இறைவன் உடுத்த உடை வழங்குகிறான்.. பெற்று அணிந்து கொண்டு மானத்தை மறைத்து கொள்கிறோம்….. இறைவன் வயிற்று பசிக்கு உணவு வழங்குகிறான்.. உண்டு வயிற்றையும் நிரப்பி கொள்கிறோம்… இறைவன் வசிக்க வசிப்பிடம் தருகிறான்.. அதிலே வெயிலும் மழையும் தெரியாத வண்ணம் வசித்து கொள்கிறோம்… ஆனால் இத்தனையையும் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்திட மட்டும் நமக்கு மனம் வந்திடுவதில்லையே…😢 தொலைக்காட்சி பெட்டிக்கு நாம் வழங்கிய தொகைக்கான கால அவகாசம் முடிந்ததும் ஒரு நாள் கூட அதிகம் செல்லும் முன் அதற்கான […]
Category: ஆன்மீகம்
மாற்று மத சகோதரனுக்கு உதவ, நோன்பு ஒரு தடையல்ல..
பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சார்ந்த ராஜேஸ் என்பவர், தலஸ்லீமா எனும் ரத்த பற்றாகுறை நோயின் காரணமாக சில நாட்களுக்கு முன்னர் ஆபத்தான நிலையில் அங்குள்ள மருத்தவமனையில் சேர்ந்துள்ளார். ஆனால் அவருடைய தந்தை பல நபர்களிடம் முயற்சி செய்தும் அவருக்இகு தேவையான ரத்த வகை கிடைக்கவில்லை. இந்நிலையில் ராஜேசின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்து வருவதை கண்டு அம்மருத்துவமனையில் பணிபுரியும் ஒருவர் அப்பகுதியில் உள்ள மாவட்ட ரத்த தான அமைப்பைச் சார்ந்த ஹுசைன் என்பவரிடம் தெரிவித்துள்ளார், […]
சிறப்புச் சலுகை விரைந்து வாருங்கள்.. சிறப்பு கட்டுரை..
சலுகையை விரும்பாத மனித இனமே இருக்க முடியாது. நமக்கு பாரமாக தெரியும் விசயத்திற்கு ஏதாவது எளிய வழி கிடைக்கும் பொழுது மனம் குதூகலத்தில் துள்ளி குதிக்கும். இதுதான் மனித இயல்பு, ஆனால் இது இந்த உலக வாழ்கையில் கிடைக்கும, சந்தோசம். இதே சலுகை நமக்கு மறுமை உலகில் கிடைக்கும் என்றால், அது எவ்வளவு பெரிய பாக்கியமாகும், அதுதான் நமக்கு இறைவன் அளித்துள்ள “ரமளான்” மாதம். நாம் செய்த பாவங்கள் எல்லாம் நாம் இந்த ஒரு புனித மாதத்தில் […]
‘கீழை’ அமைதி வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான திறனறிவு போட்டிகள் 12 & 13 தேதிகளில் மக்தூமியா பள்ளியில் நடைபெறுகிறது
கீழக்கரை நகரில் ‘ஈருலக வெற்றியை நோக்கி..’ என்கிற பெயரில் ‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகளுக்கான அறிவிப்பு கடந்த மாதம் செய்யப்பட்டு இருந்தது. பேச்சுப் போட்டி, குர்ஆன் மனனப் போட்டி, மதரஸா மாணவர்களுக்கான மாதிரி தயாரிப்பு போட்டி, இஸ்லாமிய வினாடி வினா போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்காக கீழக்கரை நகரில் இருந்து முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவர்கள் ஆர்வமுடன் தங்களை பதிவு செய்துள்ளனர். போட்டிகளில் பங்கேற்க […]
கீழக்கரையில் புதிய தொழுகைப் பள்ளி திறப்பு..
கீழக்கரையில் இன்று (11-05-2018) ஜும்ஆ தொழுகையுடன் புதிய தொழுகைப் பள்ளி ”மஸ்ஜிதுல் இஹ்லாஸ்” இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பாக கிழக்குத் தெரு பகுதியில் ஆரம்பம் செய்யப்பட்டது. இன்று இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் ஜும்ஆ பேருரையுடன் தொழுகை தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஹாஜா அனீஸ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரஸ்தா செல்வம், மாவட்ட செயலாளர் ஹாஜா முகைதீன் மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மேலும் இந்திய தவ்ஹீத் ஜமாத் […]
நீட் தேர்வு – அகதிகளாக்கப்பட்ட தமிழ் மாணவர்கள், வஞ்சிக்கும் ஆட்சியாளர்கள்…சாமானியனின் வேதனை பார்வை..
