“பெண்கள்” மறைக்கப்பட்ட பலம், ஆம்- ஏனென்றால், “பெண்கள்” என்ற வார்த்தையை கேட்கும்போது முதலில் நம் மனதில் தோன்றுவது? பெண் என்பவள், ஆண் வர்க்கத்தின் பார்வையில் ஒரு தரம் குறைந்தவளாகவே பார்க்கப்படுகிறாள். இந்த அடிமைத்தனமான எண்ணமே பல யுகங்களாக மேலோங்கி நிற்கிறது என்பது நிதர்சனம். ஏன் இந்த உலகம் பெண்களை தவறான கண்ணோட்டத்துடன் பிணைந்துள்ளது? ஏன் பெண்கள் தங்கள் அதிகாரங்களை வெளிப்படுத்த முடியாத சூழல் ? இந்த கண்ணோட்டம் மாற, மனித குலத்திற்கு கிடைத்த பொக்கிஷமே பெண்கள்தான் என்பதை […]
Category: கட்டுரைகள்
வன்மத்தை வளர்க்கும் சமூக வலைதளத்தின் “STATUS MESSAGE”..
இன்று விஞ்ஞானம் வளர்ந்து வரும் நவீன உலகத்தில் ஒரு மனிதன் மனித உணர்வை விட சமூக வலை தளங்கள் மூலமாக எழுதுவதும், பேசுவதும் மட்டுமே நிஜ உலகம் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருகிறான். இதன் விளைவு ஆரோக்கியமாக வளர வேண்டிய உறவுகள் வேரோடு அழிந்து வரும் அபாயத்தின் உச்சி நிலைக்கு செல்கிறது என்பதை மனிதன் மறந்து விடுகிறான். இன்று பொதுவாக ஒருவர், மற்றவருடன் எதிர்மறையான கருத்துக்கள் கொண்டிருந்தால், அதை நேரடியாக வெளிப்படுத்தாமல் மறைமுகமாக வெளிப்படுத்த கூடிய ஆயுதமாகவே […]
சிறப்புச் சலுகை விரைந்து வாருங்கள்.. சிறப்பு கட்டுரை..
சலுகையை விரும்பாத மனித இனமே இருக்க முடியாது. நமக்கு பாரமாக தெரியும் விசயத்திற்கு ஏதாவது எளிய வழி கிடைக்கும் பொழுது மனம் குதூகலத்தில் துள்ளி குதிக்கும். இதுதான் மனித இயல்பு, ஆனால் இது இந்த உலக வாழ்கையில் கிடைக்கும, சந்தோசம். இதே சலுகை நமக்கு மறுமை உலகில் கிடைக்கும் என்றால், அது எவ்வளவு பெரிய பாக்கியமாகும், அதுதான் நமக்கு இறைவன் அளித்துள்ள “ரமளான்” மாதம். நாம் செய்த பாவங்கள் எல்லாம் நாம் இந்த ஒரு புனித மாதத்தில் […]
கீழக்கரை இளைஞர்களின் மற்றொரு முயற்சி “TRUTH MISSING” – குறும்படம்
கீழக்கரை இளைஞர் முஸ்தபா மற்றும் அவருடைய நண்பர்கள் சில மாதங்களுக்கு முன்பு சிறு விழிப்புணர்வு குறும்படத்தை எடுத்து வெளியிட்டு இருந்தார். இப்பொழுது அதைத் தொடர்ந்து “TRUTH MISSING” என்ற குறும்படம் மூலம் வெள்ளை சீனி மற்றும் மைதாவினால் ஏற்படும் தீமைகள் மற்றும் நோய்களை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த 15 நிமிட குறும்படத்தை எடுத்துள்ளார்கள். அதீ நவீன பொருட்கள் இல்லாமல் மிக எளிதான முறையில் இந்த குறும்படத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார்கள். […]
மே 8: இன்று சர்வதேச தாலசீமியா நாள்….சில முக்கிய தகவல்கள்..
ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் நோய் தாலசீமியா. ரத்தத்தின் சிவப்பணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபின் என்னும் புரதம்தான் உடலின் பல பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் முக்கியமான வேலையைச் செய்கிறது. அதன்மூலம்தான் நமக்கு சக்தி கிடைக்கிறது. ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களின் அளவு குறையும்போது, அது ரத்தச் சோகையை ஏற்படுத்தும். உடல் பலவீனம் அடையும். நோயின் வகைகள் தாலசீமியா நோய் இரண்டு வகைகளில் மனித உடலைத் தாக்குகிறது. ஹீமோகுளோபின் இரண்டு வகையான புரதத்தைக் கொண்டுள்ளது. அவை, ஆல்பாகுளோபின், பீட்டா குளோபின். […]
நீட் தேர்வு – அகதிகளாக்கப்பட்ட தமிழ் மாணவர்கள், வஞ்சிக்கும் ஆட்சியாளர்கள்…சாமானியனின் வேதனை பார்வை..
