வஃபாத் அறிவிப்பு கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்தைச் சார்ந்த தச்சர் தெருவில் வசிக்கும் மர்ஹுப் அலிபாதுஷா அவர்களின் மகனும், குருவிப்பிள்ளை ஜின்னா சாகிபு அவர்களின் மருமகனும், நியாஸ் அவர்களின் சகலையும், நிஷாத் அவர்களின் பெரிய வாப்பாவும், அப்துல்லாஹ் அவர்களின் சாச்சாவும் ஆகிய முகம்மது மஹ்மூத் அவர்கள் நேற்று (07-05-2017) இரவு 7 மணியளவில் வபாத் ஆகிவிட்டார்கள். அன்னாரின் நல்லடக்கம் இன்று பகல் லுஹர் தொழுகைக்கு பிறகு பழைய குத்பா பள்ளி மையவாடியில் நடைபெறும். இன்னா லில்லாஹி […]
Category: அறிவிப்புகள்
அறிவிப்புகள்
குழந்தைகளின் கனவை நினைவாக்கும் HSF toy store..
விளையாட்டு பொம்மைகள் என்றால் ஒரு காலத்தில் வெளிநாட்டில் இருந்து அல்லது சென்னை மாநகர் போன்ற இடங்களில் இருந்து வருவதற்காக காத்திருந்த காலங்கள் இருந்ததுண்டு. பின்னர் இணையதளம் மூலம் வேண்டியதை பார்த்து வாங்கும் வகையில் எளிதாகியது. ஆனாலும் நாம் விரும்புவதை நேரில் பார்த்து, உணர்ந்து வாங்குவது போல் திருப்தி கிடைப்பது கிடையாது. அதுவும் குழந்தைகளுக்கு வாங்கும் பொருட்களாக இருந்தால் நாம் அதிக கவனம் செலுத்துவோம். அக்குறையை நீக்க தற்சமயம் கீழைநகரில் குழந்தைகளின் விளையாட்டு பொருட்களுக்காகவே உருவாகியுள்ளது HSF TOY […]
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் பொறியியல் சேர்க்கைக்கு இலவச ஆன் லைன் வசதி..
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கான ஆன்லைன் விண்ணப்பம் செய்வதற்கு இலவச இணையதள வசதி விண்ணப்பம் பூர்த்தி செய்வதகு உதவி செய்ய ஏற்பாடு துவக்கப்பட்டுள்ளது. இந்த இலவச சேவையை கல்லூரி சேர்மன் SM. முஹம்மது யூசுப் துவக்கி வைத்தார். பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்கள் http://www.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். http://www.annauniv.edu இது பற்றி அறக்கட்டளை இயக்குநர். ஹாமீது இபுராஹிம் மற்றும் கல்லூரி […]
கீழக்கரை நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்…
கீழக்கரை நகராட்சிக்கு புதிய ஆணையராக வசந்தி நேற்று முதல் பொறுப்பேற்று கொண்டார். இவர் முன்னர் கொடைக்கானல் நகராட்சியில் ஆணையராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. அவருடைய பணி சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது. இதற்கு முன்னர் அரசியல்வாதிகளின் பணிக்காலம் முடிந்த பின்னர் சந்திரசேகர் பொறுப்பு ஆணையராக பணியாற்றி மக்கள் எளிதாக அணுகக்கூடியவராகவும், மக்களின் பிரச்சினைகளை எளிதில் தீர்க்க கூடியவராகவும் இருந்தார். அவர் ஆற்றிய பணிக்கு இத்தருணத்தில் நன்றியும் தெரிவித்து கொள்கிறோம்.
இராமநாதபுரம் எஸ்.பி பணியிட மாற்றம்.. புதிய எஸ்.பி நியமனம்..
இராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி ஆக பணியாற்றி வந்த மணிவண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய எஸ்பி ஆக ஓம்பிரகாஷ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய பணி சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.
முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் சிறுவர், சிறுமியர்களுக்கான சேர்க்கை…
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் சிறுவர், சிறுமியர்களுக்கான விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 5 முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. சிறுவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி – சென்னை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. சிறுமியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி – சென்னை மற்றும் ஈரோடு […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்..
இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (GROIP II – NON INTERVIEW) போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், தங்களுடைய பெயர் மற்றும் முகவரியினை இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10.05.2017க்குள் பதிவு செய்யலாம். மேற்படி பதிவு செய்தவர்கள் 12.05.2017 முதல் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 9043260689 […]
ரமலானை வரவேற்க தயாராகும் முஸ்லிம் சமுதாயம்..
முஸ்லிம் சமுதாயத்தின் மிகவும் புனிதமான மாதமாகும் ரமலான் மாதம். முஸ்லிம் ஆன ஒவ்வொருவரும் பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய இந்த புனித மாதத்தில் இறை வணக்கத்தின் மீது ஆர்வம் காட்டக் கூடியவர்களாக இருப்பார்கள். அதுபோல் இம்மாதத்தில் பல் வேறு இஸ்லாமிய அமைப்புகளும் மார்க்க நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். இன்னும் புனித ரமலான் தொடங்க ஒரு மாதம் இருக்கும் நிலையில் ரமலான் மாதத்தை வரவேற்கும் விதமாக சென்னை ரய்யான் ஹஜ் மற்றம் உம்ரா சர்வீஸ் நிறுவனம் சார்பாக 03-05-2017 அன்று ரமலானை […]
இன்று ‘ஏப்ரல் 30 ‘ – குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க பெற்றோர்கள் மறந்துடாதீங்க…
தமிழகம் முழுவதும் இன்று இரண்டாம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மறக்காமல் தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்குமாறு கீழை நியூஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். தமிழகத்தில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இன்று இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகின்றன. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 43,051 சொட்டுமருந்து மையங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி […]
TNPSC குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு – இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தொகுதி–2-ஏ- வில் அடங்கிய (நேர்முகத்தேர்வு அல்லாத) பதவிகளுக்கான (அறிவிக்கை எண். 10/2017) 2017-2018 ஆம் ஆண்டுக்குரிய தேர்வு அறிவிக்கை, நேற்று 27.04.2017 வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணைய வழியில் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1953 தமிழ்நாடு அமைச்சுப்பணிகள், தமிழ்நாடு தலைமைச்செயலகப்பணிகள் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைப் பணிகளில் அடங்கிய உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளில் சுமார் […]
கீழக்கரையில் ‘மக்கள் மருந்தகம்’ திறப்பு விழா அழைப்பிதழ்
திரு.உ.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலில், மக்கள் பாதை இயக்கத்தின் மேலான ஒத்துழைப்பில் மலிவு விலையிலான, தரமான ஜெனரிக் மருந்துகளை, ஏழை எளிய மக்களுக்கு கிடைக்க செய்யும் நல்ல நோக்கத்தில், கீழக்கரை கிழக்குத் தெரு சிட்டி யூனியன் வங்கி அருகாமையில் ‘மக்கள் மருந்தகம்’ என்கிற பெயரில் ஜெனிரிக் மெடிக்கல், மத்திய அரசின் அனுமதியுடன் நாளை 28.04.17 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் திறக்கப்பட உள்ளது. அதற்கான அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அனைத்து மக்களும் தவறாது கலந்து கொண்டு திறப்பு […]
உங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினையா?? “வாட்ஸ் அப்” மூலம் உங்கள் குறைகளை தீர்க்கலாம்..
உங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் சம்பந்தமான பிரச்சனையா இனி 9585994700 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் புகார்களைத் தெரிவிக்கலாம் என்று இரமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் முனைவர்.நடராஜன் அறிவித்துள்ளார். குடிநீர் விநியோகம் தொடர்பான கோரிக்கை, புகார், குடிநீரை முறைகேடாக பயன்படுத்துபவர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிப்பதற்காக 04567-230431 என்ற தொலைபேசி வசதியுடன், 18004257040 என்ற கட்டணமில்லா தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]
கீழக்கரை வங்கி ATM ல் கண்டெடுத்த ரூ.10000 ஐ நேர்மையுடன் வங்கியில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் – பணம் தவற விட்டவர்கள் வங்கியை அணுகலாம்
கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் கரீம் ஸ்டோர் எதிரே இருக்கும் ஐசிஐசிஐ ATM ல் நேற்று 24.04.17 இரவு ரூ.10000 ஐ கண்டெடுத்த ஆட்டோ டிரைவர் அதனை நேர்மையுடன் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரை சந்தித்து ஒப்படைத்துள்ளார். கீழக்கரை ஆடறுத்தான் தெருவைச் சேர்ந்த சீனி முகம்மது மகன் சாதீக் அலி. இவர் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் BCA., பட்டப்படிப்பு படித்துள்ளார். பட்டப்படிப்பு படித்த நிலையிலும் வேலை கிடைக்கும் வரை கீழக்கரையில் வாடகை ஆட்டோ […]
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி இராமநாதபுரம் வருவாய் துறை அலுவலர் சங்கம் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பு..
