ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் மிகவும் கண்ணியமிக்க நாட்களாகும். ஓரு மனிதன் இறைவனிடத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதன் அடிப்படையாக கீழக்கரையில் பல் வேறு அமைப்புகள் மற்றும் பள்ளிவாசல்களில் இரவு நேர சிறப்புத் தொழுகை நடத்துவது வழக்கம். இதன் தொடர்ச்சியாக கடந்த பல வருடங்களாக சமுதாய நலப் பணிகளில் ஈடுபட்டு வந்த வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) , தெரு மக்கள் இஸ்லாத்தின் இறைத்தூதர் வழியில் தொழுகை முறையை அமைத்துக் கொள்ளும் […]
Category: ஆன்மீகம்
இரத்த தானத்திலும் ஆம்புலன்ஸ் சேவையிலும் முன்னோடியாக திகழும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்..
இராமநாதபுரத்தில் உள்ள இரத்த தான வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை கடந்த 5 மாதத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பாக 123 நபர்கள் இரத்த தானம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நற்பணி செயல் மிகவும் பாராட்டுதலுக்குரிய விசயமாகும். இது சம்பந்தமாக தவ்ஹீத் ஜமாஅத்தின் இராமநாதபுரம் மாவட்டம் இரத்த தான பொறுப்பாளர் நசுருதீன் அவர்களிடம் கேட்ட பொழுது இதற்காக உழைத்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் இறைவன் அருள் புரிவானாக என்று […]
கீழக்கரை நடுத்தெரு ஜும்ஆ பள்ளியில் இன்று சிறப்பு சொற்பொழிவு..
கீழக்கரை நடுத்தெரு அல் மஸ்ஜிதுல் ஜாமிஉ, ஜும்ஆ பள்ளியில் இன்று (12-06-2017), ரமலான் பிறை 17 திங்கள் கிழமை பின்னேரம் இரவுத் தொழுகைக்குப் பிறகு சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்த பத்ர் தின சிறப்பு சொற்பொழிவு நடைபெறுகிறது. இச்சொற்பொழிவில் சிறப்பு பேச்சாளர்களாக ஹாபிஸ். அப்துல் கனி மற்றும் கீழக்கரை டவுன் காஜி காதர்பக்ஸ்ஹசைன் கலந்து கொண்டு சிறப்புரைறயாற்றுகிறார்கள்.
நோக்கம் நன்றாக இருப்பின், உதவிகள் பல திசையில் இருந்து வரும்…
கீழக்கரையில் பல செல்வதர்களும், வெளிநாட்டு வாழ் மக்கள் வாழ்ந்து வந்தாலும் இரவு நேர மருத்துவ வசதியும், ஆம்புலன்ஸ் வசதியும் இன்னும் முழுமையடையாமல் குறைபாடாகவே இருந்து வருகிறது. இந்த குறையை போக்கும் வண்ணம் கீழக்கரை மக்கள் பொதுத்தளம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (தமுமுக), தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், வடக்குத் தெரு சமூக அறக்கட்டளை (NASA TRUST) போன்ற இன்னும் பல சமூக அமைப்புகள் ஆம்புலனஸ் மற்றும் அதன் சார்ந்த வசதிகளை செய்ய பல முனையில் நிதி திரட்ட […]
ரமலான் மாதத்ததில் அதிக நன்மையை கொள்ளையடிக்கும் கீழக்கரை தெற்கு தெரு மக்கள்.. ஏழை எளியோருக்கு நோன்பு வைக்க சஹர் உணவு..
புனித மிக்க ரமலான் மாதத்தில் சக்தியுள்ள அனைவரும் நோன்பு வைக்க கடமைப்பட்டவர்கள். அதே சமயம் அனைத்து நோன்புகளையும் இறைவனின் பொருத்தத்தை வேண்டி வைக்க மனம் இருந்தாலும், முறையான உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்படும் ஏழை எளியோர்களும் உள்ளனர். மக்களின் தேவையை நிவர்த்தி செய்யும் வண்ணம் கீழக்கரை தெற்குத் தெருவச் சார்ந்தவர்கள் ஜமாஅத் ஒத்துழைப்புடன் தினம் 220 தேவையுடைய நபர்களுக்கு சஹர் உணவு தயார் செய்து வழங்குகிறார்கள். இது பற்றி தெற்குத் தெருவைச் சார்ந்த நபர் ஒருவர் கூறுகையில், சஹர் […]
கீழக்கரையில் ரமலான் மாதத்தின் குதூகலம் ஆரம்பம்..
