தாசிம்பீவி கல்லூரியில் பெண்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம்..

கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 10 மற்றும் 11ம் தேதிகளில் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கம் SKILLED YOUTH PROFESSIONAL ASSOCIATION (SYPA) மற்றும் JANSEVA (வட்டியில்லா வங்கி) ஆகிய அமைப்புடன் இணைந்து தாசிம் பீவி மகளிர் கல்லூரி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த கருத்தரங்கில் கல்லூரி பெண்கள் மட்டும் குடும்ப பெண்கள் கலந்து கொள்ளலாம், இதற்கு நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால் […]

தேனி மாவட்டத்திற்கு முதல் பெண் ஆட்சியர்..

தமிழகத்தில் மகளிருக்கு முன்னுரிமை என முழக்கங்கள் முழக்கமாகவே இருக்கும் இவ்வேளையில் முதல் பெண் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்திற்கு மரியம் பல்லவி முதல் பெண் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய பணி சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் மனதார வாழ்த்துகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (08.02.2018) நடைபெறுகிறது.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை (08.02.20180 காலை 10 மணியளவில் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண்பதற்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு அலுவலகம் வாயிலாக மாவட்ட ஆட்சியர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்திற்கு வருகை தரும் மாற்றுத் திறனாளிகள் தங்களது குறைகளை எழுத்துப்பூர்வமாகவோ அல்லது நேரடியாகவோ உரிய ஆவணங்களுடன் அதிகாரிகளை சந்த்தித்து தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். மேலும் மாற்று […]

வார்டு மறுவரையறை பட்டியல் குளறுபடி குறித்து கருத்து கேட்பு கூட்டம் மதுரையில் ‘பிப்ரவரி 6’ நடைபெறுகிறது – மனுதாரர் அனைவரும் பங்கேற்க கீழக்கரை சட்டப் போராளிகள் அழைப்பு

கீழக்கரை நகராட்சியில் வார்டு மறு வரையறை பட்டியல் தயாரிக்கப்பட்டதில் பல்வேறு குளறுபடிகளை நகராட்சி ஆணையாளர் மற்றும் இளநிலை ஊழியர்கள் செய்துள்ளனர். இந்த குளறுபடியான வார்டு மறுவரையரை பட்டியலை உடனடியாக திரும்ப பெற கோருதல் சம்பந்தமாக, கீழக்கரையில் அனைத்து கட்சி கூட்டம் கடந்த 01.01.2018 அன்று ஹுசைனியா மஹாலில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கீழக்கரை நகரை சேர்ந்த பொதுநல அமைப்பினர், சமுதாய இயக்கத்தினர், ஜமாத்தினர், அரசியல் கட்சியினர் 02.01.2018 அன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து குளறுபடியான […]

நினைவூட்டல் – நாளை (28-01-2018)போலியோ சொட்டு மருந்து முகாம்…

குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து ஜனவரி 28 மற்றும் ஃபிப்ரவரி 11ம் தேதிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளி வளாகங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை இலவசமாக வழங்கப்படும். ஏற்கனவே ஜனவரி 19 மற்றும் பிப்ரவரி 23ம் தேதி என அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்டது குறிப்பிடதக்கது. https://keelainews.in/2018/01/19/date-change/

போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி மாற்றம்…

தமிழகம் முழுவதும் போலீயோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 19, பிப்ரவரி 23 நடைபெறும் என முதலில் விளம்பரப்படுத்தப்பட்டது. அதன் தொடர்பாக பல சமூக வலை தளங்கள் மற்றும் இணையதளங்களில் அறிவிப்பும் வெளியானது. கீழக்கரை நகர் பகுதிகளில் பலர் முகாம் நடைபெறும் இடங்களுக்கு சிறுவர் சிறுமியரை அழைத்து சென்று முகாம் நடைபெறவில்லை என பெற்றோர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். இது குறித்து திருப்புல்லாணி சுகாதார ஆய்வாளர் செல்லக் கண்ணு கூறுகையில் ” சில அரசாங்க அலுவல்கள் […]

ஜனவரி 19 மற்றும் ஃபிப்ரவரி 23 போலியோ சொட்டு மருந்து வழங்கும் நாட்கள்…

குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து ஜனவரி 19 மற்றும் ஃபிப்ரவரி 23ம் தேதிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளி வளாகங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை இலவசமாக வழங்கப்படும்.

கீழக்கரை தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் போராட்டம்…

கீழக்கரை தாலூகாவுக்கு உட்பட்ட VAO – Village Administrative Officer எனும் கிராம நிர்வாக அலுவலர்கள் தாலூகா அலுவலகத்தில் இன்றிலிருந்து போராட்டம் அறிவித்துள்ளனர். கீழக்கரை தாலுகா மொத்தம் 18 கிராம நிர்வாக அலுவலர்களை உள்ளடக்கியதாகும். இவர்கள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் இன்று (08-01-2018) இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டம் நடத்துகின்றனர். பின்னர் 10ம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், 18 ம் தேதியிலிருந்து தொடர்ந்து வேலை புறக்கணிப்பு போராட்டம் நடத்தவும் […]

கீழக்கரை நகராட்சியில் ஒரே நாளில் மாயமான 10000 பேர் – குளறுபடி செய்த அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய சட்டப் போராளிகள் கோரிக்கை..வீடியோ விளக்கம்..

