ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் மிகவும் கண்ணியமிக்க நாட்களாகும். ஓரு மனிதன் இறைவனிடத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதன் அடிப்படையாக கீழக்கரையில் பல் வேறு அமைப்புகள் மற்றும் பள்ளிவாசல்களில் இரவு நேர சிறப்புத் தொழுகை நடத்துவது வழக்கம். இதன் தொடர்ச்சியாக கடந்த பல வருடங்களாக சமுதாய நலப் பணிகளில் ஈடுபட்டு வந்த வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) , தெரு மக்கள் இஸ்லாத்தின் இறைத்தூதர் வழியில் தொழுகை முறையை அமைத்துக் கொள்ளும் […]
Category: இஸ்லாம்
கீழக்கரை நடுத்தெரு ஜும்ஆ பள்ளியில் இன்று சிறப்பு சொற்பொழிவு..
கீழக்கரை நடுத்தெரு அல் மஸ்ஜிதுல் ஜாமிஉ, ஜும்ஆ பள்ளியில் இன்று (12-06-2017), ரமலான் பிறை 17 திங்கள் கிழமை பின்னேரம் இரவுத் தொழுகைக்குப் பிறகு சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்த பத்ர் தின சிறப்பு சொற்பொழிவு நடைபெறுகிறது. இச்சொற்பொழிவில் சிறப்பு பேச்சாளர்களாக ஹாபிஸ். அப்துல் கனி மற்றும் கீழக்கரை டவுன் காஜி காதர்பக்ஸ்ஹசைன் கலந்து கொண்டு சிறப்புரைறயாற்றுகிறார்கள்.
நோன்பு பெருநாளும் தான தர்மங்களும்..
புனித ரமலான் மாதம் நம்மை வந்தடைய இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. இறைவனின் கொடை இறங்கும் மாதம், சைத்தான்கள் சங்கிலியால் பிணைக்கப்படும் மாதம், மனம் உருகி இறைவனிடம் கையேந்துபவர்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம். சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தும் மாதம். இந்த புனித நாம் அடையும் ஒவ்வொரு வருடமும் அனேகருக்கு ஜகாத், ஃபித்ரா, ஸதக்கா, பெருநாள் காசு போன்ற காரியங்களில, ஈடுபடுவதும், அதைப் பற்றிய விவாதங்களில் ஈடுபடுவதும் நடக்கும். ஆனால் இவை மூன்றும் வெவ்வேறான செயல்பாடுகள் என்பதை […]
தொடர்பு எல்லைக்கு உள்ளே வாருங்கள்!
செடிகளைப் போன்றே உறவுகளும். அடிக்கடி நீர் பாய்ச்ச வேண்டும்.. மினுக்க வேண்டும்.. அருகே செல்ல வேண்டும்.. உரமிட வேண்டும். இல்லையேல் செடிகளைப் போன்றே உறவுகளும் வாடிவிடும். அவர்கள் நம்மைவிட்டு விலக முற்படும்போது நாம் அடிக்கடி அருகே செல்ல வேண்டும். அதிக அன்பு வைத்திருப்பவர்களுக்கு மத்தியில்தான் அடிக்கடி பிணக்கு ஏற்படும். “என்னதான் இருந்தாலும் என்னோடு அவர் இவ்வாறு நடந்துகொண்டாரே..” என்பதுதான் ஒரே ஆதங்கமாக இருக்கும். அன்பும் நட்பும் மட்டுமல்ல.. குடும்ப உறுவுகள் சிதைவதற்கும் ஏதோ ஒரு சிறு காரணம் […]
கீழக்கரை வடக்குத் தெரு அல் மத்ரஸத்துல் முஹம்மதியாவில் சிறந்த மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு..
கீழக்கரை வடக்குத் தெரு நாசா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் கல்வி பயிலகம் அல் மதரஸத்துல் முஹம்மதியா, இதில் மாணவர்கள் பல மாணவர்கள் மார்க்க கல்வி பயின்று வருகிறார்கள். இந்த பயிலகத்தின் சிறப்பம்சம் ஒவ்வொரு மாதமும் சிறந்த மாணவர்களை கல்வியறிவு அடிப்படையில் மட்டுமல்லாமல் அவர்களுடைய ஈடுபாடு, ஒழுக்கம், நேரம் கடைபிடித்தல், தவறாமல் வகுப்புக்கு வரும் மாணவர்கள், சிறந்த மாணவர் என்று பல வகையில் அடையாளம் கண்டு பெற்றோர்கள் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சயாக நேற்று (13-04-2017) […]
பொது சிவில் சட்டத்தை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பாக 4கோடி பேருக்கு மேலானோர் கையெழுத்துடன் எதிர்ப்பு மனு..
