கலைஞர் கருணாநிதி: 95 சுவாரஸ்ய தகவல்கள்…

1. நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும். 2. கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. அவருக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும் முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம். 3. கிரிக்கெட் காதலர் கருணாநிதி […]

கலைஞர் கருணாநிதி – ஒரு சகாப்தம் – பெருந்தலைவர் நம்மை விட்டு மறைந்தார்..

கலைஞர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட மு.கருணாநிதி இன்று (07/08//2018) மாலை 6.10 மணிக்கு இந்த உலகை விட்டு மறைந்து விட்டார்.  இந்தியா ஒரு மூத்த தலைவரை இழந்து விட்டது.  அவர் அரசியலில் மத்தியில் நேரு முதல் மோடி வரையிலும், மாநிலத்தில் பெரியார் முதல் எடப்பாடி வரை சந்தித்த அனுபவமுள்ளவர்.  தொடர்ந்து அதிக முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த பெருமை உடையவர்.  திமுக எனும் மாபெரும் இயக்கத்துக்கு 50வருடம் தொடர்ந்து தலைமை பொறுப்பு வகித்தவர்.  அவர் கடந்து […]

எங்கே செல்கிறது நம் பத்திரிக்கை சமுதாயம்…

ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிக்கை துறை. ஆனால் அந்த நான்காவது தூணை மற்ற துணை தூண்களே சேதப்படுத்த எத்தனித்து இருப்பது மிகவும் வேதனைக்குரிய விசயம். சமீபத்தில் பிற நிருபர்கள் எடுத்த நிலைபாட்டுக்கு ஒத்து வராத ஒரு நிருபரை மற்ற நிருபர்கள் தாக்கிய சம்பவம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தேனி பிரஸ் கிளப் செயலாளர் மற்றும் சத்தியம் டிவி மாவட்ட நிருபர் ஒருவர் சக நிருபர்களால் பொதுமக்கள் மத்தியில் தாக்கப்பட்டது மிகவும் […]

ரத்த புற்று நோயை குணமாக்குவது இனி எளிது தான் – சென்னை அரசு மருத்துவமனையின் புது முயற்சி.

இரத்தப் புற்று நோயை குணமாக்கும் வகையில் சென்னை அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. உயிர்க்கொல்லி நோயான ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு தன் வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருந்தவர் சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த சீனிவாசன்த,னியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத சூழ்நிலையில் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம் திறக்கப்பட்டதை அறிந்ததும் அங்கு வந்து சீனிவாசன் சேர்ந்துள்ளார் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், எலும்பு மஜ்ஜை மாற்று […]

1977 தமிழக அரசியல் வரலாறு மீண்டும் திரும்புமா? – சிறப்புக் கட்டுரை..

பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி காலத்தில் திமுகவின் இரட்டை குழல் துப்பாக்கிகளாக கலைஞர் கருணாநிதியும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் இருந்து வந்தார்கள். அப்போதைய திமுகவின் மாநில பொருளாளராக எம்.ஜி.ஆர் சிறப்பாக பணியாற்றி வந்த நேரமது.அண்ணாவின் மறைவுக்கு பின் திமுகவின் அரசியல் பயணத்தில் பல்வேறு மாற்றங்கள் அரங்கேறியது. கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே ஏற்பட்ட அதிகார போட்டியினால் திமுகவை விட்டு எம்.ஜி.ஆர் வெளியேறி அண்ணா திமுக என்னும் தனிக்கட்சி உருவாக்கிய போது அப்போதைய தலைவர்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியாய் இருந்த திமுகவுடனே இருந்தார்கள். […]

மனதில் விரியும் அந்த நாள் பெருநாள் தினம்…

கீழக்கரை… ரமலான் மாதம் பிறை 27 பிறந்தவுடனே எல்லோருடைய மனிதிலும் பெருநாள் குதூகலம் கிளம்பிவிடும்.  சிறப்பான முறையில்  26 நோன்பு திறந்தவுடனே 27 இரவுத் தொழுகைக்கு ஆயத்தமாகிவிடுவார்கள்.. வயதானவர்கள் வரை சிறு குழந்தைகள் வரை..  பள்ளிவாசலை மிதிக்காதவர்கள் கூட சொந்தங்களுடனும், பந்தங்களுடனும் நீண்ட 27ம் நாள் இரவுத் தொழுகை.  பள்ளி வாயிலில் சில மணித்துளிகள் தொழுது விட்டு கடைசியில் கேட்க இருக்கும் சிறப்பு துஆவுக்காக காத்து இருக்கும் இஞைர் கூட்டம்.  இரவு நேரத் தொழுகையில் கொடுக்கப்படும் சிறப்பான […]

“அவள்” சமூகத்தின் – பலம் – சிறப்புக் கட்டுரை..

