கீழக்கரையும் வாலிபால் போட்டியும், கீழக்கரை கலாச்சாரத்துடன் ஊறிப்போனது என்றால் மிகையாது. அந்த அளவுக்கு ஒவ்வொரு தெருவிலும் அணிகள் உண்டு. அதே போல் மாநில அளவு போட்டிகள் என்றால் எல்லா தெரு வீரர்களும் இணைந்து விளையாடி கோப்பைகளையும் வென்று வருவார்கள். ஜதீத் கிளப் தொடங்கி 25ம் வருட வெள்ளி விழாவை முன்னிட்டு வரும் பிப்ரவரி 17 மற்றும் 18 தேதிகளில் கீழக்கரை வடக்குத் தெரு அல்ஜதீத் வாலிபால் கிளப் சார்பாக மாநில அளவிளான போட்டி, வடக்குத் தெருவில் உள்ள […]
Category: அறிவிப்புகள்
அறிவிப்புகள்
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (08.02.2018) நடைபெறுகிறது.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை (08.02.20180 காலை 10 மணியளவில் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண்பதற்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு அலுவலகம் வாயிலாக மாவட்ட ஆட்சியர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்திற்கு வருகை தரும் மாற்றுத் திறனாளிகள் தங்களது குறைகளை எழுத்துப்பூர்வமாகவோ அல்லது நேரடியாகவோ உரிய ஆவணங்களுடன் அதிகாரிகளை சந்த்தித்து தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். மேலும் மாற்று […]
கீழக்கரை நகராட்சியின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில், சட்டத்திற்கு புறம்பாக அதிரடியாக திருத்தப்பட்ட நகராட்சி ‘மக்கள் தொகை’ – நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க ‘சட்டப் போராளிகள்’ முடிவு
கீழக்கரை நகராட்சியில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாக கொண்டு, வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து இருந்தனர். ஆனால் அவசர கோலத்தில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருந்த நகராட்சி மறுவரையறை பட்டியலில் குறிப்பிடப்பட்டு இருந்த 2011 ஆம் ஆண்டின் கீழக்கரை மொத்த மக்கள் தொகைக்கும், தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கடந்த 2013 ஆம் ஆண்டு பெறப்பட்டிருந்த கீழக்கரை நகராட்சியின் மொத்த மக்கள் தொகைக்கும் ஏறத்தாழ 10000 வித்தியாசம் இருந்தது. ஆனால் தகவல் அறியும் […]
பொது நலன் கருதி மருத்துவமனை.. சாதித்து காட்டும் கீழக்கரை தொழில் அதிபர்.. இரவு நேர மருத்துவமனை ஒரு முன்னுதாரணம்..
கீழக்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள். அதே போல் பல மருத்துவர்கள் இருந்தாலும் இரவு நேரங்களில் மருத்துவத்துக்கு மக்கள் அல்லாடும் நிலையே உள்ளது. அரசு மருத்துவமனை இருந்தும், நிரப்பப் பட வேண்டிய பணியிடங்களை நிரப்பவே மக்கள் சட்ட ரீதியாக போராடும் நிலையே உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் உள்ளூரிலும், வெளிநாட்டிலும் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்துள்ள கீழக்கரை தொழிலதிபர் பி எஸ் எம் ஹபீபுல்லா கீழக்கரையில் எளிய மக்களுக்காக சேவை மனப்பான்மையுடன் இரவிலும் […]
வார்டு மறுவரையறை பட்டியல் குளறுபடி குறித்து கருத்து கேட்பு கூட்டம் மதுரையில் ‘பிப்ரவரி 6’ நடைபெறுகிறது – மனுதாரர் அனைவரும் பங்கேற்க கீழக்கரை சட்டப் போராளிகள் அழைப்பு
கீழக்கரை நகராட்சியில் வார்டு மறு வரையறை பட்டியல் தயாரிக்கப்பட்டதில் பல்வேறு குளறுபடிகளை நகராட்சி ஆணையாளர் மற்றும் இளநிலை ஊழியர்கள் செய்துள்ளனர். இந்த குளறுபடியான வார்டு மறுவரையரை பட்டியலை உடனடியாக திரும்ப பெற கோருதல் சம்பந்தமாக, கீழக்கரையில் அனைத்து கட்சி கூட்டம் கடந்த 01.01.2018 அன்று ஹுசைனியா மஹாலில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கீழக்கரை நகரை சேர்ந்த பொதுநல அமைப்பினர், சமுதாய இயக்கத்தினர், ஜமாத்தினர், அரசியல் கட்சியினர் 02.01.2018 அன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து குளறுபடியான […]
கீழைநியூஸ் அறிவித்திருந்த கட்டுரைப் போட்டி இறுதி தேதி பிப்ரவரி 15வரை நீடிப்பு..
