பேலியோ என்றால் என்ன??

இன்று நவீன உலகில் உணவுக் கட்டுபாடு என்ற பெயரில் பழங்கள், காய்கறிகள், கோதுமை உணவு என்று சைவம் சார்ந்த உணவுகளே உடல் எடையை குறைக்க உதவும் என்று எண்ணும் வேலையில் “பேலியோ” என்ற வார்த்தை பலருக்கு குழப்பத்தையும், பலருக்கு ஆச்சர்யத்தையும் தந்துள்ளது. அதைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பல ஆதாரபூர்வமான தளங்களில் இருந்து எடுத்த குறிப்புகள் உங்கள் பார்வைக்கு… Paleo or Cave Man Diet என்று அழைக்கப்படும் இந்த உணவு, மனித இனம் […]

சிறப்புக் கட்டுரை….

பேணப்பட வேண்டிய மனுக்கள்.. இழுக்காமல் துரித தீர்வு காண வேண்டிய விசயங்கள்… சுதாரிக்க வேண்டிய ஜமாத்தார்கள்… துன்பத்தில் இருந்து மீள வேண்டிய தம்பதிகள்… இஸ்லாமியனாய் பிறந்த ஒவ்வொருவனும் திருமண விஷயத்தில் இறைத்தூதர் வழியை அழகிய முறையில் பேணுகிறான் என்று சொல்லலாம்… அவ்வாறு ஒவ்வொருவரும் கடைபிடித்து வருகின்ற திருமண வாழ்வு என்பது சிலருக்கு இன்பம் தரும் தேனிலவு வாழ்க்கை, சிலருக்கு எண்ணாத அளவிற்கு இன்பமாகவும் அமைந்து விடுகின்றது… இவ்வாறு இன்பங்களை காண்போர் தன் வாழ்க்கையை இனிமையாக கொண்டு சென்று […]

விபத்துக்கள் பாடம் தராதோ?? – சிறப்பு விழிப்புணர்வு கட்டுரை..

சிறப்பக் கட்டுரை இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்….. அந்தோ பரிதாபம்… சுப்ஹானல்லாஹ்… எத்தனை எத்தனை உபதேசங்கள்…. எத்தனை எத்தனை எச்சரிக்கைகள்….. ஆனாலும் மீண்டுமொரு “ரமலான்” விபத்து எனும் போது மனது பதை பதைத்து போகிறது…. வயது 17 தான்…. இது போன்ற பிள்ளைகளை பற்றி சொல்லவேண்டுமானால் இரு விதமாக சொல்லலாம்.. ஒன்று பெற்றோர்கள் பிள்ளைகளை எச்சரிக்காதது.. இரண்டாவது பெற்றோர்கள் எச்சரிக்கின்ற போதும் பிள்ளைகள் உதாசீனப்படுத்துவது… இரண்டில் ஏதுவாக இருந்தாலும் இரண்டுமே கையிலெடுக்க கூடாத முறைகளல்லவா…. […]

கீழக்கரையில் உறுதிமொழி மற்றும் கவிதையுடன் தொடங்கிய திடக்கழிவு மேலான்மை விழிப்புணர்வு பணி…

கீழக்கரை நகராட்சி சார்பாக இன்று (21-06-2017) திடக்கழிவு மேலான்மை விழிப்புணர்வு (Solid Waste Managment Awareness) பணிகள் உறுதிமொழி மற்றும் கவிதையுடன் தொடங்கியது. இப்பணிகள் இன்று கீழக்கரை அன்பு நகர் பகுதியில் சுமார் 172 வீடுகளில் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களுக்கும் குப்பைகளை கையாள்வது மற்றும் எவ்வகையான குப்பைகளை பிரித்து நகராட்சி வழங்கியுள்ள ப்ளாஸ்டிக் வாளிகளில் போடுவது என்ற செய்முறை விளக்கங்கள் நகராட்சி ஊழியர்களால் செய்து காண்பிக்கப்பட்டது. பின்னர் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவி/தலைவர்களிடம் சுகாதாரம் […]

ரமலான் மாதம் இஸ்லாமியருக்கு மட்டுமல்ல.. மனித குலத்துக்கே புனித மாதம்..