“பெண்கள்” மறைக்கப்பட்ட பலம், ஆம்- ஏனென்றால், “பெண்கள்” என்ற வார்த்தையை கேட்கும்போது முதலில் நம் மனதில் தோன்றுவது? பெண் என்பவள், ஆண் வர்க்கத்தின் பார்வையில் ஒரு தரம் குறைந்தவளாகவே பார்க்கப்படுகிறாள்.  இந்த அடிமைத்தனமான எண்ணமே பல யுகங்களாக மேலோங்கி நிற்கிறது என்பது நிதர்சனம். ஏன் இந்த உலகம்  பெண்களை தவறான கண்ணோட்டத்துடன்  பிணைந்துள்ளது?  ஏன் பெண்கள் தங்கள் அதிகாரங்களை வெளிப்படுத்த  முடியாத சூழல் ?  இந்த கண்ணோட்டம் மாற,  மனித குலத்திற்கு கிடைத்த பொக்கிஷமே பெண்கள்தான் என்பதை […]

வன்மத்தை வளர்க்கும் சமூக வலைதளத்தின் “STATUS MESSAGE”..

இன்று விஞ்ஞானம் வளர்ந்து வரும் நவீன உலகத்தில் ஒரு மனிதன் மனித உணர்வை விட சமூக வலை தளங்கள் மூலமாக எழுதுவதும், பேசுவதும் மட்டுமே நிஜ உலகம் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருகிறான்.  இதன் விளைவு ஆரோக்கியமாக வளர வேண்டிய உறவுகள் வேரோடு அழிந்து வரும் அபாயத்தின் உச்சி நிலைக்கு செல்கிறது என்பதை மனிதன் மறந்து விடுகிறான். இன்று பொதுவாக ஒருவர், மற்றவருடன்  எதிர்மறையான கருத்துக்கள் கொண்டிருந்தால், அதை நேரடியாக வெளிப்படுத்தாமல் மறைமுகமாக வெளிப்படுத்த கூடிய ஆயுதமாகவே […]

நீட் தேர்வு – அகதிகளாக்கப்பட்ட தமிழ் மாணவர்கள், வஞ்சிக்கும் ஆட்சியாளர்கள்…சாமானியனின் வேதனை பார்வை..

தொலை தூர நகரங்களுக்கு.. தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு.. அவசர உதவி எண்கள் அறிவிக்கப்படுள்ளன.. அவர்கள் ஒன்றும் ஆழிப்பேரலையால் சூழ்ந்து கொள்ளப்பட்டிருக்கவில்லை.:..   அவர்களுக்கு பயண உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.. அவர்கள் கடும் புயலில் காணாமல் போய்விடவில்லை..   அவர்களுக்கு உதவத் தயார் என்று கருணைக் கரங்கள் நீட்டப்படுகின்றன.. அவர்கள் பூகம்பங்களில் இடுபாடுகளில் சிக்கிக்கொண்டிருக்கவில்லை..   அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படவிருக்கிறது அவர்கள் ஒரு கலவரத்தில் சிதறடிக்கபட்டவர்கள் அல்ல..   அவர்களுக்கு தங்குமிடம் தர யாரோ அன்புக் கரம் நீட்டுகிறார்கள்… அவர்கள் […]

மே தினம் – சிறப்பு பார்வை…

மே.1, தொழிலாளர்கள் தினம், உழைக்கும் வர்க்கம் அனைவரும் கொண்டாடக் கூடிய நாள். இந்த மே.1 தொழிலாளர் தினமாக, சங்க சட்டமாக 1707 ம் ஆண்டு இயற்றப்பட்டது.  இந்த மே தினம் பல கால கட்டங்களில், தங்கள் உரிமைகளுக்காக போராடியதை நினைவு கூறும் நிகழ்வே இந்த மே தினம்.  இன்று தொழிலாளர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு திட்டத்திற்கு பின்னாலும் பல தொழிலாளியின் அர்ப்பணிப்பும், போராட்டமும் நிச்சயமாக இருக்கும். இப்பொழுது புதிதாக வேலைக்கு சேரும் தொழில் வர்க்கம், தொழிற் சங்கங்களினால் எந்த […]

