தமிழக சட்டசபையில் இன்று 16.07.19-சுகாதாரத்துறை

சுகாதாரத்துறை தொடர்பாக 108 புதிய அறிவிப்புகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியீடு சுகாதாரத்துறை தொடர்பாக 108 புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ளார். மதுரையில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் உலகத் தரம் வாய்ந்த மருந்துகள் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் ரூ. 45 லட்சம் செலவில் எக்மோ கருவி அமைக்கப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் உள்பட பல்வேறு சட்டங்களை மீறியதாக 888 […]

கல்விக்கு உதவுங்கள்… நிரந்தர நன்மையை பெறுங்கள்… ஏழை மாணவர்களுக்கான வேண்டுகோள்..

தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம், பழநி வட்டம், நெய்க்காரபட்டி காயிதே மில்லத் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் சார்பாக இந்த வேண்டுகோள் விடுத்துள்ளனர். காயிதே மில்லத்தின் பெயரால் இயங்கும் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழ்மையான கூலி வேலை செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.. இவர்களில் 25 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களது பள்ளிக் கட்டணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறது பள்ளி நிர்வாகம். அந்த உதவிக்காக வேண்டுகோள் வைத்துள்ளனர். ஆசிரியர் ஊதியம், வாடகை, புத்தகங்கள், எழுதுபொருட்கள், பள்ளிச்சீருடை, காலணி மற்றும் இதர […]

கீழக்கரையில் நாளை (20/06/2019) வியாழக்கிழமை மின் தடை..

கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை 20/06/19 வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு காரணமாக காலை 9 மணிமுதல் மாலை 5மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக கீழக்கரை, பாலிடெக்னிக் மற்றும் அதன் அருகாமை பகுதிகள் மின்சார வினியோகம் இருக்காது.

இராமநாதபுரம் மாவட்டத்தின் 9 தாலுகாக்களில் நாளை தொடங்க உள்ள ஜமாபந்தி விபரம்…

இராமநாதபுரம் மாவட்டம்  9 வட்டங்களில் உள்ள 400 வருவாய் கிராமங்களுக்கு 1428-ஆம் பசலிக்கான  வருவாய் தீர்வாயக் கணக்குகளின் தணிக்கை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தகவல் தெரிவித்தார். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களை உள்ளடக்கிய 400 வருவாய் கிராமங்களுக்கு 1428-ஆம் ஆண்டு வருவாய்த் தீர்வாயக் கணக்குகள் 19.06.2019  முதல் 28.06.2019 வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் தினமும் காலை 10  மணிக்கு ஜமாபந்தி தீர்வாய தணிக்கை  நடைபெறவுள்ளது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் […]

கீழக்கரை தாலுகாவில் நாளை (19/06/2019) ஜமாபந்தி..

கீழக்கரை தாலூகாவிற்கு உட்பட்ட பகுதிகளான உத்திரகோசமங்கை, கீழக்கரை, திருப்புல்லாணி ஆகிய 3 பிர்க்காவிற்கும் நாளை ( 19.06.19.) முதல் வருவாய் பசலி தீர்வை எனும் ஜமாபந்தி நிகழ்வு இராமநாதபுரம் மாவட்ட துணை ஆட்சியர் தணிகாச்சலம் அவர்கள் தலைமையில் கீழக்கரை தாலூகா அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பிர்க்கா வரிசைப்படி கீழக்கரை உட்பட்ட பகுதிகளுக்கு நாளை மறுநாள் 20.06.19. அன்று ஜமாபந்தி நடைபெறுகிறது. அவ்வமயம் தங்களது இடத்திலுள்ள அலுவலக ரீதியான பிரச்சனைகள் அதாவது பட்டா, பட்டா பெயர் மாற்றம், சிட்டா […]

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு..

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம்(டிஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. பணி: Post Graduate Assistants / Physical Education Directors Grade-I காலியிடங்கள்: 2144 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. Tamil – 319 2. English – 223 3. Mathematics – 279 4. Physics – 210 5. Chemistry – […]

இன்று (19/05/2019) புறப்படும் ரயில் நேரம் மாற்றம்..