கீழக்கரை நகராட்சியில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியும், சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக பெறப்பட்ட ஆவணங்களின் படியும், கீழக்கரை நகராட்சியின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் பிரகாரமும், கீழக்கரை நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 47730 ஆகும். அதில் ஆண்கள் எண்ணிக்கை 25392 , பெண்கள் எண்ணிக்கை 22338. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள மறு வரையறை வார்டு பட்டியலில் கீழக்கரை நகராட்சியின் 2011 ஆம் ஆண்டைய மொத்த மக்கள் […]

நகராட்சி வார்டுகளை மறுவரையறை செய்தது பற்றிய மக்கள் கருத்தும்..சட்டப் போராளிகள் குழுமம் ஒருங்கிணைப்பாளர் விளக்கமும்…ஒரு வீடியோ பதிவு..

கீழக்கரையில் கடந்த வாரம் வார்டுகள் மறுவரையறை செய்வதில் உண்டாகிய குழப்பத்தை நீக்க கோரி சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து குழப்படிகளை சீர் செய்ய மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து மறுவரையறை சம்பந்தமாக கருத்து தெரிவிக்க கூடுதல் நாட்களும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களிடம் இது சம்பந்தமாக கருத்து கேட்ட பொழுது, ஆச்சரியமளிக்கும் வகையில் அதன் பற்றிய விபரம் அறியாதவர்களாகவே இருந்தனர். பொதுமக்களும் விழிப்புணர்வு பெறும் வகையில் கீழக்கரை சட்டப்போராளிகள் குழும ஒருங்கிணைப்பாளர் […]

கீழக்கரை வார்டு மறுவரையறை மக்களிடம் நேரடியாக கருத்து கேட்க இன்று (01.01.2018) கூட்டம் ஏற்பாடு..

கீழக்கரை நகராட்சி பகுதிகளிலுள்ள வார்டுகளை மறு வரையறை படுத்தியுள்ளது சம்பந்தமாக ஆட்சியர் சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டார். ஆனால் வெளியிட்ட நாள் முதல் பொதுமக்கள் மத்தியில் பல கருத்துக்களும், குழப்பங்களும் நிலவி வருகின்றது. இது சம்பந்தமாக கருத்துக்களை பொதுமக்கள் ஆட்சியர் கவனத்திற்கு 02-01-2018 வரை கொண்டு செல்லலாம் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மின்னஞ்சல் மூலமாக கருத்துக்களை பதிவு செய்தாலும், அரசாங்க அதிகாரிகளின் கவனத்தில், இருந்து விடுபட பல வாய்ப்பு உள்ளது. ஆகையால் மக்களின் குறைகளை […]

கீழக்கரை வார்டுகள் மறுவரையரையில் குளறுபடி, கீழக்கரை சட்டப்போராளிகள் குழுமம் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள் …

கடந்த சில தினங்களுக்கு முன்பு கீழக்கரையில் உள்ள வார்டுகள் மறுவரையறுக்கப்பட்டு அறிவிப்புகள் மாவட்ட ஆட்சியிரால் வெளியிடப்பட்டது. இது சம்பந்தமாக ஆட்சேபணைகள் இருந்தால் கீழக்கரை ஆணையரிடம் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தீர ஆராய்ந்த பொழுது அதில் பல குளறுபடிகள் இருப்பது கீழக்கரை சட்டப்போராளிகள் குழுமம் மூலம் கண்டறியப்பட்டு, ஆணையருக்கு மனு அளிக்கும்படி அவசர அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. சட்டப் போராளிகள் குழுமம் AWARNESS 001 விபரங்களுக்கு மேலே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்👆🏽 ஆணையருக்கு அனுப்ப வேண்டிய மனுவின் […]

வார்டுகளின் எல்லை மறுவரையறை உத்தேச பட்டியல் ராமநாதபுரத்தில் கலெக்டர் நடராஜன் வெளியிட்டார்…

ராமநாதபுரம் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக ஐகோர்ட்டு உத்தரவின்படி வார்டுகளின் எல்லை மறுவரையறை செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச பட்டியலை ராமநாதபுரத்தில் கலெக்டர் முனைவர் நடராஜன் வெளியிட்டார். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் வார்டு எல்லைகளை மறுவரையறை செய்து அதன் அடிப்படையில் தேர்தலை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாக கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள […]

கீழக்கரையில் நாளை – வியாழக்கிழமை (07-12-2017) மின் தடை…

கீழக்கரை உப மின் நிலையத்தில் நாளை – டிசம்பர் 07 வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும். இந்த மின்தடை கீழக்கரை நகர் அனைத்து பகுதி, முகம்மது சதக் பாலிடெக்னிக், உத்திரகோச மங்கை, அலவாக்கரைவாடி, பாலையேந்தல், காஞ்சிரங்குடி பகுதி, தேரிருவேலி மற்றும் மோர்குளம் பகுதிகளில் மின் தடை இருக்கும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

புதிய கமுதி மாவட்டம் – 25/11/2017, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அறிவிப்பு???

