கீழக்கரை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பணியிட மாற்றம்…

கீழக்கரை நகராட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிர மூர்த்திக்கு சென்னை தலைமை அலுவலகத்தில் (CMA) இன்று (10-11-2017)  பணியிட மாறுதல் உத்தரவு வந்ததை அடுத்து பணியிட மாற்றம் ஆகிறார். திண்ணாயிரமூர்த்தி கடந்த 6 வருட காலமாக பணியாற்றி வரும் நிலையில், இவர் மீது மக்கள் டீம் மற்றும் சில சமூக அமைப்புகள் இவர் தன்னுடைய பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்து வந்தார் என்று ஆட்சியரிடம் மனு கொடுத்ததும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. […]

கீழக்கரையில் திங்கள் கிழமை (13-11-2017) அன்று மின் தடை…

கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்புக்காக 13-11-2017, திங்கள் கிழமை அன்று காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த மின்தடை கீழக்கரை நகர் அனைத்து பகுதி, முகம்மது சதக் பாலிடெக்னிக், உத்திரகோச மங்கை, அலவாக்கரைவாடி, பாலையேந்தல், காஞ்சிரங்குடி பகுதி, தேரிருவேலி மற்றும் மோர்குளம் பகுதிகளில் மின் தடை இருக்கும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

சிறுபான்மையினர் கடன் பெறுவதற்கான முகாம் – வாய்ப்பை பயன்படுத்தவும்..

கீழக்கரை தாலூகா அலுவலகத்தில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பாக தகுதியுள்ளவர்களுக்கு சிறுதொழில்கள் செய்வதற்கான கடன் வழங்கும் முகாம் இன்று (25/10/2017) நடைபெறுகிறது. அரசு பட்டியலில் சிறுபான்மையினராக அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைவரும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த முகாமிற்கு செல்பவர்கள் தங்களுடைய முகவரி அடையாளங்களாகிய குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம், வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டை போன்றவற்றை எடுத்துச் சென்றால் நலம். மேலும்  இத்திட்டத்தின் மூலம் தையல் தொழிலுக்கான மிசின், சிறிய […]

கீழக்கரை நகராட்சி சார்பாக மீண்டும் நாய்கள் பிடிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது..

கீழக்கரையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ரயான் என்ற சிறுவன் நாய் கடித்து இறந்ததை தொடர்ந்து நகராட்சியால் நாய் பிடிக்கும் பணி துவங்கியது. பின்னர் சில வாரங்கள் கழித்து முழுமையடையாமலே பணிகள் நிறுத்தப்பட்டது. பின்னர் சில மாதங்களில் பெண்மணி ஒருவர் நாய்கடிக்கு ஆளானார். சில வாரங்களுக்கு முன்னர் வெறி நாய்களால் ஆடுகள் நாய்களால் குதறப்பட்டது. அதைத் தொடர்ந்து கீழக்கரை சமூக ஆர்வலர்கள் நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் புகார் மனுக்களை தொடுத்தனர். இந்நிலையில் இன்று (20-10-2017) முதல் மூன்று […]

நிலவேம்பு கசாயம் பற்றிய தவறான தகவல்கள் பரப்பும் நபர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது.. அரசு அதிகாரிகள் எச்சரிக்கை..

தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் அதை தடுக்கும் விதமாக அரசு அதிகாரிகளும்,  சமூக ஆர்வலர்களும் தன்னலம் பாராமல் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகிப்பதும்,  அதைப் பற்றிய விழிப்புணர்வு பிரசுங்களையும் மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத சில நபர்களால் சமூக வலைதளங்களில் நிலவேம்பு கசாயம் அருந்துவதால் மலட்டுதன்மை மற்றும் ஆண்மைக் குறைவு ஏற்படும் என்ற வகையில் எந்த அடிப்படை ஆதாரமம் இல்லாமல் பரப்பப்பட்டு வருகிறது.  இதனால் பயன் பெறக்கூடிய மக்களும் […]

கீழக்கரை அல் பைய்யினா மெட்ரிக் பள்ளியில் பெற்றோர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம்..

