திருக்குர்ஆன் வசனத்தை செவிமடுத்த உமர்(ரலி) அவர்களின் மாபெரும் பிம்பம்! – ரமலான் சிந்தனை – 7..

இஸ்லாத்தை அல்லாஹ் தனது இறுதி நபியாம் முஹம்மது (ஸல்) அவர்களின் வாயிலாக முழுமைப் படுத்துகிறான், நபிகளாரும் தம் இறுதி ஹஜ்ஜை நிறைவு செய்துவிட்டு இறுதிப் பேருரையும் நிகழ்த்தி விடுகிறார்கள். காலங்கள் செல்கின்றன, இஸ்லாம் அழகாக மலரும் காலத்தில் எதிர்பாராத விதமாக அரபுச் சக்கரவர்த்தியும் இறுதி நபியுமாகிய கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 11-ம் ஆண்டு ரபியுல் அவ்வல் பிறை 9 அல்லது 12 திங்கட் கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் இம் மண்ணுலகை விட்டு பிரிகிறார்கள். […]

சகோதரியின் குரல்வளத்தில் குர்ஆன் வசனங்களை கேட்டு மாபெரும் சகாபியான வரலாறு!- ரமலான் சிந்தனை – 6..கீழை ஜஹாங்கீர் அரூஸி.

‘அல்லாஹ்வே! உமர் இப்னு கத்தாப் (ரலி) அல்லது அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!’ என்று நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அவர்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவர் உமர் (ரலி) இருந்தார் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அனஸ், இப்னு உமர் (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள். மக்கத்துக் குறைஷிகளில் மிகவும் பிரபல்யமான கோத்திரமான “அதீ” என்ற குலத்தை சேர்ந்த கந்தமா மற்றும் கத்தாப் ஆகியோரது மகனாகவும் தாய்மாமன் உறவில் […]

ஜின்களுக்கும் அச்சமூட்டிய தித்திக்கும் திருக்குர்ஆன்… ரமலான் சிந்தனை – 5, கீழை ஜஹாங்கீர் அரூஸி.

தாயிஃப் அருகே உள்ள “நக்லா”(Nakhlah) என்னும் மலைப் பள்ளத்தாக்கில் தங்கியிருந்த நபிகளார் தொழுகை நேரத்தில் தித்திக்கும் திருக்குர்ஆன் வசனங்களை ஓதிய போது அவர்களின் இனிமையான குரல் வளம் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த மலைப்பிரதேசம் முழுவதும் எதிரொலித்தது. உடனிருந்த ஜைது(ரலி) அவர்களைத் தவிர மனித நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் நபியவர்கள் ஓதிய இறை வசனங்களை “ஜின்”கள் கேட்டு, அவற்றால் ஈர்க்கப்பட்டன. இதனை நபியவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அல்லாஹ் தன் தூதருக்கு அருளிய வேத வசனங்களில் அதை […]

ஜின்களுக்கும் அச்சமூட்டிய தித்திக்கும் திருக்குர் ஆன்!, ரமலான் சிந்தனை – 4 – கீழை ஜஹாங்கீர் அரூஸி…

நபியவர்களின் ஏகத்துவ பரப்புரையின் ஆரம்ப காலக்கட்டத்தில் தாயிஃப் சென்று அங்கே ஏகத்துவத்தை நோக்கி மக்களை அழைத்தார்கள். ஒரு மாத காலம் அங்கே தங்கியிருந்தும் அம்மக்கள் பெருமானாரின் தூது செய்தியை காது கொடுத்து கேட்காமல் ஏளனம் செய்வதும் தாக்குவதுமாய் அழிச்சாட்டியம் செய்தனர் தாயிஃப்வாசிகள். அன்னை ஆயிஷா பிராட்டியார் ஒருமுறை பெருமானாரிடம் கேட்டார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! உஹதுப்போரின் போது உங்களுக்கு ஏற்பட்ட வேதனைப் போன்று வேறு ஏதேனும் உங்கள் வாழ்வில் நிகழ்ந்துள்ளதா? “ஆம்; உன் கூட்டத்தினர் எனக்கு கொடுத்த தொல்லைப் […]

இருப்பதை கொண்டு திருப்தி கொள்வோம்! ரமலான் சிந்தனை-2.