கீழைநியூஸ் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்கான கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டு 31 ஜனவரி 2018 கடைசி நாளாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. பல மாணவிகள் தங்களுடைய படைப்புகளை அனுப்பியுள்ள நிலையில் அரையாண்டு விடுமுறை மற்றும் சமீபத்திய அரசாங்க விடுமுறையை கருத்தில் கொண்டு நீட்டிக்குமாறு பல அன்பர்களிடம் இருந்து வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சமர்பிக்க வேண்டிய இறுதி தேதி 15 பிப்ரவரி 2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. katturaipotti commonN
நினைவூட்டல் – நாளை (28-01-2018)போலியோ சொட்டு மருந்து முகாம்…
குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து ஜனவரி 28 மற்றும் ஃபிப்ரவரி 11ம் தேதிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளி வளாகங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை இலவசமாக வழங்கப்படும். ஏற்கனவே ஜனவரி 19 மற்றும் பிப்ரவரி 23ம் தேதி என அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்டது குறிப்பிடதக்கது. https://keelainews.in/2018/01/19/date-change/
சென்னையில் SYNERGY INTERNATIONAL குழுமத்தின் கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா மற்றும் வியாபார முதலீடு சம்பந்தமான கலந்துரையாடல்..
சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் SYNERGY INTERNATIONAL GROUP OF COMPANY, கல்வித் துறைச் சார்ந்த பணிகள் மற்றும் ஹஜ், உம்ரா போன்ற சேவைகளும் செய்து வருகின்றனர். சமீபத்தில் கீழக்கரையிலும் இந்நிறுவனத்திற்கான கிளை ஆரம்பம் செய்யப்பட்டது. இந்நிறுவனம் சார்பாக தமிழகம் தழுவிய மாபெரும் கட்டுரைப்போட்டி சமீபத்தில் அறிவிக்கப்பட்டு, அப்போட்டியில் நூற்று கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கும் விழா வரும் ஜனவரி 30ம் தேதி, சென்னை எழும்பூரில் […]
இராமநாதபுரத்தில் “சாதித்துக் காட்டுவோம்” சிறப்பு பயிற்சி முகாம்..
இராமநாதபுரத்தில் வரும் 26-01-2018 வெள்ளிக்கிழமை அன்று சாதித்து காட்டுவோம் என்ற மாணவர்களுக்கான சிறப்பு பயிறிசி முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் இராமநாதபுரம் ஹாஜா மஹாலில் நடைபெற உள்ளது. இம்முகாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் தெற்கு மாவட்ட மாணவரணி சார்பாக நடத்தப்படுகிறது. இம்முகாமில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கம் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?? தேர்வை பயமின்றி எதிர்கொள்வது எப்படி? தேர்வுக்கு தயார் […]
கீழக்கரை காவல் துறையுடன் பொது நல அமைப்புகள் இணைந்து நாளை நடத்தும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து தடுப்பு நிகழ்ச்சியில் ADSP வெள்ளத்துரை சிறப்புரை..
