மக்கள் நல பாதுகாப்புக் கழகம் – கீழக்கரை மக்கள் களம் இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான மாபெரும் கட்டுரை போட்டி அறிவிப்பு

கல்வி நகரமாக திகழும் கீழக்கரை நகரில் ஆங்கில வழியிலும், தமிழ் வழியிலும் கல்வி பயிற்றுவிக்கப்படும் 15 க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் உள்ளன. இவற்றுள் இருந்து ஆண்டு தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று மேற்படிப்புக்காக கல்லூரிகளுக்கு செல்கின்றனர். ஆனால் அரசு வேலைவாய்ப்புகளை பயன்படுத்தும் முயற்சிகளை எவரும் செய்வதில்லை. பலருக்கு அரசு துறை தேர்வுகள் குறித்தோ, அரசு வேலை வாய்ப்புகள் சம்பந்தமாகவோ கொஞ்சமும் புரிதல் இல்லை. இந்நிலையில் அரசு துறை தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை […]

இன்று சர்வதேச ‘மகளிர் தினம்’ – பெண்ணியம் காப்போம் – சிறப்பு கட்டுரை

பெண்ணின் மகத்துவத்தினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்பு, ஆதரவு, அடக்கம், இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழும், இறைவனின் உன்னதமான படைப்பினம் பெண் ஒரு தாயாய், மகளாய், மனைவியாய், இல்லத்தரசியாய், சகோதரியாய், தோழியாய், நட்பாய், நலம் விரும்பியாய், வழிகாட்டியாய் காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் தான் எத்தனை.. எத்தனை? பாசத்தால் வார்த்தெடுத்த உணர்ச்சிகளின் கலவையாய் பெண்ணை தவிர சிறந்த […]

கீழக்கரையில் தொன்று தொட்டு தொடரும் சுத்தமான பசும்பால் வியாபாரம் – ‘மில்க் மேன்’ கொம்பூதி குப்புசாமியின் மலரும் நினைவுகள்

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பிறகு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதில் எல்லா பெற்றோருக்கும் குழப்பம் வரும். குழந்தையின் முதல் உணவு பால் தான். இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், மனிதன் விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டபோது பிற விலங்குகளின் பாலைப் பயன்படுத்தத் தொடங்கினான். ஆடு, பசு, எருமை, கழுதை, குதிரை… ஏன் ஒட்டகப்பால் வரை மனிதன் பருகாத பாலே இல்லை. ஆனால், ‘தாய்ப்பாலுக்குப் பிறகு பசும்பாலே குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் […]

திமுக இளைஞரணி சார்பில் ‘ரத்த தான செயலி’ அறிமுகம்

திமுக இளைஞரணி சார்பில் ‘ரத்த தான செயலி’ இன்று 01.03.17 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை கூகுள் ப்ளே ஸ்டோரில் ‘திமுக ரத்த வங்கி’ (DMK Blood Bank) என்று குறிப்பிட்டால் போதும். விருப்பமுள்ளவர்கள் செயலியைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். சாமானியர்களும் பயன்படுத்தும் வகையில் இந்த ரத்த தான செயலி மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனுள்ளே கீழ் வரும் பகுதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மெயின் மெனு : இதன் மெயின் மெனு பக்கத்தில் ரத்தம் கொடுக்க விரும்புபவர்களுக்கான முன்பதிவு, ரத்தம் வழங்குபவர்களின் […]

வெளிநாடு வாழ் இந்தியர்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள கடைசி வாய்ப்பு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வெளிநாடு வாழ் இந்தியர்கள் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கடைசி வாய்ப்பினை இந்திய ரிசர்வ் வங்கி அளித்து இருக்கிறது. இதற்கான கடைசி நாள் மார்ச் 31-ந்தேதி என தீர்க்கமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:- கடந்த ஆண்டு நவம்பர் 9-ந்தேதியில் இருந்து டிசம்பர் 30-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்த என்.ஆர்.ஐ.கள் மற்றும் அப்போது வெளிநாட்டுக்கு சென்றிருந்த இந்தியர்களுக்கு (இந்தியாவில் வசிப்பவர்கள்) செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறுகள் தோண்டும் திட்டத்தைக் கைவிடக் கோரி ‘பேராசிரியர் ஜவாஹிருல்லா’ அறிக்கை

இராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறுகள் தோண்டும் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர். பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறுகள் தோண்டும் திட்டத்தில் கீழ் வரும் இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. 1. திருப்புல்லாணி (SN 236) 2. பெரியபட்டிணம் (SN 26) 3. ரெகுநாதபுரம் (SN 61/1C) 4. பனைக்குளம் (SN 81/1D) 5. களரி (SN 6) […]

கீழக்கரை பாரத ஸ்டேட் வங்கி ‘முக்கிய அறிவிப்பு’ – வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்

கீழக்கரை பகுதியில் கடந்த சில மாதங்களாக, பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் சிலரை செல்போனில் தொடர்பு கொண்டு தான் வங்கி அதிகாரி என்று கூறி, வங்கி நம்பர், பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்களை கேட்டு மோசடி செய்வது தொடர்ந்து நடை பெற்று வந்தது. இதில் அப்பாவி வங்கி வாடிக்கையாளர்கள் பலர் இலட்ச ரூபாய்க்கும் மேல் ஏமாற்றப்பட்டு கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே இது சம்பந்தமான பதிவினை கீழை நியூஸ் வலைதளத்தில் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் கீழக்கரை பாரத ஸ்டேட் வங்கி […]

கீழக்கரையில் குழந்தைகளை குறி வைக்கும் டெங்கு காய்ச்சல் – ஒழிக்க என்ன வழி ?

கீழக்கரை நகரில் டெங்கு காய்ச்சல் சர்வ சாதாரணமாக உலா வருகிறது. ஏராளமான பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இராமநாதபுரம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இரத்த அணுக்கள் இலட்சத்திற்கும் குறைவாக இருக்கும் குழந்தைகள் மதுரையில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு அங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவமனையில் 4 நாள்கள் தங்கி சிகிச்சை பெற ரூ.15000 முதல் ரூ.20000 வரை செலவாகிறது. இதுவே மதுரை என்றால் மருத்துவ செலவுகள் […]

கீழக்கரை 500 பிளாட் பகுதியில் சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்றி விழிப்புணர்வு – மக்கள் நல பாதுகாப்பு கழகம் களமிறங்கியது.

தமிழகத்தில் நீர்நிலை ஆதாரத்திற்கு சவாலாக இருக்கும் சீமை கருவேல மரங்களை மாநிலம் முழுவதும் அகற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆணை பிறப்பித்து அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் மார்ச் 31 ம் தேதிக்குள் முழுமையாக அகற்ற உத்தரவு பிறப்பித்து இருந்தனர். தமிழகத்தின் வறட்சி மாவட்டமாக இராமநாதபுரம் மாவட்டம் அறிவிக்கப்பட்டு நீர் ஆதாரம் இன்றி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலன் கருதி உயர்நீதிமன்ற உத்தரவை அமுல் படுத்துவதில் மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் உறுதுணையாக இருக்க இப்பணி குறிப்பிட்ட […]

சிறுவர்களுக்கு பைக் வாங்கி கொடுத்து ஆபத்தை வரவழைக்காதீர் – புது மடத்தில் ‘தவ்ஹீத் ஜமாஅத்’ சார்பாக விழிப்புணர்வு பேனர்

தமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 1.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகமான சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் மொத்த சாலை விபத்துகளில் 14.9 சதவீதம் தமிழகத்திலேயே நடைபெற்றுள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இரு சக்கர வாகன விபத்துகள் அதிகரித்ததுள்ளது. இந்த சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் பெரும்பாலானோர் 25 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் ஆவர். கீழக்கரை நகரில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் […]

கீழக்கரை நகருக்குள் நிற்கும் கருவேல மரங்களை வேரோடு அழிக்க வேண்டுகோள்

கீழக்கரை நகரில் நகராட்சி அலுவலகத்தின் பின்பகுதியிலும், பெத்தரி தெரு, கஸ்டம்ஸ் ரோடு, புது கிழக்குத் தெரு, வடக்குத் தெரு கொந்தக்கருணை அப்பா பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர் அசன் ஹக்கீம் கூறும் போது ”இந்த சீமை கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அரசு அலுவலக வளாகங்களிலேயே இது போன்று கருவேல மரங்கள் இன்னும் அகற்றப்படாமல் இருப்பது […]