இரண்டு மாத விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது என்ன?…

கோடை விடுமுறை தொடங்கி விட்டது, Mobile,TV என்று வீணாக பொழுதை போக்காமல் கீழ்கண்ட செயல்களை குழந்தைகளை ஈடுபட வைக்க  முயற்சிக்கலாம், அவர்களையும் சிரமப்படுத்தாமல், பொழுது போக்காக, அவர்களே விரும்பி செய்யும்படி.. 1) உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்தச்செல்லுங்கள், வங்கியில் உள்ள அனைத்து சலான்களையும் (Chalan) நிரப்புவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள், A.T.M ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், சேமிப்பின் அவசியத்தையும் அக்கறையுடன் சொல்லிக்கொடுங்கள்.   2) அதுபோல அருகில் உள்ள […]

இழந்து விட்டோம் நாங்கள் பெற்றெடுக்காத பெண் பிள்ளையை – ஒரு தாயுள்ளம் கொண்ட சகோதரியின் பாசக்குமுறல்..

நமது மனமோ அல்லது அவளை பெற்றெடுத்தவர்கள் மனமோ வேதனை படுவதை விடவும் கொடூரமாக நமது மகள் ஆஷிஃபா உடல் ரீதியாக கடுமையான வேதனையை அடைந்திருப்பாளே… நம்மால் அந்த வேதனையை நினைத்தும் பார்த்திட இயலவில்லை… கண்கள் குளமாகிறது,.அங்கமெல்லாம் கொதிக்கின்றது …😥 இது வரை எத்தனையோ சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாலும்,  அதற்கான காரணம் காமவெறி ஒன்றாகவே இருந்தது… ஆனால் இந்த ஆசிஃபா என்ற நமது மகளோ இஸ்லாமிய பெண் என்ற காரணத்தினால் காவி காயவர்களால் தொடர்ந்து எட்டு நாள்களுக்கும் […]

அசிபாவுக்கு நீதி-, ஆக்கம்-அ.முத்துக்கிருஷ்ணன்…

#justiceforasifa எட்டு வயது அசிபா பானு ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் ஜனவரி 10, 2018 அன்று காணாமல் போனாள், அவளது இல்லத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அசிபாவின் உடல் ஜனவரி 17,2018 அன்று கிடைத்தது. அசிபாவை கடத்தியவர்கள் அவளை கொலை செய்வதற்கு முன்பாக பலாத்காரம் செய்திருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. ஜனவரி 10 அன்று அசிபா காணாமல் போனாள் என்று காவல்நிலையத்தில் புகாரளித்தும் அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை மாறாக அசிபாவின் பெற்றோரை நீங்களே தேடுங்கள் […]

மக்கள் நீதி மன்றம் மூலம் ஏழை மக்களுக்கு உடனடி தீர்வு – இலவச சட்ட உதவிகள் வழங்கி தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சிறப்பான சேவை – வீடியோ விளக்கத்துடன்..

நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகள், சமரசம் ஏற்படக் கூடிய வழக்குகள் உள்பட பல்வேறு வகையான வழக்குகளுக்கு மக்கள் நீதி மன்றம் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் மாதந்தோறும், சட்ட உதவி முகாம்கள் நடத்தப்பட்டு, ஏழை-எளிய மக்களுக்கு கட்டணமின்றி வழக்குகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மக்கள் நீதி மன்றம் அழைக்கப்படும் லோக் அதாலத், தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலகம், எழும்பூர், […]

கீழக்கரை நகராட்சியில் ஒரே நாளில் மாயமான 10000 பேர் – குளறுபடி செய்த அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய சட்டப் போராளிகள் கோரிக்கை..வீடியோ விளக்கம்..