கீழக்கரை நகரில் கடந்த சில ஆண்டுகளாக வாகன போக்குவரத்து நெரிசல் சொல்லொண்ணா துயரத்தை பொதுமக்களுக்கு தந்து வருகிறது. கீழக்கரையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வாகன பெருக்கத்தால் சாலைகள் முழுமையும் எந்நேரமும் வாகனங்கள் நிரம்பி இருக்கிறது. போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்படும் வாகன ஓட்டிகளால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணாக்கர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுவர்களால் இயக்கப்படும் இரு சக்கர வாகனங்களால் தொடர்ந்து உயிரிழப்புகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. இது சம்பந்தமாக கீழக்கரை காவல் துறையுடன் பொது […]
கீழக்கரை தெற்கு தவ்ஹீத் ஜமாத் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் இரத்த தான முகாம்…
கீழக்கரையில் 27-01-2018 (சனிக்கிழமை) அன்று 69வது குடியரசு தினத்தை முன்னிட்டு கீழக்கரை தெற்கு கிளை தவ்ஹீத் ஜமாத் மற்றும் அரசு மருத்துவமனையும் இணைந்து 3வது மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் காலை 10.00 முதல் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்மருத்துவ முகாமை காவல் துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி துவக்கி வைக்க உள்ளார்.
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை இயக்கத்தின் மக்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்க விழா..
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை திடல் திட்டத்தின் கீழ் யோகா & சிலம்பம் இலவச பயிற்சி வகுப்பு துவக்கவிழா 28-01-2018 அன்று காலை 11 மணி அளவில் இராமலிங்கா யோகா சென்டர், FSM மால் பின்புறம், இரயில்வே கேட் அருகில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியின் நோக்கம் திறமைவாய்ந்த பயிற்சியாளர்களால் யோகா, சிலம்பம் போன்ற தமிழக பாரம்பரிய விளையாட்டுக்கு பயிற்சி அளித்து மாவட்ட ,மாநில அளவில் தடம் பதிக்கவைத்தல் ஆகும். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் […]
நாளை (20-01-2018) பள்ளிகளுக்கான மணிசட்டம் (Abacus) போட்டி..
ஏ மாஸ் ( amas – Abacus Mental Arithmetic System) என்பது அபாகஸ் மன கணித அமைப்பு என்பதாகும். நான்கு வயதில் இருந்தே குழந்தைகளின் அறிவாற்றலை பன்மடங்கு பெருக்குகிறது. அபாகஸ் ( மணிச் சட்டம்) எனும் கருவியின் மூலம் கூட்டல் ,கழித்தல், பெருக்கல் , வகுத்தல் கணக்குகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாளை (20/1/2018) கீழக்கரை Pearl matric Hr. Sec school_ல் மாவட்ட அளவிலான இரண்டாவது அபாகஸ் போட்டி தேர்வு நடைபெற உள்ளது. இதில் […]
போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி மாற்றம்…
தமிழகம் முழுவதும் போலீயோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 19, பிப்ரவரி 23 நடைபெறும் என முதலில் விளம்பரப்படுத்தப்பட்டது. அதன் தொடர்பாக பல சமூக வலை தளங்கள் மற்றும் இணையதளங்களில் அறிவிப்பும் வெளியானது. கீழக்கரை நகர் பகுதிகளில் பலர் முகாம் நடைபெறும் இடங்களுக்கு சிறுவர் சிறுமியரை அழைத்து சென்று முகாம் நடைபெறவில்லை என பெற்றோர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். இது குறித்து திருப்புல்லாணி சுகாதார ஆய்வாளர் செல்லக் கண்ணு கூறுகையில் ” சில அரசாங்க அலுவல்கள் […]
மக்கள் நீதி மன்றம் மூலம் ஏழை மக்களுக்கு உடனடி தீர்வு – இலவச சட்ட உதவிகள் வழங்கி தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சிறப்பான சேவை – வீடியோ விளக்கத்துடன்..
நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகள், சமரசம் ஏற்படக் கூடிய வழக்குகள் உள்பட பல்வேறு வகையான வழக்குகளுக்கு மக்கள் நீதி மன்றம் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் மாதந்தோறும், சட்ட உதவி முகாம்கள் நடத்தப்பட்டு, ஏழை-எளிய மக்களுக்கு கட்டணமின்றி வழக்குகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மக்கள் நீதி மன்றம் அழைக்கப்படும் லோக் அதாலத், தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலகம், எழும்பூர், […]
ஜனவரி 19 மற்றும் ஃபிப்ரவரி 23 போலியோ சொட்டு மருந்து வழங்கும் நாட்கள்…
குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து ஜனவரி 19 மற்றும் ஃபிப்ரவரி 23ம் தேதிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளி வளாகங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை இலவசமாக வழங்கப்படும்.
கீழக்கரையில் ”தஃவா குழு” சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம்..
அவசரமான உலகில் நம் பிறப்பின் அவசியமும், அர்த்தமும் தெரியாமல் தறிகெட்ட குதிரை போலவே ஒவ்வொருவருடைய எண்ணங்களும், செயல்களும் திசை மாறி சென்று கொண்டிருக்கிறது. இன்றைய நவீன உலகில் இஸ்லாமிய சமுதாயமோ மறுமை வாழ்கை என்ற நினைப்பை மறந்தவர்களாக இம்மை வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் திருமறை குர்ஆன் “நன்மையை ஏவி தீமையை அழிக்கட்டும்” என்று வலியுறுத்துவது போல் ஒரு பிரிவினர் இத்தனை பரபரப்புக்கு இடையிலும் மார்க்கத்தை எத்தி வைக்கும் பணியை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் […]
கீழக்கரை தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் போராட்டம்…
கீழக்கரை தாலூகாவுக்கு உட்பட்ட VAO – Village Administrative Officer எனும் கிராம நிர்வாக அலுவலர்கள் தாலூகா அலுவலகத்தில் இன்றிலிருந்து போராட்டம் அறிவித்துள்ளனர். கீழக்கரை தாலுகா மொத்தம் 18 கிராம நிர்வாக அலுவலர்களை உள்ளடக்கியதாகும். இவர்கள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் இன்று (08-01-2018) இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டம் நடத்துகின்றனர். பின்னர் 10ம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், 18 ம் தேதியிலிருந்து தொடர்ந்து வேலை புறக்கணிப்பு போராட்டம் நடத்தவும் […]
15-01-2018 அன்று மக்கள் பாதை சார்பாக உச்சிநத்தம் சூரங்குடி அருகே சமத்துவ பொங்கல்..
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிநத்தம், சூரங்குடி அருகே உள்ள அப்துல் கலாம் கலையரங்கில் நேர்மையாளர் உ.சகாயம் IAS வழிகாட்டுதலில் இயங்கும் மக்கள் பாதை சார்பாக சமத்துவ பொங்கல் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை ப்ரண்டஸ் சர்வீஸ் கிளப், கலாம் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் குருதி கொடை முகாம் (Blood Donation Camp), மரக்கன்றுகள் நடுதல், மக்கள் பாதையின் திட்ட விளக்கக்கூட்டம் ஆகியவை நடைபெற உள்ளன. இந்நிகழ்வில் மாணவர்கள், இளைஞர்கள் , தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் […]
கீழக்கரை மோகன் எலெக்ட்ரானிக்ஸ் சிறந்த விற்பனையாளராக தேர்வு..
2017ம் ஆண்டுக்கான சிறந்த விற்பனை முகவராக கீழக்கரை மோகன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் என சன் டைரக்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான STAR PERFORMER OF THE YEAR என்ற விருதை சன் டைரக்ட் விற்பனையாளர் SAK COMMUNICATION, உரிமையாளர் அமீர்கான், மோகன் எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் மோகனிடம் வழங்கினார். மேலும் மோகன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை கவுரவிக்கும் வகையில் தங்க மோதிரமும் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சன் டைரக்ட் பிரதிநிதிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.