இராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச பாலின் தரத்தை பரிசோதனை மாவட்டம் முழுதும் நடத்தப்பட உள்ளது. கீழக்கரையிலும் இம்முகாம் வருகின்ற 29.08.17 செவ்வாய் கிழமை காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது. இந்த பரிசோதனை முகாமில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திர போஸ் கலந்து கொள்வதால் பொதுமக்கள் தங்களது குறைகளை கூறி நிவர்த்தி செய்யலாம்.
Category: அறிவிப்புகள்
அறிவிப்புகள்
நாளை உள்ளூர் அரசு அலுவலகப் பணிகள் வழக்கம் போல் நடைபெறும்..
அறிவிப்பு கடந்த 16ம் நேதி ஏர்வாடி சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக நாளை (19-08-2017) அனைத்து அரசு அலுவலகங்களாகிய நகாராட்சி, தாலுகா அலுவலகங்கள் வழக்கம் போல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கீழக்கரை முஸ்லிம் முன்னேற்ற வாலிபர் சங்கம் (MYFA) மற்றும் மதுரை தேவதாஸ் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்..
கீழக்கரையில் வரும் ஞாயிறு (20-08-2017) அன்று புதுத்தெரு முஸ்லிம் முன்னேற்ற வாலிபர் சங்கம்(MYFA) மற்றும் மதுரை தேவதாஸ் சிறப்பு மருத்துவமனை ஆகியோர் இணந்து மாபெரும் இலவச மருத்து முகாம் நடத்துகிறார்கள். இம்முகாம் கீழக்கரை புதுத்தெருவில் உள்ள நூரானியா பள்ள வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாம் காலை 09.00 மணி முதல் மாலை 01.00 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியாத் தவ்ஹீத் ஜமாத் சார்பாக 18-08-2017 அன்று 63வது மாபெரும் ரத்த தான முகாம்..
இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் மண்டல தவ்ஹீத் ஜமாத் சார்பாக 18-08-2017 (வெள்ளிக்கிழமை) அன்று மாபெரும் 63வது இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் ரியாத்தில் உள்ள KING FAHAD MEDICAL CITY மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்படுகிறது. இம்முகாம் காலை முதல் தொடங்கும். மேலும் இந்த இரத்த தான முகாம் இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற வருபவர்களின் தேவையை கருத்தில் கொண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ரியாத் நகரின் பல பகுதிகளில் […]
துபாயில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 18ம் தேதி தமுமுக சார்பாக 19வது ரத்த தான முகாம் நடைபெற உள்ளது..
இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக வரும் வெள்ளிக்கிழமை (18-08-2017) அன்று தமுமுக சார்பாக 19வது மாபெரும் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரத்த தான முகாம் துபாயில் உள்ள லத்திபா மருத்துவமனையில் ( LATIFA HOSPITAL ) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் காலை 08.00 மணி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வஃபாத் அறிவிப்பு..
வஃபாத் அறிவிப்பு கீழக்கரை மேலத்தெரு புதுப்பள்ளி ஜமாத்தை சேர்ந்த அகமது தெருவில் வசிக்கும்(மர்ஹூம்) மசூது மீரா உம்மா மர்ஹூம் சேகு முகைதீன் அவர்களின் மகனும் வாஹிது ரகுமான், ஜவஹர், அசினா, ராபிக் ரகுமான் ஆகியோர்களின் தகப்பானாரும், முகம்மது நாசர் , சேகு முகம்மது, அன்சாரி அன்வர்,ஜகுபர் சாதி,ரகுமத்து நாசிரா, ஆகியோரின் மாமாவும் செய்யது அலி ஃபாத்திமாவின் சகோதரரும் (மர்ஹூம்) காதர் இபுராஹிம் மச்சானும், முகம்மது ஹலபத்துல்லா, ஹாலீது இபுராஹிம் ஆகியோரின் கண்ணுவாப்பாவும், அர்ஷத் ரகுமான், ஆசிக் ரகுமான் […]
71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சிறப்பு நிகழ்ச்சிகள்..
