இறை வசனங்களை ஒருங்கிணைத்து குர்ஆன் பிரதியாக்கிய உத்மான்(ரலி)!..ரமலான் சிந்தனை – 12..கீழை ஜஹாங்கீர் அரூஸி…

ஜைத் பின் தாபித் (ரலி) நன்றாக ஓதத் தெரிந்தவர், எழுத்தறிவு உள்ளவர் என்று அண்ணலார் (ஸல்) அவர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு ஜைத் பின் தாபித் (ரலி) ஓதுவதை அண்ணலார் (ஸல்) அவர்கள் செவிமடுத்தார்கள். தெளிவாக ஓதினார், துள்ளியமாக உச்சரித்தார். கற்று உணர்ந்தவர் போல் வசனங்களின் பொருளையும் நன்றாகப் புரிந்து ஓதினார். எழுதுவதிலும் இவர் தேர்ச்சி பெற்றிருந்ததை அண்ணலார் (ஸல்) அவர்கள் புரிந்து கொண்டார்கள். இம்மாதிரி தகுதி கொண்டவர்கள் அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு மிகவும் தேவைப்பட்டார்கள். பின்பு அண்ணலார் […]

இறையில்லங்களை நிர்வகிக்கும் முறையை கற்றுத்தந்த உத்மான்(ரலி)…ரமலான் சிந்தனை – 11..கீழை ஜஹாங்கீர் அரூஸி.

இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் மூன்றாம் கலீஃபாவான உத்மான்(ரலி) அவர்களின் ஆட்சியில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. மக்கா, மதீனா பள்ளிகளை சுற்றி சுவர் எழுப்பி பாதுகாப்பினை பலப்படுத்தியதும் இவர்களின் ஆட்சியில் தான். மதீனாவின் மஸ்ஜிதுன் நபவியை சுற்றி இருந்த யூதர்களுக்கு சொந்தமான தோட்டங்கள், காலி மனைகளை தமது சொந்த பணத்தில் கூடுதல் விலைக்கு வாங்கி பெருமானாரின் குடும்பத்தவர்களுக்கு இருப்பிடங்களாக்கி கொடுத்தார்கள் கலீஃபா உத்மான்(ரலி) அவர்கள். மஸ்ஜிதுன் நபவியை சுற்றி ஏராளமான நிலங்களை வைத்திருந்த யூதர்கள் காலப்போக்கில் தங்களின் ஒன்றிரண்டு இடங்களையும் […]

இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் மூன்றாம் கலீஃபா உத்மான்(ரலி) வரலாறு!..ரமலான் சிந்தனை- 10..கீழை ஜஹாங்கீர் அரூஸி.

இரண்டாம் கலீஃபா உமர்(ரலி) அவர்கள் தங்களின் இறுதி காலம் (மரணம்) நெருங்குவதை உணர்ந்து உடனடியாக ஆறு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்து மூன்றாம் கலீஃபாவை தேர்வு செய்யுமாறும் இந்த தேர்வு மூன்று நாட்களுக்குள் இருக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்கள். இந்தக் குழுவில் பெருமானாரால் சுவர்க்கவாசிகள் என கூறப்பட்ட உத்மான்(ரலி), தல்ஹா(ரலி), ஜுபைர்(ரலி), சஅது(ரலி), அப்துர்ரஹ்மான்(ரலி), அலி(ரலி) போன்றோர் இடம்பெற்றனர். இவர்களில் அலி(ரலி) அவர்களை தவிர மற்ற ஐவரும் இஸ்லாத்தின் ஆரம்ப கால ஏகத்துவ பரப்புரையாளர்களாகும். உமர் (ரலி) […]

அபூபக்கர்(ரலி) அவர்களை அல் காரினைன் என ஏன் அழைக்கப்பட்டது? ..ரமலான் சிந்தனை – 9.. கீழை ஜஹாங்கீர் அரூஸி.

