கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாக நடைபெற இருக்கும் மார்க்க விளக்க சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை KECT சார்பாக மார்க்க விளக்க சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி எதிர்வரும் 20.04.2018 தேதியன்று வெள்ளிக்கிழமை புதுக் கிழக்குத் தெருவில் இருக்கும் மஸ்ஜிதுத் தக்வா பள்ளி திடலில் நடை பெற இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில் ‘முன் மாதிரி இஸ்லாமிய குடும்பம்’ என்கிற தலைப்பில் தொண்டி அல் மதரஸத்துல் அஷ்ரபியா முதல்வர் நிலாமுதீன் ஆலீமும், ‘நபி வழியை அறிந்து நடப்போம்’ என்கிற தலைப்பில் இஸ்லாமிய அழைப்பாளர் அப்பாஸ் அலி […]

கீழக்கரை நகர் நல இயக்கம் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்தும் உதடு, அண்ணம் பிளவுபட்டோருக்கான இலவச மருத்துவ முகாம்

இராமநாதபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையுடன் கீழக்கரை நகர் நல இயக்கம் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்தும் உதடு / உள் அண்ணம் பிளவுபட்டோருக்கான இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் 10 ஆம் தேதியன்று (10.04.2018) பார்திபனூர் கீழத்தூவல், சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 11 ஆம் தேதியன்று (11.04.2018) தங்கச்சி மடம், வெளிப்பட்டினம் தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடை பெற உள்ளது. இது குறித்து […]

‘ஏப்ரல் 8′- சென்னையில் நடைபெற உள்ள முஸ்லீம் மாணவர்கள் சந்திப்பு’ நிகழ்ச்சியில் தமிழகத்தின் தலை சிறந்த ஆளுமைகள் பங்கேற்பு

இஸ்லாமிய மாணவர்களுக்கான மாபெரும் நிகழ்ச்சியாக ‘MUSLIM STUDENTS MEET’ என்கிற பெயரில் எதிர்வரும் ‘ஏப்ரல் 8’ அன்று சென்னை CRESCENT B.S.ABDUR RAHMAN பல்கலைக்கழகத்தின் உள் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. கல்வியில் உயர்வடைதல், தொழில் முனைவோர்களை உருவாக்குதல், ஊடகத் துறையில் மேம்பாடு அடைதல், இஸ்லாமிய மார்க்க அழைப்பில் முன்னேறுதல் உள்ளிட்ட சிறப்பான அடிப்படை கருத்து உருவாக்கங்களோடு இளைய சமுதாயத்தினருக்கு ஒற்றுமையின் வலிமையை வலியுறுத்தி இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் தலை சிறந்த ஆளுமைகள் பலர் கலந்து கொண்டு […]

விடுதலைப் போராட்ட வீரர் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் பிறந்த தின கொண்டாட்டம்..

விடுதலைப் போராட்ட வீரர் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு இனறு (30.03.2018) தமிழ்நாடு அரசின்சார்பாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் 259 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் […]

தொடர் வங்கி விடுமுறை நாளையொட்டி அனல் பறக்கும் ஆன்லைன் மோசடி – கீழக்கரை பகுதி பொதுமக்கள் உஷார்

மஹாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, சனி ஞாயிறு அரசு விடுமுறை தினங்களையொட்டி ‘வங்கி தொடர் விடுமுறைகள்’ இன்று முதல் துவங்கி இருக்கிறது. இந்நிலையில் இன்று (29.03.2018) கீழக்கரை பகுதியில் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் பலருக்கு தொலைபேசி வாயிலாக பேசும் மர்ம ஆசாமிகள் தாங்கள் வங்கியில் இருந்து பேசுவதாகவும், தங்கள் வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களை ரெனீவல் செய்ய வேண்டி இருப்பதாகவும் கூறி வங்கி ATM இரகசிய தகவல்களை கேட்டறிந்து வருகின்றனர். அவ்வாறு பெறப்படும் தகவல்களை கொண்டு மர்ம ஆசாமிகள், […]

கீழை நியூஸ் கீழக்கரை ‘சட்டப் போராளிகள்’ சார்பாக நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு

