வரும் கல்வியாண்டு 2018 /2019 ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு மத்திய அரசு அறிவித்துள்ள இந்த கல்வி ஆண்டு முதல் இதை அமல்படுத்துவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது சுமார் 2 மணி நேரம் இந்த பொது தேர்வு நடக்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
Category: அறிவிப்புகள்
அறிவிப்புகள்
கீழக்கரையில் நாளை (18/02/2019) திங்கட் கிழமை மின் தடை..
கீழக்கரையில் நாளை (18/02/2019) -திங்கட் கிழமை உப மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக காலை 09.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என கீழக்கரை மினசார வாரிய பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் கீழக்கரை நகர், ஏர்வாடி, திருஉத்திரகோசமங்கை மற்றும் அதன் சார்ந்த சுற்று வட்டார பகுதிகளில் மின்சார தடை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10/02/2019 முதல் சென்னையில் இருந்து தேஜஸ் ரயில் சேவை தொடக்கம்..
சமீபத்தில் மத்திய ரயில் துறையினரால் அறிவிக்கப்பட்ட சென்னை முதல் மதுரை வரை இயங்கவிருக்கும் தேஜஸ் எனும் ரயில் சேவை 10/02/2019 முதல் சென்னையில் இருந்து தொடங்க உள்ளதாக ரயில்வே துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இச்சேவை வியாழக்கிழமை தவிர பிற 6 நாட்களும் இயக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சேவை பாரத பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்படலாம் என அறியப்படுகிறது. செய்தி:- வி.காளமேகம், மதுரை
கீழக்கரை நகராட்சியில் மறு பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு..
தகீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் கட்டணம் வசூல் செய்தல், கழிப்பறை கட்டண குத்தகை, நகராட்சிக்கு உட்பட்ட மீன் மார்க்கெட் வாடகை அடிப்படையில் ஏலம், பழைய சாமான்கள் விற்பதற்கான ஏலம் ஆகியவை கோரப்பட்ட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை Commissioner Kilakkarai Municipality என்ற பெயரில் உரிய தொகைக்கு காசோலை மூலம் செலுத்தி பெற்று கொள்ளலாம். மேலும் 15/02/2019 வரை ஓப்பந்தங்கள் அலுவலகத்தில் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி 17 இல் 14 வது செஸ் போட்டி..
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா செஸ் அசோசியேஷன், ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி சார்பில் மாநில செஸ் போட்டிக்கான தகுதி தேர்வு போட்டியாக மாவட்ட அளவிலான 14 வது செஸ் போட்டி பிப்ரவரி 17.02.2019 அன்று நடைபெற உள்ளது. நான்கு பிரிவுகளாக நடைபெறும். இப்போட்டிகளில் 9, 11,13, 15 வயதிற்கு உட்பட்டோர் கலந்துகொள்ளலாம். நுழைவு கட்டணம் ரூ.150, மாவட்ட பதிவு கட்டணம் ரூ.100 . மாவட்ட பதிவிற்கு அதற்குரிய விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் […]
கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையம் (KPGC) சார்பாக 01/02/2019 மற்றும் 02/02/2019 நடைபெற உள்ள சிறப்பு நிகழ்ச்சி ..
கீழக்கரையில் கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையம் (KPGC) சார்பாக இஸ்லாமிய மார்க்க தர்பியா நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் வருகின்ற பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தினங்களில் மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு இஸ்லாமியா பள்ளி மைதானம் (கிஷ்கிந்தா)வில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அழைப்பு பணியின் அவசியமும் அதன் இன்றைய நிலை குறித்தும் இஸ்லாமிய கொள்கை பற்றியும் மௌலவி அப்பாஸ் அலி மற்றும் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் ஆகியோர் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். நிகழ்ச்சியின் இடையில் […]
முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம்(MYFA) நடத்தும் பெற்றோருக்கான சிறப்பு தர்பியா நிகழ்ச்சி ..
முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் MYFA நடத்தும் பெற்றோருக்கான சிறப்பு ஓழுக்க பயிற்சி முகாம் நாளை 31/01/19 மாலை 6.00 மணிக்கு மேல் புதுத்தெரு நூரானியா நர்சரி & ப்ரைமரி பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் சிறப்பு பேச்சாளர்களாக மௌலவி.முஜாஹித் இப்னு ரசீம் மற்றும் மௌலவி.அப்பாஸ் அலி ஆகியோர் கலந்து கொண்டு “சடவாதமும் சத்தியக்கல்வியும்” மற்றும் “மழலையரும் மார்க்க கல்வியும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.
