கந்து வட்டி உணர்ச்சிபூர்வமாக சிந்திப்பதை விட… செயல்வடிவில் சிந்திப்பதே பலன் தரும்..

நேற்று (24-10-2017) திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு குடும்பமே கந்துவட்டிகாரர்களின் கொடுமையால் தீ வைத்து கொளுத்திக் கொண்டு பலியாகியுள்ளார்கள்.  இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது. இந்த சம்பவத்திற்கு யாரைக் குற்றம் காண்பது?? புகார்களை அலட்சியப்படுத்திய அதிகாரிகளையா?? கட்டுப்படுத்த சட்டம் இருந்தும் நடைமுறைபடுத்தாதா அரசாங்கமா?? மனிதாபிமானம் இல்லாமல் ஒவ்வொரு நிகழ்வையும் காசாக்க நினைக்கும் ஊடகத்துறையா?? மனிதஉயிர்களுக்கு மதிப்பில்லாமல் அதிலும் ஜாதி விஷத்தை கக்கும் அரசியல்வாதிகளா?? இவ்வாறு அடுக்கிக் கொண்டே போனால் அனைவரும் குற்றவாளிக்கூண்டில் […]

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் – 3…

முன்னுரை:- அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல்,  உலகமயம்,  மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர். அப்சலை தூக்கிலிடாதே (அருந்ததி ராயின்), தோழர்களுடன் ஒரு பயணம் ஆகியவை இவரது முக்கிய மொழியாக்க நூல்கள். ஒளிராத இந்தியா, மலத்தில் தோய்ந்த மானுடம் ஆகியவை இவரது இரு கட்டுரை தொகுதிகள். காஷ்மீர் குறித்து “தலித் முரசு” இதழில் வெளியான “புதைக்கப்டும் பள்ளத்தாக்கு”  என்ற இவரது […]

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் 1..

முன்னுரை:-  அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல், உலகமயம், மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர்.   தனது எழுத்துப் பணிகளுக்காக கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தொடர் பயணங்கள் மேற்கொண்டு வருபவர். குஜராத், ஒரிசா, விதர்பா, ஜார்கண்டு, ஆந்திரா என இந்தியாவெங்கும் களப்பணிக்காக மாதத்தின் பாதி நாட்கள் பயணத்திலேயே இருப்பவர். மிக அபூர்வமான தகவல்களையும், பார்வைகளையும் தமிழக மக்களுக்கு வழங்கி வருபவர்களில் […]

மக்களை சீரழிவு பாதைக்கு அழைத்துச் செல்லும் “டாஸ்மாக்…”மக்களின் தரத்தை உயர்த்த வேண்டிய அரசாங்கம் நடுவீதிக்கு உழைக்கும் வர்க்கத்தை கொண்டு வந்த அவலம்…

மக்களின் நலன் மூத்த அக்கறை உள்ள ஒரு அரசாங்கத்தின் கடமையே மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி அவர்களுக்கு நல்வாழ்வு வழங்குவதுதான். ஆனால் இந்தியாவில் அதுவும் முக்கியமாக தமிழகத்தில் மக்கள் நலன் என்பதே மறந்தவர்களாக, மக்கள் எந்நிலையில் இருக்கிறார்கள், எதை மக்கள் விரும்புகிறார்கள், எதை வெறுக்கிறார்கள் என்பதை மறந்து செயல்பாடும் அரசாங்கம் என்றால் அது தமிழக அரசாங்கமாகத்தான் இருக்க முடியும். இதற்கு முக்கிய உதாரணம் “டாஸ்மாக்” எனும் மக்களின் பணத்தையும், உயிரையும் சிறிது சிறிதாக உறிஞ்சும் வியாபாரம், அரசாங்கமே தலையேற்று […]

சிறப்புக் கட்டுரை….

பேணப்பட வேண்டிய மனுக்கள்.. இழுக்காமல் துரித தீர்வு காண வேண்டிய விசயங்கள்… சுதாரிக்க வேண்டிய ஜமாத்தார்கள்… துன்பத்தில் இருந்து மீள வேண்டிய தம்பதிகள்… இஸ்லாமியனாய் பிறந்த ஒவ்வொருவனும் திருமண விஷயத்தில் இறைத்தூதர் வழியை அழகிய முறையில் பேணுகிறான் என்று சொல்லலாம்… அவ்வாறு ஒவ்வொருவரும் கடைபிடித்து வருகின்ற திருமண வாழ்வு என்பது சிலருக்கு இன்பம் தரும் தேனிலவு வாழ்க்கை, சிலருக்கு எண்ணாத அளவிற்கு இன்பமாகவும் அமைந்து விடுகின்றது… இவ்வாறு இன்பங்களை காண்போர் தன் வாழ்க்கையை இனிமையாக கொண்டு சென்று […]

கீழக்கரையில் இரவு நேரத்தில் களை கட்டும் கணவாய் மற்றும் இரால் வியாபாரம்.