கீழக்கரையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 71வது சுதந்திர தினமாகும். இத்தினத்தையொட்டி கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் தெற்கு கிளை மற்றும் கீழக்கரை அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் நடத்த உள்ளார்கள். இந்த முகாமுக்கு கீழக்கரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைக்கிறார். அதே போல் 15 ஆகஸ்ட் அன்று கீழக்கரை தவ்ஹீத் ஜமாத், தெற்கு கிளை மாணவர் அணி சார்பாக சிறுபான்மையின மாணவ, மாணவிகள் […]
இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் நலன் மற்றும் வணிக நோக்கத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் உரிமம் பெற வேண்டும்…
இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் நலன் மற்றும் வணிக நோக்கத்தில் செயல்பாட்டில் உள்ள அனைத்து பொது கட்டிடங்களுக்கும், சம்மந்தப்பட்ட உரிமைதாரர்கள் தமிழ்நாடு பொதுக் கட்டிடங்கள் உரிமைச் சட்டம் 1965-இன் கீழ் முறையான ஆவணங்களை சமர்ப்பித்து உரிமம் பெற்றிருத்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு பொதுக் கட்டிடங்கள் உரிமைச் சட்டம் 1965-இன் கீழ் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், […]
கீழக்கரை தாலுகாவில் மக்கள் தொடர்புத் திட்டம்…
கீழக்கரை தாலுகா திருப்புல்லாணி பிர்க்கா ரெகுநாதபுரம் குருப் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கீழக்கரை தாசில்தார் இளங்கோவன் தலைமையில் சமூகப்பாதுகாப்புத்திட்ட தாசில்தார் தமிம்ராஜா முன்னிலையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக மண்டல துணை தாசில்தார் நாகராஜ் வரவேற்றார். அவர் உரையாற்றும் பொழுது வேளாண்மை கால்நடை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள் குறித்து விளக்கிப்பேசினர். அதைத் தொடர்ந்து சமூகப்பாதுகாப்புத்திட்ட தாசில்தார் பேசும் பொழுது தகுதியான பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் சிந்தாமல் சிதறாமல் வழங்கப்படும், அதே […]
கீழக்கரையில் ஒருங்கிணைந்து மழைத் தொழுகை நடத்த மும்முரம்..
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மக்கள் டீம் சோசியல் சர்வீஸ் அமைப்பைச் சார்ந்த காதர், கீழக்கரையில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் மற்றும் மழையின்மையை கருத்தில் கொண்டு முஸ்லிம் சமுதாய மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை கீழக்கரை மக்கள் முன்பு சமூக வலைதளங்கள் மற்றும் நேரடியாகவும் வைத்தார். அவரின் கோரிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று […]
திமுக மனிதசங்கிலி போராட்டம் 28ம் தேதிக்கு மாற்றம்…
தமிழகத்தில் ஜூலை 27-ல் திமுக மனித சங்கிலி போராட்டம் அறிவித்திருந்தது. ஆனால் ஜூலை 27-ல் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் நினைவு மண்டபம் திறக்க இருப்பதால் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு. ஆகையால் ராமநாதபுரத்தில் நீட் தேர்வை கண்டித்து ஜூலை 28-ல் திமுக மனித சங்கிலி போராட்டம் – மாவட்ட திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. https://keelainews.in/2017/07/24/human-chain-protest-against-neet/
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற 21.07.2017 அன்று நடைபெறவுள்ளது.
2017-2018ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான ஜூலை 2017 மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளம், நீச்சல் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளான கால்பந்து, இறகுப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இராமநாதபுரம் மாவட்ட பிரிவின் சார்பில் 21.07.2017 வெள்ளிக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. 100மீ, 400மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய தடகள போட்டிகளும் 100 மீ, […]
ரெட் கிராஸ் சார்பாக கீழக்கரை சதக் கல்லூரியில் தீ தடுப்பு குறித்த செயலரமுறைப் பயிற்சி..
அறிவிப்பு.. கீழக்கரையில் இன்று (19-07-2017) – புதன் கிழமை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பாக கீழ்க்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 10.00 மணி அளவில் மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் மீட்பு குறித்த செயல்முறைப் விளக்க பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியை ராமநாதபுரம் தீ அணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் வழங்க உள்ளனர். இப்பயிற்யிசியில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு எம். ராக்லாண்ட் மதுரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அமைதியைக் கெடுக்கும் பாசிச சக்திகளை எதிர்த்து SDPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்..
அறிவிப்பு… தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டி, சமூக அமைதியை கெடுக்கும் பாரதீய ஜனதா கட்சியை கண்டித்து எஸ். டி.பி. ஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாள் : 16. 07. 2017 ஞாயிறு நேரம் : மாலை 04. 00 மணிக்கு இடம்: சந்தை திடல் , இராமநாதபுரம். சிறப்புரை: கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, மாநிலத்தலைவர், எஸ். டி. பி. ஐ கட்சி. கண்டன ஆர்ப்பாட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகள் வைக்கப்படுகிறது… தமிழக அரசே ! காவல்துறையே !! -தமிழகத்தில் மதக்கலவரத்தை […]
வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் செய்ய சிறப்பு முகாம்…
தமிழ்நாடு வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் மற்றும் முகவரி மாற்றம் செய்ய வரும் 09-07-2017 & 27-07-2017 ஆகிய ஞாயிறு கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் நடைபெறும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொது மக்கள் அனைவரும் விபரங்களை சரி செய்து கொள்ள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை கிளை நடத்தும் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்..
