கீழக்கரை நகராட்சியில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியும், சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக பெறப்பட்ட ஆவணங்களின் படியும், கீழக்கரை நகராட்சியின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் பிரகாரமும், கீழக்கரை நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 47730 ஆகும். அதில் ஆண்கள் எண்ணிக்கை 25392 , பெண்கள் எண்ணிக்கை 22338. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள மறு வரையறை வார்டு பட்டியலில் கீழக்கரை நகராட்சியின் 2011 ஆம் ஆண்டைய மொத்த மக்கள் […]
Category: அறிவிப்புகள்
அறிவிப்புகள்
நகராட்சி வார்டுகளை மறுவரையறை செய்தது பற்றிய மக்கள் கருத்தும்..சட்டப் போராளிகள் குழுமம் ஒருங்கிணைப்பாளர் விளக்கமும்…ஒரு வீடியோ பதிவு..
கீழக்கரையில் கடந்த வாரம் வார்டுகள் மறுவரையறை செய்வதில் உண்டாகிய குழப்பத்தை நீக்க கோரி சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து குழப்படிகளை சீர் செய்ய மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து மறுவரையறை சம்பந்தமாக கருத்து தெரிவிக்க கூடுதல் நாட்களும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களிடம் இது சம்பந்தமாக கருத்து கேட்ட பொழுது, ஆச்சரியமளிக்கும் வகையில் அதன் பற்றிய விபரம் அறியாதவர்களாகவே இருந்தனர். பொதுமக்களும் விழிப்புணர்வு பெறும் வகையில் கீழக்கரை சட்டப்போராளிகள் குழும ஒருங்கிணைப்பாளர் […]
இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிளான கிராத் போட்டி..
கீழக்கரையில் வரும் 25, ஜனவரி – 2018 அன்று இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் சார்பாக 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகறுப்பு மாவட்ட அளவிளான கிராத் போட்டி நடத்தப்பட உள்ளது. இப்போட்டிக்கான பதிவுகளை 23/01/2018 தேதிக்கு முன்னர் நேரிலோ அல்லது பள்ளியின் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.
அமைதியான வாழ்கைக்கு வாழ்வியல் கண்காட்சி “அமைதியை நோக்கி”..
நவீன உலகில் இளைய சமுதயாம் உலக வாழ்கையில் கிடைக்கும் இன்பத்தில் திளைத்திருக்கும் இத்தருணத்தில், கீழக்கரையைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ஒன்று கூடி இவ்வுலகிற்கு பின்னாலும் நிரந்தரமான வாழ்க்கை உண்டு என்பதை உணர்ந்து மற்றவர்களும் அப்பலனை அடைய வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளது மிகவும் பாராட்டுதலுக்குரிய விசயம். அந்த முயற்சியின் வெளிப்பாடுதான் “அமைதியை நோக்கி” என்ற இஸ்லாமிய வாழ்வியல் கண்காட்சி. இக்கண்காட்சி கீழக்கரை ஹுசைனியா மஹாலில் வரும் ஜனவரி 19 மற்றும் 20ம் தேதி, காலை 09.00 மணி […]
கீழக்கரை வார்டு மறுவரையறை மக்களிடம் நேரடியாக கருத்து கேட்க இன்று (01.01.2018) கூட்டம் ஏற்பாடு..