மீன் பிடி தடை காலம் நிறைவடைந்ததால் கணவாய் மற்றும் இரால் சீசன் தொடங்கி உள்ளது. அதனை தொடர்ந்து இரவு நேரத்தில் முஸ்லிம் பஜார் பகுதியில் கணவாய் மற்றும் பூச்சி வகையை சார்ந்த இரால் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. ஒரு கிலோ கணவாய் மற்றும் இரால் 350 இருந்து 400 வரை விற்கப்படுகிறது. தற்போது விற்கப்படும் இரால் மற்றும் கணவாய் வகைகள் கீழக்கரை பாரதி நகர் கடல் பகுதியில் பிடிக்கப்படுகிறது என்பது குறிப்படத்தக்கது.

விபத்துக்கள் பாடம் தராதோ?? – சிறப்பு விழிப்புணர்வு கட்டுரை..

சிறப்பக் கட்டுரை இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்….. அந்தோ பரிதாபம்… சுப்ஹானல்லாஹ்… எத்தனை எத்தனை உபதேசங்கள்…. எத்தனை எத்தனை எச்சரிக்கைகள்….. ஆனாலும் மீண்டுமொரு “ரமலான்” விபத்து எனும் போது மனது பதை பதைத்து போகிறது…. வயது 17 தான்…. இது போன்ற பிள்ளைகளை பற்றி சொல்லவேண்டுமானால் இரு விதமாக சொல்லலாம்.. ஒன்று பெற்றோர்கள் பிள்ளைகளை எச்சரிக்காதது.. இரண்டாவது பெற்றோர்கள் எச்சரிக்கின்ற போதும் பிள்ளைகள் உதாசீனப்படுத்துவது… இரண்டில் ஏதுவாக இருந்தாலும் இரண்டுமே கையிலெடுக்க கூடாத முறைகளல்லவா…. […]

ரமலான் மாதம் இஸ்லாமியருக்கு மட்டுமல்ல.. மனித குலத்துக்கே புனித மாதம்..

சிறப்புக் கட்டுரை.. புனிதமிக்க ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது ஒவ்வொரு இஸ்லாத்தை வாழ்கை நெறியாக கொண்டவர்கள் அனைவருக்கும் கடமையாகும். முஸ்லிம்கள் நோன்பு நோற்பது போல் மாற்று மத சகோதரர்களும் மருத்துவ ரீதியான நன்மைகள் கருதி நோன்பு வைப்பது பரவலாக இப்பொழுது காணப்படுகிறது. நோன்பு வைப்பதினால் ஏற்படும் நன்மைகள் பற்றி பல அமெரிக்க மருத்துவ ஆய்வுகள் வெளிவந்நுள்ளன. நோன்பு வைப்பதன் மூலம் மன ரீதியான அமைதியான நன்மைகளை அடைவது போல் மருத்துவ ரீதியாக உடலின் பல உறுப்புகளுக்கு நன்மை […]

விண்ணைத் தொடும் மருத்துவர்கள் ஆலோசனைக் கட்டணம்.. தவிக்கும் பொதுமக்கள்….

கீழக்கரையில் கடந்த சில வருடங்களில் பல மருத்துவமனைகள் ஓவ்வொரு தெருக்களிலும் ஆரம்பம் செய்யப்பட்டு இருப்பதை நாம் காண முடியும். ஆரம்ப காலத்தில் 25ரூபாயில் தொடங்கிய மருத்துவர்கள் ஆலோசனைக் கட்டணம் குறுகிய காலத்தில் கிடுகிடுவென உயர்ந்து தற்பொழுது அடிப்படை ஆலோசனைக் கட்டணம் கீழக்கரையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ரூபாய்.150 ஆக உயர்ந்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஏழை மற்றும் நடுத்தெரு மக்களை மிகவும் சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விசயம், கடந்த காலங்களில் ஓவ்வொரு மருத்துவரும் வெவ்வேறு […]

