நபியவர்களின் ஏகத்துவ பரப்புரையின் ஆரம்ப காலக்கட்டத்தில் தாயிஃப் சென்று அங்கே ஏகத்துவத்தை நோக்கி மக்களை அழைத்தார்கள். ஒரு மாத காலம் அங்கே தங்கியிருந்தும் அம்மக்கள் பெருமானாரின் தூது செய்தியை காது கொடுத்து கேட்காமல் ஏளனம் செய்வதும் தாக்குவதுமாய் அழிச்சாட்டியம் செய்தனர் தாயிஃப்வாசிகள். அன்னை ஆயிஷா பிராட்டியார் ஒருமுறை பெருமானாரிடம் கேட்டார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! உஹதுப்போரின் போது உங்களுக்கு ஏற்பட்ட வேதனைப் போன்று வேறு ஏதேனும் உங்கள் வாழ்வில் நிகழ்ந்துள்ளதா? “ஆம்; உன் கூட்டத்தினர் எனக்கு கொடுத்த தொல்லைப் […]
Category: மார்க்க கட்டுரைகள்
இருப்பதை கொண்டு திருப்தி கொள்வோம்! ரமலான் சிந்தனை-2.
ரமலான் காலங்களில் வழக்கத்துக்கு மாறாக உணவு தயாரிப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தும் மக்களுக்கு இவ்வருட ரமலான் கொஞ்சம் நெருக்கடி கலந்த காலமாய் அமைந்து விட்டது. இதற்கு கொரோனா என்னும் வைரஸ் பரவலும் அதற்கான ஊரடங்குமாகும். ஊரடங்கு காலத்தில் உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளை தவிர ஆடை விற்பனையகம் உள்ளிட்ட பிற வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. புத்தாடை உடுத்தாத தலைபிறையை நாங்கள் கண்டதில்லை, ஆனால் இவ்வருட ரமலான் புத்தாடை அணியாத தலைபிறையாகி விட்டது என்னும் […]
ரமலான் சிந்தனைகள் -1, ஷஹீதுகளின் அளப்பரிய உயர்வுகளும்! கொரோனா ஷுஹதாக்களும்!
இறைவனின் பாதையில் போரிட்டு கொல்லப்பட்ட ஷஹீதுகளைப் பற்றி அல்லாஹ் தனது அருள்மறையில் சொல்லும்போது அவர்களை மரணித்தவர்கள் என்று சொல்லாதீர்கள் என இயம்புகிறான். “இன்னும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுகிறவர்களை மரணித்தோர் என நீங்கள் கூற வேண்டாம்; மாறாக, (அவர்கள் “பர்ஜக்” எனும் மறைவான உலகில்) உயிரோடிருக்கிறார்கள்; எனினும் (அவர்கள் எவ்வாறு உயிரோடு உள்ளார்கள்? என்பதை) நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்”.(அல்குர் ஆன் – 2:154) ஷஹீதுகளுக்கான இந்த சிறப்பான அந்தஸ்து குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, யார் […]
மறக்கவில்லை அந்த உரிமைகள் பறிக்கப்பட்ட தினத்தை..
மறக்கவில்லை நெஞ்சம்… மறந்திடுமா காவிகளின் வஞ்சம்! நாங்கள் இழந்தது எங்களின் இறையில்லத்தை மட்டுமல்ல… எங்களின் வழிபாட்டு உரிமையை! இந்த நாளில் இழிவடைந்தது நாங்களல்ல… இந்தியாவின் இறையாண்மை! அய்ந்து நூறு ஆண்டுகால சின்னம்… அய்ம்பதாண்டு கால ஆரியத்தால் காரியம் முடிக்கப்பட்டது! கரசேவை என்ற பெயரில் காவிகள் இடிக்க கைகட்டி நின்றது இந்தியாவின் மனசாட்சி.. காவல் காத்தது காவி(காக்கி)யுடை தரித்த தரித்திரங்கள்! இல்லாத ராமனுக்காக இறையில்லத்தை இடித்த தட்டுவானிகளுக்குத் தண்டனையோ ஒரே ஒருநாளாம்… அறிந்து கொள்க. ஓரிறையின் முன் ஒடுங்கி […]
பயணம் – 2, பயணங்களும்… பாடங்களும்.. தொடர் கட்டுரை….