கீழக்கரை நகராட்சி பகுதிகளிலுள்ள வார்டுகளை மறு வரையறை படுத்தியுள்ளது சம்பந்தமாக ஆட்சியர் சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டார். ஆனால் வெளியிட்ட நாள் முதல் பொதுமக்கள் மத்தியில் பல கருத்துக்களும், குழப்பங்களும் நிலவி வருகின்றது. இது சம்பந்தமாக கருத்துக்களை பொதுமக்கள் ஆட்சியர் கவனத்திற்கு 02-01-2018 வரை கொண்டு செல்லலாம் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மின்னஞ்சல் மூலமாக கருத்துக்களை பதிவு செய்தாலும், அரசாங்க அதிகாரிகளின் கவனத்தில், இருந்து விடுபட பல வாய்ப்பு உள்ளது. ஆகையால் மக்களின் குறைகளை […]
கீழக்கரை வார்டுகள் மறுவரையரையில் குளறுபடி, கீழக்கரை சட்டப்போராளிகள் குழுமம் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள் …
கடந்த சில தினங்களுக்கு முன்பு கீழக்கரையில் உள்ள வார்டுகள் மறுவரையறுக்கப்பட்டு அறிவிப்புகள் மாவட்ட ஆட்சியிரால் வெளியிடப்பட்டது. இது சம்பந்தமாக ஆட்சேபணைகள் இருந்தால் கீழக்கரை ஆணையரிடம் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தீர ஆராய்ந்த பொழுது அதில் பல குளறுபடிகள் இருப்பது கீழக்கரை சட்டப்போராளிகள் குழுமம் மூலம் கண்டறியப்பட்டு, ஆணையருக்கு மனு அளிக்கும்படி அவசர அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. சட்டப் போராளிகள் குழுமம் AWARNESS 001 விபரங்களுக்கு மேலே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்👆🏽 ஆணையருக்கு அனுப்ப வேண்டிய மனுவின் […]
வார்டுகளின் எல்லை மறுவரையறை உத்தேச பட்டியல் ராமநாதபுரத்தில் கலெக்டர் நடராஜன் வெளியிட்டார்…
ராமநாதபுரம் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக ஐகோர்ட்டு உத்தரவின்படி வார்டுகளின் எல்லை மறுவரையறை செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச பட்டியலை ராமநாதபுரத்தில் கலெக்டர் முனைவர் நடராஜன் வெளியிட்டார். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் வார்டு எல்லைகளை மறுவரையறை செய்து அதன் அடிப்படையில் தேர்தலை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாக கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள […]
கீழக்கரையிலும் அரபு நாட்டு புகழ் ஹிஜாமா மருத்துவ முகாம்..
கீழக்கரை மேலத்தெரு பல்லாக்கு ஒலியுல்லா தர்ஹா வளாகத்தில் மூன்று நாட்கள் ஹிஜாமா மருத்துவ முகாம் நடைபெறுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இம்முகாம் இன்று முதல் ஜனவரி 1ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகின்றன. ஹிஜாமா என்றால் என்ன? ஹிஜாமா (‘Hijama’ Arabic: حجامة lit. “sucking”) என்ற அரபி வார்த்தை hajm ‘(உறுஞ்சுதல்- Sucking) இருந்து பெறப்படுகிறது. கப் அல்லது கோப்பையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, பின்னர் நமது தோல் மேற்பரப்பில் வைத்து தூய்மையற்ற அல்லது கெட்ட […]
கீழக்கரையில் உலகத் தரத்தில் ஒரு கல்வி நிறுவனம் – SYNERGY INTERNATIONAL மற்றும் கடல் கடந்த பறவைகள் ஆவணப்படம் வெளியீடு…
இன்றைய நவீன உலகத்தில் “ஏட்டு சுரைக்காய் குழம்புக்கு ஆகாது” என்பது சொல் மொழி மட்டும்தான், ஆனால் நடைமுறை உலகில் கல்வியறிவு இல்லாதவருக்கு அனைத்துமே எட்டாக்கனி என்ற நிலையே உருவாகி வருகிறது. ஆனால் அதே சமயம் ஒரு சாமானிய மனிதன் உழைத்துக் கொண்டே தரமான கல்வி பயில வேண்டுமென்றால் அது ஒரு கானல் நீராகவே போய்விடுகிறது. ஆனால் அந்த நிலையை மாற்றி சாமானிய மனிதனும் உலகத்தரம் வாய்ந்த கல்வியை கீழக்கரை போன்ற நகரிலேயே அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற […]
கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மஹ்மூதா கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம் ..
