முகம்மது சதக் பாலிடெக்னிக்கில் பல சமூக அமைப்புகள் இணைந்து தேசிய இளையோர் தினம் மற்றும் தமிழர் திருநாள்.. புகைப்படத் தொகுப்புடன்..

நேரு யுவ கேந்திரா, இராமநாதபுரம் மற்றும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி – மகளிர் மேம்பாட்டு அமைப்பு கீழக்கரை மற்றும் கீழக்கரை ரோட்டரி சங்கம் – முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் ரோட்ராக்ட் அமைப்புகள் இணைந்து தேசிய இளையோர் தின விழா மற்றும் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இந்நிகழ்வில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் A. அலாவூதின் தலைமை வகித்தார். வரவேற்புரையை திருமதி. உமையாள், மேலாளர், மகளிர் மேம்பாட்டு அமைப்பு வழங்கினார். அதைத் […]

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சாதித்து காட்டுவோம் “அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி” நிகழ்ச்சி…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவரணி சார்பாக சாதித்து காட்டுவோம் “அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி” நிகழ்ச்சி 07.01.2018 அன்று இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், மரைக்காயர்ப்பட்டிணம் மற்றும் வேதாளை பகுதி மக்களுக்காக தங்கச்சிமடம் லியோன் மகாலில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரனி செயளாளர் சகோதரர் அனிஸ் அஹமது தலைமையில் கல்வியாளர்கள் பாயாஸ், அஷ்ரஃப் ஆகியோர் மாணவ மாணவியர்களுக்கு விளக்கமளித்தார்கள். இந்நிகழ்வில் 600 க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

அல் பையினா பள்ளியில் அறிவியல் கண்காட்சி – அறிவியல் பூர்வமான இஸ்லாமிய பார்வை..

கீழக்கரை அல் பையினா பள்ளியில் 03-01-2018  அன்று பள்ளி வளாகத்தில் அறிவியல் மற்றும் இஸ்லாமிய கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் தங்களுடைய அறிவியல் படைப்புகளை அனைவருடைய பார்வைக்காகவும் வைத்திருந்தனர். இந்த கண்காட்சியை பற்றி பள்ளியின் தாளாளர் ஜாஃபிர் சுலைமான் கூறுகையில், “இந்தக் கண்காட்சி மாணவர்களின் அறிவுத் திறன் மற்றும் ஆளுமைத் திறனையும் வளர்க்க உதவுகிறது. மேலும் இந்த கண்காட்சி அறிவியல் என்ற அடிப்படையில் மட்டுமல்லாமல், இஸ்லாத்தின் குர்ஆன் கூறும் சித்தாந்தந்தங்களை அறிவியல் ரீதியாக நடைமுறை […]

மாணவர்களை உலகத் தரத்திற்கு உயர்த்தும் கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளி…

கல்வி மட்டுமே உலகத்தில் மாற்றத்தை கொண்டு வரக்கூடிய மிகப் பெரிய ஆயுதம் இது நெல்சன் மண்டேலாவின் வார்த்தைகள்.  இந்த வார்த்தைகளை மெய்மைபடுத்தும் முயற்சியில் ஈடுபடும் நிறுவனம் தான் THE BISHOP’S MODEL UNITED NATION  ஆகும். இந்த கல்வி நிறுவனம் இந்தியாவில் உள்ள பல கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களை ஒன்று திரட்டி ஐக்கிய அமைப்பில் நடைபெறும் நிகழ்வுகளை போலவே உலகில் நடைபெறும் அன்றாட விசயங்களை கலந்துரையாட செய்து மாணவர்களை தயார் செய்கிறார்கள். இந்நிகழ்வு வருடந்தோறும் இந்தியாவில் […]

தாசிம் பீவி அப்துல்காதர் கல்லூரியில் புத்தக வெளியீட்டு விழா..

கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் இன்று (05-01-2018) “தித்திக்கும் திருமறையின் மகிமைகள்” என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்புத்தகத்தை தம்பி சாகிபு சித்திக்பரிதா எழுதியுள்ளார். இந்நிகழ்ச்சியின் வரவற்புரையை தமிழ்துறை தலைவர் வே.அகிலா வழங்கினார். நிகழ்ச்சிக்கு சுல்தான் மரைக்காயர் மற்றும் செய்யது முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிக்ச்சியின் தலைமையுரையை இராமநாதபுரம் தமிழ்சங்கம் தலைவர் அப்துல்சலாம் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருந்தினராக ஏபிஜே அப்துல்கலாம் இன்டர்நேசனல் பவுன்டேசன் நிர்வாக அறங்காவலர் ஏபிஜேஎம் நசிமா மரைக்காயர் […]

10,+2 மாணவர்களுக்கான “வெற்றி நமதே” கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி…

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்திய 10, +2மாணவர்களுக்கான “வெற்றி நமதே” கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கல்லூரி தஸ்தகீர் கலை அரங்கத்தில் முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் தலைமையிலும், கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர, முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் மற்றும் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரஜபுதீன் முன்னிலையிலும் நடைபெற்றது. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். அழகிய […]

தேசிய அளவிலான கல்வி மாநாட்டில் விருது பெற்ற தாசிம் பீவி அப்துல் காதர் கல்லூரி முதல்வர்..

மும்பையில் டிசம்பர் 23 மற்றும் 24ம் தேதி AMP ( Association of Muslim Professionals) சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்திற்கு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து சமுதாயத்திற்க்காக கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்க்காக சேவை புரிபவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் கல்விக்காக சிறந்த சேவை புரிந்தவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. இதில் கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி முதல்வர் சுமையாவுக்கு கல்வி துறையில் சிறந்த சேவை புரிந்தமைக்காக விருது வழங்கப்பட்டது. […]

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் ….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு டிப்ளமோ பயிலும் இயந்தரவில் துறை. மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, அமைப்பியல்துறை மற்றும் கணினித்துறை மாணவ மாணவியர்களுக்கு வேலை அளிக்கும் விதத்தில் வளாக நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இந்நிகழ்வின் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் துவக்க விழாவில் டாக்டர் அ. அலாவூதின் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். கல்லுரியின் வேலைவாய்ப்பு அலுவலர் மரியதாஸ் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரியின் துணை முதல்வர் ராஜேந்திரன் […]

கீழக்கரை தாசிம்பீவி கல்லூரி சார்பாக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி..

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் நலச்சங்கம், சுழற்சங்கம் சார்பில் எய்ட்ஸ் . விழிப்புணர்வு பேரணி இன்று காலை11.00 மணியளவில் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் இருந்து துவங்கிய இப்பேரணி கீழக்கரை நகரின் முக்கிய தெருக்களின் வழியாக சென்று இறுதியாக அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது. இப்பேரணியில் சுமார் 100 மாணவிகள் எயிட்ஸ் விழிப்புணர்வு பற்றிய கோசங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் செனற்னர். இந்நிகழ்ச்சிக்கு ICTC கவுன்சிலர் கனகராஜ் தலைமை தாங்கினார். […]

கீழக்கரை வடக்குத் தெரு அல்அமீன் சகோதரர்கள் சார்பாக இரண்டாம் வருட கட்டுரைப் போட்டி..

கீழக்கரை வடக்குத் தெரு அல்அமீன் சகோதரர்கள் சார்பாக கடந்த வருடம் வெற்றிகரமாக நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டியைத் தொடர்ந்து இந்த வருடமும் மதரஸா மற்றும் மதரஸா அல்லாத மாணவியர்களுக்கு கட்டுரைப்போட்டி நடத்தப்பட உள்ளது. இப்போட்டிக்கான இறுதி தேதி வரும் டிசம்பர் 31ம் தேதி ஆகும். வெற்றியாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்யர்ல் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி..

