தஞ்சையில் வசித்து வரும் தஞ்சை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபுராஜ்குமார் தனது அலுவலக பணியாளர்களுடன் தஞ்சையில் உள்ள ஹோட்டலுக்கு உணவருந்த சென்றார். ஹோட்டலில் இலை எடுக்கும் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள் தெரிவிக்க வேண்டும் அதோடு அவர்களுக்கு கிஃபட் வழங்கி மகிழ்ச்சியில் திளைக்க வைக்க வேண்டும் என நினைத்தார். தாங்கள் சாப்பிட்ட இலைக்கு அடியில் கவர் ஒன்றை வைத்தார்.சாப்பிட்டு முடித்ததும் வழக்கம்போல் இலை எடுத்த பெண்கள் கவர் ஒன்று இருப்பதை கண்டு எடுப்போமா?வேண்டாமா? என யோசித்த நேரத்தில் […]
Category: மனிதநேயம்
தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.!
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் ,பாதிரகுடி பஞ்சாயத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமில் பெண்கள் நலன் தன்னார்வலர்கள் ராகினி மற்றும் பரமேஸ்வரி மாறனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பின் அளவை சரி பார்த்து மருத்துவ உதவி தேவைப்படுவார்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதாரத்தை அணுகுமாறு […]
கீழக்கரையில் ஏழை எளிய மக்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சித்திக் ரினாஃப் ஹஸ்ஸ் ஃபௌண்டேஷன் சார்பாக ரமலான் மாதத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு வீட்டில் உபயோகம் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னால் நகர்மன்ற உறுபினர் மற்றும் தெற்குத்தெரு ஜாமாத் முன்னால் செயலாளர் லாஹிதுகான் , முன்னால் நகர்மன்ற உறுப்பினர் மற்றும் சமூக ஆர்வலருமான ஆனா மூனா காதர் சாகிப் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் நெய்னா அசாருதீன் ஹபீப் மரைக்கா ஆகியோர் கலந்து கொண்டு […]
மாற்று மத சகோதரனுக்கு உதவ, நோன்பு ஒரு தடையல்ல..
பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சார்ந்த ராஜேஸ் என்பவர், தலஸ்லீமா எனும் ரத்த பற்றாகுறை நோயின் காரணமாக சில நாட்களுக்கு முன்னர் ஆபத்தான நிலையில் அங்குள்ள மருத்தவமனையில் சேர்ந்துள்ளார். ஆனால் அவருடைய தந்தை பல நபர்களிடம் முயற்சி செய்தும் அவருக்இகு தேவையான ரத்த வகை கிடைக்கவில்லை. இந்நிலையில் ராஜேசின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்து வருவதை கண்டு அம்மருத்துவமனையில் பணிபுரியும் ஒருவர் அப்பகுதியில் உள்ள மாவட்ட ரத்த தான அமைப்பைச் சார்ந்த ஹுசைன் என்பவரிடம் தெரிவித்துள்ளார், […]
நீட் தேர்வு – அகதிகளாக்கப்பட்ட தமிழ் மாணவர்கள், வஞ்சிக்கும் ஆட்சியாளர்கள்…சாமானியனின் வேதனை பார்வை..
தொலை தூர நகரங்களுக்கு.. தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு.. அவசர உதவி எண்கள் அறிவிக்கப்படுள்ளன.. அவர்கள் ஒன்றும் ஆழிப்பேரலையால் சூழ்ந்து கொள்ளப்பட்டிருக்கவில்லை.:.. அவர்களுக்கு பயண உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.. அவர்கள் கடும் புயலில் காணாமல் போய்விடவில்லை.. அவர்களுக்கு உதவத் தயார் என்று கருணைக் கரங்கள் நீட்டப்படுகின்றன.. அவர்கள் பூகம்பங்களில் இடுபாடுகளில் சிக்கிக்கொண்டிருக்கவில்லை.. அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படவிருக்கிறது அவர்கள் ஒரு கலவரத்தில் சிதறடிக்கபட்டவர்கள் அல்ல.. அவர்களுக்கு தங்குமிடம் தர யாரோ அன்புக் கரம் நீட்டுகிறார்கள்… அவர்கள் […]
உதவுவது பல விதம்.. “E-CHARITY” புது விதம்..