மதுரை – டேராடூன் / சண்டிகர் (வாரம் இரு முறை) விரைவு ரயில் இன்று புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வண்டி எண்.12687 மதுரை – டேராடூன் / சண்டிகர் (வாரம் இரு முறை) விரைவு ரயில் மதுரையில் இருந்து இன்று (19.05.2019) இரவு 11.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக நாளை (20.05.2019) அதிகாலை 04.00 மணிக்கு புறப்படும். இணை ரயில் காலதாமதமாக வருகம் காரணத்தினால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. […]

அனைத்து வகுப்புகளுக்கும் நிபந்தனையின்றி மாணவர் சேர்க்கை நடத்துங்கள்.. அரசுப் பள்ளிகளுக்கு உத்தரவு.!

பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார். வழக்கமாக அரசுப் பள்ளிகளில் அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, அந்தந்த கல்வி ஆண்டின் தொடக்கமான ஜூன் மாதம்தான் தொடங்குவது வழக்கம். தனியார் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் ஏப்ரல் மாதத்திலேயே தங்கள் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்து விடுகின்றன. இதனையடுத்து தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை […]

நாளை (19/04/2019) மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை ஒட்டி போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு..

நாளை 19.04.2019 அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் மதுரை மாநகரில் கீழ்க்கண்ட சில போக்குவரத்து மாற்றங்களும் மற்றும் வாகன நிறுத்தங்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்தம் செய்யும்படியும்,  பொதுமக்கள் அனைவரும் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர். செய்தியாளர் வி. காளமேகம் மதுரை மாவட்டம்

மதுரை மாநகர காவல் துறையின் முக்கிய அறிவிப்பு…

மதுரை மாநகரில் சித்திரை திருவிழா வரும் 17.04.2019-ம் தேதியும் மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்18.04.2019-ம் தேதியும் அன்று மாலையே கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவையும், 19.04.2019 காலை 06.00 மணியளவில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த திருவிழாவில் மதுரை மாநகர காவல் துறை சார்பாக குற்றத்தடுப்பு சம்மந்தப்பட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 200 காவலர்களை 40 குழுவாக பிரித்து குற்றத்தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ரோந்து மேற்கொள்ள […]

இராமேஸ்வரம் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் டீசல் கசிவு – இரண்டரை மணி நேரம் தாமதம்…

இராமேஸ்வரத்தில் சென்னைக்கு இன்று (10.4.19) மாலை 5:00 போர்ட் மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. 6:30 மணியளவில் பரமக்குடி அருகே மஞ்சூரை கடந்த போது டீசல் நெடி காற்றில் பரவி பயணிகளுக்கு மூக்கடைப்பு ஏற்படுத்தியது. ரயிலின் வேகத்திற்கேற்ப இன்ஜினில் இருந்து டீசல் ரயில் பெட்டிகளில் பரவியது. பரமக்குடி நிலையத்தை ரயில் நெருங்கிய போது டீசல் பரவல் அதிகரித்தது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். மாலை 6:45 மணியளவில் பரமக்குடி நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. இன்ஜினை பார்த்த போது டீசல் […]

சென்னை சென்ட்ரல் – பெங்களுரூ , கோயம்புத்தூர் மங்களூரு ரயில்கள் நாளை (05/04/2019) முதல் ரத்து..

பெங்களூரு – சென்னை சென்ட்ரல் (12608) ரயில் ஏப்ரல் 5 முதல் 14-ம் தேதி வரை காட்பாடி – சென்னை இடையே ரத்து. கோயம்பத்தூர் – சென்னை சென்ட்ரல் அதிவிரைவு (12680) ரயில் ஏப்ரல் 5 முதல் 14ம் தேதி வரை காட்பாடி இடையே ரத்து. பெங்களூரு – சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் ( 12610) ஏப்ரல் 5 முதல் 14-ம் தேதி வரை காட்பாடி – சென்னை இடையே ரத்து. சென்னை சென்ட்ரல் – […]

ஏப்ரல் 5 முதல் 14ம் தேதி வரை அரக்கோணம் வழித்தடத்தில் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

பராமரிப்பு பணி காரணமாக சென்ட்ரல் – அரக்கோணம் – வேலூர் வழித்தடத்தில் வரும் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அரக்கோணம் – தக்கோலம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதனால் வேலூர் – அரக்கோணம் (56014), அரக்கோணம் – வேலூர் (56013), சென்ட்ரல் – அரக்கோணம் (56001), அரக்கோணம் – சென்ட்ரல் […]

மதுரை மாநகர பொதுமக்களுக்கு காவல் ஆணையர் அன்பான வேண்டுகோள்…

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகவும் மற்றும் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பிற கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடம் வாங்கிகொடுப்பதாக பணத்தை பெற்றுக்கொண்டு பலர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வருகின்றனர். எனவே அதனை தடுக்கும் பொருட்டு மாண்புமிகு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலையும், மருத்துவக்கல்லூரி மற்றும் பிற கல்லூரிகளில் படிப்பதற்கான இடமும் தகுதியின் அடிப்படையில் தான் வழங்கப்படுகின்றன. அவ்வாறு இருக்கும்போது யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் மேலும் பணம் […]

நாளை (10/03/2019) போலியோ சொட்டு மருந்து முகாம்..