ப்யர்ல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 06.12.2017 புதன்கிழமை அன்று “Students Monitoring Program” நடைப்பெற்றது. அதில்8ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை உள்ளமாணவ மாணவியருக்கு வாழ்க்கையின் வழிகாட்டுதல் முறையையும், இன்றைய கல்விமுறையையும், மாணவர்கள் தங்களின் திறமையை கண்டறிந்து அதில் வெற்றியை மேற்கொள்ள செய்யும் வழிகாட்டல் முறை பற்றி விளக்கமும் பயிற்சியும் தரப்பட்டது. இந்நிகழ்ச்சியை, UNWO-Thameem Ansari , Director Iqra Traning And Consultancy Services British Council Certified Ielts Language Trainer மற்றும் (UNWO) […]

துபாயில் இந்திய கல்வி கண்காட்சி ..

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதி தேரா பகுதியில் அமைந்துள்ள க்ரௌன் ப்ளாசா ஹோட்டல் வளாகத்தில் இந்திய கல்வி கண்காட்சி (Indian Education Fair) நடைபெறுகிறது. இக்கண்காட்சியை இந்தியன் எக்ஸ்பிரஸ் ( The Indian Express Group) ஏற்பாடு செய்துள்ளது.  இக்கண்காட்சி காலை 09.00 மணி முதல் மாலை 07.00 வரை நடைபெற உள்ளது. மேலும் இக்கண்காட்சியில் தமிழகம், கேரளா, உத்தர்காண்ட், டில்லி, ஒரிசா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம், கர்நாடகா, […]

இஸ்லாமியா பள்ளியில் உணவு திருவிழா (FOOD CARNIVAL) கோலாகலமாக நடைபெற்றது..

இன்று (30/11/2017) கீழக்கரை இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட உணவு திருவிழா ( FOOD CARNIVAL) சிறப்பாக நடைபெற்றது. காலையில் இருந்து அவ்வப்போது மழை பெய்து கொண்டிருந்தாலும் மாணவர்களும், பெற்றோர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்து கொண்ட மாணவிகள் கேக், சமோசா, பழவகை உணவுகள், குலோப்ஜாமூன் என வித விதமான உணவுகளை படைத்து வந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். மேலும் பல மாணவிகள் பழங்களையும், உணவு வகைகளையும் வைத்து கலைத் திறனுடன் […]

செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய தீவிபத்துக்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் ….

கீழக்கரை ஹமீதியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (28-11-2017) செஞ்சிலுவை சங்கம் சார்பாக தீவிபத்துக்கள் மற்றும் தற்காப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் மாணவர்கள் மத்தியில் செய்முறை விளக்கத்துடன் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜவஹர் ஃபாரூக் வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியின் சிறப்புரையை சுந்தரம்-இந்திய செஞ்சிலுவை சங்கம் ஒருங்கிணைப்பாளர், ராக்லாண்ட் மதுரம்-செஞ்சிலுவை சங்க மாநில செயலாளர், சாமிராஜ்-ஏர்வாடி தீயணைப்பு நிலைய அலுவலர் […]

பசுமையை நோக்கி கீழக்கரை இஸ்லாமியா பள்ளி…

கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்களுக்கு புத்தக படிப்பை தாண்டி சமுதாய விழிப்புணர்வு, வாழ்கை கல்வி, சுற்றுப்புற சூழல் பற்றிய அறிவினை வளர்ப்பதில் என்றுமே தவறியதில்லை. இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில்ப இயங்கி வரும் பசுமை தோட்ட குழுவினரால் ( Green Crop Team) அழகிய பசுமை தோட்டத்தை உருவாக்கி வருகிறார்கள். இதற்கான அனைத்து வசதிகளையும் நிர்வாகம் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் செய்து வருகிறது. இது போன்று ஒவ்வொரு பள்ளிகளும் மாணவ, மாணவிகளுக்கு புத்தக பாடத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் வாழ்க்கைக்கு தேவையான […]

