‘வரலாறு தெரியாதவர்கள் ; வரலாறு படைக்க மாட்டார்கள்’ என்பது முன்னோர்கள் வாக்கு. ஆனால் இன்று நம்முடைய தொன்மையான சரித்திரமும், மூதாதையர் வழி வரலாறும் முறையாக தெரியாததன் விளைவாக நம்முடைய பண்டைய கலாச்சாரம், இஸ்லாமிய விழுமங்கள், விருந்தோம்பல், சமத்துவ நட்புறவு சித்தாந்தம், ஆதி தொழில், பொருளாதாரம், உள்ளூர் பழக்க வழக்கங்கள், பேச்சு வழக்கு மொழி, ஆரோக்கியம், மருத்துவ முறை, சத்தான உணவு முறை, முத்தான உறவு முறை, பண்டைய உள்ளூர் விளையாட்டுகள் உள்ளிட்ட பாரம்பரிய விஷயங்கள் எல்லாம் காலப் […]
Category: கல்வி
கல்வி
‘மார்ச் 25’ – கீழை நியூஸ் கீழக்கரை சட்டப் போராளிகள் நடத்தும் ‘தகவல் அறியும் உரிமை சட்டம்’ பயிற்சி வகுப்பு – நீங்கள் முன் பதிவு செய்து விட்டீர்களா..?
தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 மூலமாக எந்த ஒரு அரசாங்க அதிகாரியிடமிருந்தும், நமக்கு தேவைப்படும் தகவலை அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பது நம்மில் இன்னும் எத்தனை பேருக்குத் தெரியும்..? ஊழலை தடுத்து நிறுத்துவதற்கும், ஆளப்படுகிறவர்களுக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி அனைத்து குடிமகன்களும் தகவல் பெறும் உரிமை உடையவராவர். எந்த குடிமகன்களும் தகவல் கேட்கலாம். காரணங்கள் கூறத் […]
‘ஏப்ரல் 8’- சென்னை கிரஸண்ட் கல்லூரியில் நடைபெற இருக்கும் ‘முஸ்லீம் மாணவர்கள் சந்திப்பு’ நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு
இஸ்லாமிய மாணவர்களுக்கான மாபெரும் நிகழ்ச்சியாக ‘MUSLIM STUDENTS MEET’ என்கிற பெயரில் எதிர்வரும் ‘ஏப்ரல் 8’ அன்று சென்னை CRESCENT B.S.ABDUR RAHMAN பல்கலைக்கழகத்தின் உள் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளும் விதமாக உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கும் இந்நிகழ்ச்சிக்கான அழைப்பு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. கல்வியில் உயர்வடைதல், தொழில் முனைவோர்களை உருவாக்குதல், ஊடகத் துறையில் மேம்பாடு அடைதல், இஸ்லாமிய மார்க்க அழைப்பில் முன்னேறுதல் உள்ளிட்ட சிறப்பான அடிப்படை கருத்து உருவாக்கங்களோடு இளைய சமுதாயத்தினருக்கு ஒற்றுமையின் வலிமையை […]
கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி சார்பாக நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி.. கல்லூரியில் கீழை நியூஸ் சட்ட இயக்குனர் சிறப்பு உரை…
கீழக்கரையில் இன்று (15-03-2017) நுகர்வோர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் சார்பாக சிறப்பு நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் கல்லூரி மாணவிகள் நுகர்வோர் உரிமைகள் விளக்கங்கள் அடங்கிய பிரசுரங்களை வினியோகம் செய்தனர். இப்பேரணியை தொடர்ந்து கல்லூரியில் வணிகவியல் துறை மாணவிகளுக்கு “CONSUMER RIGHTS & PROTECTION” என்ற தலைப்பில் கீழை நியூஸ் சட்ட இயக்குனர் வழக்குரைஞர் AMD.முகம்மது சாலிஹ் ஹுசைன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் வரவேற்புரையை வணிகவியல் துறை தலைவர் மற்றும் கல்லூரி துணை தலைவர் […]
முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாம்..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட சார்பில் காஞ்சிரங்குடி மற்றும் கிருஸ்ணாபுரம் கிராமங்களில் 24.02.2018 முதல் 02.03.2018 வரை சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் முக்கிய நிகழ்வுகளாக பொது மருத்துவ முகாம், தீயனைப்பு பயிற்சி, கண் மருத்துவ முகாம், முதலுதவி பயிற்சி மற்றும் விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது. சிறப்பு முகாமின் நிறைவு நாளான 02.03.18 அன்று முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அ. அலாவூதின் தலைமையுரையாற்றினார். திட்ட […]