முன்னுரை:- பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் பலர். ஆனால் இக்கட்டுரையின் ஆசிரியர் கப்ளி சேட், பயணத்துடன், மனிதனுள் ஏற்பட வேண்டிய சிந்தனைகளை தூண்டி, அதை தேவைப்படும் இடங்களில் குர்ஆனின் உள்ள படிப்பினைகளையும் சுற்றி காட்டியுள்ளது இக்கட்டுரையின் மிகப் பெரிய பலமாகும். இன்று முதல் இக்கட்டுரை தொடர்ச்சியாக உங்கள் பார்வைக்கு […]
தியாகத்தை பறைசாற்றும் ஹஜ்ஜுப் பெருநாள்
அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே. எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ஹஜ்ஜுப்பெருநாளை கொண்டாட கூடிய பாக்கியத்தை நமக்கு தந்திருக்கிறான். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே. இந்த ஹஜ்ஜுப்பெருநாள் நமக்கு இறைதூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் மற்றும் அவர்களின் குடும்பத்தின் தியாக வாழ்க்கையை நினைவு படுத்துகிறது. நபி இப்ராஹிம் (அலை) அப்படி என்ன தியாகம் செய்தார்கள்.?, அவர்கள் அல்லாஹ்விற்காக தன் முழு வாழ்க்கையையும் தியாகம் செய்தார்கள். அவர்கள் மட்டுமல்ல அவர்களின் மனைவி பிள்ளை என அனைவரும் தியாகம் செய்தார்கள் அல்லாஹ்விற்காக. உண்மையில் […]
கஞ்சாவின் தாக்கத்தால் வன்முறை பூமியாகி வரும் கீழக்கரை…சிறப்புக்கட்டுரை..
வலிமார்களும் இறைநேசர்களும் நிறைந்து வாழும் மண்ணில் போதிய மார்க்கப்பற்றுதலும் கண்ணியம் பேணப்படுதலும் இல்லாமல் போனதால் இன்றைய இளம் தலைமுறை கஞ்சா, பான்பராக், பீடி, சிகரெட்,குடி போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகி கிடக்கிறது. ஒரு காலத்தில் சிறார்களின் சண்டை என்பது கையால் ஒருவருக்கொருவர் குத்தி கொள்வதும் பிறகு பெரியவர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைப்பதுமாக இருந்தது. ஆனால்…இன்றோ,உயிர் மற்றும் உடல் சேதம் உண்டாக்கும் வகையில் இரும்பு ஆயுதங்களை கொண்டு எடுத்த எடுப்பிலேயே வெறி கொண்டு தாக்கும் குரூர புத்தியை […]
சிறப்புச் சலுகை விரைந்து வாருங்கள்.. சிறப்பு கட்டுரை..
சலுகையை விரும்பாத மனித இனமே இருக்க முடியாது. நமக்கு பாரமாக தெரியும் விசயத்திற்கு ஏதாவது எளிய வழி கிடைக்கும் பொழுது மனம் குதூகலத்தில் துள்ளி குதிக்கும். இதுதான் மனித இயல்பு, ஆனால் இது இந்த உலக வாழ்கையில் கிடைக்கும, சந்தோசம். இதே சலுகை நமக்கு மறுமை உலகில் கிடைக்கும் என்றால், அது எவ்வளவு பெரிய பாக்கியமாகும், அதுதான் நமக்கு இறைவன் அளித்துள்ள “ரமளான்” மாதம். நாம் செய்த பாவங்கள் எல்லாம் நாம் இந்த ஒரு புனித மாதத்தில் […]
இஸ்லாமிய பார்வையில் யார் நம் தலைவர்.. ஒரு மீள் பதிவு..
(முன்குறிப்பு:- 2011ம் வருடத்தில் இணையத்தில் வந்த கட்டுரை, இன்றும் பொறுந்த கூடிய சிறு மாற்றங்களுடன்…) யார் இஸ்லாமிய தலைவர்?? இது இஸ்லாமிய அமைப்புக்கோ, சங்கத்துக்கோ, ஜமாஅத்துக்கோ, கூட்டமைப்புக்கோ எதுவாக இருந்தாலும் பொருந்தும். இன்று மனித ஜடத்தினை வணங்கியவர்கள் இஸ்லாமிய சொத்துக்களை பாதுகாக்கும் பாதுகாவலராகவும், ஏக இறைவனின் பள்ளிகளை கட்டியமைக்க இஸ்லாம் மார்க்கம் தடை செய்துள்ள பழக்கவழக்கங்களை கொண்டவர்களை அறங்காவலர்களாக நியமிப்பதும் இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரான செயல் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. ஆனால் அதை விட மிகவும் […]
ஷஃபான் மாதமும் நாமும்..
