கீழக்கரையில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்…

கீழக்கரையில் இன்று (28/10/2018) கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கம் மாலை 5.00 மணி முதல்  அரசு மருத்துவமனை எதிர் புறம் நடைபெற உள்ளது.  இந்த கருத்தரங்கின் நோக்கம், சட்டத்தை புதிய தலைமுறையினரான மாணவர்கள் அறிந்து கொள்ள அவசியத்தை விளக்குவதும், சட்ட விழிப்புணர்வு இல்லாமையால் ஏற்படும் சமூகம் பிரச்சினைகளை எடுத்துரைப்பதுமாகும். இந்த கருத்தரங்கம் பற்றிய மேல் விபரங்களைக்கு   9500 489492 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  இக்கருத்தரங்கில் […]

இராமநாதபுரத்தில் நாளை (25/10/2018 – வியாழன்) மின் தடை..

இராமநாதபுரம், தேவிபட்டினம், காவனூர், ரெகுநாதபுரம், தேவிபட்டினம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (25.10.2018) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை (25.10.2018) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை ராமநாதபுரம் நகராட்சி, சக்கரக்கோட்டை, பாரதி நகர், மாவட்ட ஆட்சியரக பகுதி, அச்சுந்தன்வயல், செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி பகுதி , திருப்புல்லாணி, எம்.எஸ்.கே.நகர், பசும்பொன் நகர், கூரியூர் , காஞ்சிரங்குடி, புத்தேந்தல் , ரெகுநாதபுரம், பெரியபட்டினம், முத்துப்பேட்டை, வண்ணாங்குண்டு, […]

கீழக்கரையில் நாளை (20/10/2018 – சனிக்கிழமை) மின்சார தடை..

கீழக்கரை 110KV உப மின் நிலையத்தில் 20/10/2018 – சனிக்கிழமை அன்று பராமரிப்பு நடைபெற உள்ளதால் கீழக்கரை, காஞ்சிரங்குடி மற்றும் அம்மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என மின் நிலைய பொறியாளர் கங்காதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மாற்றுதிறனாளிகள் பேருந்தில் பயணிக்க புதிய உத்தரவு ..

மாற்றுத்திறனாளிகள் பேருந்து பயணம் மேற்கொள்ளும்போது ஏற்ப்படும் பல்வேறு சிரமங்களை தீர்க்க வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நடத்தியதன் விளைவாக மாநில போக்குவரத்து ஆணையர் அவர்கள் கடந்த 14.09.18 அன்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்கள். அதன்படி மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறுவதற்கு இறங்குவதற்கும் வசதியாக அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் அனைத்திலும் சாய்வுதளம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்ப்படுத்தி தர வேண்டும், மாற்றி வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் பயணம் […]

கீழக்கரை நகராட்சியில் மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டு இருக்கும் சொத்து வரி குறித்து உங்களுக்கு தெரியுமா.?

கீழக்கரை நகராட்சி சார்பாக கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ள நாளிதழ் விளம்பரப்படி, கீழக்கரை நகரின் சொத்து வரி தொகை, 200 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது அரசாணை அனுமதித்துள்ள அளவை விட மிக அதிகமாகும்.  நகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நகரின் அனைத்து பகுதிகளும், மூன்று மண்டலங்களாக : மண்டலம் A, மண்டலம் B, மண்டலம் C என  பிரிக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமான மேல் விபரங்களை கீழே இணைக்கப்பட்டுள்ள PDF ஆவணத்தை கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.👇 ‎சொத்து […]

கீழக்கரையில் பெண்களுக்கான சிறு தொழில் வழிகாட்டும் நிகழ்ச்சி..

கீழக்கரையில் நாளை (06/10/2018) மாலை 03.30 மணி முதல் 06.00 மணி வரை பெண்களுக்கான சிறுதொழில்கள் வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  இந்நிகழ்ச்சி பிரபுக்கள் தெருவில் உள்ள கடற்கரை பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி மஜ்ம-உல் ஹைராத்திய தர்ம  அறக்கட்டளை, இஸ்லாமியா கல்வி சங்கம் மற்றும் ஐக்கிய நல கூட்டமைப்பு (UNWO) ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர். இந்த நிகழ்வில் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்கள்.

இராமநாதபுரத்தில் சனிக்கிழமை (29/09/2018) மின் தடை..