கடந்த வியாழன் (13-04-2017) அன்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பாக இந்திய சட்ட கமிசனிடம் 4 கோடி பேருக்கு மேலானோர் கையெழுத்துடன் எதிர்ப்பு மனு சமர்பிக்கப்பட்டது. இந்த மனு முஸ்லிம் சட்ட வாரியத்தின் செயலாளர். மெளலானா முஹம்மது வாலி ரஹ்மத் சாஹிப் அவர்களின் தலைமையில் இந்திய சட்ட வாரியத்தின் தலைவர் நீதிபதி பல்பர் சிங் செளதான் அவர்களை சந்தித்து கையெழுத்து பிரதிகளுடன் கூடிய மனு வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட மனுவில் பொது சிவில் […]
கிழக்குத் தெரு மதரஸாவில் நடைபெற்ற கல்வி குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு நிகழ்ச்சி
கீழக்கரை கிழக்குத் தெருவில் செயல்படும் அல் மத்ரஸத்துல் அரபிய்யதுஜ் ஜெய்னபிய்யா அரபி மதரஸாவில் 1/4/2017 அன்று மாலை 5 மணியளவில் கல்வி குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மதரஸா நிர்வாக அறங்காவலர் ஹைருன்னிஸா தலைமை வகித்தார். மீரா பானு, செய்யது ஜகுபர் பாயிஸா முபல்லிகா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மௌலவி அப்துஷ் ஷக்கூர் ஆலிம் மன்பஈ கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக தீனியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி நிர்வாக மேலாளர் […]
கீழக்கரையில் இஸ்லாமிய கல்வி சங்கத்துடன் மதரஸாக்கள் இணைந்து நடத்தும் கோடை கால இஸ்லாமிய எழுச்சி முகாம்
கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம், அல் மதர்ஸத்துர் ராழியா மற்றும் அல் மதர்ஸத்துல் அஸ்ஹரிய்யா இணைந்து நடத்தும் இஸ்லாமிய சிறுவர்களுக்கான கோடைகால இஸ்லாமிய எழுச்சி முகாம் எதிர்வரும் ஏப்ரல் 25 முதல் மே மாதம் 20 ஆம் தேதி வரை நடை பெற இருக்கிறது. இந்த முகாமில் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் ஏப்ரல் 10 முதல் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழக்கரை ‘அல் மதரஸத்துர் ராழியா’ சிறுவர் மதரஸாவின் ஆறாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி
கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் வள்ளல் சீதக்காதி சாலையில் இயங்கி வரும் அல் மதரஸத்துர் ராழியா சிறுவர் மதரஸாவில் நேற்று 26.03.17 இரவு 8.30 மணியளவில் மதரஸாவின் 6 ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை ஆலீம் ஆலீம் தவ்ஹீத் ஜமாலி தலைமை ஏற்று நடத்தினார். ஆலீம் தவ்ஹீத் ஜமாலி, ஆலீம் அப்துல் நாசர் ஜமாலி, ஆலீம் சேகு கஸ்ஸாலி சதக்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக […]
கீழக்கரை மதரஸாக்களில் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பாக ஆய்வு
கல்வி நகரமான கீழக்கரையில் ஏராளமான கல்வி நிலையங்களும், அரபி மதரஸாக்களும் உள்ளன. இதில் அரபி மதரஸா கல்வி கூடங்களில் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த ஆய்வுகளின் போது பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஒழுக்கம், நன்னடத்தை, வருகை பதிவு, பள்ளியின் சுகாதாரம், மாணவர்களின் ஆரோக்கியம், தொழுகை, சுத்தம் உள்ளிட்ட பல விஷயங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்நிலையில் இன்று 25.03.17 கீழக்கரை MP தெருவில் செயல்படும் அல் மத்ரஸத்துல் அரபிய்யதுஜ் ஜெய்னபிய்யா பள்ளிக்கு இராமநாதபுரம் […]
இந்திய-மலேசிய முஸ்லிம்களின் தொடர்புகள் பற்றிய ஆவண படம் – மலேசிய அரசு சார்பாக விரைவில் வெளியீடு