இறையச்சம், இறைவனுக்கு அடிபணிதல், தியாகம், இரக்க சிந்தனை, எதையும் தாங்கும் மனப்பக்குவம், உளக்கட்டுப்பாடு, திடவுறுதி, ஏழை எளியோரின் கஷ்ட நிலை உணர்தல் போன்றவை பொதுவாக நோன்பு கற்றுத் தரும் மிகப் பெரும் பாடங்களாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், நோன்பு ஒரு முஸ்லிமை பூரண மனிதனாக்குகிறது. ரமழான் மாத நோன்பு, ஷவ்வால் மாத ஆறு நோன்புகள், வியாழன், திங்கள் ஆகிய வார நோன்பு, ஆஷுரா, அரஃபா மற்றும் ஷஃபான் மாத சுன்னத்தான நோன்புகள் மேற்கூறப்பட்ட உயரிய குறிக்கோள்களின் அடிப்படையில் எப்பொழுதும் வாழவே முஸ்லிம்களைப் பயிற்றுவிக்கின்றன. இத்தகைய நோன்புகளை பெறும்போதனைகளாக மட்டுமின்றி தமது வாழ்விலும் செயல்படுத்திக் காட்டியவர்கள் தான் […]
ஒழிக்கப்படவேண்டிய ஒடுக்கத்துப்புதன் (ஷஃபர் மாதம் பீடை மாதமா???)
அரபி வருடத்தில் இரண்டாவது மாதமாகிய சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதும், அந்த மாதத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தாமல் தவிர்ப்பதும், அறியாமைக்காலத்தில் அரபிகளின் வழக்கம். அவ்வழக்கம் இன்றும் நம் சமுதாயத்தில் புரையோடி இருக்கின்றது. ஆனால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் அப்படி நியதி எதுவும்இல்லை. சபர் மாதத்தின் இறுதி புதன் கிழமைக்கு ஒடுக்கத்துப் புதன் என்று பழந்தமிழில் பெயர் சூட்டி அன்றைய தினத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், கடற்கரையிலும், பூங்காக்களின் புல்வெளிகளிலும் பொழுதைக் கழிப்பதும், அன்றைய தினத்தில் முஸீபத்துகள் […]
ஆஷுரா நோன்பு.. நாம் பெற வேண்டிய படிப்பினைகள்…
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓராண்டுக்கு) பன்னிரண்டு ஆகும். இவ்வாறு அவன் வானங்களையும், பூமியையும் படைத்த அந்நாளில் விதித்தான். (9:36) நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறிய நிகழ்ச்சியை (ஹிஜ்ரத்தை) அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களின் வருடக் கணக்கு துவக்கப்பட்டுள்ளது. எனவே இதனை ஹிஜ்ரி என்று அழைக்கின்றனர். அல்லாஹ்வின் பேரருளால் நாம் ஹிஜ்ரி 1438ஐக் கடந்து 1439 ல் நுழைகின்றோம். ஹிஜ்ரி வருடக்கணக்கின் முதல் மாதம் முஹர்ரம் ஆகும். முஹர்ரம் என்பதற்குப் புனிதமானது – புனிதமிக்கது என்பது […]
சிறப்புக் கட்டுரை….
பேணப்பட வேண்டிய மனுக்கள்.. இழுக்காமல் துரித தீர்வு காண வேண்டிய விசயங்கள்… சுதாரிக்க வேண்டிய ஜமாத்தார்கள்… துன்பத்தில் இருந்து மீள வேண்டிய தம்பதிகள்… இஸ்லாமியனாய் பிறந்த ஒவ்வொருவனும் திருமண விஷயத்தில் இறைத்தூதர் வழியை அழகிய முறையில் பேணுகிறான் என்று சொல்லலாம்… அவ்வாறு ஒவ்வொருவரும் கடைபிடித்து வருகின்ற திருமண வாழ்வு என்பது சிலருக்கு இன்பம் தரும் தேனிலவு வாழ்க்கை, சிலருக்கு எண்ணாத அளவிற்கு இன்பமாகவும் அமைந்து விடுகின்றது… இவ்வாறு இன்பங்களை காண்போர் தன் வாழ்க்கையை இனிமையாக கொண்டு சென்று […]
ஆடித் தள்ளுபடியை நாமும் ஆனந்தமாக மாற்றிக் கொள்ளலாமே??
ஆடி மாதம் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், முக்கியமாக ஜவுளி வியாபார நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் ஆடி மாத விளம்பரங்களைத் தொடங்கி விட்டன. 5 சதவீதம் தொடங்கி 50 சதவீதம் வரை தள்ளுபடி விளம்பரங்களை நாம் பல விதமாக ரேடியோ, தொலைக்காட்சி, சமூக வலைதளம், சுவரொட்டி, பிரசுரங்கள் என்று பல முனைகளில் இருந்து பொதுமக்களை திண்டாட வைக்கின்றனர். ஒரு காலத்தில் ஆடி மாதம் என்றாலே ராசி இல்லாத மாதம், வியாபாரமே இருக்காது […]
புனித ரமலான் மாதம்.. ஆன்மீகம் கடந்து பொழுதுபோக்கு மாதமாக மாறுகிறதோ??