அபுபக்கர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் வரிசையில், அதாவது வயது வந்தோர்களில் முதலாவது நபராகும். எப்பொழுது இஸ்லாத்தை அபுபக்கர் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்களோ, அப்போதிருந்தே தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக தனது உடல், பொருள், ஆவி, திறமைகள், அனைத்தையும் தியாகம் செய்தார்கள். அவர்களது வாழ்க்கை முழுவதுமே தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக மாசு மறுவில்லாமல் தன்னையே இழந்த சரித்திரச் சான்றுகளைத் தான் நாம் காண முடியும். இன்னும் ஹஸ்ரத் உதுமான் (ரலி), சுபைர் (ரலி), தல்ஹா […]

முதல் கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்களின் வரலாற்று பின்னணி…ரமலான் சிந்தனை – 8…கீழை ஜஹாங்கீர் அரூஸி…

குல வம்சம் கோலோச்சிய அன்றைய மக்காவின் குறைஷியர் வம்சத்திலேயே “பனீதைம்” என்ற உயரிய கோத்திரத்தில் உதுமான் இப்னு ஆமிர் – சல்மா பின்த் சக்ர் தம்பதிகளுக்கு மகனாய் பிறந்தவர்கள் ஹழ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்கள், தமது வம்சத்தை சார்ந்த முன்னோடிகளின் வரலாறு மற்றும் முன்சென்ற சமுதாயங்கள் குறித்த தெளிவான ஞானம் கொண்டவர்களாவும், மிகச்சிறந்த வணிகராகவும், செல்வந்தராகவும் வாழ்ந்தார்கள் அபூபக்கர்(ரலி) அவர்கள். மக்காவின் மிக முக்கிய 10 நபர்களில் அன்னை ஹதீஜா பிராட்டியாரும் ஹழ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்களும் முதன்மையானவர்களாக திகழ்ந்தார்கள். மக்காவின் […]

திருக்குர்ஆன் வசனத்தை செவிமடுத்த உமர்(ரலி) அவர்களின் மாபெரும் பிம்பம்! – ரமலான் சிந்தனை – 7..

இஸ்லாத்தை அல்லாஹ் தனது இறுதி நபியாம் முஹம்மது (ஸல்) அவர்களின் வாயிலாக முழுமைப் படுத்துகிறான், நபிகளாரும் தம் இறுதி ஹஜ்ஜை நிறைவு செய்துவிட்டு இறுதிப் பேருரையும் நிகழ்த்தி விடுகிறார்கள். காலங்கள் செல்கின்றன, இஸ்லாம் அழகாக மலரும் காலத்தில் எதிர்பாராத விதமாக அரபுச் சக்கரவர்த்தியும் இறுதி நபியுமாகிய கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 11-ம் ஆண்டு ரபியுல் அவ்வல் பிறை 9 அல்லது 12 திங்கட் கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் இம் மண்ணுலகை விட்டு பிரிகிறார்கள். […]

சகோதரியின் குரல்வளத்தில் குர்ஆன் வசனங்களை கேட்டு மாபெரும் சகாபியான வரலாறு!- ரமலான் சிந்தனை – 6..கீழை ஜஹாங்கீர் அரூஸி.

‘அல்லாஹ்வே! உமர் இப்னு கத்தாப் (ரலி) அல்லது அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!’ என்று நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அவர்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவர் உமர் (ரலி) இருந்தார் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அனஸ், இப்னு உமர் (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள். மக்கத்துக் குறைஷிகளில் மிகவும் பிரபல்யமான கோத்திரமான “அதீ” என்ற குலத்தை சேர்ந்த கந்தமா மற்றும் கத்தாப் ஆகியோரது மகனாகவும் தாய்மாமன் உறவில் […]

ஜின்களுக்கும் அச்சமூட்டிய தித்திக்கும் திருக்குர்ஆன்… ரமலான் சிந்தனை – 5, கீழை ஜஹாங்கீர் அரூஸி.