பன்னெடுங்காலமாக தொடர்ந்து வரும் இந்திய-மலேசிய முஸ்லிம்களின் இணைபிரியா தொடர்புகள் இன்றளவும் தொட்டுத் தொடருகிறது. இது குறித்த ஆவண படம் ஒன்றினை மலேசிய அரசு சார்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. இதன் முன்னோடியாக மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவை (பெர்மிம்) தாய்-சபை யினர் கீழக்கரை நகருக்கு வருகை தந்து அதன் தொன்மையை பற்றி ஆய்வு செய்தனர். மலேசிய அரசின் அங்கீகாரம் பெற்ற மலேசிய இந்திய முஸ்லீம்களின் அரசு சாரா அமைப்புகளின் தாய் சபையான பெர்மிம் பேரவை, மலேசிய […]
கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய தெருமுனை பயான் நிகழ்ச்சி
கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக நேற்று 24.03.17 இரவு மணியளவில் அத்தியிலை தெருவில் இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனை பயான் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் தவ்ஹீத் ஜமாலி ஆலிம் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் மதரஸத்துல் ராழியாவின் மாணவர் முஹம்மது ஸஃப்வான் மார்க்க சொற்பொழிவாற்றினார். நிகழ்ச்சியில் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளித்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை சங்கத்தின் பொருளாளர் சட்டப் போராளி ஹமீது சல்மான் கான் மற்றும் சட்டப் போராளி […]
கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை (KECT) மற்றும் அல்மதரஸத்துல் முஹம்மதியா (NASA Trust) நடத்தும் கோடைகால பயிற்சி வகுப்புகள்…
கீழக்கரையில் ஒவ்வொரு வருடமும் பல கல்வி நிலையங்கள் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்துவதுண்டு. இந்த வருடம் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை (KECT) மற்றும் வடக்குத் தெரு சமூக தர்ம அறக்கட்டளை (NASA Trust) கீழ் இயங்கி வரும் அல்மதரஸத்துல் முஹம்மதியா இஸ்லாமிய கல்வி நிலையமும் இணைந்து கோடைகால பயிற்சி வகுப்புகள் நடத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரு கல்வி அமைப்புகளும் கடந்த வருடங்களில் நடத்திய கோடைகால இஸ்லாமிய சிறப்பு வகுப்புகளில் பல மாணவர்கள் கலந்து […]
கீழக்கரையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மார்க்க விளக்க கூட்டம்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மார்க்க விளக்க கூட்டம் எதிர்வரும் அன்று 26.03.17 ஞாயிற்று கிழமை இரவு 7 மணியளவில் தெற்கு தெரு கட்டாலிம்சா பங்களா சமீபம் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தேசிய தலைவர் SM பாக்கர் தலைமையேற்று இஸ்லாம் பெண்ணுரிமையை பறிக்கிறதா..? பாதுகாக்கிறதா..? என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார். மேலும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் முஹம்மது முஹைய்யத்தீன் நீதியும் நிர்வாகமும் என்கிற தலைப்பில் பேசுகிறார். இது சம்பந்தமாக நகரின் முக்கிய […]
இன்று உலக தண்ணீர் தினம் – ‘தண்ணீர்’ இறைவனின் மாபெரும் அருட்கொடை
கட்டுரையாளர் : பஷீர் அஹமது உஸ்மானி தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பிக்கும் முன்னரே தண்ணீர் வறட்சியும் ஆரம்பித்து விட்டுள்ள நிலையில் இன்று மார்ச் 22. சர்வதேச தண்ணீர் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. தற்போது உலக அளவில் தண்ணீர் ஒரு மாபெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து […]
கீழக்கரையில் நபித் தோழர் அபூபக்கர் (ரழி)பற்றிய சிறப்பு நிகழ்ச்சி – நடுத் தெரு ஜூம்ஆ பள்ளியில் நடைபெற்றது