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை 500 பிளாட் கிளை நடத்தும் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி. நேரம்:- 10/07/2017 நாள் :- திங்கள் நேரம்:- மாலை 7 மணிக்கு இடம்:- மஸ்ஜிதுத் தக்வா 500பிளாட் உங்கள் வினாக்களுக்கு விடையளிக்கிறார் சகோதரர் அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி. நிகழ்ச்சி ஏற்பாடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை 500பிளாட் கிளை இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு) தொடர்புக்கு 7339663380, 7338663381,7339663382
கீர்த்தி மிகு கீழக்கரையை மேலும் கீர்த்தியாக்கிய “நினைவலைகள்” நூல் வெளியீட்டு விழா….
சோனகன் என்ற மஹ்மூது நெய்னா வளர்ந்து வரும் எழுத்தாளர் என்பதை விட வளர்ந்த எழுத்தாளர் என்றால் மிகையாகாது. 1993ம் வருடம் மதுரை வக்ஃப் வாரிய கல்லூரியில் இளநிலை பட்டத்தை முடித்து, பின்னர் முதுநிலை பட்டத்தை சென்னை புதுக்கல்லூரியில் முடித்தவர். மஹ்மூது நெய்னாவில் கைவண்ணத்தில் “கீழக்கரை நினைவலைகள்” வெளியீட்டு விழா வரும் வெள்ளிக்கிழமை (07-07-2017) அன்று மாலை 05.00 மணியளவில் ஜதக்கதுன் ஜாரியா பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளனர். […]
கீழக்கரையில் விரைவில் புதிய நிரந்தர தாலுகா மற்றும் தாசில்தார் அலுவலகம்… நிதி ஒதுக்கி அரசாணை..
கீழக்கரை இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாலுகா அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தாலுகா அலுவலகத்தின் பணிகள் தற்சமயம் உள்ள நகராட்சி அலுவலத்திலேயே நடைபற்று வந்தது. ஆகையால் புதிதாக நியமிக்கப்பட்ட வருவாய் அதிகாரிகளுக்கும் மற்றும் பிற அரசு அதிகாரிகளும் முழுமையான கட்டமைப்பு இல்லாத காரணத்தால் பணிகளை மேற்கொள்வதில் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தார்கள். இந்நிலையில் தமிழக அரசு தமிழகம் முழுவதும் சுமார் 81,15,49,000/- செலவில் மொத்தம் 31 புதிய தாலுகா மற்றும் தாசில்தார் அலுவலகம் அமைக்க நிதி ஒதுக்கி அரசாணை […]
கீழக்கரையில் ஜும்மா பள்ளி, தவ்ஹீத் ஜமாத், வடக்கு தெரு நாசா பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு..
கீழக்கரை, “அல் மஸ்ஜிதுல் ஜாமிஉ” நடுத்தெரு, ஜும்ஆ மஸ்ஜிதில் ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் தொழுகை மற்றும் குத்பா இன்ஷாஅல்லாஹ் காலை 9.00 மணிக்கு நடைபெறும். அதைத் தொடர்ந்து அனைத்து ஜமாஅத்தினர் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி காலை 11.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதே போல் நபி வழித் தொழுகையான திடல் தொழுகை தவ்ஹீத் ஜமாத் சார்பாக தெற்கு, வடக்கு, 500 பிளாட் பகுதி, கிழக்கு பகுதியில் காலை 07.00 மணியளவில் நடைபெறும் என்று […]
அங்கன்வாடி மையங்கள் மூலம் பிறந்தது முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக ஆதார் புகைப்படம் எடுக்கலாம்..
இராமநாதபுரம் மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் 11 வட்டாரங்களிலும் 22,605 முன்பருவ கல்வி குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இக்குழந்தைகளுக்கு வாரத்திற்கு 3 நாட்கள் வேகவைத்த முட்டை மற்றும் கலவை சாதம் வழங்கப்படுகிறது. முன்பருவ கல்வி அளிக்கப்படுகிறது. 6 மாதம் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு குழந்தைகளின் வளர்ச்சியை தெரிந்து கொள்ள மாதந்தோறும் அங்கன்வாடியில் எடை குறுக்காய்வு செய்யப்பட்டு, எடைக்குறைவான குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி கூடுதலாக இணை உணவு (சத்துருண்டை) வழங்கப்படுகிறது. ஆதார் புகைப்படம் பெரியவர்கள் மற்றும் […]
You must be logged in to post a comment.