இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம், இராமேஸ்வரம், திருவாடானை, கீழக்கரை, பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு முகவர்களுடன் எதிர்வரும் 27.06.2017 அன்று மாலை 5.00 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. மேற்கண்ட கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து […]
Category: அறிவிப்புகள்
அறிவிப்புகள்
கீழக்கரையில் வரும் 20-06-2017 (செவ்வாய் கிழமை) மீண்டும் மின் தடை…
கீழக்கரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வருகின்ற 20.06.17. (செவ்வாய் கிழமை) அன்று மின்தடை என மின் வாரியம் அறிவித்துள்ளது. கடந்த 14ம் தேதி மின்தடை அமுல்படுத்தி ஒரு வாரம் கூட முடிவடையாத நிலையில் மீண்டும் அவதி. இது குறித்து மின் வாரியத்தை தொடர்பு கொண்டபோது, கீழக்கரை துணை நிலையத்தில் உள்ள இரு டிரான்ஸ்பார்மர்களில் ஒன்று பழது. பண்டிகை காலமாக இருப்பதால் பளு தாங்காமல் போக வாய்ப்புள்ளது. ஆகவே, பரமக்குடியில் இருந்து வரும் நபர்கள் டிரான்ஸ்பாமரை 2 […]
கீழக்கரையை சேர்ந்த இளைஞருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய உதவி கரம் நீட்டுங்கள்
கீழக்கரை தெற்குத் தெரு ஜமாத்தை சேர்ந்த அப்துல் ரசாக் மகன் ஹாஜா அலாவுதீன் என்கிற 32 வயது இளைஞருக்கு இரண்டு கிட்னிகளும் முற்றிலும் செயலிழந்த நிலையில் கடந்த 10 மாதங்களளாக டயாலிசிஸ் சிகிச்சை செய்து வருகின்றனர். ஒரு முறை டயாலிசிஸ் செய்வதற்கு ரூ.5000 வரை செலவாகிறது. தொடர்ந்து டயாலிசிஸ் செய்து வருவதால் தற்போது இவரின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்து வருகிறது. இந்நிலையில் இவரது தாயார் தனது கிட்னியை தன் மகனுக்கு கொடுக்க முன் வந்துள்ளார். இதற்கான […]
கீழக்கரை சுற்றுவட்டாரத்தில் நாளை (14-06-2017) மின் தடை..
கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை (14-06-2017), புதன்கிழமை காலை 09.00 மணியில் இருந்து மாலை 05.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை இருக்கும். இது பற்றி செயற்பொறியாளர் கூறுகையில் நாளை (14-06-2017, புதன் கிழமை) கீழக்கரை, ஏர்வாடி, மாயாகுளம், முகம்மது சதக் கல்லூரிகள், உத்திரகோசமங்கை ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக தடை இருக்கும், ஆகையால் பொதுமக்கள் முன் நடவடிக்கை எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்.
கீழக்கரை நடுத்தெரு ஜும்ஆ பள்ளியில் இன்று சிறப்பு சொற்பொழிவு..
கீழக்கரை நடுத்தெரு அல் மஸ்ஜிதுல் ஜாமிஉ, ஜும்ஆ பள்ளியில் இன்று (12-06-2017), ரமலான் பிறை 17 திங்கள் கிழமை பின்னேரம் இரவுத் தொழுகைக்குப் பிறகு சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்த பத்ர் தின சிறப்பு சொற்பொழிவு நடைபெறுகிறது. இச்சொற்பொழிவில் சிறப்பு பேச்சாளர்களாக ஹாபிஸ். அப்துல் கனி மற்றும் கீழக்கரை டவுன் காஜி காதர்பக்ஸ்ஹசைன் கலந்து கொண்டு சிறப்புரைறயாற்றுகிறார்கள்.
ஜனாஸா அறிவிப்பு…
ஜனாஸா அறிவிப்பு தெற்குத்தெரு ஜமாத்தை சேர்ந்த அல் அக்ஸா நகரில் வசிக்கும் மர்ஹூம் வஹாப் மரைக்கா அவர்களின் மகளும் மர்ஹூம் மாப்பிள்ளை தம்பி மரைக்கா என்ற முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மணைவியும் A.M. ஷேக் அப்துல் காதர், ஆனா மூனா என்ற முஹம்மது இப்றாகீம் ஆகியோரின் தாயாரும் மற்றும் மர்ஹூம் பெரிய மரைக்கா என்ற சாகுல் ஹமீது, சின்ன மரைக்கா என்ற செய்யது அகமது கபீர் ஆகியோரின் சகோதரியும் மற்றும் மர்ஹூம் செய்யது முஹம்மது பசீர், ஹபீப் […]
முக்கிய அறிவிப்பு…
முக்கிய அறிவிப்பு…. அன்பார்நத சகோதர, சகோதரிகளே… உங்களின் அன்பான தொடர் ஆதரவோடு கீழை நியூஸ் வோர்ல்ட் முதலாம் ஆண்டை விரைவில் தாண்டுகிறது. இறைவன் நாட்டப்படி ரமலான் மாதத்தை தொடர்ந்து கீழை நியூஸ் வோர்ல்ட் பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனமாக பயணத்தை தொடர இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஊரின் நிகழ்வுகளை இன்னும் முழுமையாக பதியும் நோக்கில் செய்தி மற்றும் வீடியோ செய்தி சேகரிப்பில் ஆர்வமுள்ள இளைஞர்களை இணைத்துக் கொள்ள உள்ளோம். கீழக்கரை மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள மற்ற பகுதியில் […]
ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரையில் 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் புதிய வாக்காளர்களாக பதிவு செய்திடலாம்..