மாத்தி யோசி – எதையும் தனித்துவத்துடன் செய்யும் அல் பையினா பள்ளி – முதியோரை கண்ணியப்படுத்திய “GRANNIES DAY” (கண்ணுமா / பாட்டியர் தினம்)…

கீழக்கரை அல் பையினா பள்ளி தனித்துவத்துடன் மாணவ, மாணவிகளுக்கு உலக விசயங்களை மனதில் பதிய வைக்க கூடியவர்கள். அந்த வரிசையில் பரபரப்பான வாழ்கையில் நம் முன்னோர்கள் யார் என்பது கூட அறியாமல் வளரும் இளைய சமுதாயமே உருவாகி வருகிறது. இந்நிலையை மாற்றும் நோக்கத்துடன் இன்று அல் பையினா பள்ளி நிர்வாகத்தினால் முதியோரை கண்ணியப்படுத்தும் வகையில் “GRANNIES DAY” ( பாட்டியர்கள் / கண்ணுமா தினம்) சின்னஞ்சிறு மாணவர்களை வைத்து கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் வண்ண வண்ண ஆடைகள் […]

கீழக்கரை தாசிம் பீவி கல்லூரியில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்..

கீழக்கரை தாசிம்பீவி கல்லூரியில் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமுக்கு கல்லூரி முதல்வர் சுமையா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவர் சுகன்யா கலந்து கொண்டு, பல முக்கியமான ஆரோக்கிய வாழ்விற்கான வழிமுறையை பகிர்ந்தார். இந்நிகழ்வில் ஏராளமான கல்லூரி ஆசிரிய பெருமக்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மரம் வளர்த்தல் – ஒரு அழகிய கலையாக மாற்றிய அல் பையினா மெட்ரிக் பள்ளி மாணவச் செல்வங்கள்…

கீழக்கரை அல் பையினா பள்ளியில் மாணவர்களிடையே இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதம் அல் பையினா பசுமை படை ( Green Army) என்ற ஒரு குழுவை உருவாக்கி மாணவ, மாணவிகள் மத்தியில் மரம் வளர்த்தல் பற்றிய ஆர்வத்தை வளர்த்து வருகிறார்கள். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக “செடி நடும் நாள்” நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு மாணவர்களுக்கு செய் முறைகள் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பல மாணவ, மாணவிகள் தாங்கள் விதைத்து வளர்ந்த மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் பார்வைக்கு வைத்தனர். அவ்வாறு […]

கீழக்கரை முகம்மது சதக் கல்லூரி சார்பாக “வெற்றி நமதே நிகழ்ச்சி”..

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, இராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வி துறையுடன் இணைந்து “வெற்றி நமதே” நிகழ்ச்சி ராமேஸ்வரம் மற்றும் பரமக்குடியில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் உரையுடன், கல்வி துறை சார்ந்தவர்கள், பரிட்சையில் அதிகமான மதிப்பெண்கள் பெறுவதற்கான வழிமுறைகளை மாணவச் செல்வஙலகளுக்கு வழங்கினார்கள்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசை வென்று அசத்திய கும்பிடுமதுரை அரசுப்பள்ளி ..

கீழக்கரையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக திருப்புல்லாணி வட்டார மையம் சார்பில் அறிவியல் கண்காட்சி கீழக்கரை ஊராட்சி தொடக்க பள்ளி 2ல் நடைபெற்றது. அங்கு நடைபெற்ற தொடக்கப் பள்ளிகள் மற்றும் உயர் தொடக்கப் பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சியில் கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சிறந்த பள்ளிக்கான விருது (Best school award) மற்றும் சிறந்த படைப்பாற்றலுக்கான முதல் பரிசையும் பெற்றுள்ளது. இப்பள்ளி கடந்த வருடம் சிறந்த பள்ளிக்கான விருதைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி பெற்ற தருணத்தில் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!