ரமலான் காலங்களில் வழக்கத்துக்கு மாறாக உணவு தயாரிப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தும் மக்களுக்கு இவ்வருட ரமலான் கொஞ்சம் நெருக்கடி கலந்த காலமாய் அமைந்து விட்டது. இதற்கு கொரோனா என்னும் வைரஸ் பரவலும் அதற்கான ஊரடங்குமாகும். ஊரடங்கு காலத்தில் உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளை தவிர ஆடை விற்பனையகம் உள்ளிட்ட பிற வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. புத்தாடை உடுத்தாத தலைபிறையை நாங்கள் கண்டதில்லை, ஆனால் இவ்வருட ரமலான் புத்தாடை அணியாத தலைபிறையாகி விட்டது என்னும் […]

ரமலான் சிந்தனைகள் -1, ஷஹீதுகளின் அளப்பரிய உயர்வுகளும்! கொரோனா ஷுஹதாக்களும்!

இறைவனின் பாதையில் போரிட்டு கொல்லப்பட்ட ஷஹீதுகளைப் பற்றி அல்லாஹ் தனது அருள்மறையில் சொல்லும்போது அவர்களை மரணித்தவர்கள் என்று சொல்லாதீர்கள் என இயம்புகிறான். “இன்னும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுகிறவர்களை மரணித்தோர் என நீங்கள் கூற வேண்டாம்; மாறாக, (அவர்கள் “பர்ஜக்” எனும் மறைவான உலகில்) உயிரோடிருக்கிறார்கள்; எனினும் (அவர்கள் எவ்வாறு உயிரோடு உள்ளார்கள்? என்பதை) நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்”.(அல்குர் ஆன் – 2:154) ஷஹீதுகளுக்கான இந்த சிறப்பான அந்தஸ்து குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, யார் […]

மாநில அளவிளான கிராத் போட்டியில் பரிசு வென்ற முகைதீனியா பள்ளி மாணவி…

கீழக்கரை தாசிம்பீவி மகளிர் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிளான ஆண்ககளுக்கான குர்ஆன் கிராத் போட்டி 29/12/2018 அன்று நடைபெற்றது. இப்போட்டிகள் இஸ்லாமியக் கலாச்சார அறக்கட்டளை, கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தின. இப்போட்டி ஆண்களுக்கு மட்டும் என்று நிர்ணயித்து இருந்தாலும் கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவிகளும் அதிகமாக கலந்து கொண்டதால், 15 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 15வயதுக்கு மேற்பட்டவர்கள் என இரு பிரிவாக மாணவிகளுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன். இதில் கீழக்கரை […]

சாலை தெரு 18 சுஹாதக்கள் பெண்கள் மதரஸாவின் முதலாம் ஆண்டு விழாவும் மற்றும் பட்டமளிப்பு விழா..

சாலை தெருவில் இயங்கிக்கொண்டு இருக்கும் 18 சுஹாதக்கள் பெண்கள் மதரஸாவின் முதலாம் ஆண்டு விழாவும், மற்றும் பட்டமளிப்பு விழா இன்று 20/08/2018 சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவுக்கு அல்ஹாஜ். களஞ்சியம் செய்யது மொஹிதீன் ஹாஜியார் தலைமையில் நடைபெற்றது, சிறப்பு விருந்தினராக அல்ஹாஜ். மஹ்ரூப், முஹம்மத் இபுராஹிம் பாகவி , அல்ஹாஜ் செய்யது ஜாபர் பாதுஷா, மௌலானா ஆரிப் ஆலிம்ஷா, மௌலானா மன்சூர் ஆலிம்ஷா  மற்றும் மதரசாவின் நிர்வாகிகள் அல்ஹாஜ். க. கு. ஜப்பார், அல்ஹாஜ். மீரா சாஹிப், அல்ஹாஜ். […]

வரும் 03/08/2018 முதல் கீழக்கரையில் “கிதாபுத் தவ்ஹீத்” வகுப்பு ஆரம்பம்….

