இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்…

அறிவிப்பு கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் 500 ப்ளாட் கிளை சார்பாக  26-02-2017 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் கோவை ரஹ்மத்துல்லாஹ் மற்றும் அபூபக்கர் சித்திக் ஸஆதி ஆகியோர் போலிகள் ஜாக்கிரதை மற்றும் யார் சுன்னத்துல் வல் ஜமாத்?  ஆகிய தலைப்புகளில் மாலை 07.00 மணியளவில் சிறப்பரையாற்றுகிறார்கள் இந்நிகழ்ச்சி ரோஸ் கார்டன் பகுதியில் தினாஜ்கான் தலைமையில் நடைபெறுகிறது..      

ஆலந்தூர் வாழ் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் சார்பாக குடியரசு தின வாழ்த்து…

சென்னை ஆலந்தூர் மற்றும் ஆதம்பாக்கம் பகுதி வாழ் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் சார்பாக குடியரசு தின நலவாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது வர்தா புயலால் செடிகளையும் மரங்களையும் இழந்த பொதுமக்களுக்கு மரகன்றுகள் , பழ மரகன்றுகள் மூலிகை செடிகள் மற்றும் கொசுவிரட்டி (துளசி ) செடிகளும் கொடுக்கப்பட்டது இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்பு அழைப்பாளர்காளாக திரு. செல்வின் சாந்தகுமார் ஆய்வாளர் S1- காவல் நிலையம் , S.ஜிந்தா மதார் காஞ்சி மாவட்ட வடக்கு செயலாளர், மனித நேய ஜனநாயக […]

பெண்களுக்கான தெருமுனைப் பிரச்சாரம்..

அறிவிப்பு 27/01/17 வெள்ளி கிழமை இஷா தொழுகைக்கு பின் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் வடக்கு கிளை சார்பில் பெண்களுக்கான தெருமுனை பிரச்சாரம் நடைபெறுகிறது . இடம் : சாலைத் தெரு உரை  சகோதரி ;- ஹமிதா பர்வின் தலைப்பு : கொள்கை உறுதி உரை சிறுமி :-ஃபபௌஸியா நிஃபானாஸ் தலைப்பு : உறுதியான ஈமான்தான் மறுமைக்கு வெற்றி இந்நிகழ்ச்சி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் வடக்கு கிளை கீழக்கரை இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு ) சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கீழக்கரையில் தொடரும் தவ்ஹீத் ஜமாத்தின் சமுதாயப் பணி..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உலகமெங்கும் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளில் வீரியமாக செயல்பட்டு வருவது அறிந்ததே. கீழக்கரையிலும் பல கிழைகள் அமைத்து பல பணிகள் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று கீழக்கரையில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் உள்ள வேகத்தடைகளுக்கு அடையாள நிற வண்ணம் அடிக்கும் பணிகளை மேற்கொண்டனர். சமீபத்தில் முக்கு ரோட்டில் இருந்து கடற்கரை வரை புதிதாக போடப்பட்ட சாலைகள் முறையாக போடப்படாத காரணத்தினால் பல விபத்துகள் ஏற்பட காரணமாகி வருகிறது.  இதனால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை […]

கீழக்கரை வடக்கு தெரு அல் அமீன் சகோதரர்கள் நடத்திய பெண்களுக்கான கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு..

கீழக்கரை வடக்குதெருவைச் சார்ந்த அல்அமீன் சகோதரர்கள் கடந்த மாதம் கீழ்கண்ட தலைப்புகளில் பெண்களுக்காக கட்டுரைப்போட்டிகள் அறிவித்து இருந்தனர். –    இஸ்லாம் கூறும் தலாக் சட்டம். –    இஸ்லாமிய குடும்பவியல். –    சமூக வலைதளங்களில் பெண்களின் கண்ணோட்டம் அதற்கான முடிவும் வெற்றி பெற்றவர்களின் விபரங்களையும் வெளியிட்டுள்ளனர். மேலும் அல்அமீன் சகோதரர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வீடு தேடி சென்று கொடுக்கப்படும் என்றும், கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

இப்படியும் ஊக்குவிக்கலாம் மதரஸா சிறார்களை.. அனைத்து மாணவர்களையும் வெற்றியாளர்களாக உருவாக்கும் அல் மதரஸத்துல் முஹம்மதியா .

கீழக்கரை வடக்குத்தெருவில் இயங்கி வரும் சிறுவர்களுக்கான அல் மதரஸத்துல் முஹம்மதியா என்ற இஸ்லாமிய பாட சாலை கடந்த பல வருடங்களாக ஓசையில்லாமல் இஸ்லாமிய அறிவை சிறுவர்களுக்கு போதித்து வருகிறது. இந்த பாடசாலை வடக்கு தெருவில் பல மார்க்கம் மற்றும் சமுதாய பணிகள் செய்து வரும் வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA) கீழ் இயங்கி வருவது என்பது கூடுதல் தகவலாகும். இங்கு 1. அடிப்படை ( Basic), 2. பட்டயப்படிப்பு ( Diploma) மற்றும் 3. […]

வட்டியில்லா அழகிய கடன் திட்டம் துவக்க விழா*

கீழக்கரையில் உள்ள பழமையான சமுதாய அமைப்புகளில் மிக முக்கியமான ஒன்று நாசா(NASA) என்றழைக்கப்படும் வடக்குத் தெரு சமூக நல அமைப்பாகும்.  அந்த அமைப்பு சார்பாக வடக்கு தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை (NASA Trust) ஒன்று ஆரம்பம் செய்யப்பட்டு வட்டியில்லா கடன் திட்டம் ஆரம்பம் செய்யப்பட உள்ளது.  அந்நிகழ்ச்சியின் விபரங்கள்  கீழே:- 🗓நாள் : *30-12-2016* வெள்ளிக்கிழமை *🕔நேரம் :மாலை 4 மணி முதல்* *🏢இடம்* “முஹ்யித்தீனியா ” பள்ளி வடக்குத்தெரு கீழக்கரை *🔹நிகழ்ச்சி ஏற்பாடு* […]

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தெருமுனைக் கூட்டம்

கீழ்க்கரையில் 22-12-216 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை சார்பாக மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மவ்லீதும் மீலாதும் என்ற தலைப்பில் சகோ. அப்துர்ரஹ்மான் ஃபிர்தௌசி அவர்களும், ஆடம்பரமும் அனாச்சரமும் என்ற தலைப்பில் சகோ. அபுபக்கர் சித்திக் அவர்களும் சிறப்புரையாற்றுகிறார்கள். இந்நிகழ்ச்சி நடுத்தெரு மதரஸத்து தவ்ஹீத் மதரஸா அருகில் மாலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறுகிறது. பெண்களுக்கும் தனி இட வசதியுள்ளது என்பது குறிப்பிடதக்கது. அனைத்து மக்களும் கலந்து […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!