கீழக்கரையில் 28-12-2016 மற்றும் 29-12-2016ஆகிய இரண்டு நாட்கள் காவேரி மருத்துவமனை மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் இருதய சிகிச்சை முகாம் இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 வரை தடைபெறும். இம்முகாமில் சகோ. MMK இபுராஹிம், இஸ்லாமிய பள்ளி தாளாளர் தலைமையுரையாற்றுகிறார். ஜனாப்.H. சிராஜுதீன், ஹமீதியா துவக்கப்பள்ளி தாளாளர் அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார். திரு. S.சர்வேஸ் ராஜ், IPS, இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் விழாவை […]
Category: அறிவிப்புகள்
அறிவிப்புகள்
வட்டியில்லா அழகிய கடன் திட்டம் துவக்க விழா*
கீழக்கரையில் உள்ள பழமையான சமுதாய அமைப்புகளில் மிக முக்கியமான ஒன்று நாசா(NASA) என்றழைக்கப்படும் வடக்குத் தெரு சமூக நல அமைப்பாகும். அந்த அமைப்பு சார்பாக வடக்கு தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை (NASA Trust) ஒன்று ஆரம்பம் செய்யப்பட்டு வட்டியில்லா கடன் திட்டம் ஆரம்பம் செய்யப்பட உள்ளது. அந்நிகழ்ச்சியின் விபரங்கள் கீழே:- 🗓நாள் : *30-12-2016* வெள்ளிக்கிழமை *🕔நேரம் :மாலை 4 மணி முதல்* *🏢இடம்* “முஹ்யித்தீனியா ” பள்ளி வடக்குத்தெரு கீழக்கரை *🔹நிகழ்ச்சி ஏற்பாடு* […]
ஜனாசா அறிவிப்பு
ஜனாசா அறிவிப்பு. தெற்கு தெரு ஜமாஅத்தை சேர்ந்த நியாஸ் அவர்களின் தகப்பனாரும் தினமணி பத்திரிக்கை நிருபர் நிஸ்பர் அவர்களின் மாமனாருமாகிய SAH சர்புதின் (மாஸ்டர்) அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிவூன்.. அவருடைய மறுமை வாழ்வுக்காக பிரார்திக்கவும்..
கல்வி ஒளி வீசும் கீழக்கரையில், கண்ணொளி வீச இலவச கண் சிகிச்கை முகாம்.
கீழக்கரையில் வரும் 31 டிசம்பர் 2016 அன்று இலவச கண் சிகிச்கை முகாம் நடைபெறுகிறது. கீழக்கரையில் உள்ள பழைய குத்பா ஜமா அத் மற்றும் இராமநாதபுரம் வாசன் கண் மருத்தவமனையும் இணைந்து இம்முகாமை நடத்துகிறார்கள். இம்முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சங்கு குளிகாரத் தெருவில் அமைந்துள்ள மஹ்தூமிய மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு மஹ்தூமிய பள்ளியின் தாளாளர் ஹாஜி. A.K.S ஹமீது சுல்தானி அவர்கள் தலைமை தாங்குகிறார்கள். இந்நிகழ்ச்சியின் […]
வஃபாத் அறிவிப்பு
கீழக்கரை, பழைய குத்பா பள்ளி ஜமாஅத்தை சேர்ந்த மர்ஹூம். ச. முகம்மது அசனா லெப்பை ( ச.மு) அவர்களின் மகனாரும். மர்ஹூம். A.S.A முகம்மது சேகு நெய்னா அவர்களின் மருமகனும். மர்ஹூம் இபுராகிம் கணி என்ற வசந்த மாளிகை சுல்தான், மர்ஹூம். அகமது தம்பி, மர்ஹூம். ச.மு. லத்தீப் (கல்கத்தா ஸ்டோர்) , ஜனாப். ச.மு. மஜீத் (இந்தியன் ஸ்டோர்) , மர்ஹூம். ச.மு. சாகுல் ஹமீது கல்கத்தா பிலாஸ்டிக் ஆகியோரின் தம்பியும், ஜனாப். அகமது சுல்தான், […]
மக்களை பலி வாங்கும் புதிய பண மாற்ற திட்டம்.. கீழக்கரை வங்கி வாசலில் முதியவர் மயக்கமடைந்து கீழே விழுந்ததில் மரணம்..
கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த யூசுப் சித்திக் அலி (57) எனும் முதியவர் இன்று காலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாசலில் பணம் எடுக்க வரிசையில் காத்து நின்ற பொழுது மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றபோதும் சிகிச்சை பலன் அளிக்காமல் வபாத்தாகிவிட்டடார்கள். இன்னும் இந்த அரசாங்கத்தின் அவசரகோல திட்டம் எத்தனை அப்பாவி மக்களை பலி வாங்கப் போகிறதோ தெரியவில்லை..
கீழக்கரையில் உள்ள மாலாக்குண்டு நீர் இறைக்கும் நிலையம் பராமரிப்பு தொடக்கம்.
கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும் மாலாக்குண்டு. இந்த இடத்தில் கீழை நகரக்கு குடீ நீர் கொண்டு செல்லப்படும் நீர் இறைக்கும் (Pumping station) நிலையம் செயல்பட்டு வந்தது. ஆனால் சரியான பராமரிப்பு இல்லாததால் கடந்த பல மாதங்களாக சிதிலமாகி உபயோகமற்ற நிலையில் இருந்து வந்தது. இன்று கீழக்கரை நகராட்சி ஆணையர் திரு. சந்திரசேகர் (பொறுப்பு), சுகாதார ஆய்வாளர் திரு. திண்ணாயிரமூர்த்தி, சுகாதார மேற்பார்வையாளர் திரு. மனோகரன் மற்றும் பல நகராட்சி ஊழியர்கள் இந்நிலையத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்கள். […]
தரமற்று போடப்படும் சாலைகள் தவிக்கும் பொதுமக்கள்
கீழக்கரை முக்கு ரோட்டிலிருந்து கடற்கரை வரை உள்ள 1.4 கிலோமீட்டர் நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணி, 04.12.2016 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஒப்பந்தப் பணியினை மாநில நெடுஞ்சாலை துறையினர் அருப்புக்கோட்டையை சேர்ந்த S.P.K கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதைப்பற்றிய செய்தியையும் மக்கள் ஓத்துழைப்பு கொடுக்கவும் நாம் வேண்டுகோள் விடுத்து இருந்தோம். ஆனால் தற்போது அவசர கதியில் மேற்கொள்ளப்படும் இந்த சாலை சீரமைப்பு பணியினால் தரமற்ற வேலைகள் நடை பெற்று வருகிறது. ஒப்பந்த முறைப்படி […]
You must be logged in to post a comment.