கீழக்கரையில் புகாரி ஷரிப் 10 ம் ஆண்டு நிறைவு விழா.! உலக நன்மைக்காக இறைவனிடம் கண்ணீர் மல்க கூட்டுப் பிரார்த்தனை செய்த இஸ்லாமியர்கள் ..!!

  இராமாநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய குஃத்பா பள்ளிவாசலில் புகாரி ஷாரிப் பத்தாம் ஆண்டு நிறைவு விழா பழைய குஃத்பா பள்ளி ஜமாத் தலைவர் ஹாஜா ஜலாலுதீன் , செயலாளர் சப்ராஸ் நவாஸ் , பொருளாளர் சுல்தான் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.   கீழக்கரை அனைத்து ஜமாத்தார்கள் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முகமது சதக்கத்துல்லா ஆலின் கிராத் ஓதி துவங்கி வைத்தார் . கீழக்கரை புகாரி ஷெரிஃப் டிரஸ்ட் அல்ஹாஜ் பி எஸ் எம் ஹபிபுல்லா கான் […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமையாக்களின் பேரரசு-4 (கி.பி 661-750) மத்திய தரைக்கடலின் அந்த கடல்பகுதி திடீரென பரபரப்பாகியது. தங்களது கப்பலை ரோமக் கப்பல் வரிசையை நோக்கி செலுத்த உத்தரவிட்டார் தளபதி உக்பத் இப்னு நாபீ அவர்கள். நெருப்பு அம்புகள் பறந்து வந்ததை லட்சியம் செய்யாத முஸ்லீம்களின் போர் கப்பல்கள் ரோமப்பேரரசின் கப்பல் அணிவகுப்புக்குள் நுழைந்தன. முஸ்லீம்களின் நூறுகப்பல்கள் ரோமர்களின் ஐம்பது கப்பல்களை சுற்றி வளைத்தன. அப்போதுதான் ரோமர்களின் கப்பல்படை தலைவருக்கு தனது தவறு புரிந்தது. […]

சுவனத்தை நிரப்பும் ஏழை, எளிய மக்கள்! ..ரமலான் சிந்தனை – 29..கீழை ஜஹாங்கீர் அரூஸி.

மனிதர்களில் ஏழை பணக்காரர் என்னும் தகுதி பிரித்தலை மனிதனே உருவாக்கி கொண்டதால் ஏழைகளும் பணக்காரர்களும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் பேதம் கொண்டு பார்க்கப்படும் சூழல் உள்ளது. இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் ஏழை என்னும் உளவியல் சிந்தனையை உள்வாங்கி கொண்டால், தம்மிடம் இருக்கும் பணம்,நகை,சொத்து சுகம் இவையாவும் மனித சமுதாயத்திற்கு பொதுவானதென்பதை புரிந்து கொள்வான். அல்லாஹ் தனது இறைமறையில் சொல்லும் போது “இறைவனோ தேவைகள் அற்றவன். நீங்கள்தான் அவனிடம் தேவையுள்ளவர்களாக இருக்கின்றீர்கள்” என்று சொல்லியுள்ளான். அதாவது நானே […]

உள்ளம் மூன்று வகையான குணாதியசங்கள் கொண்டவையாகும்! ..ரமலான் சிந்தனை – 28..கீழை ஜஹாங்கீர் அரூஸி..

பொதுவாக ஒருமனிதனின் உள்ளத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். சீரான உள்ளம், மரணித்த உள்ளம், நோய்வாய்ப்பட்ட உள்ளம். “சீரான உள்ளமானது” மனோ இச்சைக்குக் கட்டுப்படுதல் மற்றும் நபியவர்களின் பொன்மொழிகளில் சந்தேகம் கொள்ளல் போன்றவற்றை விட்டும் விலகியதாக இருக்கும். மேலும், இவ்வுள்ளமானது முழுமையாக அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களுக்கு சிரம் தாழ்த்தக்கூடியதாக இருக்கும் இத்தகைய உள்ளம் படைத்தவர்களே நிச்சயமாக மறுமை நாளில் ஈடேற்றம் பெறக்கூடியவர்களாக இருப்பர். இது குறித்து இப்றாஹீம் (அலை) அவர்களின் ஒரு பிரார்த்தனைபற்றி அல்லாஹுத்தஆலா கூறும் போது: “அல்லாஹ்விடம் […]

நல்லோராய் வாழ்வதற்கு உள்ளத்தை சீர்படுத்துவோம்…ரமலான் சிந்தனை – 27..கீழை ஜஹாங்கீர் அரூஸி…

