இராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறை அறிவுறுத்தலின் படி கீழக்கரை தாலுகாவில் சமூக நல திட்ட அலுவலகத்தின் மூலமாக முதியோர் ஓய்வூதிய திட்டம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், திருமணமாகாத ஏழை பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் உதவி பெறுவதற்கான தகுதிகள் மற்றும் வழிமுறைகளுக்கான தகவலை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமீம் ராசா நம்மிடையே பகிர்ந்துள்ளார். இது குறித்த மேலதிக […]
Category: அறிவிப்புகள்
அறிவிப்புகள்
கீழக்கரை புதுத்தெரு முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்..
கீழக்கரையில் 17-03-2017 (வெள்ளிக்கிழமை) அன்று, கீழக்கரை புதுத்தெருவில் பல்வேறு சமுதாய பணிகளை பொதுமக்கள் நலனுக்காக செய்து வரும் முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இச்சிகிச்சை முகாமுக்கு முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கத்தின் (MYFA) தலைவர்.S.A.C.பவுசுல் அலியூர் ரஹ்மான் தலைமை வகிக்கிறார், மேலும் முன்னாள் MYFA & தெற்கு தெரு முன்னாள் செயலாளர்.S.M.சீனி அப்துல் காதர் வாழ்த்துரை வழங்குகிறார். நன்றியுரையை நூரானியா பள்ளியின் தாளாளர். S.M. […]
கீழக்கரை பஞ்சாயத்து அலுவலக முன்னாள் தலைமை எழுத்தர் ‘அத்தா’ காலமானார்
தெற்குத் தெரு ஜமாத்தை சேர்ந்த மர்ஹூம் செ.மு சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மச்சானும், செய்யது முஹம்மது தம்பி, செய்யது அசன் அலி, செய்யது சாகுல் ஹமீது, முஹம்மது ரபீக், ரஹ்மத்துல்லாஹ், செய்யது அப்துல் ரஹ்மான்ஷா ஆகியோரது தகப்பனாருமாகிய தூத்துக்குடி ஜெய்லானி தெரு ஜனாப். செ. அப்துல் ரஹீம் என்கிற அத்தா நேற்று முன்னிரவு 7.15 மணியளவில் வபாத் ஆகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன். அத்தா அவர்கள் கீழக்கரை பேரூராட்சியாக இருந்த காலத்தில் […]
புனித ஹஜ் பயணத்துக்கான மாநில வாரியான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு – தமிழகத்தில் இருந்து ஹஜ் கமிட்டி மூலம் 3189 பேர் பயணிக்கலாம்
இந்திய அரசின் மத்திய சிறுபான்மை நல அமைச்சகத்தின் புனித ஹஜ் பயணத்துக்கான மாநில வாரியான இட ஒதுக்கீடு பட்டியல் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதனை இந்திய ஹஜ் கமிட்டி இணைய தளத்தில் பார்வையிடலாம். அந்த சுற்றறிக்கையில் மொத்த இந்திய மக்கள் தொகையில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 17,22,45,311 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் சேர்த்து, யூனியன் பிரதேசங்கள் உள்பட புனித ஹஜ் பயணத்திற்கான இந்த வருடத்திற்கான மொத்த இட ஒதுக்கீடு 1,23,700 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் தமிகத்தில் இஸ்லாமியர்களின் […]
வங்கி மோசடியில் ஐசிஐசிஐ முதலிடம் பிடித்து சாதனை – பாரத ஸ்டேட் வங்கிக்கு இரண்டாமிடம் – ரிசர்வ் வங்கி பட்டியல் வெளியிட்டது
இந்தியா முழுவதும் வங்கி கொள்கைகளின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வங்கி கணக்கே வேண்டாம் என முடிவுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் வங்கிகளில் நடந்த மோசடிகள் பட்டியலை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஐசிஐசிஐ முதலிடத்தில் உள்ளது. நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இரண்டாவது இடத்தில் உள்ளது. […]