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சாமானியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், சிறுபான்மையினரும் ஒடுக்கப்பட்டும், நீதி மறுக்கப்பட்டு வரும் வேளையில் அம்மக்களுக்கு குரல் கொடுக்கவும், உதவிக் கரம் நீட்டவும் ஒரு பிரிவினர் உழைத்த வண்ணமும் அத்தடங்கல்களை உடைத்த வண்ணமும்தான் உள்ளனர். அந்த வரிசையில் தேவையுடையவர்களை கண்டறிந்து உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கைப்பேசி செயலிதான் ஈ-சேரிட்டி (E-CHARITY). இந்த பதிய செயலி UNITED WELFARE ORGANISATION என்ற அமைப்பால் உருவாக்கப்பட்டு தற்சமயம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த UNITED WELFARE ORGANISATION […]
ஆதரவற்ற பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய நிஷா ஃபவுண்டேஷன் மற்றும் தமுமுக …
கீழக்கரை பைத்துல்மால் அருகே கடந்த மூன்று நாட்களாக எந்த விபரமும் இல்லாமல் இருப்பதாக அப்பகுதியைச் சார்ந்த ஹாலிக் என்பவர் நிஷா ஃபவுண்டேஷன் மற்றும் தமுமுக உறுப்பினர்களுக்கு தகவல் அளித்துள்ளார். இத்தகவல் அறிந்தவுடன் அப்பெண்ணை கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேன் மூலம் முதலுதவிகள் அளிக்கப்பட்டு உணவும் வழங்கப்பட்டது. பின்னர் அப்பெண்மணியைப் பற்றிய தகவல் கீழக்கரை காவல் நிலையத்திற்கு கொடுக்கப்பட்டு, அப்பெண்மணியை உரிய இடத்தில் சேர்ப்பதற்கான அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்பட்டது.
கீழக்கரையில் இறை மார்க்கத்தை ஏற்ற மாற்று நம்பிக்கை கொண்ட சகோதரர்..
கீழக்கரையில் வசித்து வருபவர் சாகாய ராபிட் (21). இவர் கடந்த சில வருடங்களாக இஸ்லாமிய சகோதரர்களின் வாழ்கை நெறி மற்றும் இஸ்லாம் கூறும் வாழ்கை நெறியால் ஈர்க்கப்பட்டு அவரும், அவருடைய குடும்பத்தாரும் இஸ்லாம் மார்க்கத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றதுடன் தங்களுடைய பெயர்களையும், முஹம்மது இபுறாகிம் என்றும் அவருடைய தாயார் ஆயிஷா மரியம், மரியம் சகானா, ரிகானா பாத்திமா என்றும், சகோதரர் அப்துல்ரஹீம் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும் இந்நிகழ்வில் பங்கு […]
வடக்குத் தெரு நாசா அமைப்பு சார்பாக பெண்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது…
கீழக்கரையில் வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி வளாகத்தில் வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) மற்றும் வடக்குத் தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை ( NASA TRUST) சார்பாக இன்று (08-08-2017) பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியான ORGANIC BABY – ஆரோக்கியமான குழந்தை என்ற சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பெண்களுக்காகவே பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியை லயான் நிஷா தொகுத்து வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஓருங்கிணைப்பை வடக்குத் தெரு பெண்கள் மதரசா […]
கீழக்கரை புதுத்தெருவில் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது…
கீழக்கரை புதுத்தெரு முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் (MYFA) மற்றும் தேவதாஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாம் கீழக்கரை நூரானியா பள்ளி வளாகத்தினுள் சிறப்பாக நடைபெற்றது.. இந்த மருத்துவ முகாமில் மருத்துவ ஆலோசனைகளும், மருத்துவ வழிகாட்டுதல்களும் கலந்து கொண்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை புதுத்தெரு முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் (MYFA) சிறப்பாக செய்திருந்தனர்.
71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சிறப்பு நிகழ்ச்சிகள்..
