கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு NASA சார்பாக வரும் செப்டம்பர் 8ம் தேதி ORGANIC BABY எனும் மெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி பெண்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி புதிதாக திருமணமான பெண்கள், குழந்தைப்பேறுக்காக காத்திருக்கும் பெண்கள், திருமண வாழ்கையில் அடி எடுத்து வைக்க போகும் பெண்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி. பெண்களுக்காக இத்துறையில் அனுபவம் வாய்ந்த பெண்ணால் நடத்தப்படும் நிகழ்ச்சி. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பின் பெண்கள் பிரசவம் […]
Category: கட்டுரைகள்
வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பும் சகோதரர்களே கவனம்.. ஆசையுடன் வாங்கி வரும் பொருட்கள் மாறி விடும் அவலங்கள்..
வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் தாயகம் திரும்புவோர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பதற்காக அதிக அளவில் பொருட்களை வாங்கி வருவது வழக்கம். அதுவும் பண்டிகை காலங்கலாக இருந்தால் புது ஆடைகளும், இதர பொருட்களும் அதிகமாக கொண்டு வருவது வழக்கம். அதில் பல பயணிகள் தங்களின் பெயர் மற்றும் முகவரிகளை தெளிவாக அடையாளம் காணும் வகையில் எழுதி வைப்பார்கள். ஆனால் எவ்வாறு எழுதினாலும் நம்முடைய பொருட்களின் மேல் ஒட்டப்படும் BAGGAGE TAG எனும் சீட்டே மிகவும் முக்கியமானதும், […]
ஊனமின்றி கையேந்தும் உலகத்தில்… கண்ணில்லாமல் இளநீர் தொழில் செய்யும் அற்புத மனிதர் ராஜா ஒரு முன்னுதாரணம்…
மதுரையில் பி.டி ஆர் சாலையை கடந்து செல்பவர்கள் ராஜா எனும் தன்னம்பிக்கையுடன் இளநீர் வியாபாரம் செய்யும் இவரை பார்க்காமல் இருந்திருக்க முடியாது. ராஜா மதுரை ஊமச்சிகுளத்தை சார்ந்தவர். சிறு வயதிலேயே மின்னல் தாக்கி இரு பார்வைகளையும் நிரந்தரமாக இழந்தவர். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர் இருவரையும் கல்விக்காக தன் சகோதரியின் அரவணைப்பில் வளர்த்து வருகிறார். தன்னுடைய இரண்டு கண்களை இழந்தாலும் அடுத்தவர்களின் தயவை நாடி இருக்க கூடாது என்ற வைராக்கியத்துடன் இளிநீர் வியாபாரம் செய்து வருகிறார். […]
உயிரை பலி வாங்கும் புளூ வேல் (BLUE WHALE) என்ற ஆன்லைன் விளையாட்டு…
உலக அளவில் சிறுவர்களை தற்கொலை செய்ய தூண்டிய புளூ வேல் என்ற ஆன் லைன் விளையாட்டு இந்தியாவிலும் விபரீதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறுவர்களின் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் புளூ கேம் விளையாட்டு பல நாடுகளில் தடை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 29 அன்று மும்பை அந்தேரி பகுதியை சார்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். அதே போன்று மேற்கு வங்க மாநிலம் மெக்னாபூரில் 10 […]
வியாபாரமாகி வரும் சிசேரியன் முறை குழந்தை பிரசவம்…விழித்துக் கொள்ளுமா சமுதாயம்..
முன்னோர்கள் காலத்தில் 10க்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றெடுத்தவர்கள் கூட மருத்துவமனை பக்கம் செல்லாமல் வீட்டிலேயே ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்கள். ஆனால் இன்று அதுவெல்லாம் சரித்திரமாகவும், கதையாகவும் மாறிவிட்டது. தமிழ்நாட்டில் பிரசவம் என்று எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் 10ல் 8 குழந்தைகள் சிசேரியன் முறையில்தான் பிரசவம் ஆகிறது. இதற்கு முக்கிய காரணம் மருத்துப் பணி வியாபார மயம் ஆனதும், மக்களிடையே வழிப்புணர்வு குறைந்ததும்தான். கடந்த 2014-2015 ஆண்டில் இந்த சிசேரியன் முறையில் பிசவமானவர்களைப் பற்றி நடத்திய ஆய்வு நமக்க […]
அசந்து போன அப்பாவி மக்கள், அசராத அரசாங்கம் – மக்களை வதைக்கும் ரேஷன் ஸ்மார்ட் கார்டு வரமா? சாபமா? கட்டுரையாளர். கீழை இளையவன்
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகளுக்கு பல்லாண்டு காலமாக உள் தாள் ஒட்டி ஒட்டியே ஆட்சியை ஓட்டி வந்த அரசாங்கம் கடைசியாக ஸ்மார்ட் கார்டு திட்டம் என்கிற பெயரில் சாமானிய மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட குடும்ப அட்டைகள் 2009 ஆம் ஆண்டோடு முடிவடைந்து விட்டது. அதில் இருந்து இரண்டு, இரண்டு ஆண்டுகள் வீதம் உள்தாள் ஒட்டப்பட்டுக் கொண்டே வந்தது. ஏறத்தாழ 13 ஆண்டு காலம் மைதாவிலும், சர்க்கரையிலும், மண்ணெண்ணெய்யிலும், பாமாயிலிலும் நனைந்து […]
பேலியோ என்றால் என்ன??
