கீழக்கரை இஸ்லாமியக் கல்வி சங்கம் (AIE) தேர்வு முடிவுகள் வெளியீடு – மதரஸா மாணவர்கள் மகிழ்ச்சி 

கீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்க நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் அல் மத்ரஸத்துர் ராழியா மற்றும் அல் மத்ரஸத்துல் அஸ்ஹரிய்யா ஆகிய மத்ரஸா மாணவர்களுக்கு நடத்தப்பட்ட அரையாண்டு தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் குறித்த அட்டவணை மத்ரஸா அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்தது. அதனை மத்ரஸா மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடந்த 17/02/208 முதல் 28/02/2018 வரை நடைபெற்ற அரையாண்டு தேர்வில் இஸ்லாமிய கொள்கை, தொழுகை முறை, பிரார்த்தனை, […]

இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக நடைபெற்ற சிறுவர்களுக்கான ஒழுக்கநெறி தீனியாத் நிகழ்ச்சி…

இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் சார்பாக மத்ரஸா மாணவர்களுக்கான ப்ரொஜெக்டர் வகுப்பு (projector class) இன்று இரவு 8:30 மணியளவில் சின்னக் கடை தெருவில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் ரவ்லத்துல் ஆபிதாத் மத்ரஸாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் தலைவர் ஆலிம். சட்டப் போராளி தவ்ஹீத் ஜமாலி தலைமை தாங்கினார். இதில் அல் மத்ரஸத்துர் ராழியா, அல் மத்ரஸத்துல் அஸ்ஹரிய்யா, அல் மத்ரஸத்துல் ஃபிர்தௌஸ் ஆகிய மத்ராஸாகளில் பயிலும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு […]

சாலை தெரு பெண்கள் தொழுகை பள்ளயில் பணியாற்றிய ஆலிம் பாராட்டு விழா..

கீழக்கரை சாலை தெரு உள்ள பெண்கள் தொழுகை பள்ளியில் பணியாற்றி வருபவர் மௌளவி SAM.அப்துஸ் சலாம் பாகவி. இவர் அத்தெரு மக்களுக்கு நம்பிக்கைக்கு உரியவராகவும், மார்க்கத்தை எத்தி வைப்பவராகவும் கடந்த 25ஆண்டு காலம் சிறப்பாக பெண்கள் தொழுகைப்பள்ளியில் பணியாற்றியுள்ளார். அவருடைய சேவையை கவுரவிக்கும் வகையில் இன்று (04-02-2018), ஞாயிறு மக்ரிபு தொழுகைக்குப் பிறகு மாலை 06.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இப்பாராட்டு விழா நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்கள், பெண்கள், மதரசா குழந்தைகள், ஜமாத்தார்கள் […]

செய்யது ஹமீதா அரபிக்கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம் …

கீழக்கரை முகம்மது சதக் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் செய்யது ஹமீதா அரபிக் கல்லூரியில் “அழிவின் விளிம்பில் இந்திய ஜனநாயகம்” என்ற தலைப்பின் கீழ் இன்று சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு செய்யது ஹமீதா கல்லூரியின் முதல்வர் அலி ஷா நூரானி ஹஜரத் தலைமை தாங்கினார். அதைத் தொடர்ந்து “ இஸ்லாமிய சட்டமும் இந்திய அரசியலும்” என்ற துணைத் தலைப்பின் கீழ் மாணவர் சமிவுல்லா தனது கருத்தை பதிவு செய்தார். “இந்திய ஜனநாயக பாதுகாப்பில் முஸ்லிம்களின் பங்களிப்பும் தியாகமும்” […]

“அமைதியை நோக்கி”- வாழ்வியல் கண்காட்சி சிறப்பாக தொடங்கியது- வீடியோ தொகுப்புடன்..

கீழக்கரையில் இன்று (19-01-2018) “அமைதியை நோக்கி” – வாழ்வியல் கண்காட்சி ஹுசைனியா மஹாலில் சிறப்பாக தொடங்கியது. இக்கண்காட்சி இரண்டு நாட்களுக்கு 19 மற்றும். 20ம் தேதி நடைபெறுகிறது. முதல் நாளான இன்று ஏராளமான இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரிய பெருமக்கள் மற்றும் பல் வேறு அமைப்புகள் மற்றும் ஜமாத்தினர் ஆர்வத்துடன் கண்காட்சியை கண்டு களித்தனர். மேலும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் பெண்களும் கலந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அதே போல் அனைவரும் இஸ்லாம் மார்க்கத்தை […]

