தமிழ்நாட்டில் இனி ஆவணப்பதிவுகளை மென்பொருள் வழி பட்டா படிவம் அனுப்புதல் மற்றும் பட்டா மாற்றம் செய்தல் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட மனைப்பிரிவு (Plot) அமைந்துள்ள சர்வே எண்ணை குறிப்பிடவேண்டும் என சுற்றறிக்கை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமான அரசாணை நகலை பார்வையிட கீழே க்ளிக் செய்யவும்.. Circular 21352-c1-18 dated 05.07
Category: அரசு அறிவிப்பு
கழிவறை, படுக்கை வசதியுடன் கூடிய தமிழக அரசு சொகுசு பேருந்தில் கட்டணம் எவ்வளவு?
தமிழக அரசு புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் சொகுசு பஸ் அனைத்து வசதிகளையும் கொண்ட பஸ் ஆகும். இதில் பயணிக்க அனைவருக்கும் ஆவல், ஆதலால் அதன் கட்டணத்தை அறிந்து கொள்வது அவசியம். இந்த சொகுசு பஸ்ஸில் சென்னையில் இருந்து மதுரைக்கு ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.975, சேலம் ரூ.725, போடிநாயக்கன்பட்டி ரூ.1110, ஈரோடு ரூ.905, கரூர் ரூ.820 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவை-பெங்களூர் இடையே இயக்கப்படும் ஏ.சி. படுக்கை வசதி பஸ்சுக்கு ரூ.805 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 6 […]
டிஜிபிகளை நியமிக்க புதிய வழிமுறைகளை வகுத்தது உச்சநீதிமன்றம்…
மாநில அரசு இடைக்கால டிஜிபிகளை நியமிக்க தடை விதித்து பிரகாஷ் சிங் என்பவர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையே 2 ஆண்டுகள் பதவியில் இருக்கும் வகையில் டிஜிபிக்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இடைக்கால டிஜிபிக்களை நியமிக்க கூடாதென மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிஜிபி நியமனம் தொடர்ப்பாக பிரகாஷ் சிங் தொடுத்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது மாநில அரசுகள் தங்களுக்கு சாதகமான, அரசியல் […]
‘லோக் ஆயுக்தா’ மசோதா நிறைவேற்ற அரசு முடிவு..
நாடு முழுவதும், அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்க, 2013ல், லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட்டது. இது, 2014 ஜன., 16ல் அமலுக்கு வந்தது. லோக் ஆயுக்தா அமைப்புகள், 15 மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. தமிழகம், புதுச்சேரி உட்பட, 12 மாநிலங்கள், லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றவில்லை.’லோக் ஆயுக்தா அமைக்கும் பணியை, தமிழக அரசு உடனடியாக துவங்க வேண்டும். இது தொடர்பான அறிக்கையை, ஜூலை, 10க்குள் தாக்கல் செய்ய வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
நாளை (01-07-2018) முதல் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை…
இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை விதித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சுற்றுப்புற தூய்மையினை பாதுகாத்திடும் வகையில் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வருகின்ற 01.07.2018 முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கூறுகையில்: பொதுமக்களுக்கு மேம்பட்ட சுகாதார வசதிகளை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். அந்த வகையில் மாவட்டத்தில் சுற்றுப்புறத் தூய்மையினை மேம்படுத்திடும் வகையில் திடக்கழிவு […]
கீழக்கரையில் நாளை (28/06/2018) மின் தடை..
கீழக்கரையில் நாளை (28/06/2018 – வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பை முன்னிட்டு காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வெட்டு இருக்கும். இச்சமயத்தில் கீழக்கரை நகர், மாயாகுளம் கல்லூரி பகுதி, மோர்குளம், காஞ்சிரங்குடி, உத்திரகோசமங்கை இன்னும் இதன் எல்லைக்குள் உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.
அரசு அலுவலகத்தில் மனு கொடுத்தால் ரசீது வாங்க மறந்து விடாதீர்கள்..