இன்று நவீன உலகில் உணவுக் கட்டுபாடு என்ற பெயரில் பழங்கள், காய்கறிகள், கோதுமை உணவு என்று சைவம் சார்ந்த உணவுகளே உடல் எடையை குறைக்க உதவும் என்று எண்ணும் வேலையில் “பேலியோ” என்ற வார்த்தை பலருக்கு குழப்பத்தையும், பலருக்கு ஆச்சர்யத்தையும் தந்துள்ளது. அதைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பல ஆதாரபூர்வமான தளங்களில் இருந்து எடுத்த குறிப்புகள் உங்கள் பார்வைக்கு… Paleo or Cave Man Diet என்று அழைக்கப்படும் இந்த உணவு, மனித இனம் […]
சிறப்புக் கட்டுரை….
பேணப்பட வேண்டிய மனுக்கள்.. இழுக்காமல் துரித தீர்வு காண வேண்டிய விசயங்கள்… சுதாரிக்க வேண்டிய ஜமாத்தார்கள்… துன்பத்தில் இருந்து மீள வேண்டிய தம்பதிகள்… இஸ்லாமியனாய் பிறந்த ஒவ்வொருவனும் திருமண விஷயத்தில் இறைத்தூதர் வழியை அழகிய முறையில் பேணுகிறான் என்று சொல்லலாம்… அவ்வாறு ஒவ்வொருவரும் கடைபிடித்து வருகின்ற திருமண வாழ்வு என்பது சிலருக்கு இன்பம் தரும் தேனிலவு வாழ்க்கை, சிலருக்கு எண்ணாத அளவிற்கு இன்பமாகவும் அமைந்து விடுகின்றது… இவ்வாறு இன்பங்களை காண்போர் தன் வாழ்க்கையை இனிமையாக கொண்டு சென்று […]
மதிக்க வேண்டிய பெண்கள் – சிறப்புக் கவிதைக் கட்டுரை..
சிறப்புக் கவிதை-கட்டுரை.. சிந்திக்க சில நிமிடம்… அதை செயல்படுத்த சில நொடி… இணைய தளங்களில் ராட்சஷிகளாகவும் அடங்கா பிடாரிகளாகவும் கற்பனை செய்யப்பட்ட ஒரு உறவு தான் மனைவி எனும் உன்னதமான ஒரு உறவு… இந்த உறவை இந்த இரண்டு குணங்களை கொண்டு மட்டுமே பார்வையிடும் நீங்கள் அவளது மற்ற குணங்களை குறித்து சிந்தித்ததுண்டா…. இவ்வாறு நீங்கள் சிந்திக்காமலும் அவளை அடங்காப்பிடாரி என்று அடிக்கடி சுட்டி காட்டியுமே அவளை உண்மையில் பிடாரிகளாக்கி விட்டீர்கள்.. ஆம்.. உண்மை இது தான்… […]
ஆடித் தள்ளுபடியை நாமும் ஆனந்தமாக மாற்றிக் கொள்ளலாமே??
ஆடி மாதம் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், முக்கியமாக ஜவுளி வியாபார நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் ஆடி மாத விளம்பரங்களைத் தொடங்கி விட்டன. 5 சதவீதம் தொடங்கி 50 சதவீதம் வரை தள்ளுபடி விளம்பரங்களை நாம் பல விதமாக ரேடியோ, தொலைக்காட்சி, சமூக வலைதளம், சுவரொட்டி, பிரசுரங்கள் என்று பல முனைகளில் இருந்து பொதுமக்களை திண்டாட வைக்கின்றனர். ஒரு காலத்தில் ஆடி மாதம் என்றாலே ராசி இல்லாத மாதம், வியாபாரமே இருக்காது […]
கீழக்கரையில் இரவு நேரத்தில் களை கட்டும் கணவாய் மற்றும் இரால் வியாபாரம்.