கீழக்கரை தஃவா குழு சார்பாக மார்க்க சொற்பொழிவு பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது…

கீழக்கரை தெற்குத் தெரு குளத்து மேடு மைதானத்தில் “கீழக்கரை தஃவா குழ” சார்பாக ஏற்பாடு செய்திருந்த  மார்க்க அறிஞர்கள் பங்கேற்ற சொற்பொழிவு பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் ஏராளமான ஆண்கள், தாய்மார்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். புகைப்படத் தொகுப்பு

அமைதியான வாழ்கைக்கு வாழ்வியல் கண்காட்சி “அமைதியை நோக்கி”..

நவீன உலகில் இளைய சமுதயாம் உலக வாழ்கையில் கிடைக்கும் இன்பத்தில் திளைத்திருக்கும் இத்தருணத்தில்,  கீழக்கரையைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ஒன்று கூடி இவ்வுலகிற்கு பின்னாலும் நிரந்தரமான வாழ்க்கை உண்டு என்பதை உணர்ந்து மற்றவர்களும் அப்பலனை அடைய வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளது மிகவும் பாராட்டுதலுக்குரிய விசயம். அந்த முயற்சியின் வெளிப்பாடுதான் “அமைதியை நோக்கி”  என்ற இஸ்லாமிய வாழ்வியல் கண்காட்சி. இக்கண்காட்சி கீழக்கரை ஹுசைனியா மஹாலில் வரும் ஜனவரி 19 மற்றும் 20ம் தேதி,  காலை 09.00 மணி […]

இராமநாதபுரம் எக்குடியில் பெண்கள் மதரஸா திறப்பு விழா..

இராமநாதபுரம் மாவட்டம் எக்குடியில் 22-12-2017 (வெள்ளிக்கிழமை) மாலை 04.00 மணிக்கு பிறகு எக்குடி ஜும்ஆ பள்ளி வளாகத்தில் அன்னை ஆயிஷா(ரலி) பெண்கள் மதரஸா திறக்கப்பட உள்ளது.  இத்திறப்பு விழாவில் தமிழகத்ததைச் சார்ந்த பல சிறந்த மார்க்க அறிஞர்களும், பெரியோர்களும் மார்க்க உரை ஆற்றவுள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது. இவ்விழாவுக்கு எக்குடி ஜமாத் தலைவர் அப்துல் காதர் தலைமை வகிக்கிறார். நிகழ்ச்சியின் சிறப்புரையை தேவிபட்டினம் தாருல் உலூம் ஹக்கானியா தலைவர் முஹம்மது காசிம் மற்றும் நிஸ்வான் துறை மேலாளர் முஹம்மது […]

கீழக்கரையில் இறை மார்க்கத்தை ஏற்ற மாற்று நம்பிக்கை கொண்ட சகோதரர்..

கீழக்கரையில் வசித்து வருபவர் சாகாய ராபிட் (21). இவர் கடந்த சில வருடங்களாக இஸ்லாமிய சகோதரர்களின் வாழ்கை நெறி மற்றும் இஸ்லாம் கூறும் வாழ்கை நெறியால் ஈர்க்கப்பட்டு அவரும், அவருடைய குடும்பத்தாரும் இஸ்லாம் மார்க்கத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றதுடன் தங்களுடைய பெயர்களையும், முஹம்மது இபுறாகிம் என்றும் அவருடைய தாயார் ஆயிஷா மரியம், மரியம் சகானா, ரிகானா பாத்திமா என்றும், சகோதரர் அப்துல்ரஹீம் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும் இந்நிகழ்வில் பங்கு […]

கீழக்கரையில் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு …

கீழக்கரையில் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு இன்று (24-11-2017) கீழக்கரையில் ஹூஸைனியா திருமண மஹாலில் நடைபெற்றது. இதில் “அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்” என்ற தலைப்பில் மெளலவி Z.நஸிர் அஹமது ஜமாலி உரை நிகழ்த்தினர் மற்றும் “முஹம்மத் ரஸூலுல்லாஹ்( ஸல்) நமது வாழ்வியல் வழிகாட்டி” என்ற தலைப்பில் சையத்முஹம்மது புகாரி உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சி வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆஷுரா நோன்பு.. நாம் பெற வேண்டிய படிப்பினைகள்…