கடலாடி , சாயல்குடி , பெருநாழியில் நாளை (23/01/2019) மின்தடை..
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி துணை மின்நிலையத்தில் நாளை (23.01.2019) மாதாந்திர பராமரிப்பு நடைபெறவுள்ளது. இதனால் கடலாடி, சாயல்குடி, பெருநாழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9:00 மணி முதல் 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என முதுகுளத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். செய்தி:- முருகன், இராமநாதபுரம்
பழனி தைப்பூச விழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மாற்றம்..
பழனி தைப்பூச விழா விற்கு பாதயாத்திரையாக நடந்து வரும் பக்தர்களுக்கு உதவும் வகையில் ஒட்டன்சத்திரம் முதல் பழனி வரை செல்லும் சாலையில் அனைத்து பேருந்துகளும் வேறு வழியாக மாற்றப்பட்டுள்ளது. திருப்பூர் கோவை செல்லும் பேருந்துகள் வழக்கமாக செல்லும் வழியிலும் பழனி பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை செல்லும் பேருந்துகள் அம்பிளிக்கை கள்ளிமந்தயம் தொப்பம்பட்டி ஆகிய ஊர்களின் வழியாக செல்வதற்கு மாற்றி விடப்பட்டு உள்ளது மேலும், ஒட்டன்சத்திரம் முதல் பழனி செல்லும் சாலையில் பக்தர்களின் பாதுகாப்புக்காக வாகனங்கள் எதுவும் செல்லாமல் வசதி […]
இருப்புப்பாதை பராமரிப்பு பணியின் காரணமாக ரயில் போக்குவரத்தில் காலதாமதம்….
திண்டுக்கல் அருகே வடமதுரை அய்யலூர் இடையே இருப்புப்பாதை பராமரிப்பு பணியின் காரணமாக திருநெல்வேலியிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயில் எட்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் ரயில் 140 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும். மதுரை திண்டுக்கல் வழியாக பழனி செல்லும் பயணிகள் ரயில் கோவை வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்
கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் 26ம் தேதி QUIZ MANIA 2019
கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று அனைவருக்குமான QUIZ MANIA 2019 எனும் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக பள்ளி மாணவ, மாணவிகள் தாயார் மற்றும் சகோதரிகளும் கலந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு ஜனவரி 26ம் தேதி காலை 10.00 முதல் தொடங்க உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சிக்கு ஜனவரி 22/01/2019குள் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
கீழக்கரையில் நாளை (18/01/2019) அனைத்து ஜமாத்தினர் மற்றும் சங்கங்கள் இணைந்து நடத்தும் மீலாது நபி விழா..
கீழக்கரை அனைத்து ஜமாஅத் ஒருங்கிணைந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுப்பேற்று நடத்தும் மாபெரும் மீலாது விழா 18-01-2019 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஹைராத்துல் ஜலாலிய்யா பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு தலைமை மவ்லவி ஃபாஜில் காஜி A.M.M. காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீக்கி M.A.(டவுன் காஜி, கீழக்கரை. தலைவர், அனைத்து ஜமாஅத் ஷரீஅத் வழிகாட்டு குழு, கீழக்கரை.), முன்னிலை கீழக்கரை அனைத்து ஜமாஅத்களின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும இவ்விழாவிற்கு சிறப்புரை A.அன்வர் ராஜா M.P. (தலைவர், தமிழ்நாடு அரசு வக்ஃபு வாரியம். இராமநாதபுரம் தொகுதி […]
உதிரம் கொடுப்போம் – உயிர் காப்போம், 18/01/2019 அன்று துபாயில் ஈமான் அமைப்பு சார்பாக இரத்த தான முகாம்..
பல் வேறு சமூகம் மற்றும் சமுதாயம் சார்ந்த பணிகளை செய்து வரும், துபாயை தலைமையிடமாக கொண்ட “ஈமான்” அமைப்பு சார்பாக வரும் 18/01/2109, வெள்ளிக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் 01.00 மணி வரை இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரத்த தான முகாம் துபாய் தேரா பகுதியில் உள்ள சலாஹுதீன் சாலையில் உள்ள அஸ்கான் ஹவுஸ் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேல் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (07/01/2019) புறப்படும் நேரம் மாற்றம் ..
இன்று (07.01.2019) மாலை 04.30 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய வண்டி எண்.16780 ராமேஸ்வரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ் இன்று (07.01.2019) இரவு 11.30 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். செய்தி:- முருகன். இராமநாதபுரம்
நாளை (04/01/2019) இராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்..