பொதுமக்கள் அரசு அலுவலகத்தில் கொடுக்கும் புகார் மனுவுக்கு மூன்று நாட்களுக்குள் மனுவை பெற்றுக் கொண்டதற்கான ரசீது வழங்க வேண்டும் என உள்ளது. அதே போல் பெற்ற மனுவுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு அல்லது அம்மனு நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணத்தை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என 2015ம் அரசு வெளியிட்ட அரசாணை தெரிவிக்கிறது. அரசாணையை படிக்க கீழே சொடுக்கவும்… par_e_99_2015 (1) ஆனால் மனுவை அரசு அலுவலகத்தில் ஏற்றுக் கொள்ளவே பல மாதங்கள் ஆகிறது என மனதுற்குள் புலம்புவது […]
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், தமிழக அரசுக்கு வேண்டுகோள்..
தமிழகத்தில் பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களின் பயிற்சிக் கால உதவி ஊதியத்தை உயர்த்திட வேண்டும், அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தக் கூடாது. இது சம்பந்தமாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது சம்பந்தமாக இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள ஊடகங்களுக்கான செய்தி. # தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர்களும்,பட்ட மேற்படிப்பு மாணவர்களும் தங்களது பயிற்சிக் கால உதவி ஊதியத்தை (Stipend) உயர்த்திட […]
ரூபாய் நோட்டு – நாணயங்களில் உள்ள நுண்கிருமிகளால் நோய் பரவும் அபாயம்…உணவகங்கள் கவனமாக இருப்பது அவசியம்..
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ரூபாய் நோட்டுகளை எச்சில் வைத்து எண்ணுவது, இவ்வாறான அழுக்கு படிந்த நோட்டுகளை பயன்படுத்துவதால் அதிலுள்ள நுண்கிருமிகள் மூலம் உணவு நஞ்சாதல், வயிறு, சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன. மேலும் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு நோய் எளிதாக தொற்றிக் கொள்ளும். மேலும் உணவகங்களில், குறிப்பாக சாலையோர கடை வைத்திருப்பவர்கள் பல விதமான […]
தமிழகத்தில் உயர் காவல்துறை அதிகாரிகள் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம்..
தமிழக அரசால் இன்று பல பகுதிகளில் பணியாற்றி வரும் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் , பணி இடமாற்ற உத்தரவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை காண கீழே உள்ள க்ளிக் செய்யவும்.. Rc.No.86868-GB VII(3)-2017
குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலர் கே.நந்தகுமார் தெரிவித்தார்…
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட 2018-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, ஃபாரஸ்ட் அப்ரண்டீஸ் தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் 3-வது வாரத்திலும், மீன்வள ஆய்வாளர், மீன்வள உதவி ஆய்வாளர் தேர்வுச்களுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் 2-வது வாரத்திலும், குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு மே முதல் வாரத்திலும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இன்னும் வரவில்லை. இதனால், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எதிர்பார்த்து படித்து வரும் இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள தேர்வுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் […]
இனி இ- சேவையில் பெரும் சேவைகளை நாமே நேரடியாக பெறலாம் – அரசு அதிரடி – Open Portal அறிமுகம்..
தமிழ்நாட்டில் ஈ சேவை மையம் இருந்தாலும், பல இடங்களில் அது “ஈ” மொய்க்கும் “மய்யம்” ஆகவே இருந்தது. ஆகையால் கிராமப்புற மக்கள் மட்டும் அல்லாமல் நகரத்து மக்களுக்கும் நேரமும், பொருளாதாரமும் விரயம் ஆனது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இனி இ- சேவையில் பெரும் சான்றிதழ், விண்ணப்பகங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதாவது அரசு மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு திறந்த தளம் (OPEN PORTAL) ஒன்று www.tnesevai.tn.gov.in என்ற இணைய முகவரியில் உள்நுழைந்து citizen login […]
தமிழக மின்சார வாரியத்தில் புகார் தெரிவிக்க இனி “Whataspp” போதும்..