கீழக்கரை “கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையம்” சார்பாக வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் “கிதாபுத் தவ்ஹீத்” வகுப்பு ஆரம்பம் ஆக உள்ளது.  இவ்வகுப்புகள் மக்ரிப் தொழுகைக்கு பின்பு நடைபெற உள்ளது. மேலும் இவ்வகுப்புகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெற உள்ளது சிறப்பு அம்சமாகும். இந்த வகுப்புகளை சிறப்பு சொற்பொழிவாளர் மௌலவி. செய்யது முஹம்மது ஜமாலி கலந்து கொண்டு வழங்க உள்ளார். இந்நிகழ்வில் கீழ்கண்ட பாடத்திட்டங்கள் எடுக்கப்படும் என இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தொிவித்துள்ளார்கள். தவ்ஹீத் என்பது ஒரு […]

கீழக்கரை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர் வட்டம் சார்பாக மார்க்க சிறப்பு நிகழ்ச்சி..

கீழக்கரை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர் வட்டம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த மார்க்க சிறப்பு நிகழ்ச்சி ஜீன் 18 திங்கள் கிழமை கீழக்கரை இஸ்லாமிய அமைதி மையத்தில் (KIPC சென்டர்)  நடைபெற்றது . இச்சிறப்பு நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில பொது செயலாளர் மௌலவி ஹனிஃபா மன்பயீ மற்றும் மதுரை இஸ்லாமிக் சென்டர் பொறுப்பாளர் முஹ்யித்தீன் குட்டி உமரி  ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர் . இந்நிகழ்ச்சியில் அரம்பமாக பேசிய ஹனிஃபா மன்பயீ  இறை […]

சகோதரியின் அழகிய ரமலான் சிந்தனை…

இறைவன் உடுத்த உடை வழங்குகிறான்.. பெற்று அணிந்து கொண்டு மானத்தை மறைத்து கொள்கிறோம்….. இறைவன் வயிற்று பசிக்கு உணவு வழங்குகிறான்.. உண்டு வயிற்றையும் நிரப்பி கொள்கிறோம்… இறைவன் வசிக்க வசிப்பிடம் தருகிறான்.. அதிலே வெயிலும் மழையும் தெரியாத வண்ணம் வசித்து கொள்கிறோம்… ஆனால் இத்தனையையும் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்திட மட்டும் நமக்கு மனம் வந்திடுவதில்லையே…😢 தொலைக்காட்சி பெட்டிக்கு நாம் வழங்கிய தொகைக்கான கால அவகாசம் முடிந்ததும் ஒரு நாள் கூட அதிகம் செல்லும் முன் அதற்கான […]

சிறப்புச் சலுகை விரைந்து வாருங்கள்.. சிறப்பு கட்டுரை..

சலுகையை விரும்பாத மனித இனமே இருக்க முடியாது.  நமக்கு பாரமாக தெரியும்  விசயத்திற்கு ஏதாவது எளிய வழி கிடைக்கும் பொழுது மனம் குதூகலத்தில் துள்ளி குதிக்கும்.  இதுதான் மனித இயல்பு, ஆனால் இது இந்த உலக வாழ்கையில் கிடைக்கும, சந்தோசம். இதே சலுகை நமக்கு மறுமை உலகில் கிடைக்கும் என்றால், அது எவ்வளவு பெரிய பாக்கியமாகும், அதுதான் நமக்கு இறைவன் அளித்துள்ள “ரமளான்” மாதம்.  நாம் செய்த பாவங்கள் எல்லாம் நாம் இந்த ஒரு புனித மாதத்தில் […]