கடந்த 28-08-2015 அன்று நடைபெற்ற தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க செயற்குழுவில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், திருச்சுழி மற்றும் புதிதாக தோற்றுவிக்க கோரியுள்ள பார்த்திபனூர் வட்டங்களை இணைத்து புதிய மாவட்டம் உருவாக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதே போல் பரமக்குடி வட்டத்தினை பிரித்து பார்த்திபனூர், நயினார் கோயில் வட்டங்களாக பிரிப்பது என்றும், திருவாடனையை பிரித்து ஆர்.எஸ் மங்கலம் வட்டம் உருவாக்குதல் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை ஏதும் இல்லாமலே இருந்து வந்தது. […]

கீழக்கரை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பணியிட மாற்றம்…

கீழக்கரை நகராட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிர மூர்த்திக்கு சென்னை தலைமை அலுவலகத்தில் (CMA) இன்று (10-11-2017)  பணியிட மாறுதல் உத்தரவு வந்ததை அடுத்து பணியிட மாற்றம் ஆகிறார். திண்ணாயிரமூர்த்தி கடந்த 6 வருட காலமாக பணியாற்றி வரும் நிலையில், இவர் மீது மக்கள் டீம் மற்றும் சில சமூக அமைப்புகள் இவர் தன்னுடைய பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்து வந்தார் என்று ஆட்சியரிடம் மனு கொடுத்ததும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. […]

கீழக்கரையில் திங்கள் கிழமை (13-11-2017) அன்று மின் தடை…

கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்புக்காக 13-11-2017, திங்கள் கிழமை அன்று காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த மின்தடை கீழக்கரை நகர் அனைத்து பகுதி, முகம்மது சதக் பாலிடெக்னிக், உத்திரகோச மங்கை, அலவாக்கரைவாடி, பாலையேந்தல், காஞ்சிரங்குடி பகுதி, தேரிருவேலி மற்றும் மோர்குளம் பகுதிகளில் மின் தடை இருக்கும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

சிறுபான்மையினர் கடன் பெறுவதற்கான முகாம் – வாய்ப்பை பயன்படுத்தவும்..

கீழக்கரை தாலூகா அலுவலகத்தில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பாக தகுதியுள்ளவர்களுக்கு சிறுதொழில்கள் செய்வதற்கான கடன் வழங்கும் முகாம் இன்று (25/10/2017) நடைபெறுகிறது. அரசு பட்டியலில் சிறுபான்மையினராக அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைவரும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த முகாமிற்கு செல்பவர்கள் தங்களுடைய முகவரி அடையாளங்களாகிய குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம், வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டை போன்றவற்றை எடுத்துச் சென்றால் நலம். மேலும்  இத்திட்டத்தின் மூலம் தையல் தொழிலுக்கான மிசின், சிறிய […]

கீழக்கரை நகராட்சி சார்பாக மீண்டும் நாய்கள் பிடிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது..

கீழக்கரையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ரயான் என்ற சிறுவன் நாய் கடித்து இறந்ததை தொடர்ந்து நகராட்சியால் நாய் பிடிக்கும் பணி துவங்கியது. பின்னர் சில வாரங்கள் கழித்து முழுமையடையாமலே பணிகள் நிறுத்தப்பட்டது. பின்னர் சில மாதங்களில் பெண்மணி ஒருவர் நாய்கடிக்கு ஆளானார். சில வாரங்களுக்கு முன்னர் வெறி நாய்களால் ஆடுகள் நாய்களால் குதறப்பட்டது. அதைத் தொடர்ந்து கீழக்கரை சமூக ஆர்வலர்கள் நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் புகார் மனுக்களை தொடுத்தனர். இந்நிலையில் இன்று (20-10-2017) முதல் மூன்று […]

நிலவேம்பு கசாயம் பற்றிய தவறான தகவல்கள் பரப்பும் நபர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது.. அரசு அதிகாரிகள் எச்சரிக்கை..

தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் அதை தடுக்கும் விதமாக அரசு அதிகாரிகளும்,  சமூக ஆர்வலர்களும் தன்னலம் பாராமல் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகிப்பதும்,  அதைப் பற்றிய விழிப்புணர்வு பிரசுங்களையும் மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத சில நபர்களால் சமூக வலைதளங்களில் நிலவேம்பு கசாயம் அருந்துவதால் மலட்டுதன்மை மற்றும் ஆண்மைக் குறைவு ஏற்படும் என்ற வகையில் எந்த அடிப்படை ஆதாரமம் இல்லாமல் பரப்பப்பட்டு வருகிறது.  இதனால் பயன் பெறக்கூடிய மக்களும் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!