கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 58 ஆயிரத்து 500 பேர் நகரில் வசித்து வருகின்றனர். கீழக்கரையில் கட்டடங்கள் புதியதாக கட்டப்பட்டு, வரிவிதிப்பு செய்யப்படாத நிலையில் உள்ளது. ஏற்கனவே கட்டப்பட்டு வரிவிதிப்பு செய்யப்பட்ட கட்டடங்கள் மற்றும் கூடுதலாக கட்டப்பட்ட கட்டடங்கள் ஆகியவற்றினை ஆய்வு செய்த வரிவிதிக்கும் செயலில்தீவிரமாக களம் இறங்கும் முயற்சியில் நகராட்சி நிர்வாகத்தினர் உள்ளனர். இது சம்பந்தமாக கீழக்கரை நகராட்சி கமிஷனர் எம்.ஆர்.வசந்தி கூறுகையில், வருகிற அக்., 31க்குள் நகராட்சி ஊழியர்கள், வருவாய் பிரிவு உதவியாளர்கள் […]
Category: அரசு அறிவிப்பு
கீழக்கரையில் வியாழக்கிழமை (12-10-2017) அன்று மின் தடை…
கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்புக்காக 12-10-2017, வியாழக்கிழமை அன்று காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த மின்தடை கீழக்கரை நகர் அனைத்து பகுதி, முகம்மது சதக் பாலிடெக்னிக், உத்திரகோச மங்கை, அலவாக்கரைவாடி, பாலையேந்தல், காஞ்சிரங்குடி பகுதி, தேரிருவேலி மற்றும் மோர்குளம் பகுதிகளில் மின் தடை இருக்கும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
கீழக்கரை மக்கள் தாசில்தார் தமீம்ராசா பணியிடமாற்றம்..
கீழக்கரையில் பல அரசு அதிகாரிகள் பணிபுரிந்திருந்தாலும் தாசில்தார் மக்களின் அதிகாரியாக விளங்கினார் என்றால் மிகையாகாது. அந்த அளவிற்கு சாமானிய மக்களுடன் ஒன்றினைந்து மக்களுக்கான தேவைகளை செய்யக்கூடியவராக இருந்தார். கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் இலவச மனு எழுதும் மையம் அமைவதற்கும் மிக முக்கிய காரணியாக விளங்கியவர். சமீபத்தில் தகுதி அடிப்படையில் துணை வட்டாட்சியராக பதவி உயர்வுடன் சமூக பொருப்பு தாசில்தாராக கீழக்கரைக்கே நியமிக்கப்பட்டார். அதேபோல் சில மாதங்களுக்கு முன்னர் தகுதியற்றோர் அரசு உதவித் தொகை வாங்கி வருவதை ஆராய்ந்து, […]
ஹிஜ்ரி ஆண்டு 1439 துவக்கம்-அமீரகத்தில் 21 செப் 2017 அன்று விடுமுறை
அமீரகத்தில் ஹிஜ்ரி 1439 இஸ்லாமிய வருட பிறப்பை முன்னிட்டு வியாழன் (21.09.2017) அன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு துறைகளும் 24 செப்டம்பர் 2017 அன்று செயல்பட தொடங்கு. இது ஒரு நீண்ட விடுமுறை வாரமாக இருப்பதால் அமீரக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறைத்தூதர் (ஸல்) மக்காவை விட்டு மதினாவுக்கு ஹிஜ்ரத் (இடம் பெயர்தல்) செய்த ஆண்டிலிருந்து இஸ்லாமிய வருட பிறப்பு கணக்கிடப்படுகிறது. மேலும் இஸ்லாமிய வரலாற்றின் இது ஒரு சரித்திர […]
கீழக்கரையில் செவ்வாய் கிழமை (12-09-2017) அன்று மின் தடை…
கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்புக்காக 12-09-2017, செவ்வாய்கிழமை அன்று காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என உதவி செயற்பொறியாளர் கங்காதரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த மின்தடை கீழக்கரை நகர் அனைத்து பகுதி, முகம்மது சதக் பாலிடெக்னிக், உத்திரகோச மங்கை, அலவாக்கரைவாடி, பாலையேந்தல், காஞ்சிரங்குடி பகுதி, தேரிருவேலி மற்றும் மோர்குளம் பகுதிகளில் மின் தடை இருக்கும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இன்டெர்நெட் வசதியுடன் அரசுப் பேருந்து..