தொலை தூர நகரங்களுக்கு.. தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு.. அவசர உதவி எண்கள் அறிவிக்கப்படுள்ளன.. அவர்கள் ஒன்றும் ஆழிப்பேரலையால் சூழ்ந்து கொள்ளப்பட்டிருக்கவில்லை.:.. அவர்களுக்கு பயண உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.. அவர்கள் கடும் புயலில் காணாமல் போய்விடவில்லை.. அவர்களுக்கு உதவத் தயார் என்று கருணைக் கரங்கள் நீட்டப்படுகின்றன.. அவர்கள் பூகம்பங்களில் இடுபாடுகளில் சிக்கிக்கொண்டிருக்கவில்லை.. அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படவிருக்கிறது அவர்கள் ஒரு கலவரத்தில் சிதறடிக்கபட்டவர்கள் அல்ல.. அவர்களுக்கு தங்குமிடம் தர யாரோ அன்புக் கரம் நீட்டுகிறார்கள்… அவர்கள் […]
உதவுவது பல விதம்.. “E-CHARITY” புது விதம்..
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சாமானியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், சிறுபான்மையினரும் ஒடுக்கப்பட்டும், நீதி மறுக்கப்பட்டு வரும் வேளையில் அம்மக்களுக்கு குரல் கொடுக்கவும், உதவிக் கரம் நீட்டவும் ஒரு பிரிவினர் உழைத்த வண்ணமும் அத்தடங்கல்களை உடைத்த வண்ணமும்தான் உள்ளனர். அந்த வரிசையில் தேவையுடையவர்களை கண்டறிந்து உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கைப்பேசி செயலிதான் ஈ-சேரிட்டி (E-CHARITY). இந்த பதிய செயலி UNITED WELFARE ORGANISATION என்ற அமைப்பால் உருவாக்கப்பட்டு தற்சமயம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த UNITED WELFARE ORGANISATION […]
இஸ்லாமிய பார்வையில் யார் நம் தலைவர்.. ஒரு மீள் பதிவு..
(முன்குறிப்பு:- 2011ம் வருடத்தில் இணையத்தில் வந்த கட்டுரை, இன்றும் பொறுந்த கூடிய சிறு மாற்றங்களுடன்…) யார் இஸ்லாமிய தலைவர்?? இது இஸ்லாமிய அமைப்புக்கோ, சங்கத்துக்கோ, ஜமாஅத்துக்கோ, கூட்டமைப்புக்கோ எதுவாக இருந்தாலும் பொருந்தும். இன்று மனித ஜடத்தினை வணங்கியவர்கள் இஸ்லாமிய சொத்துக்களை பாதுகாக்கும் பாதுகாவலராகவும், ஏக இறைவனின் பள்ளிகளை கட்டியமைக்க இஸ்லாம் மார்க்கம் தடை செய்துள்ள பழக்கவழக்கங்களை கொண்டவர்களை அறங்காவலர்களாக நியமிப்பதும் இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரான செயல் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. ஆனால் அதை விட மிகவும் […]
ஷஃபான் மாதமும் நாமும்..
இறையச்சம், இறைவனுக்கு அடிபணிதல், தியாகம், இரக்க சிந்தனை, எதையும் தாங்கும் மனப்பக்குவம், உளக்கட்டுப்பாடு, திடவுறுதி, ஏழை எளியோரின் கஷ்ட நிலை உணர்தல் போன்றவை பொதுவாக நோன்பு கற்றுத் தரும் மிகப் பெரும் பாடங்களாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், நோன்பு ஒரு முஸ்லிமை பூரண மனிதனாக்குகிறது. ரமழான் மாத நோன்பு, ஷவ்வால் மாத ஆறு நோன்புகள், வியாழன், திங்கள் ஆகிய வார நோன்பு, ஆஷுரா, அரஃபா மற்றும் ஷஃபான் மாத சுன்னத்தான நோன்புகள் மேற்கூறப்பட்ட உயரிய குறிக்கோள்களின் அடிப்படையில் எப்பொழுதும் வாழவே முஸ்லிம்களைப் பயிற்றுவிக்கின்றன. இத்தகைய நோன்புகளை பெறும்போதனைகளாக மட்டுமின்றி தமது வாழ்விலும் செயல்படுத்திக் காட்டியவர்கள் தான் […]
‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு
கீழக்கரை நகரின் பல இடங்களில், கடந்த வாரம் ‘ஈருலக வெற்றியை நோக்கி..’ என்கிற பெயரில் எந்த ஒரு அமைப்பு பெயரையும் குறிப்பிடாமல் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக வால்போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று ‘ஈருலக வெற்றியை நோக்கி’ என்கிற தலைப்பிட்டு ‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு செய்யப்பட்டு நோட்டிஸ் வெளியிடப்பட்டு உள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் விதமாக பேச்சுப் போட்டி, குர்ஆன் மனனப் […]
கீழக்கரை மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வால்போஸ்டர் – ‘ஈருலக வெற்றியை நோக்கி விரைவில்…’