மாற்றத்தை விரும்பும் மணல்மேடு சங்கமம் …ஒரு சாமானியனின் ஆதங்கம்…

சிறப்புக் கட்டுரை.. முன்னுரை:- கீழக்கரை மக்களுக்கும், அதன் சுற்றுவட்டார மக்களுக்கு நோன்பு மற்றும் ஹஜ் பெருநாள் இரண்டும், தொழுகைக்கு பிறகு அதிகமாக எதிர் நோக்கும் விசயம் மணல் மேடு சங்கமம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, இஸ்லாமியர்கள் முதல் பிற சகோதரர்கள் வரை எந்த பேதமின்றி மூன்று நாட்களுக்கு கூடும் இடம் பெருநாள் மணல் மேடு. ஆனால் முற்காலத்தில் இருந்த நோக்கமும், ஒற்றுமையும், சகோதரத்துவமும் இன்றைய நவீன உலகில் எவ்வாறு உருமாற்றம் அடைந்துள்ளது என்பதை அழகிய முறையில் […]

மாட்டு மூத்திரத்தைக் குடிக்க ஆதரிக்கும் மத்திய அரசு… மாட்டிறைச்சிக்கு தடை..

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மூன்று வருடத்தை நிறைவு செய்யும் பரிசாக சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் விதமாக சுற்றுப் புற சூழல் அமைச்சகம் மூலம் பசு, எருமை, ஒட்டகம் போன்ற மிருகங்களை இறைச்சிக்காக வெட்டுவதற்கும், விற்பதற்கும் தடை விதித்துள்ளது. இது தனி மனிதனின் அடிப்படை உரிமையை பறிக்கும் விதமாகும். ஒரு மனிதன் தான் எதை உண்ண வேண்டும் என்பதை அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டிய மிக மோசமன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். இந்த சட்டம் […]

தொடர்பு எல்லைக்கு உள்ளே வாருங்கள்!

செடிகளைப் போன்றே உறவுகளும். அடிக்கடி நீர் பாய்ச்ச வேண்டும்.. மினுக்க வேண்டும்.. அருகே செல்ல வேண்டும்.. உரமிட வேண்டும். இல்லையேல் செடிகளைப் போன்றே உறவுகளும் வாடிவிடும். அவர்கள் நம்மைவிட்டு விலக முற்படும்போது நாம் அடிக்கடி அருகே செல்ல வேண்டும். அதிக அன்பு வைத்திருப்பவர்களுக்கு மத்தியில்தான் அடிக்கடி பிணக்கு ஏற்படும். “என்னதான் இருந்தாலும் என்னோடு அவர் இவ்வாறு நடந்துகொண்டாரே..” என்பதுதான் ஒரே ஆதங்கமாக இருக்கும். அன்பும் நட்பும் மட்டுமல்ல.. குடும்ப உறுவுகள் சிதைவதற்கும் ஏதோ ஒரு சிறு காரணம் […]

கிழக்கு ஆசியா நாடுகளில் விரும்பி சாப்பிடப்படும் இராமநாதபுரம் மாவட்ட தென்னக கடல் பகுதியில் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி ஆகும் சிங்கி இறால்…

இராமநாதபுரம் தெற்கு கடல் பகுதி மீன் பிடி தொழிலில் பிரசித்தி பெற்றதாகும்.இந்த பகுதிகளில் பிடிக்க படும் மீன்கள், இறால், கணவாய் மற்றும் கடல் உணவுகள் இப்பகுதி மக்களின் தேவைக்கு போக வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இம் மாவட்ட கடலோர பகுதியில் பிடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் கடல் உணவுகளில் சிங்கிஇறால் முதல் வரிசையில் இருக்கின்றது. சிங்கிஇறால் கிழங்கு ஆசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பேங்காங் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு […]

மலேசிய தூதரக அதிகாரிகள் கீழக்கரையை ரசித்து.. ரசித்து .. பார்த்து மகிழ்ந்தனர்…

கீழக்கரையில் கடந்த சில தினங்களாக மலேசிய தூதரக அதிகாரிகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். இச்சுற்றுப்பயணத்தில் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க பகுதிகளை சுற்றிப்பார்த்தனர். அவர்களுடைய பயணத்தைப் பற்றி வரலாற்று ஆய்வாளர் அபூ சாலிஹ் கூறுகையில், கீழக்கரையில் இரவு நேரங்களில் நடந்தே சென்று கடைகளயும், உண்பண்டங்களையும் மிகவும் ரசித்ததோடு இல்லாமல், மலேசியாவின் சாயல் அதிகமாக இருப்பதாக வியந்தனர். மேலும் கீழக்கரை வரலாற்று அம்சங்கள் அடங்கிய புத்தகத்தை கீழக்கரை ஆர்வலர்களின் மலேசியா அதிகாரிகள் ஆர்வத்துடன் வேண்டுகோள் வைத்தனர். மேலும் மலேசியா […]