சிறப்புக் கட்டுரை.. புனிதமிக்க ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது ஒவ்வொரு இஸ்லாத்தை வாழ்கை நெறியாக கொண்டவர்கள் அனைவருக்கும் கடமையாகும். முஸ்லிம்கள் நோன்பு நோற்பது போல் மாற்று மத சகோதரர்களும் மருத்துவ ரீதியான நன்மைகள் கருதி நோன்பு வைப்பது பரவலாக இப்பொழுது காணப்படுகிறது. நோன்பு வைப்பதினால் ஏற்படும் நன்மைகள் பற்றி பல அமெரிக்க மருத்துவ ஆய்வுகள் வெளிவந்நுள்ளன. நோன்பு வைப்பதன் மூலம் மன ரீதியான அமைதியான நன்மைகளை அடைவது போல் மருத்துவ ரீதியாக உடலின் பல உறுப்புகளுக்கு நன்மை […]

புனித ரமலான் மாதம்.. ஆன்மீகம் கடந்து பொழுதுபோக்கு மாதமாக மாறுகிறதோ??

ரமலான் மாத சிறப்புக் கட்டுரை.. புனித ரமலான் மாதம் நன்மைகள் நிறைந்த சிறப்பான மாதம், பாவமன்னிப்பு பெறும் பாக்கியமிக்க மாதம், மனிதனை சீர்படுத்தும் மகத்தான மாதம், நம் உள்ளங்களை நெறி படுத்தும் உன்னதமான மாதம், இறையச்சத்தை அதிகரிக்கும் வலிமையான மாதம். இப்படி எண்ணற்ற சிறப்புகள் கொண்ட இந்த சீர்மிகு மாதத்தை அலட்சியம் செய்வதோடு அல்லாமல் பொழுதுபோக்கு மிக்க திருவிழா சீசனாக நாம் கடைபிடித்து வருகிறோமோ என்ற அச்சம் சமீப காலத்தில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ரமலான் மாத […]

மாற்றத்தை விரும்பும் மணல்மேடு சங்கமம் …ஒரு சாமானியனின் ஆதங்கம்…

சிறப்புக் கட்டுரை.. முன்னுரை:- கீழக்கரை மக்களுக்கும், அதன் சுற்றுவட்டார மக்களுக்கு நோன்பு மற்றும் ஹஜ் பெருநாள் இரண்டும், தொழுகைக்கு பிறகு அதிகமாக எதிர் நோக்கும் விசயம் மணல் மேடு சங்கமம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, இஸ்லாமியர்கள் முதல் பிற சகோதரர்கள் வரை எந்த பேதமின்றி மூன்று நாட்களுக்கு கூடும் இடம் பெருநாள் மணல் மேடு. ஆனால் முற்காலத்தில் இருந்த நோக்கமும், ஒற்றுமையும், சகோதரத்துவமும் இன்றைய நவீன உலகில் எவ்வாறு உருமாற்றம் அடைந்துள்ளது என்பதை அழகிய முறையில் […]

சமீபத்திய மும்பை தீபாலி கொலை வழக்கு – பெற்றோர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணி..

