கீழக்கரை வடக்கு தெரு முஹைதீனியா பள்ளியில் நாளை சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி நடைபெறுகிறது ..

கீழக்கரையில் நாளை (07-02-2017) வடக்குத் தெரு முஹைதீனியா பள்ளி வளாகத்தில் 4 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற உள்ளது.  ஆதார் எடுக்கும் பணி இன்றும் (06-02-17) நடைபெற்றது. முகாமுக்கு வரும்பொழுது சிறார்களின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை நகல் கொண்டு வருமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

நகராட்சி அறிவிப்பு

கீழக்கரை 21வது வார்டு மக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் கீழ்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும்  ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் ….முக்கிய அறிவிப்பு….

*அவசரம் இரத்தம் தேவை*

*அவசரம் இரத்தம் தேவை* இராமநாதபுரத்தில் உள்ள ஜோஸப் ராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ள நோயாளிக்கு O- negative* (1 unit) தேவை மற்றும் சத்யா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ள நோயாளிக்கு A+positive* (2units) ஆப்ரேஸனுக்கு தேவை (தகவல் பதிவு நாள் 04/02/17 நேரம் 12:30 pm) தொடர்புக்கு;-  9840568387, 9042169629

இரத்தம் தேவை…

அவசரம். 02.01.2017 இன்று இராமநாதபுரம் ஆசீக்அமீன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யும் பாத்திமா என்ற பெண்ணுக்கு A+இரத்தம் தேவைப்படுகிறது. . தொடர்புக்கு. நூருல்அமீன். 7418434177.

அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சருக்கு இரங்கல் கூட்டம்.

அறிவிப்பு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் அவர்களுக்கான இரங்கல் கூட்டம் நடைபெறும் விபரங்கள் கீழே வருமாறு :- துபை நாள்: இன்ஷா அல்லாஹ் 02-02-2017 வியாழன் இஷாவிற்குப் பிறகு இடம் : அஸ்கான் D ப்ளாக் Lu Lu சென்டர் பின்புறம் அல் முத்தீனா, தேரா, துபை. தொடர்பிற்கு: பரக்கத் அலி (0503949936) முஹம்மத் ஈஸா (055 9023885) அபுதாபி: நாள்: இன்ஷா அல்லாஹ் 02-02-2017 வியாழன் மாலை சரியாக 7:00 […]

விடுதலை சிறுத்தை கட்சி இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் நியமனம்..

கீழக்கரையைச் சார்ந்த ச. செய்யது யாசீன் என்பவர் விடுதலை சிறுத்தை கட்சியின் இஸ்லாமிய சனநாயகப் பேரவையின் மாவட்ட துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த அறிவிப்பை விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ளார். இப்பணியில் அவர் திறம்பட செயல்பட கீழைநியூஸ் நிர்வாகக்குழு வாழ்த்துகிறது.

கீழக்கரை KECT மஸ்ஜிதுக்கு ஆலிம் தேவை..

அறிவிப்பு.. 💠ஆலிம் தேவை💠 இடம் – KECT, கீழக்கரை, இராமநாதபுரம் ஊதியம் -12000+3000=15000. தங்குவதற்கு இடம் கொடுக்கப்படும். தகுதி- குர்ஆன் ஹதீத் அடிப்படையில் நடக்க வேண்டும் பணி – ஐவேளை தொழ வைக்க வேண்டும், பயான் செய்ய வேண்டும் . தொடர்புக்கு – 9790848139,, 9942274187, 9080213243 DISCLAIMER – பொறுப்புதுறப்பு

மின்ஹாஜ் பள்ளி ஐமாத் மத்ரசதுஸ் சல்மா அரபி மதரஸா வளாகத்தில் சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி…

கீழக்கரையில் நாளை (01-02-2017) மின்ஹாஜ் பள்ளி ஐமாத் உட்பட்ட மத்ரசதுஸ் சல்மா அரபி மதரஸா (முகம்மது அப்பா தர்ஹா) வளாகத்தில் 4 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு ஆதார் அட்டை எடுக்கும் பணி காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற உள்ளது. முகாமுக்கு வரும்பொழுது சிறார்களின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை நகல் கொண்டு வருமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

கீழக்கரையில் நாளை மின்சார தடை..

கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை (01-02-2017) காலை 09.00 மணியில் இருந்து மாலை 05.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை இருக்கும். இது பற்றி செயற்பொறியாளர் பால்ராஜ் கூறுகையில் நாளை கீழக்கரை, ஏர்வாடி, மாயாகுளம், உத்திரகோசமங்கை ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக தடை இருக்கும், ஆகையால் பொதுமக்கள் முன் நடவடிக்கை எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்.

SDPI போராட்ட அறிவிப்பு..

மத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இன்று 31-01-2017 தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இரண்டு வருட ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் பொது மக்களின் மீது ஒரு பொருளாதார போரை நிகழ்த்தியுள்ளது. இன்னொரு பக்கம் நாடு முழுவதும் ஒரே கலாச்சாரத்தை திணிப்பதன் மூலமாக கலாச்சார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இத்தகைய மக்கள் விரோத மத்திய பாஜக அரசை கண்டித்து இன்று […]

இளைஞர்களுக்கான இலவச திறன் பயிற்சி..

பத்தாம் வகுப்பு பாஸ் அல்லது பெயில் ஆகியிருக்கும் இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி முகாம் வரும் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து தொடங்கப்படும் என்று அறியப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கான உபகரணங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கும் நபருக்கு தினம் ரூபாய்.100 பயணப்படியாகவும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாமில் ஏசி மெக்கானிக் ( AC Mechanic), ப்ரிட்ஜ் […]

ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்..

இன்று ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். கடந்த வாரங்களில் ஜல்லிக்கட்டுகாக இளைஞர் சமுதாயம் வீதி இறங்கி போராடிய போது பல சமூக அமைப்புகளும் களத்தில் இறங்கினர். அதில் சில சமூக அமைப்பினர் ஒரு படி மேல் சென்று தங்களுடைய கோரிக்கைகளை நேரடியாக இந்திய ஜனாதிபதிக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.  அந்த வகையில் கீழக்கரையில் மக்கள் நலப் பாதுகாப்பு கழகம் மூலம் கீழக்கரை மக்கள் களத்தின் சட்டப் போராளிகள் குழுமம் தங்களுடைய கோரிக்கையை […]

கீழக்கரையில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்..

கீழக்கரையில்  சமீப காலமாக பெரியவர் முதல் சிறுவர்கள் வரை டெங்கு மற்றும் பல வகையான காய்ச்சலில் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.  இது சம்பந்தமாக பொது மக்களும், பல்வேறு சமூக அமைப்புகளும் நகராட்சி நிர்வாகத்திற்கு கொசுவைக் கட்டுப்படுத்த வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தனர்.  இந்த விவகாரத்தில் வீரியத்த தன்மையை கருத்தில் கொண்டு  நகராட்சி நிர்வாகமும் சுகாதாரத்துறையும் இணைந்து கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் கூறுகையில் ” கொசுக்களை கட்டுப்படுத்த மதுரை மண்டல அலுவலக […]

சிறுவர்களுக்கான ஆதார் அட்டை..

அறிவிப்பு வரும் 30-01-2017 – திங்கட்கிழமை அன்று கீழக்கரை, கைரத்துல் ஜலாலியா பள்ளி அரபி மதரஸா வளாகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறும்.  இம்முகாமுக்கு செல்பவர்கள் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் நகல் மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை நகல் எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த அறிவிப்பை கிழக்கு தெரு ஜமாஅத் பள்ளி நிர்வாகம் பொதுமக்கள் பயன் பெறும் பொருட்டு வெளியிட்டுள்ளார்கள்.

கீழக்கரை நகர்.SDPI. கட்சியின் அலுவலகம் திறப்பு விழா!!!!