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓராண்டுக்கு) பன்னிரண்டு ஆகும். இவ்வாறு அவன் வானங்களையும், பூமியையும் படைத்த அந்நாளில் விதித்தான். (9:36) நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறிய நிகழ்ச்சியை (ஹிஜ்ரத்தை) அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களின் வருடக் கணக்கு துவக்கப்பட்டுள்ளது. எனவே இதனை ஹிஜ்ரி என்று அழைக்கின்றனர். அல்லாஹ்வின் பேரருளால் நாம் ஹிஜ்ரி 1438ஐக் கடந்து 1439 ல் நுழைகின்றோம். ஹிஜ்ரி வருடக்கணக்கின் முதல் மாதம் முஹர்ரம் ஆகும். முஹர்ரம் என்பதற்குப் புனிதமானது – புனிதமிக்கது என்பது […]

அனைவரும் உம்ரா கடமையை எளிதாக நிறைவேற்ற உதவி புரியும் ரய்யான் உம்ரா திட்டம்..

இஸ்ஙாமியராக பிறந்த யாருக்கும் உம்ரா, ஹஜ் போன்ற கடமைகளை செய்ய ஆசை இல்லாமல் இருக்காது, ஆனால் மனம் நிறைய ஆசை உடைய மக்களுக்கு பொருளாதாரம் பெரும் தடையாக இருக்கும். இப்புனித கடமையை அனைவரும் எளிமையாக நிறைவேற்றும் பொருட்டு புதிய தவணை முறைத்திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் நவம்பர் 2017-லிருந்து அக்டோபர் 2018 வரை ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸின் கிளை அலுவலகங்களிலும், அங்கீகரிக்கபட்ட முகமைகளிலும் பிரதி மாதம் *ரூ.4,900* செலுத்தி, 10 மாதத் தொகை நிறைவடைந்தவுடன் […]

18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் புதிய அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது..

கீழக்கரை சாலை தெருவை சேர்ந்த சகோதரர்களால் துவங்கப்பட்ட 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை, பள்ளி கல்லூரி மாணாக்கர்களுக்கான கல்வி உதவிகள், மக்கள் சேவைகள் என்று கடந்த சில ஆண்டுகளாக சப்தமில்லாமல் சிறப்பாக செயலாற்றி வருகிறது. இந்த அறக்கட்டளைக்கான புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (18-09-2017) மாலை 7 மணியளவில் 18 வாலிபர்கள் தர்ஹா வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள், அனைத்து ஜமாஅத் முக்கிய பிரமுகர்கள், சாலை தெரு பொதுமக்கள் […]

கீழக்கரையில் பெண்களுக்கான சிறப்பு தெருமுனை கூட்டம்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் இன்று (17-9-17 )தெற்கு தெரு சொக்கம்பட்டி பகுதியில் பெண்களுக்கான தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிகமான அப்பகுதியில் உள்ள பெண்கள் கலந்து கொண்டார்கள். இப்பிரச்சாரத்தில் நஜிபா மார்க்கம் மற்றும் விழுப்புரையாற்றினார். நிகழ்ச்சியை தொடர்ந்து பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பெண்கள் அவர்கள் கேள்விகளுக்கு குர்ஆன் ,ஹதீஸ் அடிப்படையில் பதில் அளிக்கப்பட்டது.

கீழக்கரையில் பெண்களுக்கான ஆலிமா வகுப்புகள் ஆரம்பம்..

கீழக்கரையில் சங்குவெட்டித் தெருவில் உள்ள மதரஸா அத் தர்பியத்துல் இஸ்லாமியா (நல்லொழுக்கப் பாடசாலை)வில் காயல்பட்டிண ஆயிஷா சித்திக்கா பெண் கல்லூரியின் பாடத் திட்டத்தின் படி அக் கல்லூரியின் முதல்வர் மௌலவி அப்துல் மஜித் மஹ்லரி மேற் பார்வையில் சிறந்த பெண் ஆசிரியர்களை கொண்டு ஆலிமா பாடத்திற்க்கான மாலை நேர வகுப்புகள் நடைபெறுகிறது. இவ்வகுப்புகள் மாலை 4 மணி முதல் சிறுவர்களுக்கு மஃக்தப் வகுப்புகளும், மாலை 5:30 மணி முதல் 6:30 பெண்களுக்கான 6 மாத பட்டயப்படிப்பு (Certificate […]

ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு வந்த தாயகம் திரும்பியவர்களுக்கு சிறப்பான வரவேற்பு…