கீழக்கரை நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலையில் ஒட்டப்பட்டு இருக்கும் வால்போஸ்டர் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘ஈருலக வெற்றியை நோக்கி விரைவில்…’ என்கிற வாசகம் மட்டும் குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டு இருக்கும் இந்த வால்போஸ்டர் எந்த அமைப்பினரால் ஒட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படவில்லை. என்ன நோக்கத்திற்காக ஒட்டப்பட்டுள்ளது..? என்று தெரியவில்லை. இருப்பினும் இந்த வால்போஸ்டரின் நோக்கம் சகோதரத்துவம், அமைதி, சமுதாய ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, உள்ளிட்ட கருப்பொருள்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பது பொதுமக்கள் […]
கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாக நடைபெற இருக்கும் மார்க்க விளக்க சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி
கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை KECT சார்பாக மார்க்க விளக்க சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி எதிர்வரும் 20.04.2018 தேதியன்று வெள்ளிக்கிழமை புதுக் கிழக்குத் தெருவில் இருக்கும் மஸ்ஜிதுத் தக்வா பள்ளி திடலில் நடை பெற இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில் ‘முன் மாதிரி இஸ்லாமிய குடும்பம்’ என்கிற தலைப்பில் தொண்டி அல் மதரஸத்துல் அஷ்ரபியா முதல்வர் நிலாமுதீன் ஆலீமும், ‘நபி வழியை அறிந்து நடப்போம்’ என்கிற தலைப்பில் இஸ்லாமிய அழைப்பாளர் அப்பாஸ் அலி […]
‘ஏப்ரல் 8′- சென்னையில் நடைபெற உள்ள முஸ்லீம் மாணவர்கள் சந்திப்பு’ நிகழ்ச்சியில் தமிழகத்தின் தலை சிறந்த ஆளுமைகள் பங்கேற்பு
இஸ்லாமிய மாணவர்களுக்கான மாபெரும் நிகழ்ச்சியாக ‘MUSLIM STUDENTS MEET’ என்கிற பெயரில் எதிர்வரும் ‘ஏப்ரல் 8’ அன்று சென்னை CRESCENT B.S.ABDUR RAHMAN பல்கலைக்கழகத்தின் உள் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. கல்வியில் உயர்வடைதல், தொழில் முனைவோர்களை உருவாக்குதல், ஊடகத் துறையில் மேம்பாடு அடைதல், இஸ்லாமிய மார்க்க அழைப்பில் முன்னேறுதல் உள்ளிட்ட சிறப்பான அடிப்படை கருத்து உருவாக்கங்களோடு இளைய சமுதாயத்தினருக்கு ஒற்றுமையின் வலிமையை வலியுறுத்தி இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் தலை சிறந்த ஆளுமைகள் பலர் கலந்து கொண்டு […]
கீழக்கரை அல் மத்ரஸத்துர் ராழியாவின் ஏழாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய கல்வி சங்கத்தின் பாடதிட்டத்தின் கீழ் இயங்கும் அல் மத்ரஸத்துர் ராழியாவின் ஏழாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி நேற்று (29.03.2018) இரவு 8:30 மணியளவில் இஸ்லாமிய கல்வி சங்க வளாகத்தில் நடைபெற்றது . மத்ரஸாவின் ஐந்தாமாண்டு மாணவர் முஹம்மது ஸஃப்வான் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை ஆரம்பம் செய்தார். இந்த விழாவில் இஸ்லாமிய கல்வி சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் முஹம்மது சாலிஹ் ஹுஸைன், மதரஸாவின் முன்னாள் பேராசிரியர் […]
கீழக்கரை இஸ்லாமியக் கல்வி சங்கம் (AIE) தேர்வு முடிவுகள் வெளியீடு – மதரஸா மாணவர்கள் மகிழ்ச்சி
கீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்க நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் அல் மத்ரஸத்துர் ராழியா மற்றும் அல் மத்ரஸத்துல் அஸ்ஹரிய்யா ஆகிய மத்ரஸா மாணவர்களுக்கு நடத்தப்பட்ட அரையாண்டு தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் குறித்த அட்டவணை மத்ரஸா அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்தது. அதனை மத்ரஸா மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடந்த 17/02/208 முதல் 28/02/2018 வரை நடைபெற்ற அரையாண்டு தேர்வில் இஸ்லாமிய கொள்கை, தொழுகை முறை, பிரார்த்தனை, […]
ஆதரவற்ற பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய நிஷா ஃபவுண்டேஷன் மற்றும் தமுமுக …
கீழக்கரை பைத்துல்மால் அருகே கடந்த மூன்று நாட்களாக எந்த விபரமும் இல்லாமல் இருப்பதாக அப்பகுதியைச் சார்ந்த ஹாலிக் என்பவர் நிஷா ஃபவுண்டேஷன் மற்றும் தமுமுக உறுப்பினர்களுக்கு தகவல் அளித்துள்ளார். இத்தகவல் அறிந்தவுடன் அப்பெண்ணை கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேன் மூலம் முதலுதவிகள் அளிக்கப்பட்டு உணவும் வழங்கப்பட்டது. பின்னர் அப்பெண்மணியைப் பற்றிய தகவல் கீழக்கரை காவல் நிலையத்திற்கு கொடுக்கப்பட்டு, அப்பெண்மணியை உரிய இடத்தில் சேர்ப்பதற்கான அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்பட்டது.