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 01.06.2017 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் வருகின்ற ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரையில் 18 வயது பூர்த்தியடைந்த நபர்களை அதிகளவில் புதிய வாக்காளர்களாக சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி […]
இயற்கை உணவின் பக்கம் திரும்பும் மக்கள்.. தூய்மையான, சுத்தமான செக்கு எண்ணை விற்பனையில் கீழக்கரை இளைஞர்கள்..
கடந்த பல வருடங்களாக விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் உண்ணும் உணவு முதல் குடிக்கும் நீர் வரை பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களை இந்திய சந்தையில் இந்திய பெயரில் வெற்றிகரமாக சந்தைப்படுத்தினர். உதாரணமாக சூர்யக்காந்தி எண்ணை, ஓட்ஸ், நூடுல்ஸ் போன்ற இந்திய நாட்டிற்கு பழக்கமே இல்லாத உணவுகளை கவர்ச்சிகரமான விளம்பரம் மூலம் சந்தைபடுத்தி ஓரளவு மக்களை அவ்வுணவு பழக்கத்திற்கு அடிமையும் படுத்தினர். ஆனால் போலி சாயம் கடந்த சில வருடமாக இயற்கை உணவு விழிப்புணர்வு அடைந்த பொழுது […]
இஸ்லாமியா பள்ளியின் ரமலான் மாத சிறப்பு வேலை நேர அறிவிப்பு..
தமிழகத்தில் இந்த வருடம் கடுமையான வெப்பத்தை முன்னிட்டு தமிழக அரசின் அறிவிப்பின் படி ஒரு வாரம் காலம் தாமதமாக ஜூன் மாதம் 07ம் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. இஸ்லாமிய மக்களின் புனித மாதமான ரமலான் மாதமும் இன்று (27-05-2017) இரவு முதல் தமிழகத்தில் தொடங்குகிறது. இன்று தொடங்கி ஒரு மாதம் காலம் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்று பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். இஸ்லாமிய மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தில் உள்ளவர்களின் அவசியத்தை கருத்தில் கொண்டு இந்த வருடம் ரமலான் மாதத்தில் பள்ளி […]
மக்கள் பாதை சார்பாக திடல் திட்ட திருவிழாவில் முதலாம் ஆண்டு கைப்பந்து போட்டி…
இராமநாதபுரதர மாவட்டத்தில் 24.05.2017 மற்றும் 25.05.2017 அன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரைமக்கள் பாதையின் திடல் திட்ட திருவிழா நடைபெற உள்ளது. மேலும் இத்திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாபெரும் கைப்பந்து போட்டி நிகழ்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டி இராஜசிங்கமங்கலம், இஸ்லாமிய வளர்பிறை வாலிபால் விளையாட்டு திடலில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு செ.நாகல்சாமி , மாநில தலைவர், இளந்திருமாறன், மாநில ஒருங்கிணைப்பாளர், சையது உமர் முக்தார் , மாநில களப்பணி ஒருங்கிணைப்பாளர், […]
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள அழகிய பயிற்சி முகாம்…
ஒரு சமுதாயம் முன்னேற்றம் அடைய தனி மனித ஒழுக்கம் என்பது இன்றியமையாத ஒரு விசயமாகும். அவசர உலகில் இருக்கும் நாம் சில கால இடைவெளியில் நம்மை நாமே சீர்தூக்கிப் பார்த்துக் கொள்வது மிக அவசியமாகும். நம் பண்புகளை சீர்படுத்தும் விதமாக கீழக்கரை வடக்குத் தெரு சகோதரர்கள் அனைவரும் இணைந்து நற்பண்புகள் என்ற தலைப்பில் நாளை (21-05-2017), ஞாயிறு அன்று இஷா தொழுகைக்குப் பிறகு சி.எஸ்.ஐ பள்ளி பின்புறம் உள்ள லண்டன் காலனியில் ஒழுக்கப் பயிற்சி (தர்பியா) முகாம் […]
கீழக்கரை தாலுகா ஆலங்குளத்தில் அம்மா திட்ட முகாம்…
கீழக்கரை தாலுகா ஆலஙகுளம் கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் கீழக்கரை சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தார் கே எம் தமிம்ராஜா தலைமையிலும் வட்ட வழங்கல் அலுவலர் ரெத்தினமூர்த்தி, மண்டல துணை தாசில்தார் பெனித்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது. இம்முகாமில் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் திருமண உதவித் தொகையும், 3 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைகளும், குடும்பஅட்டையில் பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வரப்பெற்ற அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய உத்தரவுகள் 15 பயனாளிகளுக்கு […]
NASA மற்றும் KECT இணைந்து நடத்திய கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா…
கீழக்கரையில் வடக்குத் தெரு சமூக நல அமைப்பு ( NASA) மற்றும் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை (KECT) இவ்விரு அமைப்புகளும் கீழக்கரையில் பல வருடங்களாக மார்க்க சேவை மற்றும் சமுதாய பணிகளை கீழக்கரை மக்களுக்கு செய்து வருவது அனைவரும் அறிந்த விசயம். அதுபோல் இவ்விரு அமைப்புகளும் வருடந்தோரும் கோடை விடுமுறை காலத்தில் மாணவர்கள் பயன் பெறும் விதமாக சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்துவது வழக்கம். இந்த வருடம் பயிற்சி முகாமை பயனுள்ளதாகவும், சிறப்பாக செயல்படும் விதமாக […]
கலெக்டர் ஆகும் கனவா?? உங்களுக்கு உதவ மக்கள் பாதை காத்திருக்கிறது..