தமிழ்நாடு அரசுப்பேருந்தில் முதல்முறையாக இலவச WIFI வசதியுடன் இராம்நாடு புறநகர் கிளையில் இயக்கப்படுகிறது. இந்த பேருந்து தினமும் மதியம் 2.20க்கு இராமநாதபுரத்திலிருந்து புறப்பட்டு மதுரை வழியாக தஞ்சாவூர் வரை இயக்கப்படுகிறது. இது அரசுப் பேருந்தின் புதிய முயற்சி எந்ந அளவுக்கு நடைமுறைப்படுத்த படுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கீழக்கரையில் இலவச பால் தரம் பரிசோதனை முகாம்..
இராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச பாலின் தரத்தை பரிசோதனை மாவட்டம் முழுதும் நடத்தப்பட உள்ளது. கீழக்கரையிலும் இம்முகாம் வருகின்ற 29.08.17 செவ்வாய் கிழமை காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது. இந்த பரிசோதனை முகாமில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திர போஸ் கலந்து கொள்வதால் பொதுமக்கள் தங்களது குறைகளை கூறி நிவர்த்தி செய்யலாம்.
நாளை உள்ளூர் அரசு அலுவலகப் பணிகள் வழக்கம் போல் நடைபெறும்..
அறிவிப்பு கடந்த 16ம் நேதி ஏர்வாடி சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக நாளை (19-08-2017) அனைத்து அரசு அலுவலகங்களாகிய நகாராட்சி, தாலுகா அலுவலகங்கள் வழக்கம் போல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் நலன் மற்றும் வணிக நோக்கத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் உரிமம் பெற வேண்டும்…
இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் நலன் மற்றும் வணிக நோக்கத்தில் செயல்பாட்டில் உள்ள அனைத்து பொது கட்டிடங்களுக்கும், சம்மந்தப்பட்ட உரிமைதாரர்கள் தமிழ்நாடு பொதுக் கட்டிடங்கள் உரிமைச் சட்டம் 1965-இன் கீழ் முறையான ஆவணங்களை சமர்ப்பித்து உரிமம் பெற்றிருத்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு பொதுக் கட்டிடங்கள் உரிமைச் சட்டம் 1965-இன் கீழ் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், […]
கீழக்கரை தாலுகாவில் மக்கள் தொடர்புத் திட்டம்…
கீழக்கரை தாலுகா திருப்புல்லாணி பிர்க்கா ரெகுநாதபுரம் குருப் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கீழக்கரை தாசில்தார் இளங்கோவன் தலைமையில் சமூகப்பாதுகாப்புத்திட்ட தாசில்தார் தமிம்ராஜா முன்னிலையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக மண்டல துணை தாசில்தார் நாகராஜ் வரவேற்றார். அவர் உரையாற்றும் பொழுது வேளாண்மை கால்நடை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள் குறித்து விளக்கிப்பேசினர். அதைத் தொடர்ந்து சமூகப்பாதுகாப்புத்திட்ட தாசில்தார் பேசும் பொழுது தகுதியான பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் சிந்தாமல் சிதறாமல் வழங்கப்படும், அதே […]
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற 21.07.2017 அன்று நடைபெறவுள்ளது.
2017-2018ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான ஜூலை 2017 மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளம், நீச்சல் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளான கால்பந்து, இறகுப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இராமநாதபுரம் மாவட்ட பிரிவின் சார்பில் 21.07.2017 வெள்ளிக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. 100மீ, 400மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய தடகள போட்டிகளும் 100 மீ, […]
ரெட் கிராஸ் சார்பாக கீழக்கரை சதக் கல்லூரியில் தீ தடுப்பு குறித்த செயலரமுறைப் பயிற்சி..
அறிவிப்பு.. கீழக்கரையில் இன்று (19-07-2017) – புதன் கிழமை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பாக கீழ்க்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 10.00 மணி அளவில் மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் மீட்பு குறித்த செயல்முறைப் விளக்க பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியை ராமநாதபுரம் தீ அணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் வழங்க உள்ளனர். இப்பயிற்யிசியில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு எம். ராக்லாண்ட் மதுரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் செய்ய சிறப்பு முகாம்…
தமிழ்நாடு வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் மற்றும் முகவரி மாற்றம் செய்ய வரும் 09-07-2017 & 27-07-2017 ஆகிய ஞாயிறு கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் நடைபெறும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொது மக்கள் அனைவரும் விபரங்களை சரி செய்து கொள்ள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கீழக்கரையில் விரைவில் புதிய நிரந்தர தாலுகா மற்றும் தாசில்தார் அலுவலகம்… நிதி ஒதுக்கி அரசாணை..