இராமநாதபுரத்தில் நாளை (04/01/2019) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள், இடைநிறுத்தம் செய்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள், இடை நிறுத்தம் செய்தவர்கள் ஆகியோர் கலந்து கொள்ளலாம். மேலும் வயது 35க்குள் இருக்க வேண்டும். இம்முகாமில் கலந்து கொண்ட பின்பு இரண்டு மாத பயிற்சிக்கு பின்பு வேலை வாய்ப்பு உண்டாகும். இப்பயிற்சிக்கு கட்டணத் தொகை ஏதுமில்லை. பயிற்சி பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு […]
நாளை (03/01/2019) முதல் ரத்தாகும் ரயில் விபரங்கள் …
ஜன.3, 4, 5 இல் ரத்தாகும் ரயில்கள் வண்டி எண். 56723/ 56722/ 56725/ 56724/ 56721/ 56726 மதுரை – ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில் 03.01.2019, 04.01.2019 மற்றும் 05.01.2019 தேதிகளில் ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. வண்டி எண். 56829/56830 திருச்சிராப்பள்ளி – ராமேஸ்வரம் – திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் 03.01.2019, 04.01.2019 மற்றும் 05.01.2019 தேதிகளில் ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. வண்டி […]
மதுரை – மண்டபம் இடையே ஜன., 3, 5 இல் சிறப்பு ரயில்கள்..
1. பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து 03.01.2019 அன்று பிற்பகல் 12.00 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 03.30 மணிக்கு மண்டபம் சென்றடையும். 2. பயணிகள் ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து 03.01.2019 மற்றும் 05.01.2019 மாலை 04.30 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 07.00 மணிக்கு மதுரை சென்றடையும். 3. பயணிகள் ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து 03.01.2019 மற்றும் 05.01.2019 இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.30 மணிக்கு மதுரை […]
ஜனவரி 2 முதல் 9ம் தேதி வரை மாற்று திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்குவதற்கான அளவீட்டு முகாம்..
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜனவரி 2 முதல் 9ம் தேதி வரை மாற்று திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்குவதற்கான அளவீட்டு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மாற்று திறனாளிகளின் தேவைகளை அவர்களுடைய தேவைகளுக்கு ஏற்ப அளவீடு செய்து வழங்க ஏற்பாடு செய்யப்படும். இதற்கான ஏற்பாட்டை ARTIFICIAL LIMBS MANUFACTURING CORPORATION OF INDIA (ALIMCO) என்ற அரசு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. முகாம்கள் நடைபெறும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இம்முகாமிற்கு செல்பவர்கள் மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப […]
பளூஊரணி தார் சாலை வேலை மற்றும் வெளிநாட்டு பறவை வருகை.
கீழக்கரை பளூஊரணி அப்பகுதி ஏழை எளிய மக்கள் முதல் அனைத்து மக்களும் விரும்பி செல்லக்கூடிய பிரபல்யமான சுற்றுலா தளமாக இருந்தது. ஆனால் கடந்த காலங்களில் சரியான பருவ மழை இல்லாத காரணத்தாலும், ஊரணியும் சரியான முறையில் தூர் வாரப்படாமல், பராமரிக்க படாமல் இருந்ததால் மக்களின் வரத்து குறைந்தது. இந்த வருட சீசனில் பெய்த நல்ல மழையால் ஊர்ணியில் நீரும் ஓரளவு நிறைந்துள்ளது. அதுபோல் வெளிநாட்டு பறவைகளும் இந்த ஊரணியை நோக்கி வர தொடங்கியிருப்பது வருபவர்களின் கண்களுக்கு குளிர்ச்சியை […]
மின் தூக்கி முறையில் புதிய பாம்பன் பாலம்: வைரலாகும் வீடியோ காட்சி..
இராமேஸ்வரம் செல்லும் முன் மண்டபம் – பாம்பன் இடையேயான பாம்பன் ரயில் பாலம் இந்திய அடையாளங்களில் ஒன்று. சரக்கு கப்பல் வரும்போது பாலம் தூக்கப்படும் காட்சியை காண சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.. கடந்த 1911ஆம் ஆண்டு தொடங்கி 1915ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாலம் நூற்றாண்டை கடந்துள்ளது. இந்நிலையில் இப்பாலத்தில் நவ.4 ல் பழுது ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நூற்றாண்டை கடந்து விட்ட இப் பாலத்திற்கு மாற்றாக, ரூ.250 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்படும் […]
You must be logged in to post a comment.