கீழக்கரையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 71வது சுதந்திர தினமாகும். இத்தினத்தையொட்டி கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் தெற்கு கிளை மற்றும் கீழக்கரை அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் நடத்த உள்ளார்கள். இந்த முகாமுக்கு கீழக்கரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைக்கிறார். அதே போல் 15 ஆகஸ்ட் அன்று கீழக்கரை தவ்ஹீத் ஜமாத், தெற்கு கிளை மாணவர் அணி சார்பாக சிறுபான்மையின மாணவ, மாணவிகள் […]
கீழக்கரையில் பல பகுதிகளில் நோன்பு கால சஹர் உணவு ஏற்பாடு..
புனிதமான ரமலான் மாதம் தொடங்கியது முதல் பெரியவர் முதல் சிறியவர் வரை நன்மைகளை கொள்ளையடிப்பதில் போட்டி போட்டுக் கொண்டு பல நன்மையான காரியங்களை செய்து வருகிறார்கள். இந்த புனித மாதத்தில் வீண் விரயம் பலரால் செய்யப்பட்டாலும், மற்றொரு புறம் இரவு நேரங்களில் நோன்பு வைப்பதற்கு நல்ல ஆரோக்கியமான உணவு கிடைப்பதற்கும் சிரம்ப்படும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அவர்களுக்கும் நல்ல உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனேகமான தெருக்களில் ஜமாஅத் மூலமாகவும், சமூக […]
இரத்த தானத்திலும் ஆம்புலன்ஸ் சேவையிலும் முன்னோடியாக திகழும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்..
இராமநாதபுரத்தில் உள்ள இரத்த தான வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை கடந்த 5 மாதத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பாக 123 நபர்கள் இரத்த தானம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நற்பணி செயல் மிகவும் பாராட்டுதலுக்குரிய விசயமாகும். இது சம்பந்தமாக தவ்ஹீத் ஜமாஅத்தின் இராமநாதபுரம் மாவட்டம் இரத்த தான பொறுப்பாளர் நசுருதீன் அவர்களிடம் கேட்ட பொழுது இதற்காக உழைத்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் இறைவன் அருள் புரிவானாக என்று […]
நோக்கம் நன்றாக இருப்பின், உதவிகள் பல திசையில் இருந்து வரும்…
கீழக்கரையில் பல செல்வதர்களும், வெளிநாட்டு வாழ் மக்கள் வாழ்ந்து வந்தாலும் இரவு நேர மருத்துவ வசதியும், ஆம்புலன்ஸ் வசதியும் இன்னும் முழுமையடையாமல் குறைபாடாகவே இருந்து வருகிறது. இந்த குறையை போக்கும் வண்ணம் கீழக்கரை மக்கள் பொதுத்தளம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (தமுமுக), தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், வடக்குத் தெரு சமூக அறக்கட்டளை (NASA TRUST) போன்ற இன்னும் பல சமூக அமைப்புகள் ஆம்புலனஸ் மற்றும் அதன் சார்ந்த வசதிகளை செய்ய பல முனையில் நிதி திரட்ட […]
ரமலான் மாதத்ததில் அதிக நன்மையை கொள்ளையடிக்கும் கீழக்கரை தெற்கு தெரு மக்கள்.. ஏழை எளியோருக்கு நோன்பு வைக்க சஹர் உணவு..
புனித மிக்க ரமலான் மாதத்தில் சக்தியுள்ள அனைவரும் நோன்பு வைக்க கடமைப்பட்டவர்கள். அதே சமயம் அனைத்து நோன்புகளையும் இறைவனின் பொருத்தத்தை வேண்டி வைக்க மனம் இருந்தாலும், முறையான உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்படும் ஏழை எளியோர்களும் உள்ளனர். மக்களின் தேவையை நிவர்த்தி செய்யும் வண்ணம் கீழக்கரை தெற்குத் தெருவச் சார்ந்தவர்கள் ஜமாஅத் ஒத்துழைப்புடன் தினம் 220 தேவையுடைய நபர்களுக்கு சஹர் உணவு தயார் செய்து வழங்குகிறார்கள். இது பற்றி தெற்குத் தெருவைச் சார்ந்த நபர் ஒருவர் கூறுகையில், சஹர் […]
கருணைக் கரம் நீட்டிய கீழக்கரை நகராட்சி..
கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் கருணை அடிப்படையில் மாரிமுத்து என்பவருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது. பரமக்குடி எம்.ஜி.ஆர் நகரைச் சார்ந்த R.மந்தன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு பணிக்காலத்தில் இயற்கை எய்தினார். அவரின் வாரிசான மாரிமுத்து என்பவருக்கு கருணை அடிப்படையில் கீழக்கரை ஆணையர் வசந்தி மற்றும் தலைமை எழுத்தர் சந்திரசேகர் முன்னிலையில் பணி உத்தரவு இன்று (18-05–2017) கீழக்கரை நகராட்சி அலுவலக வளாகத்தில் வழங்கப்பட்டது.
இராமநாதபுரத்தின் பிதாமகன் இன்று மக்கள் போற்றும் “கௌரவமகன்” ஆனார்..
இராமநாதபுர நகரின் பிதாமகன் என்று செல்லமாக அழைக்கப்படும் சின்னக்கடை, அருப்புக்கார தெருவை சேர்ந்த அமீர் ஹம்சாவுக்கு இராமநாதபுரம் ரோட்டரி கிளப் சார்பாக மனித நேயர் விருது மாவட்ட ஆட்சித்தலைவரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அமீர் ஹம்சா அனாதை பிணங்களை அவர்களுடைய வழக்கப்படி அடக்கம் செய்வது. அதுமட்டுமல்லாமல் கிணற்றில் இறந்தவர்கள், தூக்கிட்டு இறந்தவர்கள், சாலை விபத்தில் இறந்தவர்கள், கடல், குளங்களில் இறந்தவர்கள் போன்ற 15000க்கும் மேற்ப்பட்டோர்களை அவரது சொந்த செலவில் அடக்கம் செய்துள்ளார். காவல்துறையினரோ, தீயணைப்பு துறையினரோ மீட்க முடியாத […]
தியாகத்திற்கு உதாரணமாக விளங்கும் கடின உழைப்பாளி
ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை முடிவீரன்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 60). கூலித்தொழிலாளியான இவர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த கூடிய செயலை செய்துள்ளார். இவர் கடந்த வாரம் ராமநாதபுரம் கலெக்டரிடம் ஓரு கோருக்கை மனு அளித்துள்ளார். அவர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:– கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். சிறு வயது முதலே இந்திய நாட்டிற்காக பாடுபடவேண்டும் என்ற ஆவல் இருந்து வந்தது. ஆனால், சூழ்நிலை காரணமாக ராணுவத்தில் சேர முடியவில்லை. ஆனால் […]
தொடரும் தண்ணீர் பந்தல்.. மக்கள் தாகம் தீருமா??
கீழக்கரையில் 05-05-2017 அன்று SDPI கட்சியின் சார்பாக நகர் தலைவர் குதுபு ஜமான் மற்றும் நகர் செயலாளர் கீழை அஸ்ரப் தலைமையில் கீழக்கரை நகர் SDPI கட்சி அலுவலகம் முன்பு சர்பத் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் கீழக்கரை தாலுகா அலுவலகம் தாசில்தார் K.M.தமிம் ராஜா கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு. சிறப்பு விருந்தினராக SDPI கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளார் பி.அப்துல் ஹமீது கலந்து கொண்டார். மேலும் […]
கீழக்கரையில் SDPI கட்சி சார்பாக தண்ணீர் பந்தல்..
தமிழகத்தில் சித்திரை வெயில் எங்கும் கொளுத்தி வருகிறது. இன்னும் சில நாட்களில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரமும் தொடங்க இருக்கிறது. தென் மாநிலமான இராமநாதபுரம் மாவட்டம் கடுமையான வெப்பத்தை எதிர்நோக்கி கொண்டிருக்கிறது. மக்களின் தாகத்தைப் போக்க தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் மக்களின் தாகத்தை போக்கும் வண்ணம் மோர் பந்தல் அமைத்து நீர், நீர்மோர் மற்றும் பழரச பானங்கள் மக்களுக்கு வழங்கி வருகிறார்கள். அந்த வரிசையில் இன்று கீழக்கரை SDPI கட்சி, […]
You must be logged in to post a comment.