வெளிநாடு வாழ் இந்தியர்கள் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கடைசி வாய்ப்பினை இந்திய ரிசர்வ் வங்கி அளித்து இருக்கிறது. இதற்கான கடைசி நாள் மார்ச் 31-ந்தேதி என தீர்க்கமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:- கடந்த ஆண்டு நவம்பர் 9-ந்தேதியில் இருந்து டிசம்பர் 30-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்த என்.ஆர்.ஐ.கள் மற்றும் அப்போது வெளிநாட்டுக்கு சென்றிருந்த இந்தியர்களுக்கு (இந்தியாவில் வசிப்பவர்கள்) செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை […]
Category: அறிவிப்புகள்
அறிவிப்புகள்
கீழக்கரை பாரத ஸ்டேட் வங்கி ‘முக்கிய அறிவிப்பு’ – வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்
கீழக்கரை பகுதியில் கடந்த சில மாதங்களாக, பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் சிலரை செல்போனில் தொடர்பு கொண்டு தான் வங்கி அதிகாரி என்று கூறி, வங்கி நம்பர், பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்களை கேட்டு மோசடி செய்வது தொடர்ந்து நடை பெற்று வந்தது. இதில் அப்பாவி வங்கி வாடிக்கையாளர்கள் பலர் இலட்ச ரூபாய்க்கும் மேல் ஏமாற்றப்பட்டு கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே இது சம்பந்தமான பதிவினை கீழை நியூஸ் வலைதளத்தில் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் கீழக்கரை பாரத ஸ்டேட் வங்கி […]
தமிழகத்தில் ஏப்ரல்-1 முதல், ரேஷன் கார்டுக்கு மாற்றாக, புதிய ‘மின்னணு குடும்ப அட்டை’ – ஸ்மார்ட் கார்டு
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் இப்போதுள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை 80 சதவீதம் பேர் ஆதார் விவரங்களை பதிவு செய்துள்ளனர் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் சென்னை சேப்பாக்கம், எழிலகம் கூட்டரங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்களுடன் மாநில அளவிலான கலந்தாய்வுக்கூட்டம் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் […]
வஃபாத் அறிவிப்பு..
வஃபாத் அறிவிப்பு.. கீழக்கரை இஸ்லாமிய பைத்துல்மாலின் தலைவரும் கல்வி மற்றும் சமுதாயப்பணிகளில் முன்னின்று சேவையாற்றியவருமான அல்ஹாஜ் P.S.M.செய்யது அப்துல் காதர் M.A.,B.L., அவர்கள் இன்று காலை 3 மணியளவில் சென்னையில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அவர்களின் ஜனாஸா சென்னை நல்லடக்கம் ராயாப்பேட்டை மையவாடியில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
விவசாயிகள் ‘வறட்சி நிவாரணம்’ பெற வங்கி கணக்கு விவரங்களை ‘வி.ஏ.ஓ’ விடம் சமர்ப்பிக்க நாளை கடைசி நாள் – ஆட்சியர் அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு பருவ மழை பொய்த்து விட்டதால் அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் நிவாரண தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்துவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்னும் பல விவசாய பெருமக்கள் தங்கள் வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களை தராமல் உள்ளனர். தற்போது இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதில் விவசாயிகள் தங்களுடைய வங்கி கணக்கு எண், ஆதார் எண் உள்ளிட்ட […]
எளிய முறையில் அனைவரும் அரபி மொழி கற்று கொள்ள தமிழ் இளைஞரின் முயற்சி..