ரமலான் மாத சிறப்புக் கட்டுரை.. புனித ரமலான் மாதம் நன்மைகள் நிறைந்த சிறப்பான மாதம், பாவமன்னிப்பு பெறும் பாக்கியமிக்க மாதம், மனிதனை சீர்படுத்தும் மகத்தான மாதம், நம் உள்ளங்களை நெறி படுத்தும் உன்னதமான மாதம், இறையச்சத்தை அதிகரிக்கும் வலிமையான மாதம். இப்படி எண்ணற்ற சிறப்புகள் கொண்ட இந்த சீர்மிகு மாதத்தை அலட்சியம் செய்வதோடு அல்லாமல் பொழுதுபோக்கு மிக்க திருவிழா சீசனாக நாம் கடைபிடித்து வருகிறோமோ என்ற அச்சம் சமீப காலத்தில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ரமலான் மாத […]
நோன்பு பெருநாளும் தான தர்மங்களும்..
புனித ரமலான் மாதம் நம்மை வந்தடைய இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. இறைவனின் கொடை இறங்கும் மாதம், சைத்தான்கள் சங்கிலியால் பிணைக்கப்படும் மாதம், மனம் உருகி இறைவனிடம் கையேந்துபவர்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம். சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தும் மாதம். இந்த புனித நாம் அடையும் ஒவ்வொரு வருடமும் அனேகருக்கு ஜகாத், ஃபித்ரா, ஸதக்கா, பெருநாள் காசு போன்ற காரியங்களில, ஈடுபடுவதும், அதைப் பற்றிய விவாதங்களில் ஈடுபடுவதும் நடக்கும். ஆனால் இவை மூன்றும் வெவ்வேறான செயல்பாடுகள் என்பதை […]
முஸ்லிம் தனியார் சட்டம் – சமூக மாற்றத்துக்குத் தயாராவோம் …
முஸ்லிம் தனியார் சட்டம் நம்மை படைத்த இறைவனால் அருளப்பட்ட வாழ்வியல் சட்டம் எனப் பேசவும் எழுதவும் செய்கின்றோம் . எந்தவொரு சட்டமாக இருந்தாலும் அந்தச் சட்டத்தால் விளையக்கூடிய பயன்களும் நற்பெறுகளும் ஏடுகளிலும், தாள்களிலும் மட்டுமே பொறிக்கபட்டிருக்கு மேயானால் அதனை பயனுள்ள சட்டமாக எவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . அன்றாட நடைமுறை வாழ்வில் அவற்றின் நன்மைகளையும் நற்பேறுகளையும் நுகர்ந்தால் மட்டுமே அதைப் பயனுள்ள சட்டமாக மக்கள் ஏற்றுகொள்வார்கள். எனவே இஸ்லாமிய குடும்பவியல் சட்டங்கள்படி வாழ்வை முழுமையாக மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியது […]
இன்று உலக தண்ணீர் தினம் – ‘தண்ணீர்’ இறைவனின் மாபெரும் அருட்கொடை
கட்டுரையாளர் : பஷீர் அஹமது உஸ்மானி தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பிக்கும் முன்னரே தண்ணீர் வறட்சியும் ஆரம்பித்து விட்டுள்ள நிலையில் இன்று மார்ச் 22. சர்வதேச தண்ணீர் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. தற்போது உலக அளவில் தண்ணீர் ஒரு மாபெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து […]
இன்று உலக நுகர்வோர் தினம் – இஸ்லாத்தில் பேணி காக்கப்படும் நுகர்வோர் உரிமைகள்
கட்டுரையாளர் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,) இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகில், நமது உரிமைகளையும், நாட்டில் நடைபெறும் ஒழுங்கீனங்களையும் பற்றி எடுத்துரைக்க நமக்கு நேரம் இல்லை. நாம் நம், அறியாமையினால் ஏமாறுவது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். ஆனால் நாம் தெரிந்தே ஏமாற்றப்படுவது பொறுக்க முடியாத குற்றமாக கருதப்படுகிறது. நுகர்வோராகிய நாம், மிகுந்த விழிப்புடனும், எச்சரிக்கையுடனும், மற்றவரால் ஏமாற்றப்படாமலும் இருத்தல் அவசியம். நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக […]
You must be logged in to post a comment.