இராமநாதபுரம் மாவட்டம் கமுதி உப மின் நிலையத்தில் (21.7.18) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதனால் அன்றைய தினம் காலை 9:00மணி முதல் மாலை 5:00 மணி வரை கமுதி, அபிராமம், பார்த்திபனூர், முதுகுளத்தூர், செங்க படை, கீழராமநதி, மண்டல மாணிக்கம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என கமுதி மின் வாரிய உதவி செயற்பொறியாளர் என்.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்
Category: அறிவிப்புகள்
அறிவிப்புகள்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழிற்திறன் பயிற்சி பெற கௌசல் பாஞ்சி (Kaushal Panjee ) செயலியில் பதிவு செய்திடலாம்..
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (19.07.2018) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் ‘வளர்ந்து வரும் மாவட்டங்கள்” (Aspirational District) திட்டப் பணிகளின் கீழ் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் ‘கௌசல் பாஞ்சி” என்ற செயலி குறித்து மாணவ, மாணவியர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது: மத்திய அரசு இந்திய அளவில் வளர்ந்து வரும் மாவட்டங்களாக தேர்வு செய்துள்ள மாவட்டங்களில் இராமநாதபுரம் மாவட்டமும் ஒன்றாகும். […]
பரமக்குடி அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி..
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி – முதுகுளத்தூர் சாலையில் வெண்ணீர் வாய்க்கால் கிராமத்தை சேர்ந்த பாலுச்சாமி மகன் நாகராஜன் (38) .இவர் இன்று மாலை இரு சக்கர வாகனத்தில் புதிய தீயணைப்பு நிலையம் அருகேயு வளைவில் திரும்பினார். அப்போது எதிரே இருந்த மின் கம்பத்தில் மோதி படுகாயம் அடைந்தார். முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்
சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான குறை தீர்க்கும் கூட்டம் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது..
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம், இராமேஸ்வரம், திருவாடானை, கீழக்கரை, பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொது மக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு முகவர்களுடன் எதிர் வரும் 30.07.2018 அன்று மாலை 05.00 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. மேற்கண்ட கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள் மற்றும் […]
இராமநாதபுரத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் …
இராமநாதபுரத்தில் இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்து முருகன் பேசினார். இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வை காலி பணியிடங்களின் அடிப்படையில் வெளிப்படையாக நடத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முன்னாள் மாவட்ட செயலாளர் ராபர்ட் ஜெயராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் தீத்தடுப்பு மற்றும் தற்காப்பு பயிற்சிகள்…
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 16.07.2018 அன்று பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை சார்பாக தீத்தடுப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, இயற்கை சீற்றத்தால் ஏற்படும் அழிவிலிருந்து நம்மையும், மற்றவர்களையும் எப்படி எல்லாம் காத்துக்கொள்வது போன்ற வழிமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தான் பேரிடர் ஒத்திகை பயிற்சி நடத்தப்படுகிறது. […]
அவசர உதவி எண், ‘112’ டிசம்பரில் அமல்..
நாடு முழுவதும், அவசர உதவிக்கு, ‘112’ என்ற எண்ணில் அழைக்கும் மத்திய அரசின் திட்டம், தமிழகத்தில், டிசம்பரில் நடைமுறைக்கு வருகிறது. போலீஸ் உதவிக்கு, 100; ஆம்புலன்ஸ் தேவைக்கு, 108; குழந்தைகளுக்கு உதவிட, 1098; மூத்த குடிமக்களுக்கு, 1253; தீயணைப்பு வாகனத்தை அழைக்க, 101 என, ஏராளமான அவசர உதவி எண்கள் செயல்பாட்டில் உள்ளன. இதனால், பொது மக்களிடம் குழப்பம் நீடிக்கிறது. இந்த அழைப்புகளை கையாளுவதில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு பணிச்சுமையும், செலவும் அதிகமாகிறது.இதனால், மத்திய அரசு, நாடு முழுவதும், […]
கீழக்கரையில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி..