கீழக்கரையில் ஆன்லைன் மூலம் ரூ.50000 திருட்டு – வங்கி ATM கார்டு வைத்திருபோர் உஷார்

கீழக்கரையில்ஆன்லைன் மூலம் ரூ.50000 திருட்டு – வங்கி ATM கார்டு வைத்திருபோர் உஷார் கீழக்கரை பாரத ஸ்டேட் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கினை வைத்திருக்கும் கீழக்கரை மேலத் தெருவை சேர்ந்த ஒருவரின் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய ஆசாமி ரூ.50000 ஐ ஆன்லைன் மூலம் திருடியுள்ளது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்டவர் கீழை நியூஸ் வலைத்தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் ”கடந்த ஒரு வாரம் முன்னதாக எனது மொபைலுக்கு பேசிய ஆசாமி.. தான் சம்பந்தப்பட்ட […]

கீழக்கரை நகராட்சி சார்பாக ஹமீதியா பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி..

கீழக்கரை நகரை திறந்த கழிப்பறையற்ற நகரமாக ஆக்குவது சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (09-02-2017) காலை 11.00 மணியளவில் ஹமீதியா தொடக்கப்பள்ளி மற்றும் ஹமீதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கீழக்கரை நகராட்சி சுகாதார அலுவலர் திண்ணாயிரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திறந்த வெளி கழிப்பறையால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் அதனால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் பற்றியும் மாணவ மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார ஊழியர்கள் ஹாஜா, சக்தி, மனோகரன் மற்றும் பள்ளிக் […]

சீமைக் கருவேல மரங்களை ஒழிக்க தாசிம் பீவி கல்லூரி வேண்டுகோள்..

கீழக்கரையில் உள்ள தாசிம் பீவி கல்லூரி இராமநாதபுரம் மாவட்டத்தில் முன் மாதிரியாக சீம கருவேல மரங்களை அழிக்க பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள்.  கடந்த வாரம் தாசிம் பீவி கல்லூரி மாணவிகள் ஆயிரக்கணக்கான சீம கருவேல மரங்களை அகற்றி சாதனைப் படைத்தனர்.  அதைத் தொடர்ந்து கீழக்கரையில் சீமைக் கருவேல மரங்களின் தீமைகளை வலியுறுத்தி பேரணியும் நடத்தினார்கள். இன்று (08-02-2017) கல்லூரி நிர்வாகம் சீம கருவேல மரங்களை பெரிய அளவில் அகற்ற அடுத்த கட்ட நடவடிக்கையாக இயந்திரங்களை […]

கீழக்கரையில் சீமை கருவேல மர ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி – ஆறு பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

தமிழகத்திலேயே நம் இராமநாதபுரம் மாவட்டம் தான் வறட்சிக்கு பெயர் போன மாவட்டம் ஆகும். தண்ணியில்லா காடு, விவசாயமில்லா பூமி, பஞ்சம் பிழைக்க அதிகம் அயல் நாடு செல்லும் பகுதி, பின் தங்கிய மாவட்டம் என்றெல்லாம் தனி பெரும் பெருமை நமக்குண்டு. இதற்கெல்லாம் ஆணி வேறாக இருப்பது நம் வளத்தை எல்லாம் உறுஞ்சி சக்கையை மென்று துப்பி கொண்டிருக்கும் அரக்கனாகிய சீமை கருவேல மரங்கள். இதனை வேரோடு பிடுங்கி அழித்தொழிக்க நம் தேசத்தின் நான்கு தூண்களாகிய நீதிமன்றமும் அரசாங்கமும், அரசு […]

கீழக்கரையில் போக்குவரத்துக்கு இடையூறு தரும் மணல் குவியல்களால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் !

கீழக்கரை நகரில் புதிய வீடு கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இதனால் கீழக்கரையில் செழிப்பான தொழிலாக, கட்டுமானத் தொழில் இருந்து வருகிறது. கீழக்கரை நகரின் குறுகிய தெருக்களுக்குள், வீடு கட்டுபவர்களால் கொட்டப்படும் மணல், ஜல்லி, செங்கல், கட்டுமான இடிபாடுகள் போன்றவைகள்,போக்குவரத்து மிகுந்த நேரங்களில் கொட்டப்படுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாமல் இந்த தெருக்களை கடந்து செல்ல முயலும் இரு சக்கர வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து கீழக்கரை சட்டப் […]

இன்று தியாகிகள் தினம், சுதந்திர தியாகத்தில் இஸ்லாமியர் பங்கு..