இஸ்லாமிய சமுதாயத்தின் புனிதமிக்க மாதம் ரமலான் மாதம். பாவங்கள் மன்னிக்கப்படக் கூடிய மாதம். தான தர்மங்கள் வாரி வழங்கப்படும் மாதம் இந்தப் புனித ரமலான் மாதம். கீழக்கரையில் இந்த புனித மாதம் ஆரம்ப நாட்களில் பெண்கள் சொந்த, பந்தங்களின் வீடுகளுக்கு சென்று முகமன்களை பரிமாறிக் கொள்வார்கள். அனேக குடும்பத்தினர் இந்த புனித மாதத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகளை மறந்து உறவுகளை புதுப்பித்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக உண்டாக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள். இந்த ரமலான் மாதம் முழுவதுமே தொழுகை […]
நோன்பு பெருநாளும் தான தர்மங்களும்..
புனித ரமலான் மாதம் நம்மை வந்தடைய இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. இறைவனின் கொடை இறங்கும் மாதம், சைத்தான்கள் சங்கிலியால் பிணைக்கப்படும் மாதம், மனம் உருகி இறைவனிடம் கையேந்துபவர்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம். சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தும் மாதம். இந்த புனித நாம் அடையும் ஒவ்வொரு வருடமும் அனேகருக்கு ஜகாத், ஃபித்ரா, ஸதக்கா, பெருநாள் காசு போன்ற காரியங்களில, ஈடுபடுவதும், அதைப் பற்றிய விவாதங்களில் ஈடுபடுவதும் நடக்கும். ஆனால் இவை மூன்றும் வெவ்வேறான செயல்பாடுகள் என்பதை […]
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள அழகிய பயிற்சி முகாம்…
ஒரு சமுதாயம் முன்னேற்றம் அடைய தனி மனித ஒழுக்கம் என்பது இன்றியமையாத ஒரு விசயமாகும். அவசர உலகில் இருக்கும் நாம் சில கால இடைவெளியில் நம்மை நாமே சீர்தூக்கிப் பார்த்துக் கொள்வது மிக அவசியமாகும். நம் பண்புகளை சீர்படுத்தும் விதமாக கீழக்கரை வடக்குத் தெரு சகோதரர்கள் அனைவரும் இணைந்து நற்பண்புகள் என்ற தலைப்பில் நாளை (21-05-2017), ஞாயிறு அன்று இஷா தொழுகைக்குப் பிறகு சி.எஸ்.ஐ பள்ளி பின்புறம் உள்ள லண்டன் காலனியில் ஒழுக்கப் பயிற்சி (தர்பியா) முகாம் […]
கருணைக் கரம் நீட்டிய கீழக்கரை நகராட்சி..
கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் கருணை அடிப்படையில் மாரிமுத்து என்பவருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது. பரமக்குடி எம்.ஜி.ஆர் நகரைச் சார்ந்த R.மந்தன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு பணிக்காலத்தில் இயற்கை எய்தினார். அவரின் வாரிசான மாரிமுத்து என்பவருக்கு கருணை அடிப்படையில் கீழக்கரை ஆணையர் வசந்தி மற்றும் தலைமை எழுத்தர் சந்திரசேகர் முன்னிலையில் பணி உத்தரவு இன்று (18-05–2017) கீழக்கரை நகராட்சி அலுவலக வளாகத்தில் வழங்கப்பட்டது.
இராமநாதபுரத்தின் பிதாமகன் இன்று மக்கள் போற்றும் “கௌரவமகன்” ஆனார்..