மீன் பிடி தடை காலம் நிறைவடைந்ததால் கணவாய் மற்றும் இரால் சீசன் தொடங்கி உள்ளது. அதனை தொடர்ந்து இரவு நேரத்தில் முஸ்லிம் பஜார் பகுதியில் கணவாய் மற்றும் பூச்சி வகையை சார்ந்த இரால் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. ஒரு கிலோ கணவாய் மற்றும் இரால் 350 இருந்து 400 வரை விற்கப்படுகிறது. தற்போது விற்கப்படும் இரால் மற்றும் கணவாய் வகைகள் கீழக்கரை பாரதி நகர் கடல் பகுதியில் பிடிக்கப்படுகிறது என்பது குறிப்படத்தக்கது.
விபத்துக்கள் பாடம் தராதோ?? – சிறப்பு விழிப்புணர்வு கட்டுரை..
சிறப்பக் கட்டுரை இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்….. அந்தோ பரிதாபம்… சுப்ஹானல்லாஹ்… எத்தனை எத்தனை உபதேசங்கள்…. எத்தனை எத்தனை எச்சரிக்கைகள்….. ஆனாலும் மீண்டுமொரு “ரமலான்” விபத்து எனும் போது மனது பதை பதைத்து போகிறது…. வயது 17 தான்…. இது போன்ற பிள்ளைகளை பற்றி சொல்லவேண்டுமானால் இரு விதமாக சொல்லலாம்.. ஒன்று பெற்றோர்கள் பிள்ளைகளை எச்சரிக்காதது.. இரண்டாவது பெற்றோர்கள் எச்சரிக்கின்ற போதும் பிள்ளைகள் உதாசீனப்படுத்துவது… இரண்டில் ஏதுவாக இருந்தாலும் இரண்டுமே கையிலெடுக்க கூடாத முறைகளல்லவா…. […]
கீழக்கரையில் உறுதிமொழி மற்றும் கவிதையுடன் தொடங்கிய திடக்கழிவு மேலான்மை விழிப்புணர்வு பணி…
கீழக்கரை நகராட்சி சார்பாக இன்று (21-06-2017) திடக்கழிவு மேலான்மை விழிப்புணர்வு (Solid Waste Managment Awareness) பணிகள் உறுதிமொழி மற்றும் கவிதையுடன் தொடங்கியது. இப்பணிகள் இன்று கீழக்கரை அன்பு நகர் பகுதியில் சுமார் 172 வீடுகளில் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களுக்கும் குப்பைகளை கையாள்வது மற்றும் எவ்வகையான குப்பைகளை பிரித்து நகராட்சி வழங்கியுள்ள ப்ளாஸ்டிக் வாளிகளில் போடுவது என்ற செய்முறை விளக்கங்கள் நகராட்சி ஊழியர்களால் செய்து காண்பிக்கப்பட்டது. பின்னர் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவி/தலைவர்களிடம் சுகாதாரம் […]
ரமலான் மாதம் இஸ்லாமியருக்கு மட்டுமல்ல.. மனித குலத்துக்கே புனித மாதம்..
சிறப்புக் கட்டுரை.. புனிதமிக்க ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது ஒவ்வொரு இஸ்லாத்தை வாழ்கை நெறியாக கொண்டவர்கள் அனைவருக்கும் கடமையாகும். முஸ்லிம்கள் நோன்பு நோற்பது போல் மாற்று மத சகோதரர்களும் மருத்துவ ரீதியான நன்மைகள் கருதி நோன்பு வைப்பது பரவலாக இப்பொழுது காணப்படுகிறது. நோன்பு வைப்பதினால் ஏற்படும் நன்மைகள் பற்றி பல அமெரிக்க மருத்துவ ஆய்வுகள் வெளிவந்நுள்ளன. நோன்பு வைப்பதன் மூலம் மன ரீதியான அமைதியான நன்மைகளை அடைவது போல் மருத்துவ ரீதியாக உடலின் பல உறுப்புகளுக்கு நன்மை […]
விண்ணைத் தொடும் மருத்துவர்கள் ஆலோசனைக் கட்டணம்.. தவிக்கும் பொதுமக்கள்….
கீழக்கரையில் கடந்த சில வருடங்களில் பல மருத்துவமனைகள் ஓவ்வொரு தெருக்களிலும் ஆரம்பம் செய்யப்பட்டு இருப்பதை நாம் காண முடியும். ஆரம்ப காலத்தில் 25ரூபாயில் தொடங்கிய மருத்துவர்கள் ஆலோசனைக் கட்டணம் குறுகிய காலத்தில் கிடுகிடுவென உயர்ந்து தற்பொழுது அடிப்படை ஆலோசனைக் கட்டணம் கீழக்கரையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ரூபாய்.150 ஆக உயர்ந்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஏழை மற்றும் நடுத்தெரு மக்களை மிகவும் சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விசயம், கடந்த காலங்களில் ஓவ்வொரு மருத்துவரும் வெவ்வேறு […]
புனித ரமலான் மாதம்.. ஆன்மீகம் கடந்து பொழுதுபோக்கு மாதமாக மாறுகிறதோ??