ஒவ்வொரு மனிதரும் தான் நல்லோராய் வாழ வேண்டுமெனெ விரும்புவதை பார்க்கிறோம். அப்படி வாழ்வதற்கு தன்னிடமுள்ள பணமோ, பதவியோ, சொத்துக்களோ தேவையில்லை. உள்ளம் சீராக இருந்தாலே போதும். மனிதனின் தேகத்தில் உள்ளம் மிகச் சிறப்பு வாய்ந்த ஓர் அங்கமாகும். எவருடைய உள்ளம் உயிரோட்டமான உள்ளமாக இருக்கின்றதோ அவர் உயிரோட்டமுள்ள மனிதனாகவும், எவருடைய உள்ளம் மரித்த நிலையில் இருக்கின்றதோ அவர் மரித்த மனிதனாகவும் கருதப்படுவார். இதனடிப்படையிலேயே அல்லாஹ்வும் அவனது தூதரும் மனித குலத்துக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். அல்லாஹ் கூறுகின்றான்: “நீங்கள் […]

தர்மம் செய்வதும் ஓர் அழகிய வணக்கம் தான்!..ரமலான் சிந்தனை-24..கீழை ஜஹாங்கீர் அரூஸி

இறைவனுக்கு பிடித்த எத்தனையோ நல்ல அமல்களில் மனிதர்கள் செய்யும் தர்மமும் ஒன்றாகும். “தர்மம் தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும்” எனக்கூறப்படும் “சதக்கத்துல் ரத்துல் களா, வரத்துல் பலா” என்பதற்கு இஸ்லாமிய வரலாற்றில் ஏராளமான நிகழ்வுகள் உண்டு. ‘விசுவாசம் கொண்டோரே! தங்கள் பொருட்களை (தர்மத்திற்காக) இரவிலும், பகலிலும், ரகசியமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்களே அத்தகையோர்_அவர்களுக்கு அவர்களுடைய நற்கூலி அவர்களது ரட்சகனிடம் உண்டு. அவர்களுக்கு (மறுமையில்) யாதொரு பயமுமில்லை. (இம்மையில் விட்டுச் சென்றதைப் பற்றி) அவர்கள் கவலையும் […]

இறையச்சமில்லாத மனிதன் வேடதாரி என்பதற்கு பெருமானாரின் விளக்கம்!..ரமலான் சிந்தனை -23..கீழை ஜஹாங்கீர் அரூஸி…

புனிதமான இந்த ரமலான் மாதத்தில் நாம் செய்யும் தொழுகைகள், அமல்கள், திக்ருகள், துஆக்கள், தர்மங்கள் போன்ற நன்மைகளை ரமலான் அல்லாத காலங்களிலும் தொடர்ந்து செய்யாமல் விட்டுவிட்டால் “வேடதாரிகள்” என்னும் பழிச்சொல்லுக்கு ஆளாகிடுவோம். ஒருமுறை ஹழ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்கள், ஹழ்ரத் ஹன்ளலா(ரலி) அவர்களை சந்தித்தபோது என்ன ஹன்ளலா எப்படி இருக்கீங்கனு? நலம் விசாரித்தார்கள். அதற்கு தாம் வேடதாரியாக இருப்பதாக பதில் கூறினார்கள் ஹன்ளலா(ரலி) அவர்கள். இதை சற்றும் எதிர்பாராத அபுபக்கர்(ரலி) அவர்கள் சுபுஹானல்லாஹ், ஏன் இப்படி சொல்றீங்கனு கேட்டார்கள்? […]

இறையச்சம் நம்மில் எப்படி இருக்க வேண்டும்? ..ரமலான் சிந்தனை-22..கீழை ஜஹாங்கீர் அரூஸி.

இறைவனின் அடியார்களிடம் “தக்வா” என்னும் இறையச்சம் இருக்க வேண்டுமென்பதையும் அதனால் அம்மனிதன் இம்மை, மறுமை ஈருகிலும் கண்ணியப்படுத்தப்படுவதையும் அல்லாஹ்வும் அவனது தூதரும் வான்மறையும் அழகிய முறையில் நமக்கு பாடங்களாக உள்ளன. இறையச்சம் குறித்து இவ்வாறு அல்லாஹ் கூறுகிறான்:- “முஃமீன்களே! அல்லாஹ்வை _அவனை அஞ்ச வேண்டிய முறைப்படி பயப்படுங்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டவர்களாகவே அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்” (அல்குர்ஆன் – 3:102) இந்த வசனத்தில் அல்லாஹ்வுக்கு அச்சப்பட்டு வாழ்வது குறித்தும் மரணத்தின் போது முஸ்லிமாக மரணிக்க வேண்டுமென்பது […]