ஜனவரி 30 இந்திய நாட்டின் தந்தை என்றழைக்கப்படும் காந்தியடிகள் மூச்சு நிறுத்ப்பட்ட நாள். அதுவே இன்று தியாகிகளின் திருநாளாக நினைவு கூறப்படுகிறது. ஆனால் அதே நாளில் மூச்சை நிறுத்தியவர்களின் பேரணியும் நடத்துவது அந்த தியாகத்தினை கொச்சைப் படுத்துவதாகவே இருக்கிறது. நம் நாட்டின் சுதந்திர போராட்ட தியாகிகளின் ஒவ்வொருவரின் தியாகத்தின் பின்னாலும் நிச்சயமாக ஒரு இஸ்லாமியனின் பங்களிப்பு உறுதியாக இருந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. நம் ஊர் கப்பலோட்டிய தமிழனுக்கு முதலில் பொருளாதாரத்தை வாரி வழங்கியவர் ஹாஜி […]

பெப்சி கோக் புறக்கணிப்பு … ஆனால் பவன்டோ உடல் நலத்திற்கு நன்மை பயக்கிறதா???

ஜல்லிக்கட்டு போராட்டம் பிரமாண்டமாக நடந்து முடிந்து இருக்கிறது. ஊடகங்களில் குறிப்பிடப்படுவது போல் நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் யாரோ சிலரால் தீர்மானிக்கப்பட்ட திட்டத்துடன் முடிந்தது மிகவும் துரதிஷ்டமானது. ஜல்லிக்கட்டில் ஆரம்பித்த போராட்டம் இப்பொழுது பெப்சி கோக் குளிர்பானத்தை வெளிநாட்டு பானம் என்று கூறி புறக்கணிக்கும் நிலைக்கு வந்து நிற்கிறது. அதே சமயம் வெளிநாட்டு பானத்தை புறக்கணிக்கிறோம் என்ற நிலைபாட்டில் பவன்டோ எனும் ஒரு தனி முதலாளியின் வருமானத்திற்கு இலவசமாக விளம்பரம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மையான நிலைமை. […]

கீழக்கரை நகராட்சியின் ‘நகைச்சுவை’ அறிவிப்புக்கு பொது மக்கள் பதில் கொடுக்க ‘கீழக்கரை மக்கள் களம்’ வேண்டுகோள்

கீழக்கரை நகராட்சியின் ‘நகைச்சுவை‘ அறிவிப்புக்கு பொது மக்கள் பதில் கொடுக்க ‘கீழக்கரை மக்கள் களம்’ வேண்டுகோள் கீழக்கரை நகரராட்சி சார்பில் பொது மக்களுக்கு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் கீழக்கரை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் (வார்டு எண் 1 முதல் 21 வரையிலான பகுதிகளில்) ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ், கீழக்கரை பகுதியில் எந்த இடத்திலும், எவரும் மலம், ஜலம் திறந்தவெளியில் கழிக்காமல் சுகாதாரத்தை மிக சிறப்பாக பேணுவதாலும், நகராட்சி நிர்வாகம் பொது […]

கீழக்கரைக்கு மிக அவசியம் பொது விளையாட்டு மைதானம்..கீழக்கரை மக்கள் பொது தளம் வேண்டுகோள்

*மாவட்டகளில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் கீழக்கரை என்று சொன்னாலே எதிர் அணிக்கு ஒரு பயத்தை உண்டுபண்ணும்* என்பதை யாராலும் மறுக்க முடியாது… அந்த அளவிற்கு விளையாட்டு துறையில் உரிய பயிற்சி இல்லாமல் கூட நமது இளைஞர்கள் சிறந்து விளைகிறார்கள், அந்த அளவிற்கு தனித்திறமை பெற்று மாவட்டம் தோறும் நடைபெறும் ஏனைய போட்டிகளில் பங்குபெற்று வெற்றி கனிய பரித்துக்கொண்டு வருகிறார்கள்… இவ்வளவு திறமை இருந்தும் நமதூருக்கு போதிய விளையாட்டு மைதானம் இல்லாமல், நமது இளைஞர்கள் தன் திறமைகளை வெளிக்கொணர […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!