இராமநாதபுரம், ஆர்.எஸ்.மடை, ரெகுநாதபுரம், தேவிபட்டினம் உப மின் நிலையங்களில் 29.9.2018(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடப்பதால் காலை 9:45 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையம்: ராமநாதபுரம் நகராட்சி பகுதிகள், அரண்மனை, பழைய, புதிய பேருந்து நிலையங்கள், கேணிக்கரை, சக்கரக்கோட்டை, பாரதி நகர், மாவட்ட ஆட்சியர் வளாகம், பட்டணம்காத்தான், சின்னக்கடை, அச்சுந்தன்வயல், செய்யது அம்மாள் பொறியியல் கல்லு£ரி பகுதிகள்.  ராமநாதபுரம் துணை மின் […]

கீழைநியூசின் அங்கமான கீழை பதிப்பகத்தின் இரண்டாவது வெளியீட்டில் முத்தாய்ப்பாய் இரண்டு புத்தகங்கள் வெளியிடப்படுகிறது…

“வாசிப்பே சுவாசிப்பு”, இளைய தலைமுறை நவீன இயந்திர வாழக்கையில் மூழ்கி இருக்கும் வேலையில் வாசித்தலே வாழ்கையை மேம்படுத்தும் என்பதை வலியுறுத்தும் விதமாக கீழை மீடியா அட்வர்டைஸ்மண்ட் நிர்வாக இயக்குனர் மற்றும் கீழைநியூஸ் நிர்வாக உறுப்பினர் கீழை.முசம்மிலின் அதீத முயற்சியுடன் வெளியிடப்படுவதுதான் வி.எஸ்.முஹம்மத் அமீன் எழுதிய “ஆன்மீக அரசியல்” மற்றும் ஆரூர் புதியவன் என அழைக்கப்படும் ஹாஜா கனி எழுதிய “காயம்பட்ட காலங்கள்”. இதில் ஆன்மீக அரசியல் இன்று நடைமுறை வாழ்கையில் அரசியல் என்பதின் புனித தன்மை மாற்றப்பட்டு […]

கீழக்கரையில் 20/09/2018 – வியாழன் அன்று மின் தடை..

கீழக்கரை 110KV உப மின் நிலையத்தில் 20/09/2018 அன்று பராமரிப்பு நடைபெற உள்ளதால் கீழக்கரை, காஞ்சிரங்குடி மற்றும் அம்மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என மின் நிலைய பொறியாளர் கங்காதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் செப். 9ந்-தேதி முதல் 2 மாதம் 144 தடை உத்தரவு கலெக்டர் வீர ராகவ ராவ் தகவல்…

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் செப் 9 முதல் 2 மாதத்திற்கு 144 தடை உத்தரவை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பிறப்பித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப். 11-ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம், அக்டோபர் மாதம் 28,29,30 தேதிகளில் பசும்பொன்னில் தேவர் குரு பூஜை விழா நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த விழாக்களில் வாகனங்களில் வந்தவர்களால் ஏற்பட்ட சில அசம்பாவித சம்பவங்கள், […]

கீழக்கரை நகராட்சி மேலாளரே இனி ஆணையாளர்..

கீழக்கரை நகராட்சி பொறுப்பு  ஆணையாளராக இருந்து வந்த  பரமக்குடி ஆணையாளர் நாராயணன் கடந்த வாரம் பழனி நகராட்சிக்கு  மாற்றமாகியதை தொடர்ந்து, கீழக்கரை நகராட்சி மேலாளராக பணியாற்றி வந்த  A.தனலெட்சுமி கூடுதலாக கீழக்கரை ஆணையாளர் பொறுப்புகளையும் சேர்த்து கையாளுவதற்கான அரசாணை அளிக்கப்பட்டுள்ளது. இனி மேலாவது கீழக்கரை நகராட்சி பணிகள் தொய்வில்லாமல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர். தகவல்: மக்கள் டீம்  

சிறுபான்மையின மாணவர்களுக்கு பேகம் ஹஸரத் மாஹல் நேஷனல் ஸ்காலர்ஷிப் திட்டம்….

சிறுபான்மையினராக கருதப்படும் முஸ்லீம், கிறித்துவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் பார்சி சமூகத்தைச் சார்ந்த கல்வியில் சிறந்து விளங்கி பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி தொடர்ந்து பயில முடியாத மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ‘‘பேகம் ஹஸரத் மாஹல் நேஷனல் ஸ்காலர்ஷிப் ” (முன்பு மௌலானா ஆசாத் கல்வி ஸ்காலர்ஷிப்) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பெற்றோரின் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்; 9–ம் வகுப்பு முதல் 11–ம் […]

இராமநாதபுர மாவட்டத்தில் 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது..

2018ம் ஆண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டது.  இதில் இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த 11 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது. அவர்களுடைய விபரம் கீழே:- செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

பரமக்குடியில் செப்.11 ல் இமானுவேல் சேகரன் குருபூஜை முன்னேற்பாடுகள்…

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 11.09.2018 அன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம்  அனுசரித்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவராவ்  தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் சமுதாய தலைவர்களுடன் நடத்தப்பட்ட சட்டம் ஒழுங்கு முன்னேற்பாடுகள் தொடாபான ஆலோசனை கூட்டத்தில் எடுத்த முடிவுகள். 1. அஞ்சலி செலுத்த இராமநாதபுரம் மற்றும் இதர மாவட்டங்களில் இருந்து வருவோர் சொந்த வாகனங்களில் வர அனுமதிக்கப்படுகிறது.  வாடகை வாகனங்கள், திறந்த வெளி வாகனங்களில் வர அனுமதி இல்லை. இரு சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்களில் வர […]

சாதனையாளராக வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி முகாம் ..