கீழக்கரை நகர் SDPI. கட்சியின் அலுவலகம் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர்.SDPI. கட்சியின் கொடியை ஏற்றினார் அதனை தொடர்ந்து அலுவகத்தை திறந்து வைத்தார்.பின்பு சிறிது நேரம் கிழக்கு மாவட்ட தலைவர்.அப்பாஸ் அலி ஆலிம் உறையாற்றினார். அதனை தொடர்ந்து தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் பி.அப்துல் ஹமீது அவர்கள் நகர் நிர்வாகிகள் பல இன்னலுகளுக்கு பிறகு அலுவலகம் திறக்ககபட்டுள்ளது இதற்க்காக முயற்சி எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றும் சில கருத்துக்களை பதிவு செய்தார். தலைவர்.குதுபு ஜமான் , துணைத் தலைவர்.பாதுஷா, நகர் […]

பெண்களுக்கான தெருமுனைப் பிரச்சாரம்..

அறிவிப்பு 27/01/17 வெள்ளி கிழமை இஷா தொழுகைக்கு பின் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் வடக்கு கிளை சார்பில் பெண்களுக்கான தெருமுனை பிரச்சாரம் நடைபெறுகிறது . இடம் : சாலைத் தெரு உரை  சகோதரி ;- ஹமிதா பர்வின் தலைப்பு : கொள்கை உறுதி உரை சிறுமி :-ஃபபௌஸியா நிஃபானாஸ் தலைப்பு : உறுதியான ஈமான்தான் மறுமைக்கு வெற்றி இந்நிகழ்ச்சி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் வடக்கு கிளை கீழக்கரை இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு ) சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது..

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவர் மற்றும் சமூக நீதி பத்திரிக்கையின் ஆசிரியருமான CMN  சலீம் நம் இஸ்லாமிய சமுதாய மக்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தோடு பல கல்வி விழிப்புணர்வு கருத்தரங்குகளை தமிழகம் மற்றும் அல்லாமல் உலகத்தில் உள்ள பல பகுதிகளில் நடத்தி வருகிறார். அவரின் உயரிய முயற்சியால் தமிழகத்தில் பல இடங்களில் இஸ்லாமிய கல்வி மையங்கள் ஆரம்பிக்கும் முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. CMN.சலீம் பைத்துல் ஹிக்மா (BAITHUL HIKKMA– ஞானத்தின் வீடு) […]

ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவையின் செயற்குழு மற்றும் செயல்வீரர்கள் தேர்வு..

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில்  20-01-2017 அன்று நடைபெற்ற , இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அங்கீகாரம் பெற்ற அமைப்பான , ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவையின் செயற்குழு மற்றும் செயல்வீரர்கள் கூட்டத்தில் ஒருமனதாக புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகிகளின் தொகுதி வாரியான விபரங்களை கீழே காணலாம். தலைவர்:- குத்தாலம் ஏ. லியாக்கத் அலி மூத்த துணைத் தலைவர்:- களமருதூர் ஹாஜி ஷம்சுத்தீன் துணைத் தலைவர்கள்:- வழக்கறிஞர் சென்னை இஜாஜ் பெய்க் காயல்பட்டினம் நூஹ் […]

சென்னையில் சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி…

சென்னையில் வரும் 05-02-2017 ஞாயிறு அன்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றி விழிப்புணர்வு விளக்க நிகழ்ச்சி THE HIDAYHA WELFARE TRUST மற்றும் TAMILNADU MUSLIM EDUCATION & EMPOWERMENT TRUST (TN MEET) அமைப்புகளால் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில்… 1) *கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்கள்* 2) *இஸ்லாமிய நல அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள்.* 3) *பைத்துல்மால் மற்றும் ஜமாத் தலைவர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள்.* 4)இஸ்லாமிய மாணவர்கள் அமைப்புகள்* […]

இராமநாதபுரத்தில் தொடங்கியது வெளிநாட்டு குளிர்பானத்துக்கு எதிர்ப்பு…

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க கோரியும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் உலகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமாக இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிப்பு போராட்டமும் பல இடங்களில் தொடங்கியுள்ளது. அதன் எதிரொலியாக இராமநாதபுரத்தில் உள்ள பிரபல AR மருத்துவமனையும், D திரையரங்கும் இனி பெப்சி மற்றும் கோக் போன்ற அந்நிய நாட்டு பானங்கள் விற்கப்போவதில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளன. இன்று முதல் எங்கள் தியேட்டர்களில் வெளிநாட்டு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!