நம்மில் எத்தனையோ பேருக்கு கலெக்டர் ஆக வேண்டும், நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கும், ஆனால் சரியான வழிகாட்டுதலும், ஊக்கப்படுத்துதலும் இல்லாமல் கனவு, கனவாகவே புதைந்து விடுகிறது. அனைவருடைய கனவையும் நினைவாக்கும் விதமாக சகாயம்,IAS வழிகாட்டுதலில் இயங்கி வரும் மக்கள் பாதை மற்றும் SMART LEADERS IAS நிறுவனமும் இணைந்து நடத்தும் SCHOLARSHIP TEST வரும் மே 21ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி மற்றும் பதிவுகள் திருநெல்வேலி PPL திருமண […]
10ம் வகுப்பு தேர்வு முடிவு.. மாநில அளவில் இராமநாதபுர மாவட்டம் மூன்றாம் இடம்…
இன்று (19-05-2017) 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. இந்த வரும் விருதுநகர் மாவட்டம் , கன்னியாகுமரி மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம் என முதல் மூன்று இடங்களில் வந்துள்ளது. இந்த வருடம் இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 17979 மாணவர்கள் பரிட்சை எழுதினர். இதில் மாணவர்கள் 8814 பேரும், மாணவிகள் 9165 பேரும் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 96.46 சதவீதமும், மாணவிகள் 98.83 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடம் கடந்த ஆண்டை விட 1.06 சதவீதம் […]
கோடைகால இஸ்லாமிய எழுச்சி முகாமின் நிறைவு விழா..
கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கத்துடன், அல் மத்ரஸத்துல் அஸ்ஹரிய்யா மற்றும் அல் மத்ரஸதுர் ராழியா இணைந்து கோடைகால பயிற்சி முகாம் மாணவர்களுக்காக இந்த வருடமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. நாளை (19-05-2017) மக்ரிப் தொழுகைக்கு பிறகு கடற்கரை பள்ளி வளாகத்தில் கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு விழா மற்றும் இஸ்லாமிய கல்வி சங்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவு விழாவும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் மார்க்க சொற்பொழிவுடன் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். நிகழ்சிக்கான விபரங்கள் கீழே:-
கருணைக் கரம் நீட்டிய கீழக்கரை நகராட்சி..
கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் கருணை அடிப்படையில் மாரிமுத்து என்பவருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது. பரமக்குடி எம்.ஜி.ஆர் நகரைச் சார்ந்த R.மந்தன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு பணிக்காலத்தில் இயற்கை எய்தினார். அவரின் வாரிசான மாரிமுத்து என்பவருக்கு கருணை அடிப்படையில் கீழக்கரை ஆணையர் வசந்தி மற்றும் தலைமை எழுத்தர் சந்திரசேகர் முன்னிலையில் பணி உத்தரவு இன்று (18-05–2017) கீழக்கரை நகராட்சி அலுவலக வளாகத்தில் வழங்கப்பட்டது.
தொகுதி-II A நிலை அலுவலர் பணியிடங்களுக்குரிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா…
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 16.05.2017 அன்று மாவட்ட நிர்வாகம் சார்பாக, மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும். தொகுதி-II A (GROUP IIA) நிலை அலுவலர் பணியிடங்களுக்குரிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான குறிப்புகளை வழங்கினார். பயிற்சி வகுப்பினைத் துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் பேசியதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் […]
பண்பகம் அறக்கட்டளையின் கல்வி உதவிக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு…
பண்பகம் அறக்கட்டளையும், SDPI கட்சியும் இணைந்து மூன்றாவது வருடமாக 2017-2018ம் ஆண்டுக்கான தேவையுடைய ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவும் விதமாக மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் கலந்தாய்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலந்தாய்வு வரும் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் இராமநாதபுரம் ரிஹா குளோபல் சர்வீஸ் நிலையத்திலும், திங்கள் மற்றும் செவ்வாய் நாட்களில் பரமக்குடி நகரில் உள்ள நேஷனல் பில்டர்ஸ் அலுவலகத்திலும் நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான விதிமுறைகள் மற்றும் தொடர்பு விபரங்கள் கீழே […]
You must be logged in to post a comment.