தமிழ்நாடு இஸ்லாமிய பள்ளிகள் நல அமைப்பு (TISWA) நடத்திய போட்டியில் பல பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ள கீழக்கரை அல் பையினா மெட்ரிக் பள்ளி..

கடந்த 28/10/2017 அன்று திண்டுக்கல் க்ரீன் வேலி பள்ளயில் (Green Valley) பள்ளி மாணவ, மாணவர்களுக்கான தனித்திறன் போட்டி நடைபெற்றது. இதில் 700கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டன. அதில் கீழக்கரை அல் பையினா மெட்ரிக் பள்ளியியும் ஒன்றாகும். இதில் அல்பையினா மெட்ரிக் பள்ளியைச் சார்ந்த 28 மாணவச் செல்வங்கள் பல போட்டிகளில் கலந்து கொண்டு 11 பரிசுகளை வென்றனர். அதில் 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அதிகமான பரிசுகளை வென்று சாதனை […]

தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்று தனித்து நிற்கும் இஸ்லாமியா பள்ளி மாணவ, மாணவிகள்..

இராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான தனித்திறன் போட்டிகள் ராமநாதபுரம் புனித அந்திரேயா பள்ளியில் 24.10.2017 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொண்ட இஸ்லாமியா பள்ளி மாணவி A. சுலைஹத் ஃபயிஹா கட்டுரை போட்டியில் முதல் பரிசும் , K. ரிஃப்பத் ஹஸீனா என்ற மாணவி ஓவியப் போட்டியில் முதல் பரிசும் , பேச்சுப்போட்டியில் H.மரியம் என்ற மாணவி இரண்டாவது பரிசும், வினாடி வினா போட்டியில் M. பயாஸ் அகமது மற்றும் சேகு மரைக்கா என்ற இரண்டு மாணவர்கள் இரண்டாம் பரிசும் […]

கீழக்கரை அல் பையினா மெட்ரிக் பள்ளியில் பெற்றோருக்கான கவுன்சிலிங் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அல் பையினா மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் ஆக்சஸ் இந்தியா நிறுவனம் இணைந்து பெற்றொர்கான கவுன்சிலிங் மற்றும் கலந்துரையாடல் பயிலரங்கம் நிகழ்ச்சி இன்று (21-10-2017) மாலை 6 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அல் பையினா பள்ளிகூடத்தின் சட்ட ஆலோசகர் முகம்மது சாலிஹ் ஹூசைன் தொகுப்புரை வழங்கினார். பள்ளியின் மாணவி பத்தீன் ரஹா கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். அல் பையினா அகாடமி முதல்வர் செய்யது ஜமாலி வரவேற்ப்புரை ஆற்றினார். அல் பையினா கல்வி குழுமத்தின் […]

கல்வித்தந்தை பி.எஸ் அப்துர்ரஹ்மான் 90வது பிறந்த நாள் விழா..

தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கல்வித்தந்தை பி.எஸ் அப்துர் ரஹ்மான் அவர்களின் 90 வது பிறந்த நாள் விழா இன்று காலை 11.00 மணியளவில் இறை வணக்கத்துடன் தொடங்கியது. கல்லூரி முதல்வர் முனைவர் சுமையா வரவேற்புரை வழங்கினார். சீதக்காதி அறக்கட்டளை பொது மேலாளர் ஜலால், பி எஸ் அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம் சென்னை, இஸ்லாமியக் கல்லவித் துறை தலைவர் செய்யது ஸ்ஊத் ஜமாலி, சாதிக் அலி, தலைமை மேலாளர் சுல்தான் மற்றும் சிக்கந்தர் ஜமிலா […]

மாணவர்களுக்கான “வெற்றி நமதே” நிகழ்ச்சி முகம்மது தஸ்தகீர் பள்ளயில் நடைபெற்றது…

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்திய +2 மாணவர்களுக்கான “வெற்றி நமதே” கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் சதக் அறக்கட்டளைத் தலைவர் யூசுப் சாகிப் தலைமையிலும், அறக்கட்டளை இயக்குநர் ஹாமீது இபுராஹிம் முன்னிலையிலும் நடைபெற்றது. முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர் நந்தகோபால் அனைவரையும் வரவேற்றர். அறக்கட்டளைத் தலைவர் தனது தலைமையுரையில் “+2 மாணவர்களாகிய நீங்கள் நமது இராமநாதபுரம் […]

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச் சாரல் விழா நடைபெற்றது..

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கல்வித்தந்தை பி.எஸ். அப்துர் ரஹ்மான் 90 வது பிறந்த நாள் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 86வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்த்துறை சார்பாக மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையேயான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுடன் இலக்கியச்சாரல் விழா 13.10.2017 அன்று காலை 11.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இறை வணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் சுமையா வரவேற்புரை வழங்கினார். கல்லூரி செயலாளர் காலித் […]

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசரியைக்கு ஜீனியஸ் விருது..

தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிபோர்டர் யூனியன் மற்றும் புதுவை தேசம் மற்றும் தமிழ்மண் அறக்கட்டளை இணைந்து சிறந்த சமூகநல சேவைக்கான விருது வழங்கினர். இந்த வருடம் ஜீனியஸ் என்ற பெயரில் கொடுக்கப்படும் இந்ந விருதினை திருப்புல்லாணி ஊராட்சி ஓன்றியம், முள்ளுவாடி தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் ஆர்.உஷாவுக்கு வழங்கப்பட்டது. அவ்விருதினை 11-10-2017 அன்று புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி வழங்கினார். இவ்விழாவில் அரசு அதிகாரிகள் மற்றும் பல அமைச்சர்கள் கலந்நு கொண்டனர்.

மாநில அளவிளான வினாடி வினா போட்டியில் மூன்றாவது இடம் பிடித்து கீழக்கரைக்கு கூடுதல் மரியாதை சேர்த்த மஹ்தூமியா மேல்நிலைப்பள்ளி மாணவிகள்..

கோவையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக நடத்திய துளிர் அறிவியல் வினாடி வினா போட்டியில் மஹ்தூமியா மேல் நிலைப்பள்ளியை சார்ந்த 11,12 ம் வகுப்பு மாணவிகள் K.சிந்து, செய்யது ரசியா, S.ஆயிசத்து சப்ரின் ஆகியோர் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் அகமது முகைதீன், மஹ்தூமியா பள்ளி தலைமையாசிரியை கிருஷ்ணவேணி மற்றும் பழைய குத்பா பள்ளி ஜமா தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், செயலாளர், உறுப்பினர் கள், […]

கீழக்கரை ஹமீதியா பள்ளி மாணவிகள் மாநில அளவிளான வினாடி வினா போட்டியில் இரண்டாவது இடம்..

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்தில் உள்ள கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோயம்புத்துரில் மாநில அளவில் நடத்திய துளிர் ஜந்தர் மந்தர் வினாடி – வினா போட்டியில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புக்கான பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். இப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவி ரம்யா மற்றும் அபிராமி, பத்தாம் வகுப்பு மாணவி ஆயிஷா சித்திக்கா ஆகியோர் கலந்து கொண்டு மாநில அளவில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளனர். ​வெற்றி பெற்ற […]

அல்பய்யினா பள்ளியின் கடற்கரை சுற்றுலா…

கீழக்கரையில் உள்ள அல்பய்யினா மாணவர்கள் கடற்கரைக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு சென்ற மாணவர்கள் உற்சாகத்துடன் கடற்கரையில் விளையாடி மகிழ்ந்தார்கள். இது பற்றி பள்ளியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், இந்த சுற்றுலா பொழுதுபோக்கிற்காக மட்டும் அல்லாமல், கடற்கரையில் கிடைக்கும் பொருட்களை வைத்து, அதனுடைய தன்மைகளும், பெயர்களும் விளக்கப்பட்டது என்றார். இதுவும் ஒரு வித்தியாசமான பயிற்றுவிக்கும் முறைதான்.

ஜமால் முஹம்மது கல்லூரியின் மேலாண்மைத் துறை கல்வி திருவிழா …

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதமும் மேலாண்மைத் துறை  (MBA – Master in Business Administration)  மாணவர்களால் வணிகவியல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.  இந்த வருடமும் வரும் அக்டோபர் 11 மற்றும் 12ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கல்லூரி விழா TIECOONS –  2017 என்ற தலைப்புடன் இந்தியாவில் உள்ள பல முன்னனி கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். இத்திருவிழவில் பொழுது போக்கு அம்சம் மட்டும் […]

வன சரக விழிப்புணர்வு போட்டிகளில் சாதனை புரிந்த இஸ்லாமியா பள்ளி மாணவ, மாணவிகள்…

இந்தியாவில் வருடந்தோறும் வனத்துறை சார்பாக வன உயிரின வார விழா வருடந்தோறும் அக்டோபர் 2 முதல் 8ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்பாக செப்டம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் உயிரினங்களின் வாழ்விடங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள வனத்துறை சார்பாக பேச்சுப்போட்டி, ஓவியம் வரைதல் போன்ற பல போட்டிகள் நடைபெற்றன. இராமநாதபுரத்தில் உள்ள தமிழ்நாடு வனத்துறை சார்பாக 25-09-2017 அன்று நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பல பள்ளி […]

தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தேசிய ஹிந்தி தின விழா…

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 19.09.2017 அன்று காலை 10.30 மணியளவில் தேசிய ஹிந்தி தினம் கொண்டாடப்பட்டது. இறை வணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் சுனிதா ஹிந்தி துறை தலைவர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சுமையா அவர்கள் தலைமை உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர். அன்வர் ராஜா, இராமநாதபுரம் தொகுதி மற்றும் சமீரா அன்வர் ராஜா, டி.ஜி.டி கேந்திரிய வித்யாலயம், மதுரை ஆகியோர் கலந்து கொண்டார்கள். ஹிந்தி தினத்தை […]

கீழக்கரையில் பெண்களுக்கான ஆலிமா வகுப்புகள் ஆரம்பம்..