இன்று உலக நுகர்வோர் தினம் – இஸ்லாத்தில் பேணி காக்கப்படும் நுகர்வோர் உரிமைகள்

கட்டுரையாளர் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,) இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகில், நமது உரிமைகளையும், நாட்டில் நடைபெறும் ஒழுங்கீனங்களையும் பற்றி எடுத்துரைக்க நமக்கு நேரம் இல்லை. நாம் நம், அறியாமையினால் ஏமாறுவது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். ஆனால் நாம் தெரிந்தே ஏமாற்றப்படுவது பொறுக்க முடியாத குற்றமாக கருதப்படுகிறது. நுகர்வோராகிய நாம், மிகுந்த விழிப்புடனும், எச்சரிக்கையுடனும், மற்றவரால் ஏமாற்றப்படாமலும் இருத்தல் அவசியம். நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக […]

கீழக்கரையில் போக்குவரத்துக்கு இடையூறு தரும் மணல் குவியல்களால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் !

கீழக்கரை நகரில் புதிய வீடு கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இதனால் கீழக்கரையில் செழிப்பான தொழிலாக, கட்டுமானத் தொழில் இருந்து வருகிறது. கீழக்கரை நகரின் குறுகிய தெருக்களுக்குள், வீடு கட்டுபவர்களால் கொட்டப்படும் மணல், ஜல்லி, செங்கல், கட்டுமான இடிபாடுகள் போன்றவைகள்,போக்குவரத்து மிகுந்த நேரங்களில் கொட்டப்படுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாமல் இந்த தெருக்களை கடந்து செல்ல முயலும் இரு சக்கர வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து கீழக்கரை சட்டப் […]

இன்று தியாகிகள் தினம், சுதந்திர தியாகத்தில் இஸ்லாமியர் பங்கு..

ஜனவரி 30 இந்திய நாட்டின் தந்தை என்றழைக்கப்படும் காந்தியடிகள் மூச்சு நிறுத்ப்பட்ட நாள். அதுவே இன்று தியாகிகளின் திருநாளாக நினைவு கூறப்படுகிறது. ஆனால் அதே நாளில் மூச்சை நிறுத்தியவர்களின் பேரணியும் நடத்துவது அந்த தியாகத்தினை கொச்சைப் படுத்துவதாகவே இருக்கிறது. நம் நாட்டின் சுதந்திர போராட்ட தியாகிகளின் ஒவ்வொருவரின் தியாகத்தின் பின்னாலும் நிச்சயமாக ஒரு இஸ்லாமியனின் பங்களிப்பு உறுதியாக இருந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. நம் ஊர் கப்பலோட்டிய தமிழனுக்கு முதலில் பொருளாதாரத்தை வாரி வழங்கியவர் ஹாஜி […]

பெப்சி கோக் புறக்கணிப்பு … ஆனால் பவன்டோ உடல் நலத்திற்கு நன்மை பயக்கிறதா???

ஜல்லிக்கட்டு போராட்டம் பிரமாண்டமாக நடந்து முடிந்து இருக்கிறது. ஊடகங்களில் குறிப்பிடப்படுவது போல் நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் யாரோ சிலரால் தீர்மானிக்கப்பட்ட திட்டத்துடன் முடிந்தது மிகவும் துரதிஷ்டமானது. ஜல்லிக்கட்டில் ஆரம்பித்த போராட்டம் இப்பொழுது பெப்சி கோக் குளிர்பானத்தை வெளிநாட்டு பானம் என்று கூறி புறக்கணிக்கும் நிலைக்கு வந்து நிற்கிறது. அதே சமயம் வெளிநாட்டு பானத்தை புறக்கணிக்கிறோம் என்ற நிலைபாட்டில் பவன்டோ எனும் ஒரு தனி முதலாளியின் வருமானத்திற்கு இலவசமாக விளம்பரம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மையான நிலைமை. […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!