‘கீழை’ அமைதி வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான திறனறிவு போட்டிகள் 12 & 13 தேதிகளில் மக்தூமியா பள்ளியில் நடைபெறுகிறது

கீழக்கரை நகரில் ‘ஈருலக வெற்றியை நோக்கி..’ என்கிற பெயரில் ‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகளுக்கான அறிவிப்பு கடந்த மாதம் செய்யப்பட்டு இருந்தது. பேச்சுப் போட்டி, குர்ஆன் மனனப் போட்டி, மதரஸா மாணவர்களுக்கான மாதிரி தயாரிப்பு போட்டி, இஸ்லாமிய வினாடி வினா போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்காக கீழக்கரை நகரில் இருந்து முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவர்கள் ஆர்வமுடன் தங்களை பதிவு செய்துள்ளனர். போட்டிகளில் பங்கேற்க […]

கீழக்கரையில் புதிய தொழுகைப் பள்ளி திறப்பு..

கீழக்கரையில் இன்று (11-05-2018) ஜும்ஆ தொழுகையுடன் புதிய தொழுகைப் பள்ளி ”மஸ்ஜிதுல் இஹ்லாஸ்” இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பாக  கிழக்குத் தெரு பகுதியில் ஆரம்பம் செய்யப்பட்டது. இன்று இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் ஜும்ஆ பேருரையுடன் தொழுகை தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஹாஜா அனீஸ் தலைமை தாங்கினார்.  மாநில செயலாளர் ரஸ்தா செல்வம்,  மாவட்ட செயலாளர் ஹாஜா முகைதீன் மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.   மேலும் இந்திய தவ்ஹீத் ஜமாத் […]

இஸ்லாமிய பார்வையில் யார் நம் தலைவர்.. ஒரு மீள் பதிவு..

(முன்குறிப்பு:- 2011ம் வருடத்தில் இணையத்தில் வந்த கட்டுரை, இன்றும் பொறுந்த கூடிய சிறு மாற்றங்களுடன்…) யார் இஸ்லாமிய தலைவர்?? இது இஸ்லாமிய அமைப்புக்கோ, சங்கத்துக்கோ, ஜமாஅத்துக்கோ, கூட்டமைப்புக்கோ எதுவாக இருந்தாலும் பொருந்தும். இன்று மனித ஜடத்தினை வணங்கியவர்கள் இஸ்லாமிய சொத்துக்களை பாதுகாக்கும் பாதுகாவலராகவும்,  ஏக இறைவனின் பள்ளிகளை கட்டியமைக்க இஸ்லாம் மார்க்கம் தடை செய்துள்ள பழக்கவழக்கங்களை கொண்டவர்களை அறங்காவலர்களாக நியமிப்பதும் இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரான செயல் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது.  ஆனால் அதை விட மிகவும் […]

ஷஃபான் மாதமும் நாமும்..

இறையச்சம், இறைவனுக்கு அடிபணிதல், தியாகம், இரக்க சிந்தனை, எதையும் தாங்கும் மனப்பக்குவம், உளக்கட்டுப்பாடு, திடவுறுதி, ஏழை எளியோரின் கஷ்ட நிலை உணர்தல் போன்றவை பொதுவாக நோன்பு கற்றுத் தரும் மிகப் பெரும் பாடங்களாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், நோன்பு ஒரு முஸ்லிமை பூரண மனிதனாக்குகிறது. ரமழான் மாத நோன்பு, ஷவ்வால் மாத ஆறு நோன்புகள், வியாழன், திங்கள் ஆகிய வார நோன்பு, ஆஷுரா, அரஃபா மற்றும் ஷஃபான் மாத சுன்னத்தான நோன்புகள் மேற்கூறப்பட்ட உயரிய குறிக்கோள்களின் அடிப்படையில் எப்பொழுதும் வாழவே முஸ்லிம்களைப் பயிற்றுவிக்கின்றன. இத்தகைய நோன்புகளை பெறும்போதனைகளாக மட்டுமின்றி தமது வாழ்விலும் செயல்படுத்திக் காட்டியவர்கள் தான் […]

‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு

கீழக்கரை நகரின் பல இடங்களில், கடந்த வாரம் ‘ஈருலக வெற்றியை நோக்கி..’ என்கிற பெயரில் எந்த ஒரு அமைப்பு பெயரையும் குறிப்பிடாமல் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக வால்போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று ‘ஈருலக வெற்றியை நோக்கி’ என்கிற தலைப்பிட்டு ‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு செய்யப்பட்டு நோட்டிஸ் வெளியிடப்பட்டு உள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் விதமாக பேச்சுப் போட்டி, குர்ஆன் மனனப் […]

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாக நடைபெற இருக்கும் மார்க்க விளக்க சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை KECT சார்பாக மார்க்க விளக்க சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி எதிர்வரும் 20.04.2018 தேதியன்று வெள்ளிக்கிழமை புதுக் கிழக்குத் தெருவில் இருக்கும் மஸ்ஜிதுத் தக்வா பள்ளி திடலில் நடை பெற இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில் ‘முன் மாதிரி இஸ்லாமிய குடும்பம்’ என்கிற தலைப்பில் தொண்டி அல் மதரஸத்துல் அஷ்ரபியா முதல்வர் நிலாமுதீன் ஆலீமும், ‘நபி வழியை அறிந்து நடப்போம்’ என்கிற தலைப்பில் இஸ்லாமிய அழைப்பாளர் அப்பாஸ் அலி […]

‘ஏப்ரல் 8′- சென்னையில் நடைபெற உள்ள முஸ்லீம் மாணவர்கள் சந்திப்பு’ நிகழ்ச்சியில் தமிழகத்தின் தலை சிறந்த ஆளுமைகள் பங்கேற்பு

இஸ்லாமிய மாணவர்களுக்கான மாபெரும் நிகழ்ச்சியாக ‘MUSLIM STUDENTS MEET’ என்கிற பெயரில் எதிர்வரும் ‘ஏப்ரல் 8’ அன்று சென்னை CRESCENT B.S.ABDUR RAHMAN பல்கலைக்கழகத்தின் உள் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. கல்வியில் உயர்வடைதல், தொழில் முனைவோர்களை உருவாக்குதல், ஊடகத் துறையில் மேம்பாடு அடைதல், இஸ்லாமிய மார்க்க அழைப்பில் முன்னேறுதல் உள்ளிட்ட சிறப்பான அடிப்படை கருத்து உருவாக்கங்களோடு இளைய சமுதாயத்தினருக்கு ஒற்றுமையின் வலிமையை வலியுறுத்தி இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் தலை சிறந்த ஆளுமைகள் பலர் கலந்து கொண்டு […]

கீழக்கரை அல் மத்ரஸத்துர் ராழியாவின் ஏழாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய கல்வி சங்கத்தின் பாடதிட்டத்தின் கீழ் இயங்கும் அல் மத்ரஸத்துர் ராழியாவின் ஏழாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி நேற்று (29.03.2018) இரவு 8:30 மணியளவில் இஸ்லாமிய கல்வி சங்க வளாகத்தில் நடைபெற்றது . மத்ரஸாவின் ஐந்தாமாண்டு மாணவர் முஹம்மது ஸஃப்வான் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை ஆரம்பம் செய்தார். இந்த விழாவில் இஸ்லாமிய கல்வி சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் முஹம்மது சாலிஹ் ஹுஸைன், மதரஸாவின் முன்னாள் பேராசிரியர் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!