கீழக்கரை நகராட்சியில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியும், சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக பெறப்பட்ட ஆவணங்களின் படியும், கீழக்கரை நகராட்சியின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் பிரகாரமும், கீழக்கரை நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 47730 ஆகும். அதில் ஆண்கள் எண்ணிக்கை 25392 , பெண்கள் எண்ணிக்கை 22338. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள மறு வரையறை வார்டு பட்டியலில் கீழக்கரை நகராட்சியின் 2011 ஆம் ஆண்டைய மொத்த மக்கள் […]

பள்ளி மாணவர்களை சீரழிக்கும் போதை புகையிலை ‘ஜைனி கைனி’ – துக்கத்தில் தாய்மார்கள், தூக்கத்தில் அதிகாரிகள், கீழக்கரையில் தாராளமாக கிடைக்கும் அவலம்…

பள்ளி சிறார்களையும், கல்லூரி மாணவர்களையும் குறி வைத்து களம் இறங்கிய போதை புகையிலை சந்தையில் பான் பராக், சாந்தி, மாணிக்சந்த் வரிசையில் போட்டியாக உருவெடுத்த CHAINI KHAINI ‘ ‘ஜைனி கைனி’ எனும் பெயரிடப்பட்ட போதை புகையிலை கடந்த 2005 ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் தமிழகத்தின் மாநகரங்களில் மட்டுமே காலூன்றி கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்தது. பின்னர் மெல்ல மெல்ல அடியெடுத்து கிராமங்களிலும், பட்டி தொட்டிகளிலும் ‘ஜைனி கைனி’ போதை புகையிலையை மெல்லாத பள்ளி, கல்லூரி இளந்தளிர்கள் […]

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் – 6…

அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல்,  உலகமயம்,  மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர். அப்சலை தூக்கிலிடாதே (அருந்ததி ராயின்), தோழர்களுடன் ஒரு பயணம் ஆகியவை இவரது முக்கிய மொழியாக்க நூல்கள். ஒளிராத இந்தியா, மலத்தில் தோய்ந்த மானுடம் ஆகியவை இவரது இரு கட்டுரை தொகுதிகள். காஷ்மீர் குறித்து “தலித் முரசு” இதழில் வெளியான “புதைக்கப்டும் பள்ளத்தாக்கு”  என்ற இவரது கட்டுரை […]

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் – 5…

அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல்,  உலகமயம்,  மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர். அப்சலை தூக்கிலிடாதே (அருந்ததி ராயின்), தோழர்களுடன் ஒரு பயணம் ஆகியவை இவரது முக்கிய மொழியாக்க நூல்கள். ஒளிராத இந்தியா, மலத்தில் தோய்ந்த மானுடம் ஆகியவை இவரது இரு கட்டுரை தொகுதிகள். காஷ்மீர் குறித்து “தலித் முரசு” இதழில் வெளியான “புதைக்கப்டும் பள்ளத்தாக்கு”  என்ற இவரது கட்டுரை […]

இந்த வருட ஷார்ஜா புத்தக கண்காட்சி கண்ட ஈர்ப்பு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்..

ஷார்ஜா புத்தகக் கண்காட்சி உலகின் மூன்றாவது மிகப்பெரிய கண்காட்சியாகும். இந்த கண்காட்சியில் கிட்டத்தட்ட 64 நாடுகள் வருடா வருடம் பங்கேற்கின்றன. மேலும் ஆயிரத்திற்கும்  மேற்பட்ட பதிப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். சார்ஜா எக்ஸ்போ சென்டரில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் பதினைந்து லட்சம் புத்தகங்களுக்கும் மேலாக இடம்பெறும். —————————————————————————— “என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும், ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்ப, திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் […]

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் – 4…

அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல்,  உலகமயம்,  மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர். அப்சலை தூக்கிலிடாதே (அருந்ததி ராயின்), தோழர்களுடன் ஒரு பயணம் ஆகியவை இவரது முக்கிய மொழியாக்க நூல்கள். ஒளிராத இந்தியா, மலத்தில் தோய்ந்த மானுடம் ஆகியவை இவரது இரு கட்டுரை தொகுதிகள். காஷ்மீர் குறித்து “தலித் முரசு” இதழில் வெளியான “புதைக்கப்டும் பள்ளத்தாக்கு”  என்ற இவரது கட்டுரை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!