ரமலான் மாத சிறப்புக் கட்டுரை.. புனித ரமலான் மாதம் நன்மைகள் நிறைந்த சிறப்பான மாதம், பாவமன்னிப்பு பெறும் பாக்கியமிக்க மாதம், மனிதனை சீர்படுத்தும் மகத்தான மாதம், நம் உள்ளங்களை நெறி படுத்தும் உன்னதமான மாதம், இறையச்சத்தை அதிகரிக்கும் வலிமையான மாதம். இப்படி எண்ணற்ற சிறப்புகள் கொண்ட இந்த சீர்மிகு மாதத்தை அலட்சியம் செய்வதோடு அல்லாமல் பொழுதுபோக்கு மிக்க திருவிழா சீசனாக நாம் கடைபிடித்து வருகிறோமோ என்ற அச்சம் சமீப காலத்தில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ரமலான் மாத […]
மாற்றத்தை விரும்பும் மணல்மேடு சங்கமம் …ஒரு சாமானியனின் ஆதங்கம்…
சிறப்புக் கட்டுரை.. முன்னுரை:- கீழக்கரை மக்களுக்கும், அதன் சுற்றுவட்டார மக்களுக்கு நோன்பு மற்றும் ஹஜ் பெருநாள் இரண்டும், தொழுகைக்கு பிறகு அதிகமாக எதிர் நோக்கும் விசயம் மணல் மேடு சங்கமம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, இஸ்லாமியர்கள் முதல் பிற சகோதரர்கள் வரை எந்த பேதமின்றி மூன்று நாட்களுக்கு கூடும் இடம் பெருநாள் மணல் மேடு. ஆனால் முற்காலத்தில் இருந்த நோக்கமும், ஒற்றுமையும், சகோதரத்துவமும் இன்றைய நவீன உலகில் எவ்வாறு உருமாற்றம் அடைந்துள்ளது என்பதை அழகிய முறையில் […]
சமீபத்திய மும்பை தீபாலி கொலை வழக்கு – பெற்றோர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணி..
கடந்த வாரம் மும்பையில் தீபாலி என்ற பெண்மணி உடம்பில் பல முறை குத்தப்பட்டு பிணமாக அவருடைய வீட்டிலிருந்து மீட்கபட்டிருக்கிறார். இவர் தயானேஸ்வர் என்ற பிரபல போலிஸ் அதிகாரியின் மனைவியாவார். கொலையுண்டவரின் கணவர் கடந்த புதன் அன்று மாலை 2 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் அழைப்பு மணி அடித்தும் திறக்காததால் மனைவியும் மகனும் சினிமாவுக்கு சென்றிருப்பார்கள் என்று எண்ணி சாயங்காலம் வரை காந்திருந்துள்ளர். பின்னர் அலைபேசியிலும் மனைவியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் தன்னிடம் இருந்த மாற்று […]
பொதுத்தேர்வு முடிவுகளும்… பெற்றோர்களின் ஆதங்கமும்..என்று தீரும் பிள்ளைகளை வதைக்கும் இந்த மதிப்பெண் மோகம்..
சமீபத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. எந்த ஒரு தேர்வுக்கும் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்பது போல் பல மாணவச் செல்வங்கள் வெற்றி பெற்று அடுத்த நிலைக்கு சென்றுள்ளார்கள். இன்னும் சில மாணவச் செல்வங்களோ அடுத்த நிலைக்கு செல்வதற்கு குறுகிய கால அவகாசம் எடுத்துள்ளர்கள். ஆனால் இவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தவர்கள் என்பதை விட அடுத்த நிலையை அடைய சீரிய திட்டம் தீட்டக் கூடியவர்கள் என்று கூட நாம் எடுத்துக் […]
மாட்டு மூத்திரத்தைக் குடிக்க ஆதரிக்கும் மத்திய அரசு… மாட்டிறைச்சிக்கு தடை..
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மூன்று வருடத்தை நிறைவு செய்யும் பரிசாக சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் விதமாக சுற்றுப் புற சூழல் அமைச்சகம் மூலம் பசு, எருமை, ஒட்டகம் போன்ற மிருகங்களை இறைச்சிக்காக வெட்டுவதற்கும், விற்பதற்கும் தடை விதித்துள்ளது. இது தனி மனிதனின் அடிப்படை உரிமையை பறிக்கும் விதமாகும். ஒரு மனிதன் தான் எதை உண்ண வேண்டும் என்பதை அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டிய மிக மோசமன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். இந்த சட்டம் […]
You must be logged in to post a comment.