சித்தார்கோட்டையில் வரும் 28-12-2017, வியாழன் மதியம் 02.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மஹ்மூதா கல்வி அறக்கட்டளையினர் இணைந்து பெண்களுக்கான புற்றுநோய் விழப்புணர்வு மருத்துவ முகாம் நடத்துகின்றார். இம்முகாம் சித்தார்கோட்டை மேனேஜர் ஹாஜி சீ.தாவூது மரைக்காயர் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் மருத்துவர் மருதம் கனகராஜ் மற்றும் கனகப்ரியா பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை ஆலோசனை வழங்க உள்ளார்கள். மேலும் இம்முகாமை டாக்டர் ஜெகதீஸ்வரன் சந்திரபோஸ் […]
மனித நேயத்திற்கு உருவம் கொடுக்கும் ரோட்டரி சங்கம்…
உலகில் சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்படும் பல்வேறு அமைப்புகள் உண்டு, ஆனால் அதில் என்றுமே முன்னிலை வகிப்பது ரோட்டரி கிளப் என்றால் மிகையாகாது. ஊனமுற்றவர்களும் சமூகத்தில் சாதாரண மனிதர்களைப் போல் அன்றாட செயல்களில் ஈடுபடும் வகையில், கை மற்றும் கால்களில் உடல் ஊனமுற்றோர்களை கண்டறிந்து, அவர்களுக்கு செயற்கை உபகரணங்கள் பொருத்த முடியும் என்ற நிலையில் அந்த உதவியை செய்ய முன் வந்துள்ளார்கள் ரோட்டரி சங்கத்தினர். இம்முறைக்கான மருத்துவம் பெங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் இம்மருத்துவத்துக்கு தேர்வானவர்களை […]
கீழக்கரையில் 17-12-2017 அன்று சக்கரை நோயாளிகளுக்கான மாபெரும் பரிசோதனை முகாம்..
கீழக்கரையில் 17-12-2017 அன்று தங்கமயில் ஜுவல்லரி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து சக்கரை நோயாளிகளுக்கான நோய் பரிசோதனை மற்றும் கண்விழித்திரை பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த முகாம் கீழக்கரை கைரத்துல் ஜலாலியா பள்ளி வளாகத்தில் காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ——————————————————————————-
கீழக்கரையில் 20/12/2017 அன்று இரத்த தான விழிப்புணர்வு கருத்தரங்கு..
கீழக்கரையில் வரும் 20/12/2017 அன்று முகம்மது சதக் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இரத்த தான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்த முகாமுடன் இரத்த தானம் பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய நவீன உலகில் எத்தனையோ அறிவியல் முன்னேற்றங்கள் அடைந்தாலும் இரத்த தானம் பற்றிய ஒரு தவறான கண்ணோட்டமே படித்தவர் முதல் பாமரர் வரையில் உள்ளது. இரத்த தானம் செய்வதால் உடல் நிலை பலவீனமாகி விடும் அல்லது தொற்று நோய்கள் வந்து விடும் என்பது போல […]
இராமநாதபுரம் எக்குடியில் பெண்கள் மதரஸா திறப்பு விழா..
இராமநாதபுரம் மாவட்டம் எக்குடியில் 22-12-2017 (வெள்ளிக்கிழமை) மாலை 04.00 மணிக்கு பிறகு எக்குடி ஜும்ஆ பள்ளி வளாகத்தில் அன்னை ஆயிஷா(ரலி) பெண்கள் மதரஸா திறக்கப்பட உள்ளது. இத்திறப்பு விழாவில் தமிழகத்ததைச் சார்ந்த பல சிறந்த மார்க்க அறிஞர்களும், பெரியோர்களும் மார்க்க உரை ஆற்றவுள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது. இவ்விழாவுக்கு எக்குடி ஜமாத் தலைவர் அப்துல் காதர் தலைமை வகிக்கிறார். நிகழ்ச்சியின் சிறப்புரையை தேவிபட்டினம் தாருல் உலூம் ஹக்கானியா தலைவர் முஹம்மது காசிம் மற்றும் நிஸ்வான் துறை மேலாளர் முஹம்மது […]
கீழக்கரையில் நாளை – வியாழக்கிழமை (07-12-2017) மின் தடை…
கீழக்கரை உப மின் நிலையத்தில் நாளை – டிசம்பர் 07 வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும். இந்த மின்தடை கீழக்கரை நகர் அனைத்து பகுதி, முகம்மது சதக் பாலிடெக்னிக், உத்திரகோச மங்கை, அலவாக்கரைவாடி, பாலையேந்தல், காஞ்சிரங்குடி பகுதி, தேரிருவேலி மற்றும் மோர்குளம் பகுதிகளில் மின் தடை இருக்கும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