கீழக்கரையில் 21/3/2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் கீழக்கரை, நடுத்தெரு, “அல் மஸ்ஜிதுல் ஜாமிஉ” ஜும்ஆ மஸ்ஜிதில் முஸ்லிம் சமுதாயத்தின் முதல் கலீஃபா அமீருல் முஃமினீன் அபூபக்ர் அஸ்-ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு பற்றிய சிறப்பு நிகழ்ச்சி கீழக்கரை டவுன் காஜியும் A.M.M. காதர் பக்ஷ் ஹுசைன் ஸித்தீகி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக அல் மத்ரஸத்துல் ஜாமிஆ மாணவர் பஷீர் கிராஅத் ஓதினார். மாணவர் முஷ்ரப் தமிழாக்கம் செய்தார். அதைத்தொடர்ந்து ஜும்ஆ மஸ்ஜித் பரிபாலன கமிட்டியின் உதவி […]
ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ் செல்லும் பயணிகளுக்கான குலுக்கல் தேர்வு இன்று சென்னை புதுக் கல்லூரியில் நடைபெறுகிறது
தமிழகத்தில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள ஹஜ் கமிட்டி மூலம் விண்ணப்பித்த பயணிகள், சென்னை புதுக் கல்லூரி அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் குலுக்கல் முறையில் இன்று 17.03.17 தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2017-ம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்திற்கு சுமார் 13 ஆயிரத்து 584 பேரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தெரிவித்துள்ளது. அதில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஹஜ் பயணிகளை […]
இன்று உலக நுகர்வோர் தினம் – இஸ்லாத்தில் பேணி காக்கப்படும் நுகர்வோர் உரிமைகள்
கட்டுரையாளர் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,) இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகில், நமது உரிமைகளையும், நாட்டில் நடைபெறும் ஒழுங்கீனங்களையும் பற்றி எடுத்துரைக்க நமக்கு நேரம் இல்லை. நாம் நம், அறியாமையினால் ஏமாறுவது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். ஆனால் நாம் தெரிந்தே ஏமாற்றப்படுவது பொறுக்க முடியாத குற்றமாக கருதப்படுகிறது. நுகர்வோராகிய நாம், மிகுந்த விழிப்புடனும், எச்சரிக்கையுடனும், மற்றவரால் ஏமாற்றப்படாமலும் இருத்தல் அவசியம். நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக […]
புனித ஹஜ் பயணத்துக்கான மாநில வாரியான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு – தமிழகத்தில் இருந்து ஹஜ் கமிட்டி மூலம் 3189 பேர் பயணிக்கலாம்
இந்திய அரசின் மத்திய சிறுபான்மை நல அமைச்சகத்தின் புனித ஹஜ் பயணத்துக்கான மாநில வாரியான இட ஒதுக்கீடு பட்டியல் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதனை இந்திய ஹஜ் கமிட்டி இணைய தளத்தில் பார்வையிடலாம். அந்த சுற்றறிக்கையில் மொத்த இந்திய மக்கள் தொகையில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 17,22,45,311 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் சேர்த்து, யூனியன் பிரதேசங்கள் உள்பட புனித ஹஜ் பயணத்திற்கான இந்த வருடத்திற்கான மொத்த இட ஒதுக்கீடு 1,23,700 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் தமிகத்தில் இஸ்லாமியர்களின் […]
மக்காவுக்கு 6750 கி.மீ சைக்கிளில், ஹஜ் பயணம் துவங்கி இருக்கும் தமிழக முதியவர்
வாணியம்பாடியை சேர்ந்த 63 வயது முதியவர் பயாஸ் அஹமது கடந்த வாரம் வாணியம்பாடியில் இருந்து சவூதி அரேபியாவின் மக்கா நகருக்கு சைக்கிளில், புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புறப்பட்டுள்ளார். தற்போது இவர் சென்னையை வந்தடைந்துள்ளார். இன்றைய நவீன உலகில் இருக்கும், துரித வாகன போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத காலக் கட்டத்தில் ஹஜ் பயணத்தை மேற்கொண்ட இஸ்லாமிய பெருமக்கள் கால்நடையாக நடந்தே பல்லாயிரம் மைல்களை கடந்து ஹஜ் கடமைகளை நிறைவேற்றி உள்ளனர். கொஞ்சம் வசதி படைத்தவர்கள், குதிரை, […]
You must be logged in to post a comment.