கடந்த வாரம் மும்பையில் தீபாலி என்ற பெண்மணி உடம்பில் பல முறை குத்தப்பட்டு பிணமாக அவருடைய வீட்டிலிருந்து மீட்கபட்டிருக்கிறார்.  இவர் தயானேஸ்வர் என்ற பிரபல போலிஸ் அதிகாரியின் மனைவியாவார்.  கொலையுண்டவரின் கணவர் கடந்த புதன் அன்று மாலை 2 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.  ஆனால் அழைப்பு மணி அடித்தும் திறக்காததால் மனைவியும் மகனும் சினிமாவுக்கு சென்றிருப்பார்கள் என்று எண்ணி சாயங்காலம் வரை காந்திருந்துள்ளர். பின்னர் அலைபேசியிலும் மனைவியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால் தன்னிடம் இருந்த மாற்று […]

பொதுத்தேர்வு முடிவுகளும்… பெற்றோர்களின் ஆதங்கமும்..என்று தீரும் பிள்ளைகளை வதைக்கும் இந்த மதிப்பெண் மோகம்..

சமீபத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. எந்த ஒரு தேர்வுக்கும் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்பது போல் பல மாணவச் செல்வங்கள் வெற்றி பெற்று அடுத்த நிலைக்கு சென்றுள்ளார்கள். இன்னும் சில மாணவச் செல்வங்களோ அடுத்த நிலைக்கு செல்வதற்கு குறுகிய கால அவகாசம் எடுத்துள்ளர்கள். ஆனால் இவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தவர்கள் என்பதை விட அடுத்த நிலையை அடைய சீரிய திட்டம் தீட்டக் கூடியவர்கள் என்று கூட நாம் எடுத்துக் […]

தியாகத்திற்கு உதாரணமாக விளங்கும் கடின உழைப்பாளி

ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை முடிவீரன்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 60). கூலித்தொழிலாளியான இவர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த கூடிய செயலை செய்துள்ளார். இவர் கடந்த வாரம் ராமநாதபுரம் கலெக்டரிடம் ஓரு கோருக்கை மனு அளித்துள்ளார். அவர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:– கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். சிறு வயது முதலே இந்திய நாட்டிற்காக பாடுபடவேண்டும் என்ற ஆவல் இருந்து வந்தது. ஆனால், சூழ்நிலை காரணமாக ராணுவத்தில் சேர முடியவில்லை. ஆனால் […]

இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம்..

மே 3ம் தேதி உலகம் முழுவதும் பத்திரிக்கை சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது.  இந்த மே3 ம் தேதி 1993ம் ஆண்டு ஐக்கிய சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த பிரகடனம் 1991ம் ஆண்டு ஆப்பிரிக்க பத்திரிகையார்களால் சமர்ப்பிக்கப்பட்ட Windhoek Declaration அறிக்கையின் அடிப்படையில் செய்யப்பட்டது. ஆக உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தின் பிறப்பிடம் பல்லாண்டு காலம் மனித உரிமைகள் மறுக்கப்பட்ட பூமியான ஆப்ரிக்கா என்றே கூறலாம். உலக சுதந்திர தினத்திற்காக சமர்ப்பிக்க பட்ட அறிக்கையின் அடிப்படை நோக்கம், பத்திரிக்கை வெளிப்படைத்தன்மை, […]

முஸ்லிம் தனியார் சட்டம் – சமூக மாற்றத்துக்குத் தயாராவோம் …

முஸ்லிம் தனியார் சட்டம் நம்மை படைத்த இறைவனால் அருளப்பட்ட வாழ்வியல் சட்டம் எனப் பேசவும் எழுதவும் செய்கின்றோம் . எந்தவொரு சட்டமாக இருந்தாலும் அந்தச் சட்டத்தால் விளையக்கூடிய பயன்களும் நற்பெறுகளும் ஏடுகளிலும், தாள்களிலும் மட்டுமே பொறிக்கபட்டிருக்கு மேயானால் அதனை பயனுள்ள சட்டமாக எவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . அன்றாட நடைமுறை வாழ்வில் அவற்றின் நன்மைகளையும் நற்பேறுகளையும் நுகர்ந்தால் மட்டுமே அதைப் பயனுள்ள சட்டமாக மக்கள் ஏற்றுகொள்வார்கள். எனவே இஸ்லாமிய குடும்பவியல் சட்டங்கள்படி வாழ்வை முழுமையாக மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியது […]