வளாக தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 435 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் இறுதியாண்டு டிப்ளமா பயிலும் 435 மாணவ மாணவிகளுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா அல்ஹாஜ் டாக்டர், எஸ். எம். தஸ்தகிர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இவ்விழாவின் ஆரம்பத்தில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அ. அலாவூதின் அனைவரையும் வரவேற்றுபேசினார். கல்லூரியின் அறக்கட்டளையின் தலைவர் எஸ் எம். யூசுப் தலைமையுரையாற்றினார், இயக்குனர் பி. ஆர். எல். ஹமீது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்து மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள். […]
கீழக்கரை ப்யர்ல் மெட்ரிக் பள்ளயில் அறிவியல் கண்காட்சி – புகைப்பட தொகுப்பு…
இந்தியாவில் ஃபிப்ரவரி 28ம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி கீழக்கரை ப்யர்ல் மெட்ரிக் பள்ளியில் இன்று (28-02-2018) பள்ளி வளாகத்தில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் அனைத்து வகுப்புகளில் இருந்தும் பல மாணவர்கள் கலந்து கொண்டனர். இக்காண்காட்சியில் மரம் வளர்த்தல், இயற்கை வளத்தை பேணுதல், பூகோள அமைப்பு, கோள்கள் அமைப்பு, விஞ்ஞான வளர்ச்சி, தகவல் தொடர்பு வளர்ச்சி, இயற்கையோடு இணைந்நு வாழ்தலின் அவசியம், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு போன்ற செயல்பாடுகளை விளக்கும் வண்ணம் பள்ளி […]
மாநில அளவிலான தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கம் “THEMIDA-18”
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தகவல் தொழில் நுட்பத்துறையின் சார்பாக மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் “THEMIDA-18” மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன் தலைமையேற்று துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், “கணினித்துறையில் மிகவேகமாக வளர்ந்து வரும் பல தொழில்நுட்பங்கள் மனிதரின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் மனிதருக்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது. அதுமட்டுமன்றி இன்று மருத்துவத் துறையில் பிரம்மிக்கும் வகையில் அறுவைச் சிகிச்சையிலும் […]
செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 15-வது பட்டமளிப்பு விழா..
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25.02.2018 அன்று காலை 11.00 மணியளவில் 15-வது பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தாளாளர் யூசுஃப் முன்னிலை வகித்து துவக்கி வைத்தார். ரஜபுதீன் வரவேற்புரை நிகழ்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுப்பையா அவர்கள் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், பட்டம் பெறும் பட்டதாரிகள் […]
தமிழன் தொலைக்காட்சி கௌரவித்த இஸ்லாமியா பள்ளி மாணவன்..
தமிழகத்தில் உள்ள தமிழன் தொலைகாட்சி வருடந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக தனித்திறமை விருதுகளை வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான விருது கடந்த 14-02-2018 அன்று சென்னையில் வழங்கப்பட்டது. இதில் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி 11ம் வகுப்பு, தெற்கு தெரு மாணவன் ரினாஸ்தீன் “விளையாட்டு வீரர் மாணவர்” என்ற 2017ம் ஆண்டுக்கான விருதினை பெற்றார். இவ்விருதை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சென்னையில் நடந்த விழாவில் வழங்கினார். இம்மாணவர் இஸ்லாமியா பள்ளி வாலிபால் […]
படிப்பில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் கீழக்கரை சகோதரிகளுக்கு விருது..
கீழக்கரை கிழக்குத் தெருவைச் சார்ந்த சாகுல் ஹமீது மகள்கள் பாத்திமா சஜிலா மற்றும் ஆயிஷத் நுஹைலா ஆகியோர் ஆவர். இந்த இரு சகோதரிகளும் சிறிய வகுப்பிலிருந்து இன்று வரை அனைத்து பாடங்கள் மற்றும் அபாகஸ் தேர்விலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று சிறந்து விளங்குகிறார்கள். இவர்களின் செயல்பாடுகளை கௌரவிக்கும் வண்ணம் “யுவஶ்ரீ கலா பாரதி விருது” மற்றும் “சுவாமி விவேகானந்தா விருது” முறையே இருவருக்கும் வழங்கப்பட்டது. இவ்விருது மதுரையில் உள்ள பாரதி யுவகேந்திரா சார்பாக வழங்கப்பட்டது. இவ்விருதை இவ்வமைப்பைச் […]
சாதனை படைத்த கீழக்கரை அல் பைய்யினா மாணவனுக்கு இராமநாதபுரம் ஆட்சி தலைவர் பாராட்டு..