சமீபத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை வருவாய்த்துறை அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்தனர். இன்று இராமராதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின், இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் தமீம்ராசா எழுதிய கடிதத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் வாபஸ் பெறும் வரை இராமநாதபுரம் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கமும் 25-04-2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என்று அறிவித்துள்ளார்.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் சலுகையை நழுவ விடாதீர்கள்..
மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தின்படி சுயநிதி தனியார் பள்ளிகளில் (சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் தவிர்த்து) 25 சதவீத சேர்க்கை ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை பெற்றோர்கள் இருந்த இடத்திலேயே www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம். பதிவு செய்தவுடன் அதை உறுதிபடுத்தக்கூடிய குறுஞ்செய்தி நாம் பதிவு செய்யும் மொபைல் எண்ணுக்கு வரும். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் அலுவலகம் போன்ற அனைத்து […]
அரசு மீன்பிடி துறைமுக வேலைவாய்ப்பு..
அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு.. இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இராமநாதபுரம் மீன்பிடி துறைமுக திட்ட உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓர் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு நேர்முகதேர்வு நடத்தப்படவுள்ளது. அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பதாரர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும். வயது வரம்பு 01.07.2016 அன்றுள்ளபடி கணக்கிடப்படும். சம்பள விகிதம் ரூ.4,800.00- ரூ.10,000.00, தர ஊதியம் ரூ.1300.00 ஆகும். இப்பணியிடத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் […]
கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் கோடைகால சிறப்பு வகுப்பு..
கோடைகால விடுமுறை ஆரம்பம் ஆனதும் ஓவ்வொரு மாணவர்களும் பல வழிகளில் பொழுதுபோக்க தொடங்கி விடுவார்கள். ஆனால் அவர்களை சரியான முறையில் வழிகாட்டி விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் கடமை பெற்றோர்களுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும் உண்டு. அவ்வகையில் இந்த வருடம் கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி, சென்னை திறந்த வெளி பல்கலைக்கழகத்துடன் இணைந்து பேச்சு வழக்கு ஆங்கிலம் மற்றும் அரபி பயிற்சி முகாம் ஏற்பாடு செய்துள்ளார்கள். இப்பயிற்சி முகாம் ஏப்ரல் மாதம் 25ம் தேதி ஆரம்பித்து மே மாதமே 25ம் […]
இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி திருத்தம் இன்று முதல் ஆதார் சேர்க்கை மையங்களில் செய்யலாம்
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் 303 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் ஏற்கெனவே ஆதார் எண் பெற்றுள்ளவர்கள் தங்கள் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை திருத்தம் செய்யும் வசதி இன்று 17.04.17 […]
கீழக்கரையில் 20-04-2017 அன்று மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் தடை..
கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களாகிய மாயாகுளம், முகம்மது சதக் கல்லூரிகள், ஏர்வாடி, உத்திரகோசமங்கை, காஞ்சிரங்குடி, மோர்குளம் மற்றும் அதன் சார்ந்த பகுதிகளில் 20-04-2017 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என மின் வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் அன்றைய தேவைக்கான முன் நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இராமேஸ்வரம் – கோயம்புத்தூர் – இராமேஸ்வரம் புதிய சிறப்பு விரைவு ரயில் ஆரம்பம்..
இராமேஸ்வரம் – கோயம்புத்தூர் – இராமேஸ்வரம் புதிய விரைவு ரயில் ஏப்ரல் 22ம் தேதி முதல் ஆரம்பம் செய்யப்படுகிறது. இந்த விரைவு ரயில் வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சேவை ஜூலை மாதம் வரை செயல்படும் என்று அறியப்படுகிறது. எண். 06062 கோயம்பத்தூர் – இராமேஸ்வரம் விரைவு ரயில் திங்கள் மற்றும் வெள்ளி மட்டும் இயக்கப்படும். இந்த ரயில் பாலக்காடு, பாலக்காடு டவுன், பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, இராமநாதபுரம் […]
You must be logged in to post a comment.