தாயிஃப் அருகே உள்ள “நக்லா”(Nakhlah) என்னும் மலைப் பள்ளத்தாக்கில் தங்கியிருந்த நபிகளார் தொழுகை நேரத்தில் தித்திக்கும் திருக்குர்ஆன் வசனங்களை ஓதிய போது அவர்களின் இனிமையான குரல் வளம் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த மலைப்பிரதேசம் முழுவதும் எதிரொலித்தது. உடனிருந்த ஜைது(ரலி) அவர்களைத் தவிர மனித நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் நபியவர்கள் ஓதிய இறை வசனங்களை “ஜின்”கள் கேட்டு, அவற்றால் ஈர்க்கப்பட்டன. இதனை நபியவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அல்லாஹ் தன் தூதருக்கு அருளிய வேத வசனங்களில் அதை […]

ஜின்களுக்கும் அச்சமூட்டிய தித்திக்கும் திருக்குர் ஆன்!, ரமலான் சிந்தனை – 4 – கீழை ஜஹாங்கீர் அரூஸி…

நபியவர்களின் ஏகத்துவ பரப்புரையின் ஆரம்ப காலக்கட்டத்தில் தாயிஃப் சென்று அங்கே ஏகத்துவத்தை நோக்கி மக்களை அழைத்தார்கள். ஒரு மாத காலம் அங்கே தங்கியிருந்தும் அம்மக்கள் பெருமானாரின் தூது செய்தியை காது கொடுத்து கேட்காமல் ஏளனம் செய்வதும் தாக்குவதுமாய் அழிச்சாட்டியம் செய்தனர் தாயிஃப்வாசிகள். அன்னை ஆயிஷா பிராட்டியார் ஒருமுறை பெருமானாரிடம் கேட்டார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! உஹதுப்போரின் போது உங்களுக்கு ஏற்பட்ட வேதனைப் போன்று வேறு ஏதேனும் உங்கள் வாழ்வில் நிகழ்ந்துள்ளதா? “ஆம்; உன் கூட்டத்தினர் எனக்கு கொடுத்த தொல்லைப் […]

இருப்பதை கொண்டு திருப்தி கொள்வோம்! ரமலான் சிந்தனை-2.

ரமலான் காலங்களில் வழக்கத்துக்கு மாறாக உணவு தயாரிப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தும் மக்களுக்கு இவ்வருட ரமலான் கொஞ்சம் நெருக்கடி கலந்த காலமாய் அமைந்து விட்டது. இதற்கு கொரோனா என்னும் வைரஸ் பரவலும் அதற்கான ஊரடங்குமாகும். ஊரடங்கு காலத்தில் உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளை தவிர ஆடை விற்பனையகம் உள்ளிட்ட பிற வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. புத்தாடை உடுத்தாத தலைபிறையை நாங்கள் கண்டதில்லை, ஆனால் இவ்வருட ரமலான் புத்தாடை அணியாத தலைபிறையாகி விட்டது என்னும் […]

ரமலான் சிந்தனைகள் -1, ஷஹீதுகளின் அளப்பரிய உயர்வுகளும்! கொரோனா ஷுஹதாக்களும்!

இறைவனின் பாதையில் போரிட்டு கொல்லப்பட்ட ஷஹீதுகளைப் பற்றி அல்லாஹ் தனது அருள்மறையில் சொல்லும்போது அவர்களை மரணித்தவர்கள் என்று சொல்லாதீர்கள் என இயம்புகிறான். “இன்னும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுகிறவர்களை மரணித்தோர் என நீங்கள் கூற வேண்டாம்; மாறாக, (அவர்கள் “பர்ஜக்” எனும் மறைவான உலகில்) உயிரோடிருக்கிறார்கள்; எனினும் (அவர்கள் எவ்வாறு உயிரோடு உள்ளார்கள்? என்பதை) நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்”.(அல்குர் ஆன் – 2:154) ஷஹீதுகளுக்கான இந்த சிறப்பான அந்தஸ்து குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, யார் […]

