சமாதான கலை – ART OF PEACE FOUNDATION மற்றும் பிளாக் அண்ட் ஒயிட் இன்டர்நேஷனல் ட்ராவல்ஸ், ரய்யான் ஹஜ் உம்ரா சர்வீசஸ் மற்றும் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பல்சுவை சமூக மேம்பாட்டு நிகழ்ச்சிகளின் தொகுப்பாக சமாதானக் கலை விழா 2017 நிகழ்ச்சி எதிர்வரும் 09.04.17 அன்று மாலை 4 மணி முதல் 9 மணி வரை சென்னை மயிலாப்பூரில் இருக்கும் கவிக்கோ மன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் திறமை வாய்ந்த ஆளுமைகள் சிறப்புரை வழங்க […]
Category: அறிவிப்புகள்
அறிவிப்புகள்
துபாயில் தி.மு.க சார்பில் இரத்த தான முகாம்..
அறிவிப்பு.. துபாயில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் செயல் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு 14-04-2017 அன்று இரத்த தான முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இடம்:- துபாய் இரத்த தான முகாம், லத்தீபா மருத்துவமனை வளாகம். தேதி:- 14-04-2017 – வெள்ளிக்கிழமை. நேரம்:- காலை 11.00 மணிமுதல். அஸ்கான் ஹவுஸ் வளாகத்தில் இருந்து பஸ் வசதியும், பெண்களுக்கு தனி இட வசதியும் செய்யப்பட்டுள்ளது. தொடர்பு எண: 00 971 56 698 4551 ஈ-மெயில் :- […]
தமிழக அரசின் பொது விநியோக திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் வெளியீடு
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் முதன்மை குறிக்கோளாக, எல்லா குடிமக்களுக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல் இருக்கிறது. அதே போல் பொது விநியோக திட்டம் மூலமாக அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் ஒவ்வொரு மாதமும் நியாய விலைக் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு வழங்குகிறது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள நீடித்த பட்டினி மற்றும் உணவு பற்றாக்குறையை நீக்கவும், அத்தியாவசியமான பொருட்களின் விலை உயர்வால் வரும் தவறான விளைவுகளில் இருந்து குடிமக்களை பாதுகாக்கவும், அத்தியாவசியமான பொருட்கள் வழங்குதல் […]
தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் – மறந்துடாதீங்க…
தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை ஏப்ரல் 2 முதல் தவணையாகவும், இரண்டாம் தவணை ஏப்ரல் 30 அன்றும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நாளை நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள். பெற்றோர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை […]
கீழக்கரையில் இன்று முதல் ஸ்மார்ட் கார்டு படிப்படியாக வழங்கப்படும் – பொதுமக்கள் பயப்பட வேண்டாம் – வட்ட வழங்கல் அலுவலர் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு இன்று ஏப்ரல் 1 முதல் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் கீழக்கரை வட்ட வழங்கல் அலுவலகம் சார்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று முதல் ஸ்மார்ட் கார்டு படிப்படியாக வழங்கப்படும் என்றும் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவரும் செல்போன் எண்களை தந்துள்ளதால் ஸ்மார்ட் கார்டு தயாரானதும் அவர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கப்படும். அதில் ஸ்மார்ட் கார்டை எந்த தேதியில், எங்கு சென்று வாங்க வேண்டும் […]
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கீழக்கரை வட்டக் கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு…
கீழக்கரை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கீழக்கரை வட்டக் கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பின்வரும் சங்கத்தின் உறுப்பினர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டார்கள். தலைவர். செல்வராஜ், செயலாளர். புல்லாணி, பொருளாளர். கோகிலா, துணைத்தலைவர். ரவிச்சந்திரன், […]
கீழக்கரை தாலுகா அலுவலகம் அருகே குழந்தைகளுக்கான ஆதார் அட்டை எடுக்கும் பணி நடைபெறுகிறது
கீழக்கரை தாலுகா அலுவலகம், மலேரியா கிளினிக் அருகாமையில் அமைந்திருக்கும் குழந்தைகள் நல மையத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் அட்டை எடுக்கும் பணி இன்று 30.03.17 காலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பெற்றோரோக்கள் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பதிவு செய்து வருகின்றனர். அதே போல் நாளைய தினமும் 31.03.17 காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இங்கு குழந்தைகளுக்கு ஆதார் எடுக்கும் பணி நடைபெறுவதாக […]
குடும்ப அட்டைதார்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ தரும் இடம், தேதி செல்போனில் அறிவிக்கப்படும் – உணவு வழங்கல் துறை செயலாளர் தகவல்
தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. இதுபற்றி உணவு வழங்கல் துறை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியதாவது:- பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதில் ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் வழங்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 50 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 1 ஆம் தேதி கொரட்டூரில் தொடங்கி வைக்கிறார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் […]
கீழக்கரையில் இஸ்லாமிய கல்வி சங்கத்துடன் மதரஸாக்கள் இணைந்து நடத்தும் கோடை கால இஸ்லாமிய எழுச்சி முகாம்
கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம், அல் மதர்ஸத்துர் ராழியா மற்றும் அல் மதர்ஸத்துல் அஸ்ஹரிய்யா இணைந்து நடத்தும் இஸ்லாமிய சிறுவர்களுக்கான கோடைகால இஸ்லாமிய எழுச்சி முகாம் எதிர்வரும் ஏப்ரல் 25 முதல் மே மாதம் 20 ஆம் தேதி வரை நடை பெற இருக்கிறது. இந்த முகாமில் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் ஏப்ரல் 10 முதல் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நாளைய உலகம் நமதாகட்டும்”- தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி..