இன்று இளைய சமுதாயத்தினர் பலர் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு அரபு நாடுகளில் பல் வேறு துறைகளில் பணியாற்றி வருவது அனைவரும் அறிந்த விசயம். நாம் வேலை பார்க்கும் இடத்தில் பேசும் மொழி என்பது மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த குறையை போக்கும் விதமாக தொண்டியைச் சேர்ந்த முஹம்மது ஷாஃபி என்பவர் அரபு மொழியை எளிதாக பேசும் விதமாக *அரபு நாட்டு பேச்சு வழக்கு* எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகம் அனைவருக்கும் கிடைக்கும் விதமாக […]
நீங்கள் வாங்காத ரேஷன் பொருள்களுக்கு கடைக்காரர் ‘கள்ள கணக்கு’ காட்டுகிறாரா..? கவலை வேண்டாம். – நான் சொல்றத கேளுங்க.. துணை தாசில்தார் தமீம் ராசா தகவல்
கீழக்கரை வட்ட வழங்கல் அதிகாரி தமீம் ராசா குடும்ப அட்டைதாரர்களுக்கு பின் வரும் ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். இதனை ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்களை வாங்கும் பொதுமக்கள் அவசியம் பின்பற்றுமாறு கீழை நியூஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். நீங்க ரேசன் கார்டு வச்சிருப்பீங்க… ஆனால் ரேசன் பொருள்கள் வாங்காமல் வைத்து இருப்பீங்க. இதனால் உங்கள் ரேசன் பொருள்களை கடைகாரர் பில் போட்டு விற்றதாக கணக்கு அரசுக்கு காட்டி கொண்டிருப்பார். இந்த விபரம் முன்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு தெரியாது. ஆனால் […]
வஃபாத் அறிவிப்பு…
வபாத் அறிவிப்பு. கீழக்கரை வடக்குத்தெரு ஜமாஅத்தை சேர்ந்த ரசீது நானா என்ற செய்யது இபுராஹிம் அவர்கள் நேற்று இரவு சுமார் 10,30 மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள். அவர்களுடைய நல்லடக்கம் இன்று வடக்குத் தெரு பள்ளியில் நடைபெறும். அவருடைய மறுமை வாழ்க்கை சிறக்க து ஆ செய்யவும். ச
இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்…
அறிவிப்பு கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் 500 ப்ளாட் கிளை சார்பாக 26-02-2017 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் கோவை ரஹ்மத்துல்லாஹ் மற்றும் அபூபக்கர் சித்திக் ஸஆதி ஆகியோர் போலிகள் ஜாக்கிரதை மற்றும் யார் சுன்னத்துல் வல் ஜமாத்? ஆகிய தலைப்புகளில் மாலை 07.00 மணியளவில் சிறப்பரையாற்றுகிறார்கள் இந்நிகழ்ச்சி ரோஸ் கார்டன் பகுதியில் தினாஜ்கான் தலைமையில் நடைபெறுகிறது..
சென்னை லயோலா கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் – ”பிப்ரவரி 26”
சென்னையை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக ‘WE ARE YOUR VOICE – 2017’ என்கிற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் லயோலா கல்லூரியில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 26.02.17 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த பயனுள்ள முகாமில் வாய் பேச முடியாதோர், காது கேளாதோர், கண் பார்வையற்றோர் உள்ளிட்ட அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் தனியார் வேலை வாய்ப்புக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த முகாமில் 80 க்கும் […]
இராமநாதபுரத்தில் ‘மக்கள் பாதை’ இயக்கம் சார்பாக நடைபெறும் தன்னார்வலர்கள் கலந்தாய்வு கூட்டம்
உ.சகாயம் ஐ.ஏ.எஸ் இன் வழிகாட்டுதலின் படி, சமூக சேவைகள் செய்யவும், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ”மக்கள் பாதை” என்ற பெயரில் கடந்த ஆண்டு ஏப்ரலில் இயக்கம் துவக்கப்பட்டு மிக சிறப்பான முறையில் பல்வேறு சமூகப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இலட்சக்கணக்கான இளைஞர் பட்டாளம் இந்த இயக்கத்தில் தன்னை இணைத்து வருகிறது. விவசாயிகள் பிரச்சனை, ஜல்லிக்கட்டு மீட்டெடுப்பு போராட்டம், தமிழர் கலாச்சார பாதுகாப்பு என்று பல்வேறு அறவழி போராட்டங்களை முன் நின்று நடத்தி வருகிறது. இந்நிலையில் இராமநாதபுரத்தில் […]
வஃபாத் அறிவிப்பு..
வஃபாத் அறிவிப்பு வடக்குத் தெரு சுமையா டிரேடர்ஸ் உரிமையாளர் ஜாகிர் உசேனின் தாயார் அவர்கள் இன்று (16-02-2017) மதியம் வஃபாத் அகிவிட்டார்கள். அன்னாருடைய நல்லடக்கம் விபரம் பின்னர் அறிவிக்கப்படும். தொடர்பு எண்.+91 95855 12397 அவருடைய மறுமை வாழ்க்கைக்கு துஆ செய்யவும்.
கீழக்கரையில் ரோட்டரி சங்கம் – சென்னை அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதய பரிசோதனை முகாம்
கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் 19.02.2017 அன்று ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாடார் பேட்டை மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை கலந்து கொண்டு ஆலோசனை பெறலாம். இருதய அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் இலவசமாக இருதய அறுவை […]
கீழக்கரையை சேர்ந்த பெண்மணிக்கு O’ NEG இரத்தம் தேவை – அவசரம்
இராமநாதபுரம் செய்யது அம்மாள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக இன்று 13.02.2017 அனுமதிக்கப்பட்டு இருக்கும் கீழக்கரை சாலை தெருவை சேர்ந்த பெண்மணிக்கு அவசரமாக O’ நெகடிவ் இரத்தம் தேவைப்படுகிறது. இரத்த தானம் செய்ய விரும்பும் சகோதரர்கள் 8754250423 என்கிற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடரும் பைக் விபத்துக்கள்.. யார் குற்றம்?.. பெற்றோர்களின் குற்றமா?? அதிகாரிகளின் மெத்தனமா??