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இராமநாதபுரம் மாவட்ட கிளை, யூத் ரெட் கிராஸ் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரி, கீழ்க்கரை ரோட்டரி சங்கம், தாலுகா ரெட் கிராஸ் கிளை மற்றும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஆகியோர் இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி. யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர் ஆனந்த் வரவேற்றார். கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலிருந்து துவங்கிய இப்பேரணியை […]
மண்டபம் உப மின் நிலையத்தில் ஜூலை 17 (செவ்வாய் கிழமை) மின் விநியோகம் நிறுத்தம் ..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் உப நிலையத்தில் ஜூலை 17 – (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் அன்றைய தினம் காலை 9:45 மணி முதல் மாலை 4:45 வரை மின் விநியோகம் இருக்காது என ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். அன்றைய தினம் மின் தடை படும் பகுதிகள் இராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், மண்டபம் முகாம், மரைக்காயர்பட்டினம், வேதாளை, இடையர்வலசை, குஞ்சார்வலசை, நடுமனைக்காடு, உடையார்வலசை, சுந்தரமுடையான், பால்குளம், அரியமான், சாத்தக்கோன்வலசை
ராமநாதபுரத்தில் ஜூலை 19ல் தடகள விளையாட்டு போட்டி ..
தமிழ்நாடு அரசு பொன் விழா ஆண்டை முன்னிட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜூலை 19ல் தடகளப் போட்டிகள் நடத்தப்படுகிறது. ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் ஜூலை 19 காலை 8 மணிக்கு 100 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்க 2017 டிச., 31 அன்று 21 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். வயது சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் சொந்த மாவட்டத்திற்காகவோ, […]
ஜூலை 14ல் பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் ..
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். மாவட்டத்தின் ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஜூலை மாதத்திற்கான பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் ஜூலை 14, சனிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் வட்டம் காரேந்தல், இராமேஸ்வரம் வட்டம் அக்காள்மடம் கிராம நிர்வாக அலுவலர் சாவடி, திருவாடானை வட்டம் மச்சூர், பரமக்குடி வட்டம் உரப்புளி, […]
TATKAL முறையில் விவசாயிகளுக்கு மின்சாரம் – அறிவிப்பு வெளியீடு ..
தமிழக அரசு இந்த ஆண்டும் தட்கல் (Tatkal) முறையில் விவசாய மின் இணைப்பு பெற இந்த ஆண்டும் மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 5 குதிரைத்திறன் மோட்டார் – 2.5 இலட்சம் 7.5 குதிரைத்திறன் மோட்டார் – 2.75 இலட்சம் 10 குதிரைத்திறன் மோட்டார் – 3 இலட்சம் 15 குதிரைத்திறன் மோட்டார் – 4 இலட்சம் மற்றும் நில உடைமை ஆவணங்களுடன் 31.07.2018 நாளிற்குள் அந்தந்த பிரிவு அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ளுங்கள். விரைவில் இலவச விவசாய மின் […]
சட்டபேரவை குழுக்கள் நியமனம்: பேரவை தலைவர் தனபால் அறிவிப்பு..
தமிழக சட்ட பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை தலைவர் தனபால் அறிவித்த பல்வேறு குழுக்களுக்கான உறுப்பினர்கள் பட்டியல். பேரவையின் மதிப்பீட்டு குழுவிற்கு தோப்பு வெங்கடாசலம் தலைமையில் பொன்முடி( திமுக) உள்ளிட்ட 16 உறுப்பினர்களை அறிவித்தார். பொதுக்கணக்கு குழு தலைவராக எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் தலைமையில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, அபுபக்கர் உள்ளிட்ட உறுப்பினர்களை அறிவித்தார். பொது நிறுவனங்கள் குழு தலைவராக செம்மலை தலைமையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, பிச்சாண்டி, கோவி செழியன், […]
மென்பொருள் வழி பட்டா படிவம் அனுப்புதல் மற்றும் பட்டா மாற்றம் – பதிவுத்துறை தலைவரின் சுற்றிக்கை – நகல் இணைப்பு …
தமிழ்நாட்டில் இனி ஆவணப்பதிவுகளை மென்பொருள் வழி பட்டா படிவம் அனுப்புதல் மற்றும் பட்டா மாற்றம் செய்தல் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட மனைப்பிரிவு (Plot) அமைந்துள்ள சர்வே எண்ணை குறிப்பிடவேண்டும் என சுற்றறிக்கை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமான அரசாணை நகலை பார்வையிட கீழே க்ளிக் செய்யவும்.. Circular 21352-c1-18 dated 05.07
கழிவறை, படுக்கை வசதியுடன் கூடிய தமிழக அரசு சொகுசு பேருந்தில் கட்டணம் எவ்வளவு?