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பாக முஸ்லிம் முஹல்லாக்களில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் நோக்கம் வளரும் தலைமுறைக்கு முறையான வழிமுறைகளை வழங்கி, வழிகாட்டுமலும் கொடுத்து சிறந்த முஸ்லிம் சமுதாயமாக உருவாக்குவதாகும். இந்நிகழ்ச்சி மிக குறிப்பாக 12ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கும் மாணவச் செல்வங்களுக்கு பலன் உள்ளதாக இருக்கும். ஆகையால் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி “நாளைய உலகம் நமதாகட்டும்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. இத்துடன் நடைபெற […]
கீழக்கரை நகராட்சியில் பொதுமக்களுக்கான விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியீடு – மீறுவோர் மீது அபராதத்துடன் சட்ட நடவடிக்கை
கீழக்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனி நபர் வீடுகள், உணவு விடுதிகள், சிற்றுண்டி சாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தூய்மையை மேம்படுத்தி கீழக்கரை நகராட்சியை முன் மாதிரி நகராட்சியாக மாற்றிட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் கெற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி திடக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 ன் படியும், தமிழ் நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 சட்டப் பிரிவுகள் 153, 156, 157, 160 மற்றும் 161 ன் […]
கீழக்கரை DSP மஹேஸ்வரி விருதுநகருக்கு பணியிட மாற்றம்
கீழக்கரை நகரில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் காவல் துறை துணை கண்காணிப்பாளராக சிறப்பாக பணியாற்றி வந்த DSP மஹேஸ்வரி தற்போது விருதுநகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கீழக்கரை நகருக்கு புதிய துணை கண்காணிப்பாளராக DSP பாலாஜி பொறுப்பேற்க உள்ளார். கீழக்கரை நகரில் கடந்த மூன்று ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு மற்றும் பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்டு சாதனைகளை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நேர்மையான காவல் துறை அதிகாரியை கீழக்கரை நகர் இழக்கிறது என்றே கூற முடிகிறது. கீழக்கரை […]
படிக்க ‘தகுதியில்லை’ என கைவிடப்பட்ட மாணவரா நீங்கள்… அட்மிஷன் தர ‘நாங்க இருக்கோம்’… – அசத்தும் கீழக்கரை பள்ளிக்கூடம்
கீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கி வரும் தீனியா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி, மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், ஏழை எளிய பெற்றோர்களின் மன குமுறல்களை களையும் முகமாகவும் பல்வேறு அசத்தலான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த அறிவிப்பின் படி கீழக்கரையில் பிற பள்ளிகளில் படிக்க ‘தகுதியில்லை’ என கைவிடப்பட்ட மாணவ மாணவிகளுக்கும், அரசு தேர்வுகளை எழுத லாயக்கில்லை என ஒதுக்கப்பட்ட மாணவ செல்வங்களுக்கும், இப்பள்ளியில் அட்மிஷன் தரப்படுவதோடு அவர்களுக்கு சிறப்பாக கல்வியளித்து வெற்றி கனியை பறிக்க வைக்கும் […]
கீழக்கரையில் ஜனாஸா அறிவிப்பு
கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனாரும், ஹமீது சிராஜுதீன், முஹம்மது ஈஸா ஆகியோரின் மாமாவுமாகிய ‘பாண்டிச்சேரி சாவானா’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் MKM சாகுல் ஹமீது அவர்கள் இன்று வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு : முஹம்மது ஈஸா – 7845104665
கீழக்கரையில் ஜனாஸா அறிவிப்பு