கீழக்கரையில் சங்குவெட்டித் தெருவில் உள்ள மதரஸா அத் தர்பியத்துல் இஸ்லாமியா (நல்லொழுக்கப் பாடசாலை)வில் காயல்பட்டிண ஆயிஷா சித்திக்கா பெண் கல்லூரியின் பாடத் திட்டத்தின் படி அக் கல்லூரியின் முதல்வர் மௌலவி அப்துல் மஜித் மஹ்லரி மேற் பார்வையில் சிறந்த பெண் ஆசிரியர்களை கொண்டு ஆலிமா பாடத்திற்க்கான மாலை நேர வகுப்புகள் நடைபெறுகிறது. இவ்வகுப்புகள் மாலை 4 மணி முதல் சிறுவர்களுக்கு மஃக்தப் வகுப்புகளும், மாலை 5:30 மணி முதல் 6:30 பெண்களுக்கான 6 மாத பட்டயப்படிப்பு (Certificate […]

பெண் ஆசிரிய பெருமக்களுக்கான சிறப்பு பயிற்சி பட்டறை..

கீழக்கரை அல்பய்யினா பள்ளி சார்பாக 09-09-2017 அன்று அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கான சிறந்த கல்வியை நோக்கி (Towards Excellence in Education) என்ற கருத்தை மையப்படுத்தி பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறை பெண் ஆசிரியைகளுக்காக பிரத்யேகமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பயிற்சி பட்டறையை முன்னெடுத்துச் செல்வதற்கு சென்னையில் இருந்து சிறந்த கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். இப்பயிற்சி பட்டறையில் இன்றைய கல்வி முறை, தற்போதைய கல்வி முறையில் சந்திக்கும் பிரச்சினைகள், ஆசிரியர் மாணவர்கள் உறவு மற்றும் […]

ஆலிம்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்திட்டம் அறிவிப்பு..

1ம் வகுப்பு முதல் 12ம் வரை படிக்கும் ஆலிம்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவி திட்டத்தை ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தை சென்னை பெரியமேட்டில், அரசு கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள இமாம்ஸ் கவுன்சில் அலுவலகத்தில் பெறலாம் அல்லது www.imamscounciltn.com என்ற இணைய தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். இதற்கான விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி நாள் 15-09-2017 ஆகும்.

தனித்திறன் போட்டிகளில் இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் பரிசுகளை வென்றனர்…

இராமநாதபுரம் தமிழ் சங்கம் சார்பாக மகாகவி பாரதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல வகையான தனித்திறன் போட்டிகள் நடைபெற்றது. இந்நினைவு விழாவில் பல ஊர்களில் இருந்து பல பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் பங்கெடுத்த கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் மாறுவேட போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை வென்றனர். பரிசுகளை வென்ற கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர்களை பள்ளி நிர்வாகம் மற்றும் சக […]

அபார ஞாபக சக்தி படைத்த மாணவனுக்கு கண்ணாடி வாப்பா பள்ளயில் பாராட்டு விழா..

அபார ஞாபக சக்தி படைத்த மாணவன் ஃபஹீம், அவருடைய இந்த ஞாபக சக்திக்காக உலகளவில் பல பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார். கீழக்கரையைச் சார்ந்த அவருக்கு சில நாட்களுக்கு முன்பு வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி சார்பில் பாராட்டு விழா நடந்தது. அதைத்தொடர்ந்து மாணவன் ஃபஹீமை கௌரவிக்கும் வண்ணம், கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

அபார ஞாபக சக்தி படைத்த முகைதீனியா பள்ளி முன்னாள் மாணவனை கவுரவிக்கும் விழா..

கீழக்கரையை சார்ந்த ஃபஹீம் எனும் மாணவன் கீழக்கரை வடக்கு தெரு முகைதீனியா பள்ளியில் ஆரம்ப கல்வி படித்தவர். பின்னர் அவர் பெற்றோர்களுடன் அமீரகம் சென்று அங்குள்ள Our Own பள்ளியில் படித்து வருகிறார். இவர் அப்பள்ளி மாணவர்களின் மத்தியில் ஒரு கதானாயகனாகவே போற்றப்படுகிறார், காரணம் அவருடைய அபார ஞாபக சக்தி. இவர் 1 முதல் 5000 ஆண்டுக்குள் உள்ள நாட்களை தேதியை சொன்ன அடுத்த நிமிடம் கூறக்கூடிய திறனாளி, அதே போல் எந்த நாட்டின் தலைநகரத்தையும், தேசியக்கொடிகளை […]

செப்டம்பர் 8 சர்வதேச எழுத்தறிவு தினம்…

சர்வதேச எழுத்தறிவு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 8ம் தேதியன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அடிப்படை எழுத்தறிவை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், எழுத்தறிவைப் பெற்றுக்கொள்ள முடியாமற் போன வளர்ந்தோருக்கு முறைசாராக் கல்வித் திட்டத்தின் மூலம் எழுத்தறிவைப் போதிக்கும் நோக்கத்துடனும் ஆண்டுதோறும் எழுத்தறிவு தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. 1965ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி தெஹ்ரான் நகரில் உலகளாவிய கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இம் மகாநாட்டில் உலகளாவிய ரீதியில் எழுத்தறிவின்மையால் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!