நாடு நமக்கு என்ன செய்தது என்பதை விட நாட்டுக்கு நாம் என்ன செய்தோம்?..கல்வியாளரின் சமூக சிந்தனை…

நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்றி அமையாது ஒழுக்கு. விவசாயிகளுக்காக இன்று தமிழகமே போராடி வரும் வேலையில் விவசாயிகளை முன்னிறுத்தி அரசியல் ஆதாயம் தேட எதிர் கட்சிகளும் ஆளும் கட்சிகளும் கங்கணம் கட்டி செயல்படுகின்றனர். இவர்கள் கடந்த காலங்களில் செய்த தவறுகளை மறைக்க இப்படி பகல் வேஷம் போடுகின்றனர். வெறும் போராட்டங்களால் மட்டுமே விவசாயிகளுக்கு எந்த நன்மையையும் ஏற்பட போவதில்லை என்பதை நன்கு அறிந்த இந்த அரசியல் கட்சிகள் மக்களை முட்டாளாக்கி ஓட்டு அரசியல் செய்து வருகின்றனர். தமிழகத்தை […]

அழிந்து வரும் விளை நிலங்கள்.. மாடி வீட்டுத் தோட்டம்.. மாறி வரும் எண்ணோட்டங்கள்…

ஓடி விளையாடிய தோட்டங்கள் மறைந்து, எங்கு நோக்கினும் ஓங்கி நிற்கும் மாளிகைகளே இன்றைய கிராமத்தின் நிலை. விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் நம்முடைய வாழ்வாதாரங்களை அழித்து வருகிறோம் என்பதுதான் உண்மை.கிராமங்கள், நகர் புறங்களாக விரிவடைந்து வருவதால் விவசாயம் முற்றிலும் அழிந்து வருவதை நம் கண் முன் பார்த்து வருகிறோம். கிராமம் என்ற வார்த்தையை செவியுற்றவுடன் பசுமையான வயல்களும், தோடங்களும், நீர் நிலைகளும் நம் மனக் கதவுகளை தட்டி எழுப்பும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் வரும் காலத்தில் […]

அனல்காற்று பற்றிய பீதி வேண்டாம்..

தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக வரும் இரண்டு நாட்களுக்கு  கடுமையான அனல் காற்று வீசும், ஆகையால் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்ற அச்சத்தை ஊட்டும் செய்தி இணையதளம் மற்றும் சமூக வலைதளம் மூலமாக வேகமாக பரவி வருகிறது. இதன் வீரியத்தையும் உண்மைத் தன்மை பற்றி அறிந்து கொள்ள கீழை நீயூஸ் சார்பாக Tamilnadu Disaster Management Agency (TNSDMA) அதிகாரிகளை அவர்களுடைய அதிகாரபூர்வமான தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோம். அவர்கள் கூறியதாவது, சமூக […]

வலியில்லாமல் இரத்தத்தை உறிஞ்சும் மூட்டைப் பூச்சிகள்.. அறியாத தகவல்கள்…

மூட்டைப்பூச்சி, நமது வீடுகளின் அழையா விருந்தாளிகளாக எப்போதும் தங்கியிருக்கும். முக்கியமாக வளைகுடா நாடுகளில் துபாய் போன்ற ஊரில் வசித்தவர்கள் இதன் கடியில் இருந்து தப்பித்து இருக்கவே முடியாது. நாம் பல மாதம் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுவந்தாலும், நமக்காக பசி தாங்கி காத்துக் கொண்டிருக்கும். மூட்டைப்பூச்சி பற்றிய சில அறிய தகவல்கள். மூட்டைப்பூச்சிகள் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. இல்லாத இடமேயில்லை எனும் அளவுக்குஎல்லா இடங்களிலும் வசிக்கும் திறன் பெற்றவைமூட்டைப்பூச்சிகள். ஓட்டல்கள், வீடுகள், மருத்துவமனைகள், கல்லூரிகள், அலுவலகங்கள், […]

