திய ஆங்கில மொழி ஆசிரியர் சங்கம் இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் ஆகியோர்இணைந்து நடத்தும் “ஆங்கில தகவல் பரிமாற்ற பயிற்சி முகாம்” 17.07.2017 மற்றும் 18.07.2017 ஆகிய நாட்களில் பள்ளி ஆசிரியர்களுக்காக நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி முகாமை முனைவர் சுலைகா ஷகில், ஆங்கிலத் துறைத் இறைவணக்கத்துடன் சிறப்புறையாற்றி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சுமையா தாவுத் தலைமையுரையாற்றினார். துவக்க உரையை […]
கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளயில் சுகாதார விழிப்புணர்வு முகாம்..
கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் மத்தியில் சுகாதார இந்தியா திட்டம் ( SWATCH BHARATH MISSION) விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுகாதாரம் பற்றியும்இ கீழக்கரையை திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நகரமாக எவ்வாறு உருவாக்குவது போன்ற விசயங்கள் பரிமாறப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் நீலம் மற்றும் பச்சை நிற தொட்டிகளில் உலர்ந்த மற்றும் ஈரக்கழிவுகளை தரம் பிரிப்பது பற்றிய விளக்கமும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தியின் தலைமையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான […]
You must be logged in to post a comment.