கீழக்கரை சின்னக்கடை தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.மு.புஹாரி அவர்களின் மகனும், அஜீஸ், பஷீர், சலீம், அலிகான், ஷரீப்கான் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது ஆசாத்கான் அவர்களின் மாமனாருமாகிய நவாஸ்கான் அவர்கள் இன்று 25.03.17 காலை 6.45 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன். அன்னாரின் ஜனாஸா இன்று காலை ஓடக்கரை பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கீழக்கரையில் கை நிறைய சம்பளம் – தீனியா மெட்ரிக் பள்ளிக்கு ‘ஆசிரியைகள் தேவை’ – அறிவிப்பு
கீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கும் தீனியா மெட்ரிக்குலேசன் மேனிலைப்பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியைகள் தேவைப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், கனக்குப் பதிவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களில் புலமை பெற்ற ஆசிரிய பெருமக்களுக்கு கைநிறைய சம்பளமும் வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாஸா அறிவிப்பு…
ஜனாஸா அறிவிப்பு இன்று (23.03.2017) கீழக்கரை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் செயல்வீரரும் sdpi கட்சியின் நகர் செயற்குழு உறுப்பினரும் சிறப்பு பேச்சாளரும் அனைவருக்கும் பழக்கபட்டவரும ஆகிய் மர்ஹூம் சகோதரர்.சித்திக் அலி அவர்கள் இன்று காலை 9 மணியளவில் வபத்தாகிவிட்டார்கள். இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை 24/03/2017காலை 9:00மணி அளவில் நம்புதாலை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். தொடர்புக்கு : மகனார் நௌஷாத் ஆலிம் 9943745976.
குடிநீர் தடையின்றி வழங்க வார்டு தோறும் பொறுப்பான அலுவலர் – சட்ட மன்றத்தில் அமைச்சர் வேலுமணி தகவல்
தமிழ்நாட்டில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி நிலவுவதால் மாநகராட்சி பகுதிகளில் வார்டுகள் தோறும் குடிநீர் வழங்கும் பணியை மேற்பார்வையிட அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக சட்டமன்றத்தில் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் வேலு மணி தெரிவித்துள்ளார். குடிநீர் பிரச்சனைக்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சட்டமன்றத்தில் இன்று திமுக உறுப்பினர் பிச்சாண்டி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:- தமிழக வரலாற்றில், கடந்த 140 வருடங்களில் இல்லாத வகையில், இந்த வருடம், பருவமழை […]
வங்கிகளில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பண பரிவர்த்தனை செய்தால் ரூ. 2 லட்சம் அபராதம் – ஏப்ரல் 1 முதல் அமலாகிறது
இந்தியா முழுவதும் கருப்புப் பணப் புழக்கத்தை ஒழிக்க மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பரில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என திடீரென அறிவித்து திண்டாட்டத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ரொக்க பணப்பரிமாற்றத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தொடர்ந்து விதித்து வருகிறது. மத்திய பட்ஜெட் அறிவிப்பின் போது 3 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்க பணப் பரிவர்த்தனையில் ஈடுபடக் கூடாது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்து இருந்தார். அவ்வாறு பண […]
டெங்கு நோயைக் கட்டுப்படுத்தக் கூடிய மருந்தை இலவசமாக வழங்கும் நிறுவனம்…
இந்தியாவில் அதுவும் கீழக்கரையில் டெங்கு காய்ச்சலின் வீரியம் மிக கடுமையாக நிலவி வருகிறது. இது சம்பந்தமாக கீழக்கரையில் நகராட்சி நிர்வாகம் தவிர்த்து பல் வேறு சமூக அமைப்புகளும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழுப்புணர்வு செயல்பாடுகள் மற்றும் நிலவேம்பு கசாயம் வினியோகம் போன்ற செயல்களை மிக வீரியமாக செய்து வருகிறார்கள். ஆனால் டெங்கு கொசுவின் வீரியமோ அதைவிட வேகமாக கீழை நகரில் பரவி வருவது மிகவும் வேதனையான செய்தி. இந்த மன வேதனைக்கு இதம் தரும் விதமாக சென்னையை […]
You must be logged in to post a comment.