தொலை தூர நகரங்களுக்கு.. தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு.. அவசர உதவி எண்கள் அறிவிக்கப்படுள்ளன.. அவர்கள் ஒன்றும் ஆழிப்பேரலையால் சூழ்ந்து கொள்ளப்பட்டிருக்கவில்லை.:.. அவர்களுக்கு பயண உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.. அவர்கள் கடும் புயலில் காணாமல் போய்விடவில்லை.. அவர்களுக்கு உதவத் தயார் என்று கருணைக் கரங்கள் நீட்டப்படுகின்றன.. அவர்கள் பூகம்பங்களில் இடுபாடுகளில் சிக்கிக்கொண்டிருக்கவில்லை.. அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படவிருக்கிறது அவர்கள் ஒரு கலவரத்தில் சிதறடிக்கபட்டவர்கள் அல்ல.. அவர்களுக்கு தங்குமிடம் தர யாரோ அன்புக் கரம் நீட்டுகிறார்கள்… அவர்கள் […]
புற்று நோய் காரணம் தெரியா உயிர்கொல்லி..- விழிப்புணர்வு கட்டுரை..
மரண வலி, இது புற்றுநோய்க்கே உரித்தான வலியின் மொழி. மாத்திரை, மருந்து, ஊசி என எதற்கும் கட்டுப்படாத கொடுமையான வலி புற்றுநோய் தரும் துயரம். இந்தியாவில் ஆண்டுதோறும் பத்து லட்சம் பேர் புதிதாக ஏதாவது ஒரு புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்; ஏழு லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கின்றனர்; 2020-ல் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என எச்சரிக்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR.). ஏன் இந்த நிலை? பல காரணங்கள்! முக்கியக் காரணம் புகைப்பழக்கம். நாட்டில் […]
மே தினம் – சிறப்பு பார்வை…
மே.1, தொழிலாளர்கள் தினம், உழைக்கும் வர்க்கம் அனைவரும் கொண்டாடக் கூடிய நாள். இந்த மே.1 தொழிலாளர் தினமாக, சங்க சட்டமாக 1707 ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த மே தினம் பல கால கட்டங்களில், தங்கள் உரிமைகளுக்காக போராடியதை நினைவு கூறும் நிகழ்வே இந்த மே தினம். இன்று தொழிலாளர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு திட்டத்திற்கு பின்னாலும் பல தொழிலாளியின் அர்ப்பணிப்பும், போராட்டமும் நிச்சயமாக இருக்கும். இப்பொழுது புதிதாக வேலைக்கு சேரும் தொழில் வர்க்கம், தொழிற் சங்கங்களினால் எந்த […]
இஸ்லாமிய பார்வையில் யார் நம் தலைவர்.. ஒரு மீள் பதிவு..
(முன்குறிப்பு:- 2011ம் வருடத்தில் இணையத்தில் வந்த கட்டுரை, இன்றும் பொறுந்த கூடிய சிறு மாற்றங்களுடன்…) யார் இஸ்லாமிய தலைவர்?? இது இஸ்லாமிய அமைப்புக்கோ, சங்கத்துக்கோ, ஜமாஅத்துக்கோ, கூட்டமைப்புக்கோ எதுவாக இருந்தாலும் பொருந்தும். இன்று மனித ஜடத்தினை வணங்கியவர்கள் இஸ்லாமிய சொத்துக்களை பாதுகாக்கும் பாதுகாவலராகவும், ஏக இறைவனின் பள்ளிகளை கட்டியமைக்க இஸ்லாம் மார்க்கம் தடை செய்துள்ள பழக்கவழக்கங்களை கொண்டவர்களை அறங்காவலர்களாக நியமிப்பதும் இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரான செயல் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. ஆனால் அதை விட மிகவும் […]
ஷஃபான் மாதமும் நாமும்..