குகைக்குள் சிக்கிய மூவர் மன்னிப்பின் மூலம் மீண்டது எப்படி? ..ரமலான் சிந்தனை – 21..கீழை ஜஹாங்கீர் அரூஸி…

எந்த மனிதன் தனது செயல்கள் ஒவ்வொன்றிலும் அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் எதிர்பார்த்தவனாக வாழ்கின்றானோ? நிச்சயம் அம்மனிதன் இறையருளுக்குரியவன் என்பதை தான் கீழ்வரும் குகைவாசிகள் மூவர் விசயம் நமக்கு உணர்த்துகின்றன. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன் (சென்ற காலத்தில்) இருந்தவர்களில் மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, (திடீரென) மழை பிடித்தது. எனவே, அவர்கள் ஒரு குகையில் தஞ்சம் புகுந்தார்கள். உடனே, அந்தக் குகை (வாசலை மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை மூடி) அவர்களை அடைத்தது. செய்வதறியாது திகைத்த […]

தனது தவறை உணர்வதும், அதை திரும்ப செய்யாமல் இருப்பதுமே தவ்பாவின் சித்தாந்தமாகும்! ..ரமலான் சிந்தனை -19..கீழை ஜஹாங்கீர் அரூஸி.

“எவர் தவ்பா (பாவமன்னிப்பு) செய்து அல்லாஹ்வை விசுவாசமும் கொண்டு நல்ல அமல்களை செய்தார்களோ; அவர்கள் சுவனம் செல்வார்கள். அவர்கள் சிறிதும் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்”.(அல்குர்ஆன் – 19:60) “எவர்கள் மறைவிலும் அர்ரஹ்மானுக்கு பயந்து வாழ்ந்து அவன்பால் மீளக்கூடிய பரிசுத்த உள்ளத்துடன் வருகிறார்களோ; அவர்களுக்கு சுவனம் நெருக்கமாக்கப்படும்”(அல்குர்ஆன் – 50:33) மேலே நாம் பார்த்துள்ள இரண்டு வசனங்கள் மட்டுமல்ல, ஏராளமான வசனங்கள் மனிதன் தனது தவறை உணர்ந்து அதற்காக படைத்தவனிடம் மன்னிப்பு கோருதல் பற்றியும் அவ்வாறு மன்னிப்பு கோருவதின் […]

அபுஜஹல் தலையை வெட்டி வீழ்த்திய இரண்டு சிறுவர்கள்!..ரமலான் சிந்தனை – 18..-கீழை ஜஹாங்கீர் அரூஸி…

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:- பத்ருப் போரின் போது நான் படையினரோடு நின்றுகொண்டிருந்த நேரத்தில் என் வலப்பக்கமும் இடப் பக்கமும் நான் பார்த்தேன். என்னருகே (இரு பக்கங்களிலும்) இளம்வயதுடைய இரு அன்சாரி சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் என்னை நோக்கி கண் சாடை செய்து என் பெரிய தந்தையே நீங்கள் அபூ ஜஹலை அறிவீர்களா? என்று கேட்டார். நான் ஆம் (அறிவேன்) உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரன் மகனே என்று […]

பத்ரு போரின் முதல் மூன்று முன்னணி வீரர்கள்!..ரமலான் சிந்தனை-17..-கீழை ஜஹாங்கீர் அரூஸி..

இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒரு மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியதே “பத்ரு போர்” ஆகும். இது ஒரு நீண்ட நெடிய வரலாற்று தொகுப்பாகும். நாம் சுருக்கமாக விவரித்துள்ளோம். மதீனாவில் பெருமானாரோடு இருந்த நபித்தோழர்களோடு கலந்திருந்த ஒன்றிரண்டு முனாஃபிக் என்னும் நயவஞ்சகர்கள் மக்காவின் குறைஷியர் எதிரி படைகளுக்கு ரசூலுல்லாஹ் மக்காவின் மீது படையெடுக்க வருகிறார்கள் என்னும் பொய் செய்தியை அனுப்பி மக்காவையும் மதீனாவையும் ஒருவித பதட்டத்துடன் வைத்து ரசித்தனர். இன்னொரு பக்கம் மக்கா குறைஷிகள் முப்பது பேருடன் வியாபார நிமித்தமாக […]