தமிழக அரசு புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் சொகுசு பஸ் அனைத்து வசதிகளையும் கொண்ட பஸ் ஆகும். இதில் பயணிக்க அனைவருக்கும் ஆவல், ஆதலால் அதன் கட்டணத்தை அறிந்து கொள்வது அவசியம். இந்த சொகுசு பஸ்ஸில் சென்னையில் இருந்து மதுரைக்கு ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.975, சேலம் ரூ.725, போடிநாயக்கன்பட்டி ரூ.1110, ஈரோடு ரூ.905, கரூர் ரூ.820 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவை-பெங்களூர் இடையே இயக்கப்படும் ஏ.சி. படுக்கை வசதி பஸ்சுக்கு ரூ.805 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 6 […]
அறிந்து கொள்வோம் சட்டம் – மன அழுத்தத்தை காரணம் காட்டி ராஜினாமா கடிதம் திரும்ப பெற முடியுமா?…
ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதத்தை பின்னர், அந்தக் கடிதத்தை பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக கொடுத்து விட்டதாக கூறி திரும்பப் பெற முடியுமா??, ஒரு வழக்கு விபரம் கீழே.. பரமேஸ்வரி என்பவர் நாகப்பட்டினம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக 18.6.2008 ஆம் தேதி பணியில் நியமனம் செய்யப்பட்டார். அதன்பிறகு பல இடங்களுக்கு பணிமாறுதல் 5.8.2013 ஆம் தேதி ஒரு பணி விலகல் கடிதத்தை மாவட்ட நீதிபதியிடம் கொடுத்தார். […]
டிஜிபிகளை நியமிக்க புதிய வழிமுறைகளை வகுத்தது உச்சநீதிமன்றம்…
மாநில அரசு இடைக்கால டிஜிபிகளை நியமிக்க தடை விதித்து பிரகாஷ் சிங் என்பவர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையே 2 ஆண்டுகள் பதவியில் இருக்கும் வகையில் டிஜிபிக்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இடைக்கால டிஜிபிக்களை நியமிக்க கூடாதென மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிஜிபி நியமனம் தொடர்ப்பாக பிரகாஷ் சிங் தொடுத்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது மாநில அரசுகள் தங்களுக்கு சாதகமான, அரசியல் […]
‘லோக் ஆயுக்தா’ மசோதா நிறைவேற்ற அரசு முடிவு..
நாடு முழுவதும், அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்க, 2013ல், லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட்டது. இது, 2014 ஜன., 16ல் அமலுக்கு வந்தது. லோக் ஆயுக்தா அமைப்புகள், 15 மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. தமிழகம், புதுச்சேரி உட்பட, 12 மாநிலங்கள், லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றவில்லை.’லோக் ஆயுக்தா அமைக்கும் பணியை, தமிழக அரசு உடனடியாக துவங்க வேண்டும். இது தொடர்பான அறிக்கையை, ஜூலை, 10க்குள் தாக்கல் செய்ய வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
எஸ்டிபிஐ கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் அறிவிப்பு..
எஸ்டிபிஐ கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர், விபரங்கள் கீழ்கண்டவாறு;- மாநில தலைவர் நெல்லை முபாரக் என்கிற V.M.S முகமது முபாரக் மாநில துணை தலைவர்கள்:- A. அம்ஜத் பாஷா KKSM.தெஹ்லான் பாகவி மாநில பொதுசெயலாளர்:- M.நிஜாம் முகைதீன். B.அப்துல் ஹமீத் அச.உமர் பாரூக் மாநில செயலாளர்:- T.ரெத்தினம் S.அமீர் ஹம்ஸா A.அபுபக்கர் சித்திக் S.அகமது நவவி வழக்கறிஞர் N.சஃபியா மாநில பொருளாளர்:- V.M.அபுதாஹீர்
நாளை (01-07-2018) முதல் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை…
இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை விதித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சுற்றுப்புற தூய்மையினை பாதுகாத்திடும் வகையில் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வருகின்ற 01.07.2018 முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கூறுகையில்: பொதுமக்களுக்கு மேம்பட்ட சுகாதார வசதிகளை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். அந்த வகையில் மாவட்டத்தில் சுற்றுப்புறத் தூய்மையினை மேம்படுத்திடும் வகையில் திடக்கழிவு […]
You must be logged in to post a comment.