கீழக்கரையில் இன்று (10-02-2017) மீண்டும் பைக்கினால் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் மரணம். இவர் கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த ரசாக் அவர்களின் மகன் முஹம்மது மஹ்தும் ஆவார். இவர் சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் பட்ட படிப்பு முடித்தவர். இதில் யாரைக் குற்றம் காண்பது, சிறு வயதிலேயே பிள்ளைகள் ஆசைப்படுவதனால் பைக் வாங்கி கொடுக்கும் பெற்றோர்களையா?? கையில் பைக் கிடைத்தவுடன் கண் தெரியாமல் வேகமாக ஓட்டும் சிறார்களையா? அல்லது எந்த அடிப்படை தகுதியும் இல்லாமல் வண்டி ஓட்டுபவர்களை தண்டிக்காமல் […]
சென்னையில் இருந்து இராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில் நேரம் மாற்றம்…
அறிவிப்பு.. சென்னையில் இருந்து இராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு காலை 9.00 மணிக்கு வந்து கொண்டிருந்த ரயில் எண்.16101 இனி இரவு 7.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு காலை 7.25க்கு இராமநாதபுரம் வந்தடையும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கீழக்கரையில் ஆன்லைன் மூலம் ரூ.50000 திருட்டு – வங்கி ATM கார்டு வைத்திருபோர் உஷார்
கீழக்கரையில்ஆன்லைன் மூலம் ரூ.50000 திருட்டு – வங்கி ATM கார்டு வைத்திருபோர் உஷார் கீழக்கரை பாரத ஸ்டேட் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கினை வைத்திருக்கும் கீழக்கரை மேலத் தெருவை சேர்ந்த ஒருவரின் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய ஆசாமி ரூ.50000 ஐ ஆன்லைன் மூலம் திருடியுள்ளது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்டவர் கீழை நியூஸ் வலைத்தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் ”கடந்த ஒரு வாரம் முன்னதாக எனது மொபைலுக்கு பேசிய ஆசாமி.. தான் சம்பந்தப்பட்ட […]
வஃபாத் அறிவிப்பு..
வபாத் அறிவிப்பு கீழக்கரை ஜின்னாதெருவை சேர்ந்த ஜனாப், சேகு கருணை அவர்களின் மகளும், ETA Cars ல் பணிபுரியும் முஹம்மது தாரிக் அவர்களின் மனைவியும், அல் ஹதிஜா (வயது 6), ஹாலித் (வயது 3) இவர்களின் தாயாருமான சித்தி ஸமா இன்று காலை வஃபாத்தாஹி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மஃரிபுக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும் இறைவன் அவர்களின் குற்றங்குறைகளை மன்னித்து, கபுரை சொர்க்கத்தின் பூங்காவாக ஆக்கியருள து ஆ செய்யுங்கள். ஜிப்ரி வீட்டு க்கு […]
கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவிப்பு வெளியீடு…
இன்று (08-02-2017) கீழக்கரை வட்ட வழங்கல் அலுவலர் தமீம் ராசா வெளியிட்டுள்ள அறிக்கையில் இது வரை ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் கீழக்கரை வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஆதாரத்துடன் மனு செய்தவர்களுக்கு 31-01-2017 வரை அத்தியாவசியப் பொருட்கள் வழங்க உத்திரவிடப்பட்டது. அவ்வாறு மனு செய்தவர்கள் வரும் 09-02-2017 மற்றும் 10-02-2017 ஆகிய இரு தேதிகளில் தங்களது ஆதார் அட்டைகளை இணைத்துக் கொள்ளுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு பதிய தவறும் […]
வஃபாத் அறிவிப்பு..
வஃபாத் அறிவிப்பு கீழக்கரை புது பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த கோக்கா அஹமது தெருவை சேர்ந்த மர்ஹூம் சோத்துக் கடை சாவண்ணா என்கிற சாகுல் ஹமீது அவர்களின் மகனும் மர்ஹூம் செய்யது அப்துல் காதர், சேகு நூர்தீன் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது அபு பைசல், ஹமீது எமீன் ஆகியோர்களின் தகப்பனாருமாகிய *மஸ்தான்* என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் முன்னாள் 14வது வார்டு நகர் மற்ற உறுப்பினர் ஜனாப்.அஹமது இபுறாகீம் அவர்கள் இன்று 08.02.2017 காலை 11 மணியளவில் வபாத்தாகி […]
You must be logged in to post a comment.