சாதனை படைத்த கீழக்கரை அல் பைய்யினா மாணவனுக்கு இராமநாதபுரம் ஆட்சி தலைவர் பாராட்டு.. கடந்த வாரம் அல் பையினா பள்ளியில் யு.கே.ஜி படிக்கும் கீழக்கரை வடக்குத் தெருவைச சார்ந்த 5 வந்து நிரம்பிய முஹம்மது இசாக், “WILL MEDALS KIDS RECORD” எனும் நிறுவனத்திடம் இருந்து சிறு வயதிலேயே அதிகமான சிற்பி வகைகள் சேர்த்தமைக்காக விருது பெற்றார். இச்சிறுவனை ஊக்கப்படுத்தி, பாராட்டும் வகையில் இராமநாதபுரம் ஆட்சியாளர் நடராசன், இன்று (05-02-2018) அவருடைய அலுவலத்திற்கு வரவழைத்து வாழ்த்து தெரிவித்து, […]
திறமை இருந்தும், படிக்க வழியில்லை- மனம் இருந்தும் பணம் இல்லை, இதோ நீங்களும் IAS, IPS, IFS என ஜொலிக்க ஒரு வாய்ப்பு…
இந்தியாவின் சுதந்திரத்திற்காக சொத்துக்களை வாரி வழங்கிய சமுதாயம், கல்வியில் கவனம் செலுத்தவில்லை என்பதே யதார்த்த நிலை. அன்று சொத்துக்களை இழந்தவர்கள் இன்று ஆட்சியிலும், அதிகாரத்திலும் முழுமையான அங்கீகாரம் கிடைக்காமல் இரண்டாம் நிலை பிரஜையாக வாழும் சூழலுக்கு இஸ்லாமிய சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் இஸ்லாமியர்கள் மொத்தம் 18% உள்ளனர், ஆனால் IAS போன்ற அரசாங்க சேவையில் இருப்பவர்களோ அதிகபட்சம் 4 சதவீதத்தினர் தான். இதற்கு முக்கிய காரணம் சரியான வழிகாட்டுதல் இல்லாமையும், தேவையான அளவுக்கு பொருளாதார உதவியும் இல்லாததும் […]
கீழக்கரை மஹ்தூமியா பள்ளிகள் 44வது விளையாட்டு மற்றும் ஆண்டு விழா..
கீழக்கரை மஹ்தூமியா மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியின் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இப்பள்ளியின் விளையாட்டு விழா இன்று (03-01-208) காலை 10.00 மணியளவில் தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு பழைய குத்பா பள்ளி ஜமாத் தலைவர் டாக்டர் ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியின் வரவேற்புரையை மஹ்தூமியா பள்ளி செயலாளர் மீரா சாஹிப் வழங்கினார். நிகழ்ச்சிக்கு அனைத்து ஜமாத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மஹ்தூமியா மேல்நிலை பள்ளியின் தாளாளர் அகமது முகைதீன் […]
சாதனைக்கு வயசு ஒரு தடையில்லை.. அனைவரையும் வியக்க வைத்த 5 வயது மாணவன்..
கீழக்கரை அல் பைய்யினா பள்ளியில் யு.கே.ஜி படித்து வரும் மாணவன் 5 வயது நிரம்பிய கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த முஹம்மது இசாக். இந்த நவீன உலகில் மொபைலிலும் கணணி விளையாட்டுகளிலும் மூழ்கி இருக்கும் சிறுவர்களுக்கு மத்தியில் இந்த இளம் வயதில் 217 வகையான கடல் சிப்பிகளை சேகரித்து மற்றவர்களை ஆச்சிரியபடுதத்தியதுடம் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளான். இச்சிறுவனின் சாதனையை அங்கீகரிக்கும் வண்ணம் WILL MEDALS KIDS RECORD எனும் நிறுவனம் இச்சிறுவனுக்கு கேடயம் மற்றும் சாதனை […]
பேரல் மெட்ரிக் பள்ளயில் மாணவர்கள் தனித்திறன் மேம்படுத்தும் நிகழ்ச்சி..