அரசுத் துறை அலுவலகங்களில் ஊழல் மற்றும் இலஞ்சத்தை ஒழிக்கவும், அரசு ஊழியர்கள் பொறுப்புணர்வோடும், ஆவங்களில் வெளிப்படை தன்மையோடும் செய்யப்படுவதற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் பேருதவி புரிந்து நீதியை நிறுத்த சாமானியர்களுக்கு உதவுகிறது. இந்த சட்டத்தின்படி பிரகாரம் அரசுத் துறையினரிடம் சாமானியர்கள் எவ்வாறு கேள்விகளை கேட்டு தகவல்களை பெறுவது ? அதற்கு உரிய வழிமுறைகள் என்ன.? சட்ட ரீதியாக அதிகாரிகளை எப்படி சிக்க வைப்பது ? உள்ளிட்ட விஷயங்களை சாமானியர்களுக்கு சட்ட பயிற்சி வகுப்பு நிகழ்ச்சி மூலம் […]

கீழக்கரை மக்கள் அமைதியும், ஒற்றுமையும் காக்க நாம் தமிழர் கட்சி அறிக்கை…

கீழக்கரையில் சில நாட்களுக்கு முன்பு அனைத்து சமுதாய மக்களும் வருங்காலத்தில் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்று ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அன்று நடைபெற்ற இராம இராஜ்ஜிய ரத முற்றுகை போராட்ட்ததை சிலர் மத சாயம் பூசுவதையும் ,தேவைற்ற செயல் என்பதுபோல் விமர்சிப்பதை காணமுடிந்தது, இதனால் ஒற்றுமையுடன் செயல்பட்ட பிற சமுதாய மக்களிடையே மனக் கசப்புகள் ஏற்பட வாய்ப்பாக அமைந்து வருகிறது. இது சம்பந்தமாக கீழக்கரை நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இந்த […]

கீழக்கரை இஸ்லாமியக் கல்வி சங்கம் (AIE) தேர்வு முடிவுகள் வெளியீடு – மதரஸா மாணவர்கள் மகிழ்ச்சி 

கீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்க நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் அல் மத்ரஸத்துர் ராழியா மற்றும் அல் மத்ரஸத்துல் அஸ்ஹரிய்யா ஆகிய மத்ரஸா மாணவர்களுக்கு நடத்தப்பட்ட அரையாண்டு தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் குறித்த அட்டவணை மத்ரஸா அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்தது. அதனை மத்ரஸா மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடந்த 17/02/208 முதல் 28/02/2018 வரை நடைபெற்ற அரையாண்டு தேர்வில் இஸ்லாமிய கொள்கை, தொழுகை முறை, பிரார்த்தனை, […]

கீழக்கரையில் குரங்குகளை பிடிக்க கூண்டுகள் தயார் – வனத் துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர ‘சட்டப் போராளிகள்’ வேண்டுகோள்

கீழக்கரையில் சமீப காலமாக காட்டுக் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கீழக்கரை நகரில் மரங்கள் அடர்ந்த பகுதி இல்லாததால் கூட்டமாக திரியும் இந்த குரங்குகள் கூட்டம் நெருக்கமாக கட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்குள் புகுந்து அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருள்களை சூறையாடி வருகிறது. மேலும் கைக் குழந்தைகளும், பள்ளி செல்லும் சிறுவர்களும் தாவித் திரியும் இந்த குரங்குகளை கண்டு அஞ்சி நடுங்கி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூராக இருக்கும் காட்டு குரங்குக்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் […]

‘மார்ச் 26’ – கேஸ் சிலிண்டர் வினியோகம் குறித்த ‘குறை தீர்க்கும் கூட்டம்’ – பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்க ‘சட்டப் போராளிகள்’ வேண்டுகோள்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்வரும் ‘மார்ச் 26’ திங்கள் கிழமையன்று மாலை 5.15 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற இருக்கும் கேஸ் சிலிண்டர் வினியோகம் தொடர்பான குறை தீர்க்கும் கூட்டத்தில் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து தீர்வு பெற்று கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தாலுகாக்களான இராமேஸ்வரம், திருவாடானை, கீழக்கரை, பரமக்குடி, கமுதி, […]