இராமநாதபுர நகரின் பிதாமகன் என்று செல்லமாக அழைக்கப்படும் சின்னக்கடை, அருப்புக்கார தெருவை சேர்ந்த அமீர் ஹம்சாவுக்கு இராமநாதபுரம் ரோட்டரி கிளப் சார்பாக மனித நேயர் விருது மாவட்ட ஆட்சித்தலைவரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அமீர் ஹம்சா அனாதை பிணங்களை அவர்களுடைய வழக்கப்படி அடக்கம் செய்வது. அதுமட்டுமல்லாமல் கிணற்றில் இறந்தவர்கள், தூக்கிட்டு இறந்தவர்கள், சாலை விபத்தில் இறந்தவர்கள், கடல், குளங்களில் இறந்தவர்கள் போன்ற 15000க்கும் மேற்ப்பட்டோர்களை அவரது சொந்த செலவில் அடக்கம் செய்துள்ளார். காவல்துறையினரோ, தீயணைப்பு துறையினரோ மீட்க முடியாத […]
தியாகத்திற்கு உதாரணமாக விளங்கும் கடின உழைப்பாளி
ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை முடிவீரன்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 60). கூலித்தொழிலாளியான இவர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த கூடிய செயலை செய்துள்ளார். இவர் கடந்த வாரம் ராமநாதபுரம் கலெக்டரிடம் ஓரு கோருக்கை மனு அளித்துள்ளார். அவர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:– கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். சிறு வயது முதலே இந்திய நாட்டிற்காக பாடுபடவேண்டும் என்ற ஆவல் இருந்து வந்தது. ஆனால், சூழ்நிலை காரணமாக ராணுவத்தில் சேர முடியவில்லை. ஆனால் […]
தொடரும் தண்ணீர் பந்தல்.. மக்கள் தாகம் தீருமா??
கீழக்கரையில் 05-05-2017 அன்று SDPI கட்சியின் சார்பாக நகர் தலைவர் குதுபு ஜமான் மற்றும் நகர் செயலாளர் கீழை அஸ்ரப் தலைமையில் கீழக்கரை நகர் SDPI கட்சி அலுவலகம் முன்பு சர்பத் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் கீழக்கரை தாலுகா அலுவலகம் தாசில்தார் K.M.தமிம் ராஜா கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு. சிறப்பு விருந்தினராக SDPI கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளார் பி.அப்துல் ஹமீது கலந்து கொண்டார். மேலும் […]
தொடர்பு எல்லைக்கு உள்ளே வாருங்கள்!
செடிகளைப் போன்றே உறவுகளும். அடிக்கடி நீர் பாய்ச்ச வேண்டும்.. மினுக்க வேண்டும்.. அருகே செல்ல வேண்டும்.. உரமிட வேண்டும். இல்லையேல் செடிகளைப் போன்றே உறவுகளும் வாடிவிடும். அவர்கள் நம்மைவிட்டு விலக முற்படும்போது நாம் அடிக்கடி அருகே செல்ல வேண்டும். அதிக அன்பு வைத்திருப்பவர்களுக்கு மத்தியில்தான் அடிக்கடி பிணக்கு ஏற்படும். “என்னதான் இருந்தாலும் என்னோடு அவர் இவ்வாறு நடந்துகொண்டாரே..” என்பதுதான் ஒரே ஆதங்கமாக இருக்கும். அன்பும் நட்பும் மட்டுமல்ல.. குடும்ப உறுவுகள் சிதைவதற்கும் ஏதோ ஒரு சிறு காரணம் […]
ரமலானை வரவேற்க தயாராகும் முஸ்லிம் சமுதாயம்..
முஸ்லிம் சமுதாயத்தின் மிகவும் புனிதமான மாதமாகும் ரமலான் மாதம். முஸ்லிம் ஆன ஒவ்வொருவரும் பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய இந்த புனித மாதத்தில் இறை வணக்கத்தின் மீது ஆர்வம் காட்டக் கூடியவர்களாக இருப்பார்கள். அதுபோல் இம்மாதத்தில் பல் வேறு இஸ்லாமிய அமைப்புகளும் மார்க்க நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். இன்னும் புனித ரமலான் தொடங்க ஒரு மாதம் இருக்கும் நிலையில் ரமலான் மாதத்தை வரவேற்கும் விதமாக சென்னை ரய்யான் ஹஜ் மற்றம் உம்ரா சர்வீஸ் நிறுவனம் சார்பாக 03-05-2017 அன்று ரமலானை […]
கீழக்கரையில் SDPI கட்சி சார்பாக தண்ணீர் பந்தல்..
தமிழகத்தில் சித்திரை வெயில் எங்கும் கொளுத்தி வருகிறது. இன்னும் சில நாட்களில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரமும் தொடங்க இருக்கிறது. தென் மாநிலமான இராமநாதபுரம் மாவட்டம் கடுமையான வெப்பத்தை எதிர்நோக்கி கொண்டிருக்கிறது. மக்களின் தாகத்தைப் போக்க தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் மக்களின் தாகத்தை போக்கும் வண்ணம் மோர் பந்தல் அமைத்து நீர், நீர்மோர் மற்றும் பழரச பானங்கள் மக்களுக்கு வழங்கி வருகிறார்கள். அந்த வரிசையில் இன்று கீழக்கரை SDPI கட்சி, […]
கீழக்கரை வடக்குத் தெரு அல் மத்ரஸத்துல் முஹம்மதியாவில் சிறந்த மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு..