புராதன சிறப்புமிக்க கஞ்சமலை சித்தேசுவர சுவாமி திருக்கோவில்

சேலத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கஞ்சமலை அடிவாரத்தில் அமைந்துள்ளதுது சித்தேஸ்வர சுவாமி திருக்கோவில், இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.இக்கோவிலானது அமாவாசை கோவில் என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறது. கனிம வளம் மிகுந்த கஞ்சமலையில் இரும்புத் தாதுவை கொண்டு மாவீரர் அலெக்ஸாண்டருக்கு, போரஸ் மன்னன் பரிசளித்த வாள் இக்கஞ்சமலை இரும்பினால் செய்யப்பெற்றது.இம்மலையில் பல அரிய வகை மூலிகைகள் நிறைந்துள்ளன. அதனால் கோவில் வளாகத்தில் உள்ள கிணற்றில் பக்தர்கள் குளித்து விட்டு, நீரை பருகி வந்தால் […]

வைகை பெருவிழா 2019

சிவபெருமானே பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி திருவிளையாடல் புரிந்த மதுரை மாநகரில் வைகைக்கு ஒரு திருவிழா இன்றைய வைகை நதியின் நிலையை நம் காரணம் அதனை கருத்தில் கொண்டு வைகை நதியை புனிதத்தைப் பற்றி காக்கும் வகையில் வைகை நதியில் மாபெரும் விழா நடைபெறுகிறது இதற்கென அனைத்து துறைகளும் இணைந்து வைகைக்கு என ஒரு அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டது இதில் அம்மன் மீன் மேல் அமர்ந்து இருப்பது நம் பாண்டிய நாட்டின் சின்னத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டு […]

மாநில அளவிளான கிராத் போட்டியில் பரிசு வென்ற முகைதீனியா பள்ளி மாணவி…

கீழக்கரை தாசிம்பீவி மகளிர் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிளான ஆண்ககளுக்கான குர்ஆன் கிராத் போட்டி 29/12/2018 அன்று நடைபெற்றது. இப்போட்டிகள் இஸ்லாமியக் கலாச்சார அறக்கட்டளை, கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தின. இப்போட்டி ஆண்களுக்கு மட்டும் என்று நிர்ணயித்து இருந்தாலும் கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவிகளும் அதிகமாக கலந்து கொண்டதால், 15 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 15வயதுக்கு மேற்பட்டவர்கள் என இரு பிரிவாக மாணவிகளுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன். இதில் கீழக்கரை […]

திருவண்ணாமலையில் தீப திருவிழா..மலைக்கு செல்ல பக்தர்களுக்கு டோக்கன்…

திருவண்ணாமலை தீப திருவிழா முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அருள்மிகு அண்ணாமலையார் உடனுறையார் உண்ணாமலை அம்மாள் திருக்கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் இன்று (23-ம் தேதி) அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு மலையில் மகா தீபம் ஏற்றப்படும். திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. முதலில் வரும் 2500 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. திருவண்ணாமலை அரசு கல்லூரியில் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலையிலிருந்து செய்தியாளர் வேலூர் […]

சாலை தெரு 18 சுஹாதக்கள் பெண்கள் மதரஸாவின் முதலாம் ஆண்டு விழாவும் மற்றும் பட்டமளிப்பு விழா..

சாலை தெருவில் இயங்கிக்கொண்டு இருக்கும் 18 சுஹாதக்கள் பெண்கள் மதரஸாவின் முதலாம் ஆண்டு விழாவும், மற்றும் பட்டமளிப்பு விழா இன்று 20/08/2018 சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவுக்கு அல்ஹாஜ். களஞ்சியம் செய்யது மொஹிதீன் ஹாஜியார் தலைமையில் நடைபெற்றது, சிறப்பு விருந்தினராக அல்ஹாஜ். மஹ்ரூப், முஹம்மத் இபுராஹிம் பாகவி , அல்ஹாஜ் செய்யது ஜாபர் பாதுஷா, மௌலானா ஆரிப் ஆலிம்ஷா, மௌலானா மன்சூர் ஆலிம்ஷா  மற்றும் மதரசாவின் நிர்வாகிகள் அல்ஹாஜ். க. கு. ஜப்பார், அல்ஹாஜ். மீரா சாஹிப், அல்ஹாஜ். […]

வரும் 03/08/2018 முதல் கீழக்கரையில் “கிதாபுத் தவ்ஹீத்” வகுப்பு ஆரம்பம்….