கிழக்கு ஆசியா நாடுகளில் விரும்பி சாப்பிடப்படும் இராமநாதபுரம் மாவட்ட தென்னக கடல் பகுதியில் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி ஆகும் சிங்கி இறால்…

இராமநாதபுரம் தெற்கு கடல் பகுதி மீன் பிடி தொழிலில் பிரசித்தி பெற்றதாகும்.இந்த பகுதிகளில் பிடிக்க படும் மீன்கள், இறால், கணவாய் மற்றும் கடல் உணவுகள் இப்பகுதி மக்களின் தேவைக்கு போக வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இம் மாவட்ட கடலோர பகுதியில் பிடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் கடல் உணவுகளில் சிங்கிஇறால் முதல் வரிசையில் இருக்கின்றது. சிங்கிஇறால் கிழங்கு ஆசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பேங்காங் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு […]

உடல் உறுப்பு தானத்தை தனி மனிதனாக வலியுறுத்தும் சமூக சேவகர்.

தானத்தில் சிறந்த தானம், தான் மறைந்த பின்பும் தன் செயல்பாடுகளால் மற்றவர்களின் உயிர்களை வாழ வைக்கும் தானமாகும். அவ்வகையில் இன்று பல சமூக இயக்கங்களும், தன்னார்வலர்களும் இரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானங்களைப் பற்றி பல வகையான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவது நாம் அனைவரும் அறிந்த விசயமாகும். இதெற்கெல்லாம் மகுடம் வைத்தார் போல் திருப்பூரை சேர்ந்த சமூகசேவகர் சிவசுப்பிரமணி, கடந்த 11 ஆண்டுகளாக இரத்ததானம், உறுப்பு தானம், உடல் தானம் போன்றவற்றை வலியுறுத்தி தனிமனிதராக […]

சித்திரை வெயில்.. அக்னி நட்சத்திரம்.. நம் உடல் நலத்தில் அதிக சிரத்தை கொள்ள வேண்டிய மாதம்…

தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் சித்திரை மாதத்துடன் அக்னி வெயிலும் தொடங்க இருக்கிறது. இந்த வருடம் பருவ மழை பொய்திருக்கும் நிலையில் வெயிலின் தாக்கமும் மிக உக்கிரமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் அக்னி வெயிலை எதிர்கொள்ள நம்மை நாமே இயற்கையான உணவு வகைகளுடன் தயார் படுத்திக்கொள்வது நலம். அக்னி உக்கிரத்தில் உடலை குளுமைப்படுத்தும் உணவு வகைகள் உங்கள் பார்வைக்கு:- ஆரோக்கியமான கோடை கால உணவுகள், பயனுள்ள வழிமுறைகள்:- தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை குளிர்ச்சியாக்க முடியும். […]

சமூக வலை தளம் மூலம் மருத்துவ ஆலோசனையால் ஏற்படும் விபரீதம்-அமீரக டாக்டர்கள் எச்சரிக்கை

இன்றைய நவீன உலகில் மருத்துவ ஆலோசனைகளை சமூக வலைதளத்தின் மூலம் பெறக்கூடிய மக்களின் எண்ணிக்கை பெருகி வருவதாக அமீரகத்தில் பணி புரியும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். உடலில் ஏற்படும் நோய்களுக்கு உடனடி தீர்வை தேடி சமூக வலை தளத்தை நாடுபவர்கள் மோசமான விளைவுகளை சந்திப்பதாகவும் தவறான நபர்களிடம் பாதுகாப்பை தேடுகிறார்கள் என்றும் எச்சரித்துள்ளார்கள். இது குறித்து டாக்டர். ஶ்ரீரிஹரி.கே.பிள்ளை கூறுகையில், கடந்த 4 வருடமாக அவரை அணுகும் நோயாளிகள் உடனடி நிவாரனத்தையே நாடுகிறார்கள், ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!