கீழக்கரை அல் பைய்யினா மெட்ரிக் பள்ளியில் வருகின்ற 21/10/17 அன்று மாலை 6.00 மணிக்கு “பெற்றோர்களுக்கான கவுன்சிலிங் மற்றும் கலந்துரையாடல் ” சிறப்பு பயிலரங்கம் நடைபெற உள்ளது.  இந்த கருத்தரங்கில் கீழ்கண்ட விசயம் கணினி ( POWER POINT PRESENTATIONS)  உதவியுடன் நவீன முறையில் விளக்கப்பட உள்ளது கருவுற்ற தாய்மார்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள். சேட்டை செய்யும் குழந்தைகளை கையாளும் முறைகள். பிள்ளைகளை படிப்பதற்கு ஆர்வமூடுத்தல். நல்ல விஷயங்களை சொல்லி கொடுக்கும் முறைகள். உங்கள் பிள்ளைகளை சிறந்த முறையில் வளர்க்க […]

பரவி வரும் டெங்கு காய்ச்சல்… களத்தில் மக்கள் நல பாதுகாப்பு கழகம்.. மூன்று நாட்களுக்கு நில வேம்பு கசாயம் தொடர் வினியோகம்..

கீழக்கரை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் சாமானியன் முதல் பொறியாளர் வரை டெங்குவால் பலி என்ற செய்தி வந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டு பலதரப்பில் எழுப்பபட்டாலும் தன்னார்வ நிறுவனங்களும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் தடுப்பு மருந்தான நிலவேம்பு கசாயமும் வினியோகித்த வண்ணம்தான் உள்ளனர். இதை தொடர்ந்து கீழக்கரையிலும் மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக நாளை (15-10-2017, ஞாயிறு) முதல் செவ்வாய் (18-10-2017) […]

புதிய கட்டடங்கள மற்றும் வரிவிதிப்பு செய்யாத கட்டிடங்கள் ஆய்வு செய்து வரி விதிப்பு.. கீழக்கரை நகராட்சி தீவிரம்…

கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 58 ஆயிரத்து 500 பேர் நகரில் வசித்து வருகின்றனர். கீழக்கரையில் கட்டடங்கள் புதியதாக கட்டப்பட்டு, வரிவிதிப்பு செய்யப்படாத நிலையில் உள்ளது. ஏற்கனவே கட்டப்பட்டு வரிவிதிப்பு செய்யப்பட்ட கட்டடங்கள் மற்றும் கூடுதலாக கட்டப்பட்ட கட்டடங்கள் ஆகியவற்றினை ஆய்வு செய்த வரிவிதிக்கும் செயலில்தீவிரமாக களம் இறங்கும் முயற்சியில் நகராட்சி நிர்வாகத்தினர் உள்ளனர். இது சம்பந்தமாக கீழக்கரை நகராட்சி கமிஷனர் எம்.ஆர்.வசந்தி கூறுகையில், வருகிற அக்., 31க்குள் நகராட்சி ஊழியர்கள், வருவாய் பிரிவு உதவியாளர்கள் […]

கீழக்கரையில் வியாழக்கிழமை (12-10-2017) அன்று மின் தடை…

கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்புக்காக 12-10-2017, வியாழக்கிழமை அன்று காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த மின்தடை கீழக்கரை நகர் அனைத்து பகுதி, முகம்மது சதக் பாலிடெக்னிக், உத்திரகோச மங்கை, அலவாக்கரைவாடி, பாலையேந்தல், காஞ்சிரங்குடி பகுதி, தேரிருவேலி மற்றும் மோர்குளம் பகுதிகளில் மின் தடை இருக்கும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

துபாயில் பேச்சாளர் பயிற்சி முகாம்..

ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கோ அல்லது குழுவுக்கோ தேவையான விசயத்தை எத்தி வைப்பதற்கு மிகவும் அவசியம் பேச்சு திறமை. நாம் சொல்ல கூடிய விசயத்தை சரியான முறையில் எடுத்துரைக்கவில்லை என்றால் கூற வேண்டிய கருத்துக்களே மாறிவிடும். இன்றைய நவீன உலகில் அதுவும் சமூக வலைதளங்கள் பெருகி வரும் வேளையில் சமூக அக்கரை கொண்ட ஒவ்வொரு மனிதனும் ஏதாவது தன்னால் இயன்றவற்றை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்ற முனைப்பிலேயே இருக்கிறான். ஆனால் ஆர்வம் உள்ள பலருக்கு பேச்சுதிறமை குறையாக […]

அவசர ரத்தம் தேவை…

****அவசரம் – O – Negative**** அவசரம் ஆபரேசனுக்காக O Negative ரத்தம் 4 யுனிட் தேவை.. *சத்யா மருத்துவனை, * இராமநாதபுரம். டாக்டர்.மீனாட்சி சுந்தரம்.. தொடர்புக்கு :- 095850 59572 *பதிவு நாள்:-28-09-2017. – IST. 5.45pm* Please share message in know groups

கீழக்கரை மக்கள் தாசில்தார் தமீம்ராசா பணியிடமாற்றம்..

கீழக்கரையில் பல அரசு அதிகாரிகள் பணிபுரிந்திருந்தாலும் தாசில்தார் மக்களின் அதிகாரியாக விளங்கினார் என்றால் மிகையாகாது. அந்த அளவிற்கு சாமானிய மக்களுடன் ஒன்றினைந்து மக்களுக்கான தேவைகளை செய்யக்கூடியவராக இருந்தார். கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் இலவச மனு எழுதும் மையம் அமைவதற்கும் மிக முக்கிய காரணியாக விளங்கியவர். சமீபத்தில் தகுதி அடிப்படையில் துணை வட்டாட்சியராக பதவி உயர்வுடன் சமூக பொருப்பு தாசில்தாராக கீழக்கரைக்கே நியமிக்கப்பட்டார். அதேபோல் சில மாதங்களுக்கு முன்னர் தகுதியற்றோர் அரசு உதவித் தொகை வாங்கி வருவதை ஆராய்ந்து, […]

அனைவரும் உம்ரா கடமையை எளிதாக நிறைவேற்ற உதவி புரியும் ரய்யான் உம்ரா திட்டம்..

இஸ்ஙாமியராக பிறந்த யாருக்கும் உம்ரா, ஹஜ் போன்ற கடமைகளை செய்ய ஆசை இல்லாமல் இருக்காது, ஆனால் மனம் நிறைய ஆசை உடைய மக்களுக்கு பொருளாதாரம் பெரும் தடையாக இருக்கும். இப்புனித கடமையை அனைவரும் எளிமையாக நிறைவேற்றும் பொருட்டு புதிய தவணை முறைத்திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் நவம்பர் 2017-லிருந்து அக்டோபர் 2018 வரை ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸின் கிளை அலுவலகங்களிலும், அங்கீகரிக்கபட்ட முகமைகளிலும் பிரதி மாதம் *ரூ.4,900* செலுத்தி, 10 மாதத் தொகை நிறைவடைந்தவுடன் […]

ஹிஜ்ரி ஆண்டு 1439 துவக்கம்-அமீரகத்தில் 21 செப் 2017 அன்று விடுமுறை

  அமீரகத்தில் ஹிஜ்ரி 1439 இஸ்லாமிய வருட பிறப்பை முன்னிட்டு வியாழன் (21.09.2017) அன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு துறைகளும் 24 செப்டம்பர் 2017 அன்று செயல்பட தொடங்கு. இது ஒரு நீண்ட விடுமுறை வாரமாக இருப்பதால் அமீரக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறைத்தூதர் (ஸல்) மக்காவை விட்டு மதினாவுக்கு ஹிஜ்ரத் (இடம் பெயர்தல்) செய்த ஆண்டிலிருந்து இஸ்லாமிய வருட பிறப்பு கணக்கிடப்படுகிறது. மேலும் இஸ்லாமிய வரலாற்றின் இது ஒரு சரித்திர […]

கீழக்கரையில் பெண்களுக்கான ஆலிமா வகுப்புகள் ஆரம்பம்..