இந்த வருடம் இஸ்லாமியர்களின் முக்கிய கடமையை ஹஜ்ஜை நிறைவேற்ற தமிழகத்தில் உள்ள ரய்யான் ஹஜ் மற்றும் உம்ரா சர்வீஸ் மூலம் சென்றவர்கள் தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு 07-09-2017 அன்று சென்னை விமானம் நிலையம் வந்து அடைந்தார்கள். சென்னை வந்தவர்களுக்கு ரய்யான் ஹஜ் உம்ரா நிறுவனத்தின் சார்பாக பூங்கொத்து வழங்கி சிறப்பாக வரவேற்பு தரப்பட்டது. மேலும் தொழில் அதிபர் சாதிக் அலி மற்றும் ஜமாத்தார்கள், பல குடும்பத்தினர் அனைவரும் வருகை தந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். […]

கீழக்கரை ஜும்ஆ பள்ளியில் ஹாஜிகளுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி..

இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்று ஹஜ் செய்வதாகும். ஓவ்வொரு இஸ்லாமியனும் தன்னுடைய வாழ்நாளில் ஒரு தடவையாவது ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆதங்கத்துடன் இருப்பார்கள். அவ்வகையில் இந்த வருடத்திற்கான ஹஜ் கடமை நினைவேற்ற இன்னும் 25நாட்களே உள்ளது. வாழ்கையில் முக்கியமான கடமையை தூதர் அவர்களின் வழிமுறையில் முழுமையாக செய்ய வேண்டும் என்பதே அனைவருடைய ஆசையாகவும் இருக்கும். அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் வரும் 06-08-2017 அன்று கீழக்கரை ஜும்ஆ பள்ளியில் மக்ரிப் தொழுகைக்கு பிறகு இந்த […]

சென்னையில் ஹஜ் பயிற்சி முகாம்…

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான சிறப்பு ஹஜ் பயிற்சி முகாம் 02.08.2017 அன்று எழும்பூரிலுள்ள சென்னை கேட் ஹோட்டலில் மாலை 04.00 மணிக்கு நடைபெற உள்ளது. இஸ்லாமிய அழைப்பாளர் மவ்லவி அப்துல் மஜீத் மஹ்ழரி அவர்கள் கலந்துக்கொண்டு பயிற்சியளிக்கிறார். மேலும், ஹஜ், உம்ரா, ஜியாரத் பயண விபரங்கள் உள்ளிட்ட அரிய பல தகவல்களைக் கொண்ட புனித பயணங்கள் என்ற நூல் வெளியிடப்பட உள்ளது. ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த […]

சிறப்புக் கட்டுரை….

பேணப்பட வேண்டிய மனுக்கள்.. இழுக்காமல் துரித தீர்வு காண வேண்டிய விசயங்கள்… சுதாரிக்க வேண்டிய ஜமாத்தார்கள்… துன்பத்தில் இருந்து மீள வேண்டிய தம்பதிகள்… இஸ்லாமியனாய் பிறந்த ஒவ்வொருவனும் திருமண விஷயத்தில் இறைத்தூதர் வழியை அழகிய முறையில் பேணுகிறான் என்று சொல்லலாம்… அவ்வாறு ஒவ்வொருவரும் கடைபிடித்து வருகின்ற திருமண வாழ்வு என்பது சிலருக்கு இன்பம் தரும் தேனிலவு வாழ்க்கை, சிலருக்கு எண்ணாத அளவிற்கு இன்பமாகவும் அமைந்து விடுகின்றது… இவ்வாறு இன்பங்களை காண்போர் தன் வாழ்க்கையை இனிமையாக கொண்டு சென்று […]

கீழக்கரையில் பல பகுதிகளில் நோன்பு கால சஹர் உணவு ஏற்பாடு..

புனிதமான ரமலான் மாதம் தொடங்கியது முதல் பெரியவர் முதல் சிறியவர் வரை நன்மைகளை கொள்ளையடிப்பதில் போட்டி போட்டுக் கொண்டு பல நன்மையான காரியங்களை செய்து வருகிறார்கள். இந்த புனித மாதத்தில் வீண் விரயம் பலரால் செய்யப்பட்டாலும், மற்றொரு புறம் இரவு நேரங்களில் நோன்பு வைப்பதற்கு நல்ல ஆரோக்கியமான உணவு கிடைப்பதற்கும் சிரம்ப்படும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.  அவர்களுக்கும் நல்ல உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனேகமான தெருக்களில் ஜமாஅத் மூலமாகவும், சமூக […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!