இராமநாதபுர மாவட்டத்தில் பல வகையான பயிற்சி முகாம்கள் நடைபெற்றுள்ளன.  இராமநாதபுரத்தில் முதன் முறையாக திறமைகளை கொண்டு சாதனையாளர்களாகவும், வெற்றியாளர்களாகவும் நம் வாழ்கையை எப்படி மாற்றி அமைத்து கொள்வது என்பதற்கான பயிற்சி முகாம் வரும் ஞாயிறு (02/09/2018) அன்று காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை SITECH DEGREE COLLEGE வளாகத்தில் WILL MEDALS RECORDS குழுமத்தினரால் நடத்தப்படுகிறது. இதற்கான நுழைவு கட்டணம் ₹.500/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் வரும் 01/09/2018 தேதிக்குள் பதிவு […]

கீழக்கரையில் நாளை (29/08/2018 – புதன்கிழமை) மின் தடை..

கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான அலவாகரைவாடி, மாயாகுளம், பாலிடெக்னிக்கில் பகுதி, ஏர்வாடி, தேரிருவேலி, உத்திரகோசமங்கை, பாலையரேந்தல், காஞ்சிரங்குடி மற்றும் மோர்குளம் பகுதியில் 110kv உப மின் நிலையத்தில் உள்ள பராமரிப்பு காரணமாக 29/08/2018, புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என உதவி பொறியாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கீழக்கரை ஜமாத் ஒலி பெருக்கியில் வித்தியாசமான அறிவிப்பு..

கீழக்கரையில் பல தெருக்கள், பல ஜமாத்தின் தலைமையில் இயங்கி வருகிறது.  பொதுவாக ஜமாத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் உள்ள ஒலி பெருக்கியில் தொழுகைக்கான அழைப்பு மற்றும் மரண அறிவிப்பு மட்டுமே கொடுக்கப்படும். இந்நிலையில் கீழக்கரையில் பாரம்பரியம் மற்றும் பழமையான ஜமாத் ஒன்றில் பல முறை இன்று (26/07/2018) நடைபெற இருக்கும் ஜமாஅத் பொது குழுவிற்கு அத்தெரு மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு பல முறை அறிவிப்பு ஒலி பெருக்கியில் செய்யப்பட்டது. இதனால் அசாதரணமாக கடந்து செல்ல வேண்டிய பொதுக்குழு […]

தி.மு.க., தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு 25ம் தேதி நடைபெற உள்ளது…

இராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் முதல்கட்டமாக இராமேசுவரம் நகர், (ஓட்டல் ராமஜெயம், கானல 9 மணி), இராமநாதபுரம் நகர் மற்றும் மண்டபம் மேற்கு ஒன்றியத்திற்கு (சன் சைன் மஹால் பழைய செக் போஸ்ட், பட்டணம் காத்தான் மாலை 4 மணி) ஒருங்கிணைப்பாளர் நேர்காணல் 25-8-2018 ல் ஊராட்சி, பூத் வாரியாகநடைபெற உள்ளது. ஆர்வம் உள்ள தி.மு.க., இளைஞர்கள் ஆக., 25.அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என இராமநாதாரம் தி மு க, மாவட்ட […]

தேவையுடைய இந்த பிஞ்சுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்..

கடந்த 2நாட்களுக்கு முன்பாக கீழக்கரை குத்பா பள்ளி ஜமாத் பனியக்கார தெருவை சேர்ந்த ஒரு வீட்டின் மேற்கூரை, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரு சிறு குழந்தை உட்பட 4பேர் மீது விழுந்தது. இந்த விபத்தில் ஒரு குழந்தைக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது, மற்றொரு குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, ஒரு மூத்த பெண்மணிக்கு இடுப்பு எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. இச்சிகிச்சைக்கான செலவு 3 லட்சம் மேல் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.  இந்த மருத்துவ செலவுக்கு […]

கீழக்கரையில் வரும் 21ம் தேதி மின் தடையை மாற்றியமைக்க கோரிக்கை..

கீழக்கரையில் 21ம் தேதி மின் தடை இருப்பதாக மின்சார துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  ஆனால் அடுத்த நான் பெருநாளாக இருப்பதால் கீழக்கரை கடற்கரை பள்ளி ஜமாத், கிழக்கு தெரு ஜமாத் மற்றும் மேல தெரு ஜமாத் சார்பாக மின் தடையை பெருநாள் கழிந்த பின்பு மாற்றுமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை பரிசீலிப்பதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!