நாளை (10.03.2019) தமிழகம் முழுதும் 43,051 மையங்களில் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது செய்தி:- வி.காளமேகம் மதுரை மாவட்டம்

மார்ச் 8இல் மீனவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி..

இந்திய தேசிய உலோக அரிமான குழுமம், காரைக்குடி மற்றும் மத்திய மின் ரசாயன ஆய்வகம், காரைக்குடி சார்பில் மீனவர்களின் சமுதாய மேம்பாட்டிற்கான மீன்பிடி படகுகளின் உலோக அரிமானம் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் ஒட்டுதல் தடுப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் 08.3.2019 இல் மண்டபம் சிக்ரி அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்புவோர் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்துடன் ஆதார் எண் நகல் இணைத்து சிக்ரி விஞ்ஞானிகள் முனைவர் ஜி சுப்ரமணியன் ( […]

இராமநாதபுரம் மாவட்ட அளவில் அரசுப் பணியாளர்களுக்கு மார்ச் 1ல் விளையாட்டு போட்டிகள்..

2018-2019 ஆம் ஆண்டு அரசுப்பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளான  தடகளம், குழு ஆகிய விளையாட்டுப் போட்டிகள் இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி  விளையாட்டரங்கில் மார்ச் 1 காலை 10.00 மணியளவில்  நடைபெறவுள்ளது. தடகளப் போட்டியில் 100 மீ, 200 மீ, 800 மீ, 1500 மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 4×100மீ தொடர் ஓட்டம் ஆண்களுக்கும் 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, நீளம்  தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 4×100மீ தொடர் […]

85 நாட்களுக்கு பின் பாம்பன் பாலத்தில் பயணிகளுடன் ரயில் சேவை மீண்டும் துவக்கம்..

கடந்த 04.12.2018 ல் பாம்பன் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், அன்றைய தினம் முதல் மண்டபம் – ராமேஸ்வரம் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து தூத்கு பாலத்தில் சீரமைப்பு பணி நடைபெற்றது. இதற்கிடையில் ரயில் வாரிய அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு ரயில் போக்குவரத்தை மீண்டும் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தனர். ஆனால் ரயில்களை மீண்டும் இயக்குவது குறித்து உறுதி படுத்தவில்லை . தற்போது, பணிகள் நிறைவடைந்ததையடுத்து 85 நாட்களுக்கு […]

தமிழக அரசின் ரூ. 2000/- வழங்கும் திட்டத்தில் தகுதி உள்ள குடும்பங்கள் விடுபட்டவர்கள் இணைந்து கொள்ளும் வழிமுறை..

தகுதி உடையவர்கள் விடப்பட்டிருந்தால் பின்வரும் இணையதளம் சென்று படிவத்தை பூர்த்தி செய்துகொடுத்து சிறப்பு நிதி உதவி வழங்கும் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கான ஒருமுறை சிறப்பு நிதியுதவி ரூ. 2000/- வழங்கும் திட்டத்தில் தகுதி உள்ள குடும்பங்கள் விடுப்பட்டிருந்தால் www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் சென்று படிவம் பதிவிறக்கம் செய்து முழுவிபரத்துடன் […]

திருநெல்வேலி-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கம்..

சென்னை-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே மதுரை பிரிவு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே மதுரை பிரிவு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு வரும் ஏப்ரல் மாதம் 3,10,19,24 ஆகிய தேதிகளிலும் (புதன் கிழமை) மேலும் மே மாதம் 1,8,15,22,29 ஆகிய தேதிகளில் 06003 என்ற எண் உடைய சிறப்பு கட்டண ரயில்கள் செல்கிறது. இந்த ரயிலானது மாலை 6.50 மணிக்கு சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு கிளம்பும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!