தம் உயிரை பணயம் வைத்து அண்ணலாரை பாதுகாத்த அலீ(ரலி)! ..ரமலான் சிந்தனை – 16..கீழை ஜஹாங்கீர் அரூஸி.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொன்றே விடுவதென குறைஷிகள் முடிவு செய்தனர். அன்றே மக்காவை விட்டு வெளியேறி விடுமாறு நபிகளாருக்கு இறைவனின் கட்டளையும் வந்தது. இறைவனின் கட்டளையை கொண்டு வந்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘வழமையாகத் தாங்கள் படுத்துறங்கும் மஞ்சத்தில் இன்று படுத்துறங்க வேண்டாம்’ என அண்ணலாரை எச்சரித்து சென்றனர். அண்ணலார் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்லப் புறப்பட்டபோது, அநேகமாய் அவர்களின் விரோதிகளாலும், மற்றோராலும் தங்களிடம் வைக்கப்பட்டிருந்த அமானிதப் பொருட்களை உடையவர்களுக்குக் கொடுத்துவிட்டுப் பிறகு வருமாறு கூறி அலீ […]

ஜைது பின் தாபித்(ரலி) அவர்களைப் பற்றி நபித்தோழர்கள் கூறிய நற்சான்றுகள்!..ரமலான் சிந்தனை 14..கீழை ஜஹாங்கீர் அரூஸி.

அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பிரியத்திற்குரிய தோழராகவும் பெருமானாரின் மொழி பெயர்ப்பாளராகவும் பெருமானாரால் சொர்க்கவாசி என அடையாளம் காட்டப்பட்டவராகவும் திகழ்ந்தார்கள் ஜைது பின் தாபித்(ரலி) அவர்கள். நபிகளாரின் தாயிஃப் பயணத்தில் உடன் சென்று பெருமானாருக்கு உறுதுணையாக இருந்தார்கள். தாயிஃபில் இருந்து மக்கா திரும்பும் வழியில் நக்லா பள்ளத்தாக்கில் நபிகளாருடன் தங்கியவர்கள் ஜைது பின் தாபித்(ரலி) அவர்கள் என்பதை ரமலான் சிந்தனை 4ல் பார்த்தோம். ஜைது பின் தாபித்(ரலி) அவர்களைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:- இரண்டு விஷயத்தில […]

இறை வசனங்களை ஒருங்கிணைத்து குர்ஆன் பிரதிகளை வழங்கிய உத்மான்(ரலி) அவர்கள்! ..ரமலான் சிந்தனை – 13..கீழை ஜஹாங்கீர் அரூஸி.

கலீஃபா உத்மான்(ரலி) காலத்தில் திருக்குர்ஆன் தொகுக்கப்பட்டு பிரதிகள் எடுக்கும் வேலை முழுவேகத்துடன் தொடங்கியது. ஹழ்ரத் ஜைது பின் தாபித்(ரலி) தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டு அதன் பணி துவங்கியது. கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் ஹிஜ்ரி 12 ஆம் ஆண்டு “யமாமா” போர் நடந்தது. அதில் திருக்குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்த காரிகளும், நன்றாக மனப்பாடம் செய்திருந்த ஹாபிஸ்களும் கலந்து கொண்டனர். அந்த யுத்தத்தில் ஹாபிஸ்களில் 70 பேருக்கு மேல் தங்களுடைய இன்னுயிரை தியாகம் செய்து […]

இறை வசனங்களை ஒருங்கிணைத்து குர்ஆன் பிரதியாக்கிய உத்மான்(ரலி)!..ரமலான் சிந்தனை – 12..கீழை ஜஹாங்கீர் அரூஸி…

ஜைத் பின் தாபித் (ரலி) நன்றாக ஓதத் தெரிந்தவர், எழுத்தறிவு உள்ளவர் என்று அண்ணலார் (ஸல்) அவர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு ஜைத் பின் தாபித் (ரலி) ஓதுவதை அண்ணலார் (ஸல்) அவர்கள் செவிமடுத்தார்கள். தெளிவாக ஓதினார், துள்ளியமாக உச்சரித்தார். கற்று உணர்ந்தவர் போல் வசனங்களின் பொருளையும் நன்றாகப் புரிந்து ஓதினார். எழுதுவதிலும் இவர் தேர்ச்சி பெற்றிருந்ததை அண்ணலார் (ஸல்) அவர்கள் புரிந்து கொண்டார்கள். இம்மாதிரி தகுதி கொண்டவர்கள் அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு மிகவும் தேவைப்பட்டார்கள். பின்பு அண்ணலார் […]

இறையில்லங்களை நிர்வகிக்கும் முறையை கற்றுத்தந்த உத்மான்(ரலி)…ரமலான் சிந்தனை – 11..கீழை ஜஹாங்கீர் அரூஸி.

இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் மூன்றாம் கலீஃபாவான உத்மான்(ரலி) அவர்களின் ஆட்சியில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. மக்கா, மதீனா பள்ளிகளை சுற்றி சுவர் எழுப்பி பாதுகாப்பினை பலப்படுத்தியதும் இவர்களின் ஆட்சியில் தான். மதீனாவின் மஸ்ஜிதுன் நபவியை சுற்றி இருந்த யூதர்களுக்கு சொந்தமான தோட்டங்கள், காலி மனைகளை தமது சொந்த பணத்தில் கூடுதல் விலைக்கு வாங்கி பெருமானாரின் குடும்பத்தவர்களுக்கு இருப்பிடங்களாக்கி கொடுத்தார்கள் கலீஃபா உத்மான்(ரலி) அவர்கள். மஸ்ஜிதுன் நபவியை சுற்றி ஏராளமான நிலங்களை வைத்திருந்த யூதர்கள் காலப்போக்கில் தங்களின் ஒன்றிரண்டு இடங்களையும் […]

இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் மூன்றாம் கலீஃபா உத்மான்(ரலி) வரலாறு!..ரமலான் சிந்தனை- 10..கீழை ஜஹாங்கீர் அரூஸி.

இரண்டாம் கலீஃபா உமர்(ரலி) அவர்கள் தங்களின் இறுதி காலம் (மரணம்) நெருங்குவதை உணர்ந்து உடனடியாக ஆறு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்து மூன்றாம் கலீஃபாவை தேர்வு செய்யுமாறும் இந்த தேர்வு மூன்று நாட்களுக்குள் இருக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்கள். இந்தக் குழுவில் பெருமானாரால் சுவர்க்கவாசிகள் என கூறப்பட்ட உத்மான்(ரலி), தல்ஹா(ரலி), ஜுபைர்(ரலி), சஅது(ரலி), அப்துர்ரஹ்மான்(ரலி), அலி(ரலி) போன்றோர் இடம்பெற்றனர். இவர்களில் அலி(ரலி) அவர்களை தவிர மற்ற ஐவரும் இஸ்லாத்தின் ஆரம்ப கால ஏகத்துவ பரப்புரையாளர்களாகும். உமர் (ரலி) […]

அபூபக்கர்(ரலி) அவர்களை அல் காரினைன் என ஏன் அழைக்கப்பட்டது? ..ரமலான் சிந்தனை – 9.. கீழை ஜஹாங்கீர் அரூஸி.

அபுபக்கர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் வரிசையில், அதாவது வயது வந்தோர்களில் முதலாவது நபராகும். எப்பொழுது இஸ்லாத்தை அபுபக்கர் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்களோ, அப்போதிருந்தே தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக தனது உடல், பொருள், ஆவி, திறமைகள், அனைத்தையும் தியாகம் செய்தார்கள். அவர்களது வாழ்க்கை முழுவதுமே தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக மாசு மறுவில்லாமல் தன்னையே இழந்த சரித்திரச் சான்றுகளைத் தான் நாம் காண முடியும். இன்னும் ஹஸ்ரத் உதுமான் (ரலி), சுபைர் (ரலி), தல்ஹா […]

முதல் கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்களின் வரலாற்று பின்னணி…ரமலான் சிந்தனை – 8…கீழை ஜஹாங்கீர் அரூஸி…

குல வம்சம் கோலோச்சிய அன்றைய மக்காவின் குறைஷியர் வம்சத்திலேயே “பனீதைம்” என்ற உயரிய கோத்திரத்தில் உதுமான் இப்னு ஆமிர் – சல்மா பின்த் சக்ர் தம்பதிகளுக்கு மகனாய் பிறந்தவர்கள் ஹழ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்கள், தமது வம்சத்தை சார்ந்த முன்னோடிகளின் வரலாறு மற்றும் முன்சென்ற சமுதாயங்கள் குறித்த தெளிவான ஞானம் கொண்டவர்களாவும், மிகச்சிறந்த வணிகராகவும், செல்வந்தராகவும் வாழ்ந்தார்கள் அபூபக்கர்(ரலி) அவர்கள். மக்காவின் மிக முக்கிய 10 நபர்களில் அன்னை ஹதீஜா பிராட்டியாரும் ஹழ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்களும் முதன்மையானவர்களாக திகழ்ந்தார்கள். மக்காவின் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!