தமிழகத்தில் எந்த நேரத்தில் மின்சார பிரச்சினை வரும் என்பது யாருக்கும் புரியாத புதிர்தான். ஏற்பட்ட தடங்கலை சரி செய்ய மின்சார வாரியத்தை நாடினார் பணமும் நேரமும்தான் விரையாமாகுமே தவிர பிரச்சினை தீராது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிக்கும் மின்சார வாரியத்தில் புகார் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இனி உங்கள் பகுதி புகார்களை புகைப்படம் எடுத்து அனுப்பினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ் […]
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் (TNROA) வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு…
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் (TNROA) 19-06-2018 அன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் இன்று நடைபெற இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நேற்று வெளியிட்ட செய்தி… https://keelainews.in/2018/06/16/tnroa-officials/
TNROA – தமிழ்நாடு வருவாய் அதிகாரிகள் சங்கம் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பு..
TNROA – (Tamilnadu Revenue Officials Association) தமிழ்நாடு வருவாய் அதிகாரிகள் சங்கம் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 19-06-2018 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது. இன்று 16.06.18 சனிக்கிழமை தூத்துக்குடி யில் TNROA மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் 20 அம்ச கோரிக்கைகள் குறித்தும், அரசின் நிலைபாட்டை குறித்தும் மிகவும் விரிவாக விவாதத்தினை முடித்து இறுதியில் 19.06.18 செவ்வாய் முதல் ஏற்கனவே திட்டமிட்டு கள பணியாற்றியும், பிரச்சாரத்தையும் முடித்துள்ள நிலையிலும், அரசிடமிருந்து […]
கீழக்கரையில் (07-06-2018) மின் வெட்டு.. ரமலான் மாதமும் விதி விலக்கல்ல..
கீழக்கரையில் (07/06/2018 – வியாழன் கிழமை) மாதாந்திர பராமரிப்பை முன்னிட்டு காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வெட்டு இருக்கும். இச்சமயத்தில் கீழக்கரை நகர், மாயாகுளம் கல்லூரி பகுதி, மோர்குளம், காஞ்சிரங்குடி, உத்திரகோசமங்கை இன்னும் இதன் எல்லைக்குள் உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. புனிதமான ரமலான் மாதத்தை கருத்தில் கொண்டு தாமதப்படுத்துவது பற்றி அதிகாரிகளிடம் விசாரித்த பொழுது, இம்முறை புனித மாதத்தை கருத்தில் கொண்டு மிக விரைவாக மதியம் 01.00 மணிக்குள் பராமரிப்பு வேலைகளை […]
இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் சம்பந்தமான புகார் தெரிவிக்க பகுதி வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிப்பு..
இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை தொடர்பான புகார்களை தெரிவிக்க உள்ளாட்சி அலுவலகம் வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் கலெக்டர் கூறியிருப்பது: “மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கடந்த ஆண்டு 1153 பணிகளுக்கு 12.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் இதுவரை 395 பணிகளுக்கு 11.26 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவிரி குடிநீர் திட்டத்தில் தினமும் 54 எம்.எல்.டி., தண்ணீர் சப்ளை செய்ய வேண்டிய நிலையில், வறட்சியால் ஆற்றுப்படுகையில் நீர்மட்டம் குறைந்ததால், […]
கீழக்கரையில் நாளை (08-05-2018) மின் வெட்டு..
கீழக்கரையில் நாளை (08/05/2018-செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பை முன்னிட்டு காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வெட்டு இருக்கும். இச்சமயத்தில் கீழக்கரை நகர், மாயாகுளம் கல்லூரி பகுதி, மோர்குளம், காஞ்சிரங்குடி, உத்திரகோசமங்கை இன்னும் இதன் எல்லைக்குள் உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.
விடுதலைப் போராட்ட வீரர் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் பிறந்த தின கொண்டாட்டம்..
விடுதலைப் போராட்ட வீரர் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு இனறு (30.03.2018) தமிழ்நாடு அரசின்சார்பாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் 259 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் […]
பாதுகாப்பு மையக்கட்டடம்,காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கல்பார் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக பல்நோக்கு பாதுகாப்பு மையக்கட்டடத்தை காணொளி காட்சி மூலமாக தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி திறந்து வைத்தார். கீழக்கரை நகராட்சி அலுவலக கட்டிடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட வருவாய் கோட்டச்சியர் சுமன், கீழக்கரை தாசில்தார் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.