கீழக்கரையில் சங்குவெட்டித் தெருவில் உள்ள மதரஸா அத் தர்பியத்துல் இஸ்லாமியா (நல்லொழுக்கப் பாடசாலை)வில் காயல்பட்டிண ஆயிஷா சித்திக்கா பெண் கல்லூரியின் பாடத் திட்டத்தின் படி அக் கல்லூரியின் முதல்வர் மௌலவி அப்துல் மஜித் மஹ்லரி மேற் பார்வையில் சிறந்த பெண் ஆசிரியர்களை கொண்டு ஆலிமா பாடத்திற்க்கான மாலை நேர வகுப்புகள் நடைபெறுகிறது. இவ்வகுப்புகள் மாலை 4 மணி முதல் சிறுவர்களுக்கு மஃக்தப் வகுப்புகளும், மாலை 5:30 மணி முதல் 6:30 பெண்களுக்கான 6 மாத பட்டயப்படிப்பு (Certificate […]

ஆலிம்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்திட்டம் அறிவிப்பு..

1ம் வகுப்பு முதல் 12ம் வரை படிக்கும் ஆலிம்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவி திட்டத்தை ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தை சென்னை பெரியமேட்டில், அரசு கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள இமாம்ஸ் கவுன்சில் அலுவலகத்தில் பெறலாம் அல்லது www.imamscounciltn.com என்ற இணைய தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். இதற்கான விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி நாள் 15-09-2017 ஆகும்.

கீழக்கரையில் செவ்வாய் கிழமை (12-09-2017) அன்று மின் தடை…

கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்புக்காக 12-09-2017, செவ்வாய்கிழமை அன்று காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என உதவி செயற்பொறியாளர் கங்காதரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த மின்தடை கீழக்கரை நகர் அனைத்து பகுதி, முகம்மது சதக் பாலிடெக்னிக், உத்திரகோச மங்கை, அலவாக்கரைவாடி, பாலையேந்தல், காஞ்சிரங்குடி பகுதி, தேரிருவேலி மற்றும் மோர்குளம் பகுதிகளில் மின் தடை இருக்கும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வேலையில்லா பட்டதாரிகளுக்கு சுய வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் ..

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேலையில்லா இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு ஒன்றை இந்தியன் ஓவர்சீஸ்வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் உருவாக்கியுள்ளது. இந்த பயிற்சி மையம் மூலம் (Refregeration and Air-conditioning) ஃபிரிட்ஜ் ஏர்கன்டிசன் சர்வீஸ் மற்றும் கேஸ் ஏற்றுதல் பயிற்சி இலவசமாக வழங்க இருக்கிறது. இப்பயிற்சி முகாம் வரும் (11-09-2017)திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.  இப்பயிற்சி காலம் 30 நாட்கள், மற்றும் பயிற்சிக்கான நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5மணிவரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயிற்சியின் முடிவில் […]

இன்டெர்நெட் வசதியுடன் அரசுப் பேருந்து..

தமிழ்நாடு அரசுப்பேருந்தில் முதல்முறையாக இலவச WIFI வசதியுடன் இராம்நாடு புறநகர் கிளையில் இயக்கப்படுகிறது. இந்த பேருந்து தினமும் மதியம் 2.20க்கு இராமநாதபுரத்திலிருந்து புறப்பட்டு மதுரை வழியாக தஞ்சாவூர் வரை இயக்கப்படுகிறது. இது அரசுப் பேருந்தின் புதிய முயற்சி எந்ந அளவுக்கு நடைமுறைப்படுத்த படுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விரைவில் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய கட்டுரைகள் தொடராக..

அறிவிப்பு….. நம் கீழை நியூஸ் இணையதளத்தில் பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலரும், பசுமை நடை இயக்கத்தின் அமைப்பாளருமாகிய, அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய கட்டுரைகள் தொடராக வெளி வர உள்ளது…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!