துபாயில் ஈமான் அமைப்பு சார்பாக இரத்த தான முகாம் – நாளை நடைபெறுகிறது
ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் 14-03-2017, செவ்வாய் கிழமை அன்று ஈமான் அமைப்பு சார்பாக இரத்த தானம் முகாம் நடத்தப்படுகிறது. விபரங்கள் கீழே :- நாள்: 14-03-2017, செவ்வாய் கிழமை. இடம்: அரபியன் டாக்சி அலுவலகம், ரசிதியா, துபாய். நேரம்: காலை 09.00 மணி முதல் மாலை 1.30 வரை. தொடர்பு ஈமெயில். [email protected] தொலைபேசி: 050-5196433, 052-7778341
பாம்பன் பகுதியை சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு இதய அறுவை சிகிசிச்சைக்காக A+positive இரத்தம் உடனடியாக தேவை
இராமநாதபுரம் பாம்பனை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் பொங்களான்டி என்கிற இரண்டு சகோதரர்களுக்கு எதிர் வரும் 17/03/17 மற்றும் 21/03/17 தேதிகளில் மதுரை பாண்டியன் மருத்துவமனையில் இருதய ஆப்ரேஷன் செய்ய இருப்பதால் மொத்தம் 15 யூனிட் இரத்தம் தேவைப்படுகிறது. அதில் A+positive இரத்த வகை உடனடியாக 5 யூனிட் தேவைப்படுகிறது. மேலும் 10 யூனிட் இரத்த வகை எந்த வகையாக இருந்தாலும் தனமாக தரலாம். இரத்த தானம் செய்ய விரும்பும் சகோதரர்கள் இராமநாதபுரத்திலோ அல்லது மதுரையிலோ கொடுக்கலாம். விரைந்து தொடர்பு கொண்டு உதவுங்கள் நண்பர்களே… […]
மக்கள் நல பாதுகாப்புக் கழகம் – கீழக்கரை மக்கள் களம் இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான மாபெரும் கட்டுரை போட்டி அறிவிப்பு
கல்வி நகரமாக திகழும் கீழக்கரை நகரில் ஆங்கில வழியிலும், தமிழ் வழியிலும் கல்வி பயிற்றுவிக்கப்படும் 15 க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் உள்ளன. இவற்றுள் இருந்து ஆண்டு தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று மேற்படிப்புக்காக கல்லூரிகளுக்கு செல்கின்றனர். ஆனால் அரசு வேலைவாய்ப்புகளை பயன்படுத்தும் முயற்சிகளை எவரும் செய்வதில்லை. பலருக்கு அரசு துறை தேர்வுகள் குறித்தோ, அரசு வேலை வாய்ப்புகள் சம்பந்தமாகவோ கொஞ்சமும் புரிதல் இல்லை. இந்நிலையில் அரசு துறை தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை […]
கீழக்கரை அல்பய்யினா அகாடமியில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் இஸ்லாமிய கல்வியில் பி.ஏ இளங்கலை பட்டப்படிப்பு – ஆர்வமுடைய பெண்களுக்கு அழைப்பு
கீழக்கரை கிழக்குத் தெருவில் கடந்த ஆண்டு முதல் அல்பய்யினா அகாடமி துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த அகாடமியில் சென்னை பல்கலை கழகத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் பாடத் திட்டங்களின் அடிப்படையில் அரபி இஸ்லாமிய கல்வியில் பி.ஏ இளங்கலை பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. இது குறித்து அல்பய்யினா அகாடமியின் தாளாளர் ஜாபிர் சுலைமான் கூறுகையில் ”நம் சமுதாயத்தில் உள்ள பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்கும் பெண் மக்களுக்காக, இந்த மேற்படிப்பு துவங்கப்பட்டு […]
கீழக்கரை தாலுகாவில் புதிய வட்ட வழங்கல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ள பெண்மணி – சட்டப் போராளிகள் வாழ்த்து