பேரல் மெட்ரிக் பள்ளயில் மாணவர்கள் தனித்திறன் மேம்படுத்தும் (STUDENTS COUNSELING) நிகழ்ச்சி 31.01.2018 புதன் கிழமை அன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. MADURAI RATHNA SAGAR PUBLICATIONS மூத்த பயிற்சியாளர் MS. SEENA DEVAR இந்நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்தினார். இந்நிகழ்ச்சியில் 9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் தனித்திறனை மேம்படுத்தும் விதமாக STUDENTS COUNSELING நிகழ்வை நடைப்பெற்றது. இந்த பயிற்சியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்தைடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கு பள்ளி […]
ABACUS போட்டியில் ஹமீதியா தொடக்க பள்ளி மாணவர்கள் சாதனை…
ப்யர்ல் மெட்ரிக் பள்ளியில் கடந்த 20-01-2018அன்னு 12 பள்ளிகள் கலந்து கொண்ட Inter School Abacus போட்டியில் ஹமீதியா தொடக்கப் பள்ளி இப்பயிற்சி தொடங்கி 4 மாதங்களில் பல பரிசுகளை வென்றுள்ளனர். இப்போட்டியில் 2 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டணர். மேலும் ஹமீதியா தொடக்க பள்ளி மட்டுமே தமிழ் வழி தொடக்கப் பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது . ABACUS போட்டியில் பரிசு பெற்றவர்களின் விபரம் கீழே:- ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் […]
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இயந்திரங்கள் பயன்பாட்டின் சிறப்புகள் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம்.
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல், பொறியியல் துறை சார்பாக இன்றைய சூழ்நிலையில் வாகன இயந்திரங்கள் பயன்பாட்டின் சிறப்புகள் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் தலைமையிலும் கல்லூரி டீன் முனைவர். முஹம்மது ஜஹாபர் முன்னிலையிலும் நடைபெற்றது. இயந்திர பொறியியல் துறைத்தலைவர் முனைவர் கனகசுந்தரம் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் தனது தலைமையுரையில் ஒவ்வொரு புதிய படைப்புகளும் படைப்பாளியின் சிந்தனையில் ஏற்படும் உந்துதல் மூலமே உருவாகிறது எனவே மாணவர்கள் தங்கள் […]
நாளை (20-01-2018) பள்ளிகளுக்கான மணிசட்டம் (Abacus) போட்டி..
ஏ மாஸ் ( amas – Abacus Mental Arithmetic System) என்பது அபாகஸ் மன கணித அமைப்பு என்பதாகும். நான்கு வயதில் இருந்தே குழந்தைகளின் அறிவாற்றலை பன்மடங்கு பெருக்குகிறது. அபாகஸ் ( மணிச் சட்டம்) எனும் கருவியின் மூலம் கூட்டல் ,கழித்தல், பெருக்கல் , வகுத்தல் கணக்குகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாளை (20/1/2018) கீழக்கரை Pearl matric Hr. Sec school_ல் மாவட்ட அளவிலான இரண்டாவது அபாகஸ் போட்டி தேர்வு நடைபெற உள்ளது. இதில் […]
கீழை பதிப்பகத்தின் முதல் நூல் “மொழிமின்” இன்று வெளியீடு..
கீழை பதிப்பகத்தின் முதல் நூலான நூருத்தீன் எழுதிய “மொழிமின்” இன்று மாலை 05.00 மணியளவில் சென்னை 41வது புத்தக கண்காட்சியில் வெளியிடப்படுகிறது. இந்நூலை வெல்ஃபேர் பார்ட்டி தமிழ்நாடு மாநில தலைவர் சிக்கந்தர் வெளியிடுகிறார். இந்நூலின் முதல் பதிப்பை BAPASI செயற்குழு உறுப்பினர் K.ஜலாலுத்தீன் பெற்றுக்கொள்கிறார். இந்நிகழ்வு சென்னை 41வது கண்காட்சியில் உள்ள நிலவொளி பதிப்பகம் அரங்கு 13ல் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு கீழை பதிப்பகம் மற்றும் கீழை மீடியா மற்றும் அட்வர்டைஸ்மன்ட் நிறுவனத்தின் இயக்குனர் முஸம்மில் இபுராஹிம் […]
You must be logged in to post a comment.