இறையச்சம், இறைவனுக்கு அடிபணிதல், தியாகம், இரக்க சிந்தனை, எதையும் தாங்கும் மனப்பக்குவம், உளக்கட்டுப்பாடு, திடவுறுதி, ஏழை எளியோரின் கஷ்ட நிலை உணர்தல் போன்றவை பொதுவாக நோன்பு கற்றுத் தரும் மிகப் பெரும் பாடங்களாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், நோன்பு ஒரு முஸ்லிமை பூரண மனிதனாக்குகிறது. ரமழான் மாத நோன்பு, ஷவ்வால் மாத ஆறு நோன்புகள், வியாழன், திங்கள் ஆகிய வார நோன்பு, ஆஷுரா, அரஃபா மற்றும் ஷஃபான் மாத சுன்னத்தான நோன்புகள் மேற்கூறப்பட்ட உயரிய குறிக்கோள்களின் அடிப்படையில் எப்பொழுதும் வாழவே முஸ்லிம்களைப் பயிற்றுவிக்கின்றன. இத்தகைய நோன்புகளை பெறும்போதனைகளாக மட்டுமின்றி தமது வாழ்விலும் செயல்படுத்திக் காட்டியவர்கள் தான் […]
இரண்டு மாத விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது என்ன?…
கோடை விடுமுறை தொடங்கி விட்டது, Mobile,TV என்று வீணாக பொழுதை போக்காமல் கீழ்கண்ட செயல்களை குழந்தைகளை ஈடுபட வைக்க முயற்சிக்கலாம், அவர்களையும் சிரமப்படுத்தாமல், பொழுது போக்காக, அவர்களே விரும்பி செய்யும்படி.. 1) உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்தச்செல்லுங்கள், வங்கியில் உள்ள அனைத்து சலான்களையும் (Chalan) நிரப்புவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள், A.T.M ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், சேமிப்பின் அவசியத்தையும் அக்கறையுடன் சொல்லிக்கொடுங்கள். 2) அதுபோல அருகில் உள்ள […]
இழந்து விட்டோம் நாங்கள் பெற்றெடுக்காத பெண் பிள்ளையை – ஒரு தாயுள்ளம் கொண்ட சகோதரியின் பாசக்குமுறல்..
நமது மனமோ அல்லது அவளை பெற்றெடுத்தவர்கள் மனமோ வேதனை படுவதை விடவும் கொடூரமாக நமது மகள் ஆஷிஃபா உடல் ரீதியாக கடுமையான வேதனையை அடைந்திருப்பாளே… நம்மால் அந்த வேதனையை நினைத்தும் பார்த்திட இயலவில்லை… கண்கள் குளமாகிறது,.அங்கமெல்லாம் கொதிக்கின்றது …😥 இது வரை எத்தனையோ சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாலும், அதற்கான காரணம் காமவெறி ஒன்றாகவே இருந்தது… ஆனால் இந்த ஆசிஃபா என்ற நமது மகளோ இஸ்லாமிய பெண் என்ற காரணத்தினால் காவி காயவர்களால் தொடர்ந்து எட்டு நாள்களுக்கும் […]
அசிபாவுக்கு நீதி-, ஆக்கம்-அ.முத்துக்கிருஷ்ணன்…
#justiceforasifa எட்டு வயது அசிபா பானு ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் ஜனவரி 10, 2018 அன்று காணாமல் போனாள், அவளது இல்லத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அசிபாவின் உடல் ஜனவரி 17,2018 அன்று கிடைத்தது. அசிபாவை கடத்தியவர்கள் அவளை கொலை செய்வதற்கு முன்பாக பலாத்காரம் செய்திருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. ஜனவரி 10 அன்று அசிபா காணாமல் போனாள் என்று காவல்நிலையத்தில் புகாரளித்தும் அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை மாறாக அசிபாவின் பெற்றோரை நீங்களே தேடுங்கள் […]
தைவான் நாட்டின் மருத்துவ பல்கலைக்கழக நிகழ்ச்சியில் உரையாற்றிய ‘கீழக்கரை’ மாணவனின் நீங்காத நினைவலைகள்
‘சீன தேசம் சென்றாலும் சீர் கல்வியைத் தேடு’ என்பது முன்னோர்களின் வாக்கு. ஆனால் இன்று நம் இந்திய தேசத்திலேயே அதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. தற்போது நம்மில் பலரும் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் போது அவர்களை என்ன படிக்க வைக்கலாம்? அதற்கென எந்தக் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யலாம்? என்பதை மட்டும்தான் எண்ணுகிறோம். அதையும் தாண்டி அவர்களுடைய உள்ளார்ந்த திறமைகளை வெளிக் கொணர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்காமல் விட்டு விடுகிறோம். அதே போல் எல்லா […]
தொடர் வங்கி விடுமுறை நாளையொட்டி அனல் பறக்கும் ஆன்லைன் மோசடி – கீழக்கரை பகுதி பொதுமக்கள் உஷார்
மஹாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, சனி ஞாயிறு அரசு விடுமுறை தினங்களையொட்டி ‘வங்கி தொடர் விடுமுறைகள்’ இன்று முதல் துவங்கி இருக்கிறது. இந்நிலையில் இன்று (29.03.2018) கீழக்கரை பகுதியில் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் பலருக்கு தொலைபேசி வாயிலாக பேசும் மர்ம ஆசாமிகள் தாங்கள் வங்கியில் இருந்து பேசுவதாகவும், தங்கள் வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களை ரெனீவல் செய்ய வேண்டி இருப்பதாகவும் கூறி வங்கி ATM இரகசிய தகவல்களை கேட்டறிந்து வருகின்றனர். அவ்வாறு பெறப்படும் தகவல்களை கொண்டு மர்ம ஆசாமிகள், […]
விளையாட்டுக்கு முதலிடம் கொடுக்கும் பரங்கிப்பேட்டை அனைவருக்கும் படிப்பினைகள் பல…-வீடியோ செய்தி
இன்றைய நவீன உலகத்தில் மொபைல் இன்டெர்நெட் மொபைல் இவைதான் மாறி மாறி இளைய சமுதாயத்தை ஆக்கிரமித்து ஆண்டு வருகிறது என்றால் மிகையாகாது. உடல் வருத்தி விளையாட்டு என்ற நிலை மாறி உடலை பெருக்க வைக்கும் விளையாட்டுகள் தான் மிகுந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் விளை நிலங்களும், விளையாட்டு மைதானங்களும் உருமாறி இன்று நவீன அங்காடிகள் பெருகி உள்ளதை நாம் காண முடிகிறது. இந்த நவீன அங்காடிகளில் கிடைப்பது எல்லாம் உடலுக்கு கேட்டை விளைவிக்கும் உணவுகளும், குழந்தைகள் உடல் […]
கீழைநியூஸ் அறிவித்திருந்த கட்டுரைப் போட்டி இறுதி தேதி பிப்ரவரி 15வரை நீடிப்பு..
கீழைநியூஸ் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்கான கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டு 31 ஜனவரி 2018 கடைசி நாளாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. பல மாணவிகள் தங்களுடைய படைப்புகளை அனுப்பியுள்ள நிலையில் அரையாண்டு விடுமுறை மற்றும் சமீபத்திய அரசாங்க விடுமுறையை கருத்தில் கொண்டு நீட்டிக்குமாறு பல அன்பர்களிடம் இருந்து வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சமர்பிக்க வேண்டிய இறுதி தேதி 15 பிப்ரவரி 2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. katturaipotti commonN
ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் நாள் (National Voters’ Day)
இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக தேசிய வாக்காளர் நாள் (National Voters’ Day) அனுசரிக்கபடுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி “தேசிய வாக்காளர் நாள்” ஆகும். வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந் நாளின் நோக்கமாகும். 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் […]
ஊனம் ஒரு குறையில்லை.. மனம் இருந்தால் உலகையே வெல்லலாம்- சிங்கப்பூரில் கீழக்கரை மாணவன் சாதனை..
கீழக்கரை லெப்பைத் தெருவும் சார்ந்த முஹம்மது அபுல் காசிம் மகனும், நைஸ் அப்பாவின் பேரனுமாகிய முஹம்மது நிஹால் சிங்கப்பூர் புகித் மேரா பள்ளியில் கடந்த வருடம் “O level” தேர்வில் 83.4 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விசயம் இவருக்கு சிறுவயதில் இருந்தே இரு காதுகளிலும் குறைபாடு உள்ளவர். இவரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக இவருக்கு சமீபத்தில் பள்ளியில் இருந்து “AWARD FOR RESILIENCE” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். […]
மக்கள் நீதி மன்றம் மூலம் ஏழை மக்களுக்கு உடனடி தீர்வு – இலவச சட்ட உதவிகள் வழங்கி தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சிறப்பான சேவை – வீடியோ விளக்கத்துடன்..
நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகள், சமரசம் ஏற்படக் கூடிய வழக்குகள் உள்பட பல்வேறு வகையான வழக்குகளுக்கு மக்கள் நீதி மன்றம் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் மாதந்தோறும், சட்ட உதவி முகாம்கள் நடத்தப்பட்டு, ஏழை-எளிய மக்களுக்கு கட்டணமின்றி வழக்குகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மக்கள் நீதி மன்றம் அழைக்கப்படும் லோக் அதாலத், தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலகம், எழும்பூர், […]
You must be logged in to post a comment.