கீழக்கரை இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாலுகா அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தாலுகா அலுவலகத்தின் பணிகள் தற்சமயம் உள்ள நகராட்சி அலுவலத்திலேயே நடைபற்று வந்தது. ஆகையால் புதிதாக நியமிக்கப்பட்ட வருவாய் அதிகாரிகளுக்கும் மற்றும் பிற அரசு அதிகாரிகளும் முழுமையான கட்டமைப்பு இல்லாத காரணத்தால் பணிகளை மேற்கொள்வதில் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தார்கள். இந்நிலையில் தமிழக அரசு தமிழகம் முழுவதும் சுமார் 81,15,49,000/- செலவில் மொத்தம் 31 புதிய தாலுகா மற்றும் தாசில்தார் அலுவலகம் அமைக்க நிதி ஒதுக்கி அரசாணை […]
அங்கன்வாடி மையங்கள் மூலம் பிறந்தது முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக ஆதார் புகைப்படம் எடுக்கலாம்..
இராமநாதபுரம் மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் 11 வட்டாரங்களிலும் 22,605 முன்பருவ கல்வி குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இக்குழந்தைகளுக்கு வாரத்திற்கு 3 நாட்கள் வேகவைத்த முட்டை மற்றும் கலவை சாதம் வழங்கப்படுகிறது. முன்பருவ கல்வி அளிக்கப்படுகிறது. 6 மாதம் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு குழந்தைகளின் வளர்ச்சியை தெரிந்து கொள்ள மாதந்தோறும் அங்கன்வாடியில் எடை குறுக்காய்வு செய்யப்பட்டு, எடைக்குறைவான குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி கூடுதலாக இணை உணவு (சத்துருண்டை) வழங்கப்படுகிறது. ஆதார் புகைப்படம் பெரியவர்கள் மற்றும் […]
27-06-2017 அன்று எரிவாயு முகவர்களுடன் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது…
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம், இராமேஸ்வரம், திருவாடானை, கீழக்கரை, பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு முகவர்களுடன் எதிர்வரும் 27.06.2017 அன்று மாலை 5.00 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. மேற்கண்ட கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து […]
கீழக்கரையில் வரும் 20-06-2017 (செவ்வாய் கிழமை) மீண்டும் மின் தடை…
கீழக்கரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வருகின்ற 20.06.17. (செவ்வாய் கிழமை) அன்று மின்தடை என மின் வாரியம் அறிவித்துள்ளது. கடந்த 14ம் தேதி மின்தடை அமுல்படுத்தி ஒரு வாரம் கூட முடிவடையாத நிலையில் மீண்டும் அவதி. இது குறித்து மின் வாரியத்தை தொடர்பு கொண்டபோது, கீழக்கரை துணை நிலையத்தில் உள்ள இரு டிரான்ஸ்பார்மர்களில் ஒன்று பழது. பண்டிகை காலமாக இருப்பதால் பளு தாங்காமல் போக வாய்ப்புள்ளது. ஆகவே, பரமக்குடியில் இருந்து வரும் நபர்கள் டிரான்ஸ்பாமரை 2 […]
கீழக்கரை சுற்றுவட்டாரத்தில் நாளை (14-06-2017) மின் தடை..
கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை (14-06-2017), புதன்கிழமை காலை 09.00 மணியில் இருந்து மாலை 05.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை இருக்கும். இது பற்றி செயற்பொறியாளர் கூறுகையில் நாளை (14-06-2017, புதன் கிழமை) கீழக்கரை, ஏர்வாடி, மாயாகுளம், முகம்மது சதக் கல்லூரிகள், உத்திரகோசமங்கை ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக தடை இருக்கும், ஆகையால் பொதுமக்கள் முன் நடவடிக்கை எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்.
ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரையில் 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் புதிய வாக்காளர்களாக பதிவு செய்திடலாம்..
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 01.06.2017 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் வருகின்ற ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரையில் 18 வயது பூர்த்தியடைந்த நபர்களை அதிகளவில் புதிய வாக்காளர்களாக சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி […]
கீழக்கரை தாலுகா ஆலங்குளத்தில் அம்மா திட்ட முகாம்…
கீழக்கரை தாலுகா ஆலஙகுளம் கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் கீழக்கரை சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தார் கே எம் தமிம்ராஜா தலைமையிலும் வட்ட வழங்கல் அலுவலர் ரெத்தினமூர்த்தி, மண்டல துணை தாசில்தார் பெனித்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது. இம்முகாமில் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் திருமண உதவித் தொகையும், 3 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைகளும், குடும்பஅட்டையில் பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வரப்பெற்ற அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய உத்தரவுகள் 15 பயனாளிகளுக்கு […]
You must be logged in to post a comment.