‘மார்ச் 25’ – கீழை நியூஸ் கீழக்கரை சட்டப் போராளிகள் நடத்தும் ‘தகவல் அறியும் உரிமை சட்டம்’ பயிற்சி வகுப்பு – நீங்கள் முன் பதிவு செய்து விட்டீர்களா..?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 மூலமாக எந்த ஒரு அரசாங்க அதிகாரியிடமிருந்தும், நமக்கு தேவைப்படும் தகவலை அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பது நம்மில் இன்னும் எத்தனை பேருக்குத் தெரியும்..? ஊழலை தடுத்து நிறுத்துவதற்கும், ஆளப்படுகிறவர்களுக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி அனைத்து குடிமகன்களும் தகவல் பெறும் உரிமை உடையவராவர். எந்த குடிமகன்களும் தகவல் கேட்கலாம். காரணங்கள் கூறத் […]

‘ஏப்ரல் 8’- சென்னை கிரஸண்ட் கல்லூரியில் நடைபெற இருக்கும் ‘முஸ்லீம் மாணவர்கள் சந்திப்பு’ நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு

இஸ்லாமிய மாணவர்களுக்கான மாபெரும் நிகழ்ச்சியாக ‘MUSLIM STUDENTS MEET’ என்கிற பெயரில் எதிர்வரும் ‘ஏப்ரல் 8’ அன்று சென்னை CRESCENT B.S.ABDUR RAHMAN பல்கலைக்கழகத்தின் உள் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளும் விதமாக உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கும் இந்நிகழ்ச்சிக்கான அழைப்பு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. கல்வியில் உயர்வடைதல், தொழில் முனைவோர்களை உருவாக்குதல், ஊடகத் துறையில் மேம்பாடு அடைதல், இஸ்லாமிய மார்க்க அழைப்பில் முன்னேறுதல் உள்ளிட்ட சிறப்பான அடிப்படை கருத்து உருவாக்கங்களோடு இளைய சமுதாயத்தினருக்கு ஒற்றுமையின் வலிமையை […]

பாதுகாப்பு மையக்கட்டடம்,காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கல்பார் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக பல்நோக்கு பாதுகாப்பு மையக்கட்டடத்தை காணொளி காட்சி மூலமாக தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி திறந்து வைத்தார். கீழக்கரை நகராட்சி அலுவலக கட்டிடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட வருவாய் கோட்டச்சியர் சுமன், கீழக்கரை தாசில்தார் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸ் (KEELAI MEDIA & ADVERTISEMENT PVT. LTD) நிறுவனத்திற்கு புதிய சட்ட இயக்குநர் நியமனம்..

கடந்த வருடம்  KEELAI MEDIA & ADVERTISEMENT PVT. LTD  தனியார் நிறுவனமாக பதியப்பட்டு கீழை பத்திப்பகம் மற்றும் கீழை நியூஸ் போன்ற செயல்பாட்டுகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வியாபாரத்தின் முன்னேற்றம் மற்றும் அவசியத்தினை கருதி கீழக்கரை நெய்னா முகம்மது தண்டையார் தெருவைச் சார்ந்த முஹம்மது சாலிஹ் ஹுசைன் நிறுவனத்தின் சட்ட இயக்குனராக (LEGAL DIRECTOR) 01/03/2018 முதல் நியமிக்கப்பட்டுள்ளார். இத்தருணத்தில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முசம்மில் இப்ராஹிம் சென்னை அலுவலகத்தில் இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் […]

இராமநாதபுரம் வண்ணாங்குண்டில் மின்னொளி கால்பந்து போட்டி…

இராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டில் முதலாம் ஆண்டு மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி நாளை வெள்ளிக்கிழமை (02/03/2018) மாலை 5மணி அளவில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு முதல் பரிசாக ₹10001/- இரண்டாம் பரிசாக ₹.5001/- மற்றும் மூன்றாம் பரிசாக ₹.3001/- வழங்கப்பட உள்ளது. இப்போட்டியின் முடிவிலும் சிறந்த ஆட்ட நாயகன் விருது, தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட உள்ளது. இக்கால்பந்து போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து 24 கால்பந்து அணிகள் பங்கேற்கும் என அறியப்படுகிறது. இக்கால்பந்து போட்டிகளுக்கான […]

தாசிம்பீவி கல்லூரியில் பெண்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம்..

கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 10 மற்றும் 11ம் தேதிகளில் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கம் SKILLED YOUTH PROFESSIONAL ASSOCIATION (SYPA) மற்றும் JANSEVA (வட்டியில்லா வங்கி) ஆகிய அமைப்புடன் இணைந்து தாசிம் பீவி மகளிர் கல்லூரி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த கருத்தரங்கில் கல்லூரி பெண்கள் மட்டும் குடும்ப பெண்கள் கலந்து கொள்ளலாம், இதற்கு நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால் […]

இந்திய ஆட்சி பணிக்கு தேர்வு எழுத இஸ்லாமிய மாணவர்களுக்கு அழைப்பு… இராமநாதபுரத்தில் வழிகாட்டி மையம்..

தமிழகத்தில் இந்தியா ஆட்சி பணிக்கான தேர்வு எழுதி வெற்றி பெற பல மாணவ,மாணவர்கள் ஆர்வமாக இருந்தும் சரியான வழிகாட்டுதல் இன்றி தவிர்த்து வருகின்றார்கள். இப்படி வழிமுறைகள் தெரியாத இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமிய மாணவ,மாணவிகளுக்கு முன்னாள் ஐ பி எஸ் அதிகாரி P M பஷீர் அஹமது இக்லாஸ் I A S அகாடமி என்று வெளிப்பட்டிணம் இராமநாதபுரத்தில் ஆரம்பம் செய்து சிறப்பாக நடத்தி வருகின்றார். ஆர்வம் நிறைந்த இஸ்லாமிய மாணக்கள் இவரை தொடர்ப்பு கொள்ளலாம். கூடுதல் […]

தேனி மாவட்டத்திற்கு முதல் பெண் ஆட்சியர்..

தமிழகத்தில் மகளிருக்கு முன்னுரிமை என முழக்கங்கள் முழக்கமாகவே இருக்கும் இவ்வேளையில் முதல் பெண் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்திற்கு மரியம் பல்லவி முதல் பெண் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய பணி சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் மனதார வாழ்த்துகிறது.

கீழை நியூஸ் ‘BLOOD APP’ அறிமுக விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது..

கீழக்கரை நகரில் அவசர கால இரத்த தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக இரத்த தானம் செய்ய விரும்பும் கொடையாளர்களும், இரத்தம் தேவைப்படுவர்களும் இலகுவாக சந்தித்து பயனடையும் வகையில் கீழை நியூஸ் சார்பாக ‘KEELAI NEWS BLOOD APP’ நேற்று (16.02.18) கீழக்கரையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அறிமுக விழா நிகழ்ச்சி நேற்று இரவு 7 மணியளவில் ஆலீம் புலவர் பவாஸ் வணிக வளாக கட்டிடத்தில் இயங்கும் சினர்ஜி இன்டர்நெஷனல் கல்வியகத்தில் (முஸ்லீம் பஜார் பீஸா பேக்கரி […]

கீழக்கரையில் ‘KEELAI NEWS BLOOD APP’ அறிமுக விழா நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது – அனைவரும் பங்கேற்க அழைப்பிதழ்

கீழக்கரை நகரில் அவசர கால இரத்த தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அவசர அறுவை சிகிச்சைகள், எதிர்பாராத விபத்து, டெங்கு, வைரஸ் காய்ச்சல், இரத்த அணு குறைபாடு போன்றவற்றினால் பாதிக்கப்படும் மக்கள், தங்களுக்கான இரத்த வகைகள் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் கீழக்கரை, இராமநாதபுரம் சுற்றுவட்டாரங்களில் இரத்த தானம் செய்ய விரும்புபவர்களும், இரத்தம் தேவைப்படுவர்களும் இலகுவாக சந்தித்து பயனடைவதற்கு ஏதுவாக கீழை நியூஸ் சார்பாக ‘KEELAI NEWS BLOOD APP’ அறிமுகப்படுத்தப்பட […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!