கீழக்கரை வடக்குத் தெரு நாசா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் கல்வி பயிலகம் அல் மதரஸத்துல் முஹம்மதியா, இதில் மாணவர்கள் பல மாணவர்கள் மார்க்க கல்வி பயின்று வருகிறார்கள். இந்த பயிலகத்தின் சிறப்பம்சம் ஒவ்வொரு மாதமும் சிறந்த மாணவர்களை கல்வியறிவு அடிப்படையில் மட்டுமல்லாமல் அவர்களுடைய ஈடுபாடு, ஒழுக்கம், நேரம் கடைபிடித்தல், தவறாமல் வகுப்புக்கு வரும் மாணவர்கள், சிறந்த மாணவர் என்று பல வகையில் அடையாளம் கண்டு பெற்றோர்கள் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சயாக நேற்று (13-04-2017) […]
பொது சிவில் சட்டத்தை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பாக 4கோடி பேருக்கு மேலானோர் கையெழுத்துடன் எதிர்ப்பு மனு..
கடந்த வியாழன் (13-04-2017) அன்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பாக இந்திய சட்ட கமிசனிடம் 4 கோடி பேருக்கு மேலானோர் கையெழுத்துடன் எதிர்ப்பு மனு சமர்பிக்கப்பட்டது. இந்த மனு முஸ்லிம் சட்ட வாரியத்தின் செயலாளர். மெளலானா முஹம்மது வாலி ரஹ்மத் சாஹிப் அவர்களின் தலைமையில் இந்திய சட்ட வாரியத்தின் தலைவர் நீதிபதி பல்பர் சிங் செளதான் அவர்களை சந்தித்து கையெழுத்து பிரதிகளுடன் கூடிய மனு வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட மனுவில் பொது சிவில் […]
கிழக்குத் தெரு மதரஸாவில் நடைபெற்ற கல்வி குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு நிகழ்ச்சி
கீழக்கரை கிழக்குத் தெருவில் செயல்படும் அல் மத்ரஸத்துல் அரபிய்யதுஜ் ஜெய்னபிய்யா அரபி மதரஸாவில் 1/4/2017 அன்று மாலை 5 மணியளவில் கல்வி குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மதரஸா நிர்வாக அறங்காவலர் ஹைருன்னிஸா தலைமை வகித்தார். மீரா பானு, செய்யது ஜகுபர் பாயிஸா முபல்லிகா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மௌலவி அப்துஷ் ஷக்கூர் ஆலிம் மன்பஈ கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக தீனியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி நிர்வாக மேலாளர் […]
கீழக்கரையில் இஸ்லாமிய கல்வி சங்கத்துடன் மதரஸாக்கள் இணைந்து நடத்தும் கோடை கால இஸ்லாமிய எழுச்சி முகாம்
கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம், அல் மதர்ஸத்துர் ராழியா மற்றும் அல் மதர்ஸத்துல் அஸ்ஹரிய்யா இணைந்து நடத்தும் இஸ்லாமிய சிறுவர்களுக்கான கோடைகால இஸ்லாமிய எழுச்சி முகாம் எதிர்வரும் ஏப்ரல் 25 முதல் மே மாதம் 20 ஆம் தேதி வரை நடை பெற இருக்கிறது. இந்த முகாமில் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் ஏப்ரல் 10 முதல் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழக்கரை ‘அல் மதரஸத்துர் ராழியா’ சிறுவர் மதரஸாவின் ஆறாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி
கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் வள்ளல் சீதக்காதி சாலையில் இயங்கி வரும் அல் மதரஸத்துர் ராழியா சிறுவர் மதரஸாவில் நேற்று 26.03.17 இரவு 8.30 மணியளவில் மதரஸாவின் 6 ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை ஆலீம் ஆலீம் தவ்ஹீத் ஜமாலி தலைமை ஏற்று நடத்தினார். ஆலீம் தவ்ஹீத் ஜமாலி, ஆலீம் அப்துல் நாசர் ஜமாலி, ஆலீம் சேகு கஸ்ஸாலி சதக்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக […]
You must be logged in to post a comment.