நவீன உலகத்தில் உணவகத்திலும் புதுமை.. உணவகத்தில் இலவச இன்டெர்நெட்.. Meet & Eat.. கீழை நகரில் உதயமாகிறது…
நவீன உலகத்தில் எல்லாம் புதுமை. நாம் அன்றாட செய்யும் செயல்களில் இருந்து உண்ணும் உணவில் தொடங்கி வியாபாரம் புதுமை புகுந்த வண்ணம் உள்ளது. இன்றைய உலகமே இன்டெர்நெட்டை மையமாக கொண்டுதான் இயங்கி வருகிறது. அந்த அடிப்படையில் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் நாளை கீழக்கரை சீனி அப்பா வணிக வளாகத்தில் திறக்கப்பட இருக்கும் “ Meet & Eat Chat House” எனும் உணவகத்தில் உணவருந்த வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவச இன்டெர்நெட் வசதி செய்துள்ளார்கள். மேலும் இந்த உணவகத்தில் […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை…
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 3ம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரபு அமீரகத்தில் ரபியுல் அவ்வல் மாதத்தில் இறைத்தூதர் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடவது வழக்கம், அதனையொட்டி நவம்பர் மாதம் 30ம் தேதியும், அரபு அமீரகத்தின் தேசிய தினம் டிசம்பர் 2ம் தேதி சனிக்கிழமை வருவதால் அரசாங்க ஊழியர்களுக்கு டிசம்பர் 3ம் தேதியும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு டிசம்பர் 2 வரை […]
புதிய கமுதி மாவட்டம் – 25/11/2017, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அறிவிப்பு???
கடந்த 28-08-2015 அன்று நடைபெற்ற தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க செயற்குழுவில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், திருச்சுழி மற்றும் புதிதாக தோற்றுவிக்க கோரியுள்ள பார்த்திபனூர் வட்டங்களை இணைத்து புதிய மாவட்டம் உருவாக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதே போல் பரமக்குடி வட்டத்தினை பிரித்து பார்த்திபனூர், நயினார் கோயில் வட்டங்களாக பிரிப்பது என்றும், திருவாடனையை பிரித்து ஆர்.எஸ் மங்கலம் வட்டம் உருவாக்குதல் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை ஏதும் இல்லாமலே இருந்து வந்தது. […]
கீழக்கரையில் புதியதோர் பல் மருத்துவமனை – 23 நவம்பர் துவக்கம்..
கீழக்கரையில் வரும் நவம்பர் 23ம் தேதி (வியாழக்கிழமை) முஸ்லிம் பஜார் பகுதியில் கீழக்கரை பல் மருத்துவமனை (KILAKARAI Dental Clinic – A Multispeciality Dental Clinic) திறக்ப்படுகிறது. இம்மருத்துவமனையில் சிறியவர் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் மருத்துவம் செய்யக்கூடிய அளவில் அனைத்து நவீன வசதிகளுடன் ஆரம்பம் செய்யப்படுகிறது. மேலும் இங்கு பல் மருத்துவத்துறையில் அனுபவம் வாய்ந்த பல மருத்துவர்கள் இங்கு சேவை செய்ய உள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.
இந்தியாவில் இஸ்லாமிய வங்கி கோரிக்கை நிராகரிப்பு.
இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகள் அறிமுகப்படுத்துவதற்காக வைத்துள்ள கோரிக்கையை ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. வங்கி மற்றும் நிதி சேவைகள் சமமாகவும்,விரிவாகவும் அனைத்து குடிமக்கள் அடையும் வகையில் அமைத்து இருப்பதால் இஸ்லாமிய வங்கி கோரிக்கையை செயல்படுத்த போவதில்லை என்று தகவல் அறியும் சட்டத்தின் (RTI) கீழ் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (PTI) சார்பாக செய்யப்பட்ட மனுவிற்கு மத்திய ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது. இது குறித்து இந்தியன் இஸ்லாமிக் பைனான்ஸ் செண்டரின் (ICFC) […]
You must be logged in to post a comment.