கீழக்கரை தாலுகாவிற்கு புதிய வட்ட வழங்கல் அலுவலராக B உமா ராணி நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு முன்னர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதன்மை வருவாய் அதிகாரி உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பொறுப்பேற்றிருக்கும் இவரை இன்று 08.03.17 கீழக்கரை சட்டப் போராளிகள் தளம் சார்பாக நேரடியாக சந்தித்து வாழ்த்துக்கள் பகிரப்பட்டது. கீழை நியூஸ் வலை தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் ”கீழக்கரை நகருக்கு சிறந்த முறையில் பணியாற்ற காத்திருக்கிறேன். ரேஷன் […]
வங்கிகளில் இலட்சக்கணக்கில் பணம் டெபாசிட் செய்து முறையான பதில் அளிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை உறுதி – வருமான வரித்துறை அறிவிப்பு
இந்திய அரசின் ரூ.500, ரூ.1000 செல்லாது என்கிற அதிரடி அறிவிப்பிற்கு பின்னர் வங்கிகளில் ஏகத்துக்கு இலட்சக்கணக்கில் பணம் டெபாசிட் செய்தவர்கள் முறையான பதில் அளிக்காமல் தவறும் போது அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக வருமான வரித்துறை அலுவலகம் நேற்று 07.03.17 செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் தங்கள் கணக்கில், பெருந்தொகையை செலுத்தியவர்கள் அது குறித்து வருமான வரித் துறைக்கு http://incometaxindiaefiling.gov.in என்ற […]
இராமநாதபுரத்தை சேர்ந்த பெண்மணிக்கு B’ நெகட்டிவ் இரத்தம் உடனடியாக தேவை – மிக அவசரம்
இராமநாதபுரம் ஜோஸப் ராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அரியமான் கடலோர கிராமத்தை சேர்ந்த பெண் நோயாளிக்கு இரத்த போக்கு காரணமாக *B- negative (2 units)* உடனடியாக தேவைப்படுகிறது. இரத்த தானம் செய்ய விரும்பும் சகோதரர்கள் நாளை 07.03.17 காலை 9 மணிக்குள் 9840568387 / 9042169629 என்கிற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கீழக்கரை தாலுகாவிற்கு தாசில்தாராக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ள தமீம் ராசாவுக்கு மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக வாழ்த்து
கீழக்கரை தாலுகாவிற்கு சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தின் புதிய தாசில்தாராக தமீம் ராசா பதவி உயர்வு வழங்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவினை மாவட்ட ஆட்சியர் அனுப்பியுள்ளார். அதில் பணி நியமனம் பெற்றவர்கள் புதிய பணியிடத்தில் உடனடியாக பதவியேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இது வரை துணை வட்டாட்சியராக கீழக்கரை தாலுகாவில் வட்ட வழங்கல் அதிகாரியாக சிறப்பாக பணியாற்றி வந்த தமீம் ராசா இன்று 06.03.17 முறைப்படி அலுவலகத்திற்கு வந்து பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில் தமீம் ராசாவுக்கு, […]
கீழக்கரை அல் மதரஸத்துல் ராழியா சிறுவர்கள் மதரஸா தேர்வு முடிவுகள் வெளியீடு
கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அல் மதரஸத்துல் ராழியா சிறுவர் மதரஸாவில் இன்று 05.03.17 இரவு அரையாண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதனை மதரஸா மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடந்த 29.01.17 முதல் 13.02.17 வரை நடைபெற்ற அரையாண்டு தேர்வில் இஸ்லாமிய கொள்கை, தொழுகை முறை, வரலாறு, பிரார்த்தனை, சூரா மனனம், நபி மொழிகள், குர்ஆன் ஓதும் முறை, நபிகளாரின் வாழ்க்கை உள்ளிட்ட பாடத்திட்டங்களின் கீழ் தேர்வு நடைபெற்றது. […]
கீழக்கரை நூரானியா பள்ளியில் ரூபெல்லா தடுப்பூசி குறித்த பெற்றோர்கள் கூட்டம்..