திரு உத்தரகோசமங்கை கும்பாபிஷேக விழா புகைப்படம் மற்றும் வீடியோ..
இராமநாதபுரம் மாவட்டம் திரு.உத்தரகோசமங்கை வாராஹியம்மன் ஆலயத்தில் இன்று (05-02-2018) கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ராணிசேதுபதி ராஜராஜேஸ்வரி நாச்சியார், குமரன் சேதுபதி, முன்னள் அமைச்சர் ராஜகண்ணப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மர், மாவட்ட செயலாளர் முனியசாமி, திவான் மகேந்திரன், கீழக்கரை தாசில்தார் கணேசன், கீழக்கரை அம்மா பேரவை செயலாளர், வி.வி.சரவணபாலாஜி, உத்தண்டவேலு உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். காவல்துறையினர் அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் சிறப்பாக செய்திருந்தனர். புகைப்படத்தொகுப்பு
இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக நடைபெற்ற சிறுவர்களுக்கான ஒழுக்கநெறி தீனியாத் நிகழ்ச்சி…
இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் சார்பாக மத்ரஸா மாணவர்களுக்கான ப்ரொஜெக்டர் வகுப்பு (projector class) இன்று இரவு 8:30 மணியளவில் சின்னக் கடை தெருவில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் ரவ்லத்துல் ஆபிதாத் மத்ரஸாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் தலைவர் ஆலிம். சட்டப் போராளி தவ்ஹீத் ஜமாலி தலைமை தாங்கினார். இதில் அல் மத்ரஸத்துர் ராழியா, அல் மத்ரஸத்துல் அஸ்ஹரிய்யா, அல் மத்ரஸத்துல் ஃபிர்தௌஸ் ஆகிய மத்ராஸாகளில் பயிலும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு […]
சாலை தெரு பெண்கள் தொழுகை பள்ளயில் பணியாற்றிய ஆலிம் பாராட்டு விழா..
கீழக்கரை சாலை தெரு உள்ள பெண்கள் தொழுகை பள்ளியில் பணியாற்றி வருபவர் மௌளவி SAM.அப்துஸ் சலாம் பாகவி. இவர் அத்தெரு மக்களுக்கு நம்பிக்கைக்கு உரியவராகவும், மார்க்கத்தை எத்தி வைப்பவராகவும் கடந்த 25ஆண்டு காலம் சிறப்பாக பெண்கள் தொழுகைப்பள்ளியில் பணியாற்றியுள்ளார். அவருடைய சேவையை கவுரவிக்கும் வகையில் இன்று (04-02-2018), ஞாயிறு மக்ரிபு தொழுகைக்குப் பிறகு மாலை 06.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இப்பாராட்டு விழா நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்கள், பெண்கள், மதரசா குழந்தைகள், ஜமாத்தார்கள் […]
செய்யது ஹமீதா அரபிக்கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம் …
கீழக்கரை முகம்மது சதக் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் செய்யது ஹமீதா அரபிக் கல்லூரியில் “அழிவின் விளிம்பில் இந்திய ஜனநாயகம்” என்ற தலைப்பின் கீழ் இன்று சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு செய்யது ஹமீதா கல்லூரியின் முதல்வர் அலி ஷா நூரானி ஹஜரத் தலைமை தாங்கினார். அதைத் தொடர்ந்து “ இஸ்லாமிய சட்டமும் இந்திய அரசியலும்” என்ற துணைத் தலைப்பின் கீழ் மாணவர் சமிவுல்லா தனது கருத்தை பதிவு செய்தார். “இந்திய ஜனநாயக பாதுகாப்பில் முஸ்லிம்களின் பங்களிப்பும் தியாகமும்” […]
You must be logged in to post a comment.