கீழக்கரை வடக்கு தெரு அல் அமீன் சகோதரர்கள் நடத்திய பெண்களுக்கான கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு..

கீழக்கரை வடக்குதெருவைச் சார்ந்த அல்அமீன் சகோதரர்கள் கடந்த மாதம் கீழ்கண்ட தலைப்புகளில் பெண்களுக்காக கட்டுரைப்போட்டிகள் அறிவித்து இருந்தனர். –    இஸ்லாம் கூறும் தலாக் சட்டம். –    இஸ்லாமிய குடும்பவியல். –    சமூக வலைதளங்களில் பெண்களின் கண்ணோட்டம் அதற்கான முடிவும் வெற்றி பெற்றவர்களின் விபரங்களையும் வெளியிட்டுள்ளனர். மேலும் அல்அமீன் சகோதரர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வீடு தேடி சென்று கொடுக்கப்படும் என்றும், கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

கீழக்கரையில் இலவச இருதய சிகிச்சை முகாம்..

கீழக்கரையில் 28-12-2016 மற்றும் 29-12-2016ஆகிய இரண்டு நாட்கள் காவேரி மருத்துவமனை மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் இருதய சிகிச்சை முகாம் இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 வரை தடைபெறும். இம்முகாமில் சகோ. MMK இபுராஹிம், இஸ்லாமிய பள்ளி தாளாளர் தலைமையுரையாற்றுகிறார். ஜனாப்.H. சிராஜுதீன், ஹமீதியா துவக்கப்பள்ளி தாளாளர் அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார். திரு. S.சர்வேஸ் ராஜ், IPS, இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் விழாவை […]

இப்படியும் ஊக்குவிக்கலாம் மதரஸா சிறார்களை.. அனைத்து மாணவர்களையும் வெற்றியாளர்களாக உருவாக்கும் அல் மதரஸத்துல் முஹம்மதியா .

கீழக்கரை வடக்குத்தெருவில் இயங்கி வரும் சிறுவர்களுக்கான அல் மதரஸத்துல் முஹம்மதியா என்ற இஸ்லாமிய பாட சாலை கடந்த பல வருடங்களாக ஓசையில்லாமல் இஸ்லாமிய அறிவை சிறுவர்களுக்கு போதித்து வருகிறது. இந்த பாடசாலை வடக்கு தெருவில் பல மார்க்கம் மற்றும் சமுதாய பணிகள் செய்து வரும் வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA) கீழ் இயங்கி வருவது என்பது கூடுதல் தகவலாகும். இங்கு 1. அடிப்படை ( Basic), 2. பட்டயப்படிப்பு ( Diploma) மற்றும் 3. […]

வட்டியில்லா அழகிய கடன் திட்டம் துவக்க விழா*

கீழக்கரையில் உள்ள பழமையான சமுதாய அமைப்புகளில் மிக முக்கியமான ஒன்று நாசா(NASA) என்றழைக்கப்படும் வடக்குத் தெரு சமூக நல அமைப்பாகும்.  அந்த அமைப்பு சார்பாக வடக்கு தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை (NASA Trust) ஒன்று ஆரம்பம் செய்யப்பட்டு வட்டியில்லா கடன் திட்டம் ஆரம்பம் செய்யப்பட உள்ளது.  அந்நிகழ்ச்சியின் விபரங்கள்  கீழே:- 🗓நாள் : *30-12-2016* வெள்ளிக்கிழமை *🕔நேரம் :மாலை 4 மணி முதல்* *🏢இடம்* “முஹ்யித்தீனியா ” பள்ளி வடக்குத்தெரு கீழக்கரை *🔹நிகழ்ச்சி ஏற்பாடு* […]

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தெருமுனைக் கூட்டம்

கீழ்க்கரையில் 22-12-216 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை சார்பாக மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மவ்லீதும் மீலாதும் என்ற தலைப்பில் சகோ. அப்துர்ரஹ்மான் ஃபிர்தௌசி அவர்களும், ஆடம்பரமும் அனாச்சரமும் என்ற தலைப்பில் சகோ. அபுபக்கர் சித்திக் அவர்களும் சிறப்புரையாற்றுகிறார்கள். இந்நிகழ்ச்சி நடுத்தெரு மதரஸத்து தவ்ஹீத் மதரஸா அருகில் மாலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறுகிறது. பெண்களுக்கும் தனி இட வசதியுள்ளது என்பது குறிப்பிடதக்கது. அனைத்து மக்களும் கலந்து […]

களை கட்டும் வடக்குத் தெரு.. சட்டப்போராளிகளுக்கு கிடைத்த வெற்றி.. நகராட்சி நிர்வாத்தின் அதிரடி நடவடிக்கை..

நீங்கள் படத்தில் காணும் குப்பைக் கிடங்கு கீழக்கரை வடக்குத் தெருவில் பல வருடங்களாக நோய் பரப்பும் கிடங்காக இருந்து வந்தது. பல ஆட்சிகள் மாறினாலும் காட்சி மட்டும் மாறவே இல்லை. சமீபத்தில் கீழக்கரை மக்கள் களம் மூலமாக பல சமூக ஆர்வம் கொண்ட சகோதரர்களால் சட்டப் போராளிகள் என்ற வாட்ஸ் அப் குழுமம் ஆரம்பம் செய்யப்பட்டது. இக்குழுமத்தின் மூலம் ஒவ்வொரு வாரமும் மக்களின் பொதுப் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு சம்பந்தப்பட்ட அரசாங்கள் அதிகாரிகள் கவனத்திற்கும் மற்றும்; முதலமைச்சர் […]

கீழக்கரையில் இலவச சேவை மையம் ஆரம்பம்….

கீழக்கரையில் இன்று காலை 10.30 மணியளவில் கீழக்கரை தாலுகா நகராட்சி கட்டிட அலுவலகங்கள் அமைந்திருக்கக் கூடிய பகுதியில் மலேரியா க்ளினிக் அருகில் இலவச சேவை மையம்  அனைத்து சமுதாய தன்னார்வ தொண்டர்களின் முயற்சியால் ஆரம்பம் செய்யப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் கீழக்கரையின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட பல சமூக சேவகர்கள் கலந்து கொண்டார்கள்.  இம்மையம் கீழக்கரை வட்ட அலுவலர் திரு.தமீம் ராசா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.    இம்மையத்தில் அனைத்து வகையான அரசு சம்பந்தப்பட்ட படிவங்களும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு,  பூர்த்தி […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!