கீழக்கரை “கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையம்” சார்பாக வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் “கிதாபுத் தவ்ஹீத்” வகுப்பு ஆரம்பம் ஆக உள்ளது.  இவ்வகுப்புகள் மக்ரிப் தொழுகைக்கு பின்பு நடைபெற உள்ளது. மேலும் இவ்வகுப்புகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெற உள்ளது சிறப்பு அம்சமாகும். இந்த வகுப்புகளை சிறப்பு சொற்பொழிவாளர் மௌலவி. செய்யது முஹம்மது ஜமாலி கலந்து கொண்டு வழங்க உள்ளார். இந்நிகழ்வில் கீழ்கண்ட பாடத்திட்டங்கள் எடுக்கப்படும் என இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தொிவித்துள்ளார்கள். தவ்ஹீத் என்பது ஒரு […]

உத்தரகோசமங்கையில் ஆனி திருஞ்சன விழா..

உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் சமேத மங்களநாதர் சுவாமி கோயில் பழமையான சிவாலயமாக விளங்குகிறது. வருடத்தில் 5 முறை உற்சவர் சிவகாமி அம்மன் சமேத நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது. 6 வது முறையாக மார்கழியன்று திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆருத்ரா தரிசனத்தில் பச்சை மரகத நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும். அதிகாலை 4 மணியளவில் பிரம்ம முகூர்த்தத்தில் ஆனி உத்திரத்தை முன்னிட்டு, உற்சவர்களுக்கு 21 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தாழம்பூ சாற்றி வழிபாடு செய்யப்பட்டது. சிவனடியார்கள், பக்தர்களால் சிவபுராணம், திருவாசகம், நாமாவளி பாடல்கள் பாடப்பட்டது. பூஜைகளை டி.எம்.கோட்டை நாகநாத குருக்கள் செய்திருந்தார். […]

இதம்பாடலில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம்!

இராமநாதபுரம்  மாவட்டம்  ஏர்வாடி  அருகே இதம் பாடல் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆண்டாள் அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. இதனையொட்டி நேற்று காலை விக்னேஷ்வரர் பூஜையுடன் துவங்கியது இதை தொடர்ந்து முதல.  இரண்டாம் யாக கால பூஜைகள், தீபாராதனை நடந்தது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக நேற்று காலை மூன்றாம் , நான்காம் கால யாக பூஜை, யாக வேள்வி நடந்தது. அபிஷேக பொருட்கள் அடங்கிய பெட்டி, குடங்கள் புறப்பாடாகி கோயிலை வந்தடைந்தது. […]

கீழக்கரை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர் வட்டம் சார்பாக மார்க்க சிறப்பு நிகழ்ச்சி..

கீழக்கரை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர் வட்டம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த மார்க்க சிறப்பு நிகழ்ச்சி ஜீன் 18 திங்கள் கிழமை கீழக்கரை இஸ்லாமிய அமைதி மையத்தில் (KIPC சென்டர்)  நடைபெற்றது . இச்சிறப்பு நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில பொது செயலாளர் மௌலவி ஹனிஃபா மன்பயீ மற்றும் மதுரை இஸ்லாமிக் சென்டர் பொறுப்பாளர் முஹ்யித்தீன் குட்டி உமரி  ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர் . இந்நிகழ்ச்சியில் அரம்பமாக பேசிய ஹனிஃபா மன்பயீ  இறை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!