ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கத்தின் சார்பாக மருத்துவ பொருட்கள் உதவி..

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கத்தின் சார்பாக கீழக்கரை நகர் கூட்டத்தில் பெருங்குளம் ரெட் கிராஸ் மருத்துவமனையின் தேவைகளுக்காக ரூபாய்.6000/- மதிப்பிலான மருந்து பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் டாக்டர் கே. எம். முரளி, மாவட்டதுணைத்தலைவர் ஆர். ஜி. சுப்பிரமணியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Y. S. சீனி சேகு, கீழக்கரை நகர் தலைவர் செல்வம், நகர் துணைத்தலைவர் ஜே. ஏ. பெருமாள், நகர் பொருளாளர் முஹம்மது இர்பான், நிஷா பவுண்டேஷன் எஸ். சித்திக், நகர் […]

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தக் கூடிய மருந்தை இலவசமாக வழங்கும் நிறுவனம்…

இந்தியாவில் அதுவும் கீழக்கரையில் டெங்கு காய்ச்சலின் வீரியம் மிக கடுமையாக நிலவி வருகிறது. இது சம்பந்தமாக கீழக்கரையில் நகராட்சி நிர்வாகம் தவிர்த்து பல் வேறு சமூக அமைப்புகளும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழுப்புணர்வு செயல்பாடுகள் மற்றும் நிலவேம்பு கசாயம் வினியோகம் போன்ற செயல்களை மிக வீரியமாக செய்து வருகிறார்கள். ஆனால் டெங்கு கொசுவின் வீரியமோ அதைவிட வேகமாக கீழை நகரில் பரவி வருவது மிகவும் வேதனையான செய்தி. இந்த மன வேதனைக்கு இதம் தரும் விதமாக சென்னையை […]

ஆதரவற்ற முதியவர்களை தேடி சென்று உணவளிக்கும் மகத்தான மனிதநேய பணியில் ‘நிஷா பவுண்டேசன்’

மதுரையை தலைமையகமாக கொண்டு செயல்படும் நிஷா பவுண்டேசன் ஆதரவற்ற ஏழை எளிய மக்களையும், முதியவர்களையும் தேடி சென்று உணவளிக்கும் மகத்தான மனிதநேய பணியினை இறைவனின் திருப் பொருத்தத்தை நாடி சிறப்பாக செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு, ஆம்புலன்ஸ் சேவை, முதியோர் மீட்பு குழு, பொதுமக்கள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகள் என பொது நல சேவைகளை செய்து கொண்டிருக்கின்றனர். இது குறித்து நிஷா பவுண்டேசன் நிறுவனர் சித்தீக் கூறுகையில் […]

இராமநாதபுரத்தில் செய்யதம்மாள் அறக்கட்டளை மற்றும் ‘மாற்றம் முன்னேற்றம்’ இளைஞர் பொது நல சங்கம் சமூக சேவை..

இன்று 26.02.2017 இராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் சுகாதாரமற்ற நிலையில் இருந்த பகுதியினை செய்யது அம்மாள் அறக்கட்டளை மற்றும் மாற்றம் முன்னேற்றம் இளைஞர் பொதுநலச்சங்கத்தினர் சுத்தம் செய்தனர். பின்னர் மாற்றம் முன்னேற்றம் இளைஞர் பொது நலச்சங்கத்தின் தலைவர் பிரபு தலைமையில் வண்டிக்காரத்தெரு மற்றும் வண்டிக்காரப்பிள்ளையார் கோவில் தெரு சார்பில் மரங்கள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாகபாஸ்கர், பாலா, கார்த்திக்,  சுரேஷ்மேத்தா, ராஜசேகரன், ஜெய்பாரத், சகுபர்சாதிக் ராஜேந்திரன், மாணிக்கம், கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர். கீழை நியூஸ் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோதரர்களே […]

கீழக்கரையில் இலவச இருதய சிகிச்சை முகாம்..

கீழக்கரையில் 28-12-2016 மற்றும் 29-12-2016ஆகிய இரண்டு நாட்கள் காவேரி மருத்துவமனை மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் இருதய சிகிச்சை முகாம் இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 வரை தடைபெறும். இம்முகாமில் சகோ. MMK இபுராஹிம், இஸ்லாமிய பள்ளி தாளாளர் தலைமையுரையாற்றுகிறார். ஜனாப்.H. சிராஜுதீன், ஹமீதியா துவக்கப்பள்ளி தாளாளர் அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார். திரு. S.சர்வேஸ் ராஜ், IPS, இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் விழாவை […]

களை கட்டும் வடக்குத் தெரு.. சட்டப்போராளிகளுக்கு கிடைத்த வெற்றி.. நகராட்சி நிர்வாத்தின் அதிரடி நடவடிக்கை..

நீங்கள் படத்தில் காணும் குப்பைக் கிடங்கு கீழக்கரை வடக்குத் தெருவில் பல வருடங்களாக நோய் பரப்பும் கிடங்காக இருந்து வந்தது. பல ஆட்சிகள் மாறினாலும் காட்சி மட்டும் மாறவே இல்லை. சமீபத்தில் கீழக்கரை மக்கள் களம் மூலமாக பல சமூக ஆர்வம் கொண்ட சகோதரர்களால் சட்டப் போராளிகள் என்ற வாட்ஸ் அப் குழுமம் ஆரம்பம் செய்யப்பட்டது. இக்குழுமத்தின் மூலம் ஒவ்வொரு வாரமும் மக்களின் பொதுப் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு சம்பந்தப்பட்ட அரசாங்கள் அதிகாரிகள் கவனத்திற்கும் மற்றும்; முதலமைச்சர் […]

கீழக்கரையில் இலவச சேவை மையம் ஆரம்பம்….

கீழக்கரையில் இன்று காலை 10.30 மணியளவில் கீழக்கரை தாலுகா நகராட்சி கட்டிட அலுவலகங்கள் அமைந்திருக்கக் கூடிய பகுதியில் மலேரியா க்ளினிக் அருகில் இலவச சேவை மையம்  அனைத்து சமுதாய தன்னார்வ தொண்டர்களின் முயற்சியால் ஆரம்பம் செய்யப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் கீழக்கரையின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட பல சமூக சேவகர்கள் கலந்து கொண்டார்கள்.  இம்மையம் கீழக்கரை வட்ட அலுவலர் திரு.தமீம் ராசா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.    இம்மையத்தில் அனைத்து வகையான அரசு சம்பந்தப்பட்ட படிவங்களும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு,  பூர்த்தி […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!