அறிவிப்பு நாளை (05-03-2017) அன்று கீழக்கரை புதுத்தெருவில் உள்ள நூரானியா பள்ளியில் பெற்றோர்கள் கலந்துரையாடல் கூட்டம் மாலை 03.00 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரில் உள்ள அனைத்து தாய்மார்களும், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ரூபெல்லா தடுப்பூசி பற்றிய விளக்கங்கள் மருத்துவர்களால் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த தடுப்பூசி குறித்த சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இக்கூட்டத்தில் குழந்தைகள் நல மருத்துவர் B.ஜவாஹிர் ஹுசைன் MBBS.,DCH கலந்து கொண்டு குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், […]
ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் வழிமுறை எளிதாகியது – இனி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் மொத்தம் 63 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓ) உள்ளன. இதுதவிர, அறுபதுக்கும் மேற்பட்ட யூனிட் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். சராசரியாக ஓராண்டுக்கு 6,210 பேர் புதியவாகனங்களைப் பதிவு செய்கின்றனர். வாகனங்களுக்குப் பதிவு எண்வழங்குதல், ஆட்டோ உரிமையாளர்களின் பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளும் இங்கு நடக்கின் றன. இந்நிலையில் ஓட்டுநர் உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி தமிழகம் முழுவதும் கடந்த 1-ம் தேதி அமலுக்கு […]
இனி 4 முறைக்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் ரூ.150 வரை வசூலிக்கப்படும் – தனியார் வங்கிகள் அறிவிப்பு
கடந்த நவம்பர் 8-ஆம் தேதி நள்ளிரவு முதல் பழைய 500, 1000 ரூபாய்க்கு தடை விதிக்கப்பட்டது. இந்த பண மதிப்பிழப்பு பிரச்சனைக்கு பிறகு பணப்புழக்கம் மீண்டும் சீரடைய தொடங்கியுள்ளதால், தனியார் வங்கிகள் பரிவர்த்தணைகளுக்கு வசூலிக்கும் குறைந்தபட்ச அளவு கட்டணத்தை மீண்டும் வசூலிக்க தொடங்கியுள்ளது. அதன் படி, ஒரு மாதத்திற்கு ஒருவர் தனது கணக்கில் 4 முறை மட்டுமே வங்கிகளுக்கு சேவை கட்டணம் ஏதும் செலுத்தாமல், பணத்தை வங்கிகளில் வைப்பு வைக்கலாம் அல்லது பணத்தை எடுக்கலாம். அதற்கு மேல் […]
அனைத்து முஸ்லீம் ஜமாத்தினருக்கும் ரூபெல்லா தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்ட அழைப்பு – ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் பரமக்குடி சுகாதார பகுதி மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் ஜமாத்தினருக்கும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்ட அழைப்பினை, துணை இயக்குனர், சுகாதார பணிகள் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. இன்று 02.03.17 மாலை 4 மணியளவில் நடக்கவிருக்கும் இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற இருப்பதாகவும், அனைத்து முஸ்லீம் ஜமாஅத் நிர்வாகிகளும் தவறாது கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இன்று +2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு அமீரக காயிதே மில்லத் பேரவை வாழ்த்து..
இன்று (02-03-2017) தமிழகம் முழுவதும் +2 பொதுத் தேர்வு தொடங்குகிறது. இது தொடர்பாக அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பாக மாணவர்களுக்கு வாழ்த்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில், +2 தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு *அமீரக காயிதே மில்லத் பேரவை* சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். *தங்களின் அடுத்த கட்ட குறிக்கோள் ஆட்சி பீடங்களிலும், அதிகார வர்க்கத்திலும் ஆளுமை செலுத்துவதில், நல் இலக்கியங்கள் நயம் பெறப் படைப்பதில், எத்துறைக்குச் சென்றாலும் மானுட சமுதாயத்திற்கு சாதி, சமய, இன, மொழி […]
திமுக இளைஞரணி சார்பில் ‘ரத்த தான செயலி’ அறிமுகம்
திமுக இளைஞரணி சார்பில் ‘ரத்த தான செயலி’ இன்று 01.03.17 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை கூகுள் ப்ளே ஸ்டோரில் ‘திமுக ரத்த வங்கி’ (DMK Blood Bank) என்று குறிப்பிட்டால் போதும். விருப்பமுள்ளவர்கள் செயலியைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். சாமானியர்களும் பயன்படுத்தும் வகையில் இந்த ரத்த தான செயலி மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனுள்ளே கீழ் வரும் பகுதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மெயின் மெனு : இதன் மெயின் மெனு பக்கத்தில் ரத்தம் கொடுக்க விரும்புபவர்களுக்கான முன்பதிவு, ரத்தம் வழங்குபவர்களின் […]
You must be logged in to post a comment.